Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 6 ஏப்ரல், 2013

சவூதி அரேபியாவின் புதிய கொள்கையால் இந்தியர்களுக்கு 2 மாதங்களுக்கு பாதிப்பு இல்லை: மாண்புமிகு இ. அகமது


சவூதி அரேபியா நாட்டில் புதிய தொழிலாளர் கொள்கை நிடாகட் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.  தனியார் துறைகளில் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பை பரவலாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக அந்நாட்டு அரசு இக்கொள்கையை அறிமுகப்படுத்தி உள்ளது.  இதனால் அந்நாட்டில் தங்கி பணிபுரியும் வெளிநாட்டவர்கள் வேலை இழக்கும் சூழ்நிலை காணப்படுகிறது.  குறிப்பாக இந்தியாவின் தமிழகம் கேரள மாநிலங்களில்  இருந்து சவூதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வேலை தேடி செல்பவர்களின் நிலை பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறது.

இந்நிலையில், மத்திய வெளியுறவு விவகார துறை இணை மந்திரி ஈ. அகமது நிருபர்களிடம் கூறும்போது, சவூதி அரேபியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ள நிடாகட் எனப்படும் புதிய தொழிலாளர் கொள்கையால் அங்கு தங்கி பணிபுரியும் இந்திய நாட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது.  புதிய கொள்கையால் அடுத்த இரு மாதங்களுக்கு தொழிலாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.  சவூதி அரேபிய அதிகாரிகள் அதற்கான உத்தரவாதத்தை அளித்துள்ளனர்.  மேலும், இவ்விவகாரம் குறித்து வருகிற ஜூன் மாதத்திற்குள் விவாதித்து தீர்வு காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.  சவூதி அரேபியாவில் இருந்து சொந்த நாட்டிற்கு திரும்புபவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து மத்திய அரசு அடுத்த வாரம் ஆலோசனை நடத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

உயர்கல்விக்கான உதவித்தொகை


அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மேம்பாட்டு ஆய்வுகளுக்கான தேசிய நிறுவனம் (NISTADS), உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்குகிறது.

தகுதி 12ம் வகுப்பை முடித்தவர்கள் மட்டுமே, இதைப் பெறுவதற்கு தகுதி வாய்ந்தவர்கள்.

வயது:
விண்ணப்பிக்கும்போது, 17 முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும்.

உதவித்தொகை:
அதிகபட்சம் 5 வருடங்கள் வரை அல்லது படிப்பு முடியும் வரை வருடம் ரூ.80,000 வழங்கப்படும். (இரண்டில் எது முன்னதாக நிகழ்கிறதோ, அதுவே கணக்கில் எடுக்கப்படும்).

விண்ணப்பம் பெறுதல் மற்றும் பிற விபரங்களை அறிய www.inspire-dst.gov.in என்ற இணையதளம் செல்க.

சிறுபான்மை சமுதாய மாணவர்களுக்கான உதவித்தொகை


முஸ்லிம், கிறிஸ்தவம், சீக்கியம் உள்ளிட்ட சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த, 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, Pre-matric merit உதவித்தொகை வழங்கப்படுகிறது.

தகுதிகள்

பெற்றோர் வருமானம் வருடத்திற்கு 1 லட்சத்திற்கு மிகாத, 1 முதல் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இதைப் பெறுவதற்கு தகுதிவாய்ந்தவர்கள்.

விரிவான விபரங்களுக்கு www.minorityaffairs.gov.in என்ற இணையதளம் செல்க.