Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 2 ஜூலை, 2012

கேரளமாநில IUML பொதுச்செயலாளராக ஊழியர் திலகம் கே.பி.அப்துல் மஜீத் தேர்வு

இந்திய இஸ்லாமிய சமுதாயத்தின் தாயகமாம்  கேரளாவில் மிக வலிவோடும் ,பொலிவோடும் இந்திய இஸ்லாமிய மக்களின் அரசியல் பிரதிநிதித்துவ சபையான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாற்றி வருகின்றது .

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கேரள மாநில நிர்வாகி கள் தேர்தல் தேசிய தலைவர் இ.அஹமது சாஹிப் தலைமை யில் நேற்று மாநில தலைமையக மான கோழிக்கோடு லீக் ஹவுஸ் சி.ஹெச். முஹம்மது கோயா அரங்கில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், கேரள அமைச் சர்கள் குஞ்ஞாலி குட்டி, எம்.கே. முனீர், இப்ராஹீம் குஞ்சு, மஞ்ஞனம்குழி அலி, அப்துர் ரப் மற்றும் 15 சட்டமன்ற உறுப்பினர் கள், மாநில பொதுக்குழு உறுப் பினர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் கேரளா மாநிலத்தலைவராக பானக்காடு ஹைதர் அலி சிஹாப் தங்கள் அவர்களும் ,பொதுச்செயலாளராக ஊழியர் திலகம் கே.பி.அப்துல் மஜீத் சாஹிப் அவர்களும் தேர்வு செய்யப்பட்டார்கள் .


மேலும் ,கீழ்க்கண்டவர்களும் கீழ்க்கண்ட பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர் 
பொருளாளர்: பி.கே.கே. பாவா (முன்னாள் அமைச்சர்)

துணைத்தலைவர்கள்

சி.டி. அஹ்மது அலி, (முன்னாள் அமைச்சர்)

எம்.ஐ. தங்ஙள் (பேச்சாளர், எழுத்தாளர்)

வி.கே. அப்துல் காதர் மௌலவி

பி.ஹெச். அப்துஸ் ஸலாம் ஹாஜி

கே. குட்டி அஹ்மது குட்டி (முன்னாள் அமைச்சர்)

மாநில செயலாளர்கள்

பி.வி. அப்துல் வஹாப் (முன்னாள் எம்.பி.)

டி.பி.எம். ஷாஹிர் (கோழிக் கோடு முன்னாள் மாவட்ட செயலாளர்)

பி.எம்.ஏ. சலாம் (கலைக் கப்பட்ட இந்திய தேசிய லீக் பொதுச் செயலாளர்)

எம்.சி. மாயின் ஹாஜி (கோழிக்கோடு மாவட்ட முன்னாள் தலைவர்) டி.எம். சலீம் (இடுக்கி ஜில்லா தலைவர்)

உயர் நிலை அரசியல் ஆலோசனைக் குழு

ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள், இ.அஹமது, பி.கே. குஞ்ஞாலி குட்டி, இ.டி. முஹம்மது பஷீர், கே.பி.ஏ. மஜீது,

விசேஷ அழைப்பாளர் சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள்.

மாநில கட்சி விவகாரங் களுக்கு பி.கே. குஞ்ஞாலி குட்டியும், அறக்கட்டளை மற்றும் ஊடகத் துறையின் செய்தி தொடர்பாளராக இ.டி. முஹம் மது பஷீரும் தேர்வு செய்யப்பட்ட னர்.

தென்பொதிகை சாரல் : மீண்டும் களை கட்டிய குற்றாலம்


குற்றாலத்தில் குளு,குளு சீசன் நிலவுகிறது. அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜுன் மாதம் துவங்கி ஆகஸ்ட் மாதம் வரை 3 மாதங்கள் சீசன் காலம் ஆகும். சீசன் காலங்களில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகை தந்து அருவிகளில் குளித்து மகிழ்வர்.
கடந்த ஆண்டு சீசன் சரியான நேரத்தில் அதாவது ஜுன் 1-ந்தேதி அதிரடியாக துவங்கியது. தொடர்ந்து அனைத்து அருவிகளிலும் தண்ணீர் பெருமளவு கொட்டியது. ஆனால் இந்தாண்டோ நிலைமை தலைகீழாக உள்ளது. கடந்த 7-ந்தேதி மெயினருவியில் தண்ணீர் விழத்தொடங்கியது. ஒரு வார காலம் மட்டுமே தண்ணீர் விழுந்த நிலையில், அதன் பிறகு குற்றாலம் பகுதியில் சாரல் இல்லாததால் அருவிகளில் நீர்வரத்து பெருமளவு குறைந்துவிட்டது.
மெயினருவி மற்றும் ஐந்தருவியில் மட்டும் குறைந்த அளவில் தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் விழவில்லை. இதனால் லட்சக்கணக்கில் பணம் முதலீடு செய்து ஏலம் எடுத்த வியாபாரிகளும் மிகுந்த வருத்தத்தில் இருந்து வந்தனர்.
சீசன் காலத்தில் மூன்றில் ஒரு பங்கு காலம் நிறைவு பெற்ற நிலையில், குற்றாலம் பகுதியில் கடந்த 2 தினங்களாக லேசான சாரல் இருந்து வந்தது. குளு, குளுவென தென்றல் காற்று வீசி வந்தது. வெயிலே தெரியாத அளவிற்கு மேகக்கூட்டங்கள் திரண்டிருந்தது. இதனால் நேற்று ஐந்தருவியில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டமும் அதிகமாக இருந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு குற்றாலம் மலைப் பகுதியில் பெய்த மழை காரணம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை மெயினருவில் பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீர் கொட்டுகிறது.
ஐந்தருவியில் அனைத்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. குளு, குளு சீசன் நிலவுவதாலும், அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதாலும் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உயர் நீதிமன்றம் குட்டு : நீதியை நிலை நிறுத்துவாரா ஜெயா ?

சென்னை கோட்டூர்புரத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியில் அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டது. இதை குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனையாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. 

இதை எதிர்த்து வக்கீல்கள் வீரமணி, பாஸ்கர் உள்ளிட்டோர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனையாக மாற்ற தடைவிதித்தனர். மேலும் நூலகம் செயல்படுவதற்கு தேவையான வசதிகளை குறைக்ககூடாது என்றும் உத்தரவிட்டனர். 

இந்த நிலையில் இன்று தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் கொண்ட முதல் டிவிசன் பெஞ்ச் முன்பு, மூத்த வக்கீல் டி.வில்சன் ஆஜராகி, அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்ததாக ஆங்கில பத்திரிகையில் செய்தி வெளியாகி இருப்பதாக முறையிட்டார். 


அப்போது நீதிபதிகள் அரசு வக்கீல் வெங்கடேசனிடம், அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் திருமணம் நடத்த எப்படி அனுமதித்தீர்கள்? என்று கேட்டார். 

அப்போது வக்கீல் வில்சன் கூறும்போது, அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் திருமணம் நடத்த அனுமதி கிடையாது. 2 நாட்களுக்கு முன்பு அங்கு நடந்த திருமண நிகழ்ச்சியின்போது நூலகத்திற்கு வந்த வாசகர்கள் தடுக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே அந்த நூலகத்தின் வசதிகளை குறைக்ககூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதை அரசு மீறி உள்ளது என்றார். 

அதற்கு அரசு வக்கீல் வெங்கடேசன் பதில் அளித்து பேசும்போது, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இனி இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கமாட்டோம். நூலக வசதிகள் எதுவும் குறைக்கப்படவில்லை. திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது நூலகத்திற்கு வந்த வாசகர்கள் தடுக்கவில்லை. இனிமேல் இதுபோன்ற திருமண நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி தர மாட்டோம் என்று உத்தரவாதம் அளித்தார். 

இதையடுத்து நீதிபதிகள் கூறும்போது, இனிமேல் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க கூடாது. நடந்த சம்பவம் குறித்து அரசு மனுதாக்கல் செய்ய வேண்டும் அதன்மீது நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என்றார்.