Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 30 ஜூன், 2012

மெச்சத்தக்க சூரிய மின்சக்தி இலவச மின் இணைப்பு

தூத்துக்குடி அருகே சூரியமின்சக்தி மூலம், 35 வீடுகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், அய்யனடைப்பு ஊராட்சியில் சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் பெறும் திட்டத்தின்கீழ், டில்லி மிண்டா நெக்ஸ் ஜென் டெக்னாலஜி லிமிடெட் நிறுவனத்தின் மூலம், ஒரு மினி கிரிட் அமைத்து, 240 வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, வீட்டிற்கு இரண்டு எல்.இ.டி., பல்பு, 1 சார்ஜர் என்ற விகிதத்தில், 35 வீடுகளுக்கு சூரிய ஒளி மின்திட்டத்தின்கீழ் இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
சூரிய ஒளி பேனல் மற்றும் பாட்டரி, 
அய்யனடைப்பு ஊராட்சி கட்டட வளாகத்தில் அமைக்கப்பட்டு, அதிலிருந்து 35 வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 



இவ்விளக்குகள் அனைத்தும் மாலை 6 மணிமுதல் நள்ளிரவு 11.30 மணிவரை தானியங்கியாக எரியும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன. கலெக்டர் ஆஷிஷ்குமார், திட்ட இயக்குனர் பெல்லா, அந்த வீடுகளுக்கு நேரில் சென்றுபார்த்து, சூரிய ஒளி விளக்குகள் அமைக்கப்பட்டதால் ஏற்பட்டிருக்கும் நன்மைகள் குறித்து, பயனாளிகளிடம் கேட்டறிந்தனர். 

இஸ்லாமியத்தின் வெளிப்பாடு :நக்லா முர்சி

நாட்டின் முதல் பெண்மணி என்றழைக்காதீர்கள் என, எகிப்து அதிபரின் மனைவி தெரிவித்துள்ளார். எகிப்து நாட்டில், ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்பட்டதில், முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் தலைவரான முகமதுமூர்சி அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.


தற்போதைய அதிபர் மூர்சியின் மனைவி நக்லா, வெளியிடங்களுக்கு பர்தா அணிந்து தான் செல்கிறார். சமீபத்தில், இவர் அளித்த பேட்டியின் போது குறிப்பிடுகையில், "அதிபரின் மனைவியை "நாட்டின் முதல் பெண்மணி' என அழைப்பதில், எந்த நியாயமும் இல்லை. அதிபர் மனைவி என அழைக்கலாம் அல்லது நாட்டின் முதல் பணிப்பெண் என அழைக்கலாம். மரியாதையாக தான் அழைக்க வேண்டும் என்றால் "அம்மா' என்றழைக்கலாம். எனவே, என்னை நாட்டின் முதல் பெண் என்றழைக்க வேண்டாம்' என்றார்.

பிரதமரின் கவலை :மருத்துவ கல்வியின் தரம்

இந்தியாவில் மருத்துவக் கல்வியின் தரம் கவலை அளிக்கும் நிலையில் உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

 புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ரூ.342 கோடியில் கட்டப்பட்ட குழந்தைகள், பெண்கள் மருத்துவமனை, பயிலகம், விடுதி கட்டடங்களைத் திறந்து வைத்தும், முதுகலை, இளங்கலை முடித்த 311 பேருக்குப் பட்டங்களை வழங்கியும் அவர் சனிக்கிழமை பேசியது:
 நாட்டு மக்களுக்குச் சுகாதாரத்தை அளிப்பதில் பெரும் சவால்களைச் சந்தித்து வருகிறோம். சுகாதாரக் குறியீடுகள் மோசமாகத் தொடர்வதும், சிசு மற்றும் பிரசவகால மரணங்களும் கவலையளிக்கின்றன.
 பல ஆண்டுகளாகச் சுகாதார மற்றும் குடும்ப நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வந்தாலும், இன்றைக்கும் மருத்துவச் செலவுகளுக்காக, 3-ல் இரு பங்குத் தொகையை மக்கள் கடன் வாங்கியே செலவிடுகின்றனர். அதிலும் மருந்துகளுக்காகவே அதிகம் செலவிட நேர்கிறது.
 இதை சரி செய்யும் நோக்கில், 7 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய ஊரக சுகாதாரத் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம் மூலம், சிசு மற்றும் பிரசவகால மரணங்கள் விகிதம் குறைந்தது. மருத்துவமனையில் நிகழும் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மக்களின் தேவைகள் பல நிறைவேற்றப்பட்டாலும், இன்னமும் இலக்குகள் பல இருக்கின்றன.
 இதனால், தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க அரசு முடிவெடுத்திருக்கிறது. அதேபோல, நகர்ப்புற பகுதிகளில் சுகாதாரத் திட்டங்களை அமல்படுத்த, புதிய தேசிய நகர்ப்புற சுகாதாரத் திட்டம் தொடங்கும் முயற்சிகளில் அரசு ஈடுபட்டிருக்கிறது.
 நாட்டின் வடக்கு, மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளின் கிராமப்புறங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கிறது. 1,000 பேருக்கு ஒரு மருத்துவர் என்பதற்குப் பதிலாக, 2 ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை இருக்கிறது. ஒரு மருத்துவருக்கு 3 செவிலியர்கள் என்பதற்குப் பதிலாக, இரு மருத்துவர்களுக்கு 3 செவிலியர்கள் என்ற நிலையும் இருக்கிறது. இப்பிரச்னைக்குத் தீர்வுகாண, மத்திய மற்றும் மாநில அரசுகள், குறிப்பாக மாநில அரசுகள் அந்தந்தப் பகுதிகளில் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.


மருத்துவக் கல்வியின் தரம் கவலை அளிக்கும் நிலையில் உள்ளது. மருத்துவக் கல்வி குறித்த விழிப்புணர்வு போதுமானதாக இல்லை. இந்நிலை தொடர அனுமதிக்கக்கூடாது. கல்வித்தரம் உயர்வதற்கு உதவியாக நம்பகமான கட்டுப்பாட்டு அமைப்பும், கல்விக்கூட அமைப்புகளையும் நிறுவ வேண்டியது அவசியம். அதேபோல, பாடத்திட்டத்திலும் கவனம் செலுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

 கிராமங்களிலும், உள்ளூர் சமுதாயத்தினரோடும் இணைந்து பணியாற்றுவதற்கேற்ப மாணவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும். நோய்களைக் குணப்படுத்தும் பணியைவிட, நோய்த் தடுப்புப் பணிகளில் தங்களது பங்களிப்பை அதிகம் அளித்து, சமூகப் பங்களிப்பை நிறைவேற்ற வேண்டும்.
 இந்திய மருத்துவக் கவுன்சில் எம்.பி.பி.எஸ் படிப்புக்கான பாடத்திட்டங்களை மாற்றியமைப்பதோடு, சமூக மருத்துவம் சார்ந்த பயிற்சிகளையும் அனைத்து நிலைகளிலும் இணைத்து வருகிறது.
 நாட்டின் மருத்துவக் கல்வியைப் பலப்படுத்த பல்வேறு பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இளநிலை, முதுகலை மருத்துவப் படிப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய மருத்துவக் கல்லூரிகளும் நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளன.
 தேவையான இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய சுகாதார அமைச்சகம் தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
 பிரதம மந்திரி சுவஸ்தியா சுரக்ஷா யோஜனா திட்டத்தின்கீழ், போபால், புவனேசுவரம், ஜோத்பூர், பாட்னா, ராய்ப்பூர் மற்றும் ரிஷிகேஷ் ஆகிய இடங்களில் எய்ம்ஸ் போன்ற 6 மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகள் கட்டும் பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன. இந்த மருத்துவக் கல்லூரிகள் 2012-13ம் கல்வியாண்டிலும், மருத்துவமனைகள் 2013-14ம் கல்வியாண்டு முதலும் செயல்படத் தொங்கும் என எதிர்பார்க்கிறோம்.
 கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் மேம்பாடு அடைவதற்கான திட்டத்தோடு புதுச்சேரி மாநிலம் செயல்படுகிறது. 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் இலவச ஆம்புலன்ஸ் சேவையை அளித்து வருகிறது. இதற்காக புதுச்சேரி அரசைப் பாராட்டுகிறேன். நாட்டிலேயே உயர்கல்வி மற்றும் தொழில்முறை கல்வியில் சிறந்த மையமாக புதுச்சேரி மாநிலம் திகழ அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். மேலும், புதுச்சேரி மாநிலத்தை சுற்றுச்சூழலுக்கு உகந்த சுற்றுலா மையமாக மேம்படுத்தத் தேவையான வாய்ப்புகளை வெளிக்கொணர, மத்திய சுற்றுலா அமைச்சகத்தோடு இணைந்து புதுச்சேரி அரசு செயல்பட வேண்டும் என்றார்.



மதரஸாக்களில் அரசு தலையீட்டை தடுத்து நிறுத்தியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்


முஸ்லிம்களை உண்மை யான முஸ்லிம்களாக வாழச் செய்யும் வழிகாட்டிகள் சங்கைக்குரிய உலமா பெருமக்கள்தான். அவர் களை கண்ணியப்படுத்த வேண்டியது சமுதாயத்தின் கடமை என காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கி ணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. குறிப்பிட் டார்.

தஞ்சை மாவட்டம் மயிலாடு துறையை அடுத்துள்ள நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரியின் நூற்றாண்டு விழா நேற்று தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது.

இரண்டாம் நாளான இன்று இந் நிகழ்ச்சியில் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. பேசியதாவது-

சரித்திரப்புகழ் மிக்க நீடூர் மதரஸா மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரியின் நூற் றாண்டு விழா தமிழக முஸ்லிம் களின் சரித்திரத்தில் ஒரு உன்னதமான இடத்தைப் பெற்றுள்ளது என்றால் அது மிகையாகாது.

தமிழகத்தில் செயல்படு கின்ற அரபிக்கல்லூரிகளில் மிகச் சிறந்த இடத்தை மிஸ்பா ஹுல் ஹுதா பெற்றுள்ளது. இப்படிப்பட்ட ஒருசிறப்புவாய்ந்த பரக்கத்தான நிகழ்வில் நான் பங்கேற்கின்ற பாக்கியத்தை வழங்கிய எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கும், என்னை அழைத்த விழா குழுவினருக் கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள் கிறேன்.

அப்துல் கரீம் பாணி ஹஸரத் அரிய சேவை:

நீடூரின் பிரபல வணிகராகத் திகழ்ந்த அப்துல் ரஹ்மான் அவர்களின் புதல்வர் சங்கைக் குரிய மௌலானா அப்துல் கரீம் பாணி ஹஸரத் அவர்களால் 1912-ல் தொடங்கப்பட்ட இந்த அரபிக் கல்லூரி இன்று நூற்றாண்டு கண்டுள்ளது.

நீடூரில் ஆரம்ப கல்வி கற்ற அவர்கள் பின்னர் அதிராம் பட்டினத்தில் சூஃபி ஹஸரத் ஷைகுனா ஹஸரத் ஆகியோரி டமும் மார்க்க கல்வி கற்று, பின்னர் வேலூரில் மதரஸா லத்தீப்பிய்யா, பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்திலும் அதனைத் தொடர்ந்து தேவ்பந்த் மதரஸா தாருல் உலூமிலும் படித்து பட்டம் பெற்று இங்குள்ள நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜிதின் தாழ்வாரத் தில் மதரஸாவை தொடங்கி அது இந்த அளவிற்கு வளர்வதற்கு அரும் பணியாற்றியிருக் கிறார்கள். அந்த மாமனிதரின் பெயரால்தான் இந்த அரங் கத்தின் பெயரும் அமைக்கப் பட்டுள்ளது.

பல்லாயிரக்கணக்கான உலமா பெருமக்களை இந்த மதரஸா உருவாக்கியிருக் கிறது. மிஸ்பாஹுல் ஹுதாவி லிருந்து உருவான ஆலிம் பெருமக்கள் இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் சென்று தூய இஸ்லாமிய கருத்துக்களை எடுத்து இயம்பி மார்க்கத்தின் மகிமை பேணி தாங்களும் வாழ்வதோடு மற்றவர்களையும் வாழச் செய்யும் அரும்பெரும் பணியாற்றி வருவது குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று.

நாமெல்லாம் முஸ்லிம்களாக பிறந்ததில் பாக்கியசாலிகள் தான். ஆனால், உண்மையான முஸ்லிம்களாக வாழ்வதற்கு அடித்தளம் அமைத்துத் தந்த வர்கள் சங்கைமிக்க உலமா பெருமக்கள்தான். அவர்கள் வழிகாட்டுதலில்தான் அல்லாஹ் ரசூலுக்குப் பொருத்தமான வாழ்வு முறையே அமைந் திருக்கிறது.

அத்தகைய உலமா பெருமக்கள் சமுதாயத்தின் கண்ணியமிக்கவர்களாக மதிக்கப்பட வேண்டியவர்கள். சதா காலமும் இஸ்லாத்தின் விழுமிய அறநெறி கருத்துக் களை எடுத்தியம்பி வாழ்ந்து வரக் கூடிய சங்கைமிகு உலமாக்களை மதிக்க வேண் டிய விதத்தில் நாம் மதிக்கி றோமா, சிறப்பு செய்யும் வகையில் சிறப்பு செய்கிறோமா என்பதை நாம் ஒவ்வொருவரும் மனச்சாட்சியுடன் எண்ணிப் பார்க்க கடமைப் பட்டுள்ளோம்.

மஸ்ஜிதுகளில் இமாம்களாக வும், மதரஸாக்களில் ஆசிரியர் களாகவும் நாம் பணியமர்த் துகிற அவர்களின் அன்றாட செலவினங்களை சந்திக்கக் கூடிய வகையிலாவது ஊதி யத்தை நிர்ணயித்து கொடுக்கி றோமா என்றால், பல இடங் களில் இருந்து இல்லை என்ற பதிலே வருகிறது.

சமுதாயத்தில் உயர்ந்து நிற்கின்ற பலபேர் உலமாக்க ளுக்கு உரிய மரியாதை செலுத்துவதை ஆங்காங்கே பார்க்கிறோம். ஆனால், இந்த நிலை எல்லா இடங்களிலும் பரவலாக்கப்பட வேண்டும் என்பதே நம் அவா!. ஏனெனில், உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகள் என பெருமானார் (ஸல்) அவர்கள் குறிப்பிட் டுள்ளார்கள். அதை உணர்ந்து இந்த கண்ணியத்தை செய்ய சமுதாயம் கடமைப்பட்டிருக் கிறது. அரசு தலையீட்டை தடுத்த தலைவர் பேராசிரியர்

மதரஸாக்களில் கற்பிக் கப்படுகிற அறிவுப்பூர்வமான ஆன்மீகக் கல்விதான் மனி தனை ஒழுக்கமுள்ள - நேர்கோட்டுப்பார்வையில் அழைத்துச் செல்லும். இத்த கைய மதரஸாக்களை தீவிர வாதம் போதிக்கப்படக் கூடிய இடம் என்று விஷமத் தனமான குற்றச்சாட்டு நமது நாட்டின் நாடாளுமன்றத்தில் கூட வைக்கப்பட்டபோது, அப் போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியப் பெருந்தகை கே.எம். காதர் மொகிதீன் சாஹிப் அவர்கள், மதரஸாக்கள் என்பது, ``மத வெறியை போதிக்கக் கூடிய இடம் அல்ல; அற நெறியை போதிக்கக் கூடிய இடம். அங்கு படிக்கின்ற மாணவர்களுக்கு எவரையும் புண்படுத்தச் சொல்லித் தரப்படுவதில்லை. அவர்களை பண்படுத்தவே கற்றுத் தரப்படு கிறது. மனிதனை மனிதனாக வும், எல்லா மக்களையும் சகோதரர் களாகவும், இணங்கி வாழக் கூடிய நல்லற பயிற்சியே மதரஸாக்களில் தரப்படுகின் றது. நானும் மதரஸாவில் உருவான ஒரு மாணவன்தான். எனவே, மதரஸாக்களை குறை சொல்பவர்கள் அதை நிரூபிக்கத் தயாரா? என நாடாளுமன் றத்தில் கேள்விக்கணை எழுப்பி கர்ஜித்தவர் முஸ்லிம் லீகின் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள்தான்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாதனை:
 அனைவருக்கும் கல்வி என்ற கட்டாய கல்வித் திட்டத்தை மத்திய அரசு நடைமுறையாக்கியபோது அதிலே மதரஸாக்களையும் உட்புகுத்த ஆயத்தமான சமயத்தில் மதரஸா பாடத் திட்டங்களை மாற்றியமைத்து நவீன அறிவியல் கல்வியையும் வழங்க முடிவு செய்தது. மதரஸா பாடத் திட்டத்தில் கை வைக்க உலமாக்களைத் தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது என வாதம் செய்து அறிவியல் கல்வியை வேண் டுமானால் மத்திய அரசு பாடத்திட்டத்தில் இடம் பெறச் செய்யலாம். ஆனால், மதரஸா பாடத் திட்டங்களை நீங்கள் கையாளக்கூடாது என தடுத்த பெருமை இந்திய யூனியன் முஸ்லிம் லீகைச் சாரும். சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தின் உரிமை காக்கும் இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்பதால் மாண்புமிகு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபலிடம் இந்த கருத்தை நான் வலியுறுத்தி மத்திய அரசின் தலையீட்டை தடுத் தேன் என்பதை இங்கு பதிவு செய்ய கடமைப்பட் டுள்ளேன். இன்றைய கால கட்டத்தில் மதரஸாக்களை நடத்துவ தென்பது பெரும் சவாலாகி விட்டது. பொருளாதாரரீதியாக கிடைக்கப்பெறும் அனு கூலங்கள் படிப்படியாக குறைந்து விட்டன. எனவே, ஒட்டு மொத்த தமிழகத்தில் எல்லா அரபி மதரஸாக்களும் சிறப்பாக நடத்துவதற்கு சமு தாயத்தின் பெருந்தனக் காரர்கள் முன் வந்து கூட்டு முயற்சியாக எல்லா மதர ஸாக்களும் அதன் தேவைகள் குறைவின்றி நிறைவேறி அதன் பணிகள் தொய்வின்றி தொடர பக்கபலமாக இருக்க வேண்டும். இதற்கு ஜமாஅத்தார்களும் - அமைப்புகளை நடத்துகின் றவர்களும் - சமூக நல ஆர்வலர்களும் தூண்டுதல் துணையாக இருத்தல் வேண் டும். இவ்வாறு எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. குறிப்பிட்டார்

சோனியாவின் தியாகம் :அப்துல் கலாம் சாட்சி

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கடந்த 2004-ம் ஆண்டு வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தும் நாடெங்கும் சோனியா பிரதமர் பதவி ஏற்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் பாராளுமன்ற தலைவராக ஏகமனதாக சோனியா தேர்வானதும் அவர்தான் பிரதமர் என்று மக்கள் உறுதியாக நம்பினார்கள். 

இந்த நிலையில் பல கட்சிகள் சோனியா பிரதமர் பதவி ஏற்க கடும் எதிர்ப்பு தெரிவித்தன.  இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒருவர் இந்திய பிரதமர் பதவியை ஏற்க அரசியல் சட்டத்தில் இடம் இல்லை என்று அந்த கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின. 

இந்த விவகாரத்தில் அப்போது ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாம் என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் நிலவியது. அந்த சமயத்தில் திடீரென மன்மோகன் சிங்கை சோனியா பிரதமர் ஆக்கினார். இது இந்திய அரசியலில் ஏற்பட்ட மிகப்பெரிய திருப்பு முனையாகும். 

சோனியா பிரதமர் பதவி ஏற்காதது காங்கிரசில் அதிர்ச்சியையும்,  மற்ற கட்சிகளிடம் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. அப்துல்கலாம் சட்ட ரீதியாக ஏற்படுத்திய முட்டுக்கட்டைகளால் தான் சோனியா பிரதமர் ஆக முடியவில்லை என்ற வதந்தி பரவியது. ஆனால் அதில் கொஞ்சமும் உண்மை இல்லை என்று அப்துல்கலாம் எழுதியுள்ள "டர்னிங் பாயிண்ட்ஸ்'' என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார். அந்த சமயத்தில் என்ன நடந்தது என்பது பற்றி அப்துல்கலாம் விளக்கமாக குறிப்பிட்டுள்ளார். 



ஹார்பர் காலின்ஸ் வெளியிட்டுள்ள அந்த புத்தகத்தின் 135-வது பக்கத்தில் "முரண்பட்ட முடிவுகள்'' என்ற தலைப்பில் அப்துல்கலாம் இந்த விளக்கத்தை வெளியிட்டுள்ளார். அதில் அப்துல்கலாம் எழுதி இருப்பதாவது:- 

2004-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றதும், சோனியாவை பாராளுமன்ற காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்தனர். இதை அறிந்ததும் ஆட்சி அமைக்க வருமாறு சோனியாவுக்கு அழைப்பு விடுத்து ஜனாதிபதி மாளிகையில் கடிதம் தயாரிக்கப்பட்டது. அந்த சமயத்தில் பல்வேறு கட்சி தலைவர்கள், பல அமைப்புகளின் தலைவர்கள் என்னை சந்தித்தனர். சோனியாவுக்கு பூர்வீகம் இத்தாலி, எனவே அவரை பிரதமர் பதவிக்கு ஒத்துக்கொள்ளாதீர்கள் என்று வற்புறுத்தினார்கள். 

சிலர் இந்திய அரசியல் சட்டத்தை மேற்கோள் காட்டினார்கள். இது எனக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நான் சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி ஒரு தீர்மானத்துக்கு வந்திருந்தேன். சோனியாவை பிரதமர்  பதவியில் அமர்த்த தீர்மானித்தேன். அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை கூட செய்து விட்டேன். 

இந்த நிலையில்தான் மே 18-ந் தேதி (2004) சோனியாவும், மன்மோகன் சிங்கும் வந்து என்னை சந்தித்தனர். அப்போது சோனியா என்னிடம் மன்மோகன்சிங்கை பிரதமர் பதவியில் அமர்த்தும்படி கூறினார். உண்மையிலேயே எனக்கு அது மிகவும் ஆச்சரியத்தை கொடுத்தது.  

எனவே ஆட்சி அமைக்க வரும்படி மன்மோகன்சிங் பெயரில் வேறு ஒரு கடிதம்  தயாரிக்கப்பட்டது. சோனியா முடிவால்தான் இந்த மாற்றம் நிகழ்ந்தது. சோனியாவை பிரதமர் ஆக்கக்கூடாது என்று எனக்கு நேரில் மட்டுமல்ல இ-மெயில் வாயிலாகவும் நிறைய பேர் என்னிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் இந்த கோரிக்கைகளும் எதிர்ப்புகளும் சட்டத்துக் குட்பட்டவை அல்ல என்பது எனக்கு தெரியும். எனவே சோனியாவை பிரதமர் பதவியில் அமர்த்த நான் தயாராக இருந்தேன். அவர் பிரதமர் பதவியை விரும்பி, தன்னை பதவியில் அமர்த்தும்படி கோரிக்கை விட்டிருந்தால் எனக்கு வேறு வழியே இல்லை. சோனியாவை பிரதமர் பதவியில் நியமித்து இருப்பேன். 

இவ்வாறு அப்துல்கலாம் கூறியுள்ளார்.