Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 3 ஏப்ரல், 2013

நீண்ட கால விசாரணை சிறைவாசிகளை நிபந்தனையின்றியும் விடுவிக்க வேண்டும், 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்தவர்களை சாதி, மத வேறுபாடின்றி விடுதலை செய்ய வேண்டும் : சமுதாயப் போர்வாள் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி.


முப்பெரும் கோரிக்கை களை வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஏப்ரல் 2 ல் நடத்திய பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களில் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. திருப்பூரிலும், கோவையிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண் டார்.

திருப்பூர்
பேரணியை துவக்கி வைத்து காயிதே மில்லத் பேரவை சர்தேச ஒருங்கிணைப் பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. பேசினார். பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. பேரணி முடிவில் மாவட்ட எஸ்.டி.யூ. நிர்வாகி பாபுஜி நன்றி கூறினார்.

பேரணி நிகழ்ச்சியை மாநில பொதுக்குழு உறுப்பினர் இளம்பிறை ஜஹாங்கீர் ஒருங் கிணைத்து தொகுத்து வழங்கினார்.

கோவை
கோவையில் போலீஸ் கமிஷன் அலுவலகம் அரு கிலுள்ள செஞ்சிலுவை சங்கம் முன்பு கோவை மாநகர், புறநகர் மாவட்டங்களின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

கோவை மாநகர் மாவட்ட தலைவர் அப்துல் கபூர் தலைமை யில் நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்தில் புறநகர் மாவட்ட தலைவர் எஸ்.எம். காசிம் வரவேற்று பேசினார்.

மாநகர் மாவட்ட செயலாளர் முஹம்மது பஷீர், புறநகர் மாவட்ட செயலாளர் ஏ.எம். இப்ராஹிம் ஆகியோர் உரை யாற்றினர். ஒ.ஏ. செய்யது ,இப்ராஹிம், காசிம், பி.கே.ஏ. ஸலாம், யாகூப் ஹாஜியார் ஷிபிலி, சாகுல் ஹமீது, முன்னாள் மாவட்ட தலைவர் முஹம்மது ரபீக்,

மாநில யூத் லீக் அமைப்புக்குழு உறுப்பினர் யூ.எஸ்.அப்துல் ஹக்கீம், உமர், ஐ. முஹம்மது அலி, இளைஞர் அணி ஏ. முஹம்மது, தாரிக், ஜாபர் சாதிக், மேட்டுப்பாளையம் அக்பர் அலி, அய்யூப், எம்.எம். நூர்தீன், உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர். வப்பு ரஹ்மத்துல்லா நன்றி கூறினார்.

அப்துல் ரஹ்மான் எம்.பி. பேட்டி
இந்நிகழ்ச்சிகளில் செய்தி யாளர்களிடம் பேசிய எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. கூறிய தாவது:

முஸ்லிம்களுக்கு கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப் பில் முன்னுரிமை அளிக்கும் வகையில் ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரையை ஏற்று மத்திய அரசு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.

தமிழகத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியின்போது முஸ்லிம் களுக்கு 3.5 சதவீத இடஒதுக் கீடு அளிக்கப்பட்டது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது, இந்த இடஒதுக்கீட்டை அதிகப்படுத்துவதாக முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித் திருந்தார். ஆனால் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. தமிழக அரசு முஸ்லிம்களுக் கான இட ஒதுக்கீட்டை அதிகப் படுத்த வேண்டும்.

நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். இதன் மூலமாக பல்வேறு கலாசார பழக்கம் உள்ள சமுதாயம் நிம்மதியாக வாழும். பூரண மதுவிலக்கு அமல்படுத்துவதை பெண்கள் மகிழ்ச்சியுடன் வர வேற்பர்.

நாட்டின் பல்வேறு மாநில விசாரணை சிறைவாசிகளாக எண்ணற்ற அப்பாவிகள் நீண்ட காலம் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மிக அதிகமானோர் முஸ்லிம் இளைஞர்கள் ஆவர். இந்த நீண்ட கால விசாரணை சிறைவாசிகள் நிபந்தனை யின்றி விடுதலை செய்யப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் 10 ஆண்டு களுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்த தண்டனை சிறை வாசிகள் சாதி, மத வேறுபாடின்றி விடுவிக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் விஷேச தினங்களில் சிறைவாசிகள் விடுவிக்கப்படும்போது முஸ்லிம்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. காந்தியை சுட்டுக்கொன்ற கொலை யாளிகளே விடுவிக்கப்பட்ட வரலாறு இந்த நாட்டில் உண்டு. ஆனால் முஸ்லிம்கள் விடு விக்கப்படாததற்கு எண்ண காரணம் அவர்களுக் கும் நீதி கிடைக்க வேண்டும்.

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கம் வகிக் கிறது. மத சார்பற்ற பன்முகத்தன்மை கொண்டு, அதில் ஸ்திரத் தன்மையுடன் இருப் போருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலிமை சேர்க்கும். மத சார்பற்ற ஆட்சியை அனைவரும் அரவணைக்கின்ற னர். அந்த வகையில் வரும் மக்களவைத் தேர்தலில் தி.மு.க.வுடன் எங்கள் கூட்டணி தொடரும்.

இவ்வாறு எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக