Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

பகுதி நேர பொறியியல் படிப்பு


தமிழக அரசு, பகுதி நேர பி.இ/ பி.டெக்., படிப்புகளுக்கு சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேரமாக இப்படிப்பு வழங்கப்படுகிறது.

விண்ணப்ப படிவத்தை அரசு தொழில்நுட்பக்கல்லூரி, கோவை, தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மதுரை, அரசு பொறியியல் கல்லூரி, சேலம், அரசு பொறியியல் கல்லூரி, நெல்லை, அழகப்பா பொறியியல் கல்லூரி, காரைக்குடி, பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, வேலூர், அரசு பொறியியல் கல்லூரி, பர்கூர், பி.எஸ்.ஜி., பொறியியல் கல்லூரி, கோவை, கோவை தொழில்நுட்ப கல்வி நிறுவனம், கோவை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், சென்னை ஆகிய இடங்களில் ஏப்.1 முதல் ஏப்.15 வரை பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணமாக எஸ்.சி/ எஸ்.டி., பிரிவினருக்கு 150 ரூபாயும், மற்றவர்களுக்கு 300 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதை “Secretary, Part time B.E. / B.Tech. Admissions,Coimbatore" என்ற முகவரியில் கோவையில் மாற்றத்தக்க வகையில் டிடி யாக எடுத்து, அத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, "The Secretary, Part time B.E. / B.Te-ch. Admissions, Coimbatore Institute of Technology, Coimbatore - 641 014." என்ற முகவரிக்கு ஏப்ரல் 15க்குள் அனுப்ப வேண்டும்.

கல்வி உதவித் தொகை இணையதளங்கள்


மாணவர்கள் தங்கள் படிப்பிற்கு ஆகும் செலவை பல்வேறு முறைகளில் ஈடு செய்கின்றனர். அதில் ஒன்றாக கல்வி உதவித் தொகை விளங்குகிறது.

படிக்கும் மாணவர்களின் கல்வித் திறன், இனம், நாடு, எடுத்திருக்கும் படிப்பு ஆகியவற்ற்ற்றை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு உதவித் தொகைகள் வழங்கபடுகின்றன.

பெரிய பெரிய நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் கூட கல்வி உதவித் தொகையை வழங்கி வருகின்றன. அந்த வகையில் கல்வி உதவித் தொகை குறித்த தகவல்களை தரும் சில இணையதளங்களைப் பற்றி இங்கு அறிவோம்.

www.scholarshipsinindia.com

www.education.nic.in

www.scholarship-positions.com

www.studyabroadfunding.org

www.scholarships.com

www.scholarshipnet.info

www.eastchance.com

www.financialaidtips.org

இந்த இணையதளங்களில், கல்வி உதவித் தொகை குறித்த தகவல்களை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

"தென் மாநில அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழகம் முதலிடம்"


"உயர்கல்வி சேர்க்கையில், தென் மாநிலங்கள் அளவில், 19 சதவீதத்துடன், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதை, 25 சதவீதமாக உயர்த்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.

சட்டசபையில், விவாதங்களுக்கு பதிலளித்து, அமைச்சர் பழனியப்பன் பேசியதாவது: கடந்த, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில், 18 வயது முதல், 23 வயதிற்கு உட்பட்டவர்கள் எண்ணிக்கை, 13.8 கோடியாக உள்ளது. உயர்கல்வி சேர்க்கை சதவீதம், மேற்கண்ட வயதிற்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

13.8 கோடி பேரும், உயர்கல்வியில் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால், 2.07 கோடி பேர் மட்டுமே, உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். இது, இந்திய அளவில், 15 சதவீதமாக உள்ளது. இவர்களில் மாணவர், 17.1 சதவீதமும், மாணவியர், 12.7 சதவீதமாகவும் உள்ளனர்.

உலகளவில், உயர்கல்வி சேர்க்கை சராசரி, 23 சதவீதமாகவும், வளர்ந்த நாடுகளின் சராசரி, 54 சதவீதமாகவும் உள்ளது. குறிப்பாக அமெரிக்காவில், 83 சதவீதமும், ரஷ்யாவில், 77 சதவீதமும், இங்கிலாந்தில், 57 சதவீதமும் உள்ளது. சீனாவில், 23 சதவீதம் பேர், உயர்கல்வி பயில்கின்றனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, 72.8 லட்சம் பேர், 18 முதல், 23 வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர். இவர்களில், 13.8 லட்சம் பேர், உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர்; இது, 19 சதவீதம். இவர்களில், மாணவர், 20.7 சதவீதமாகவும், மாணவியர், 17.2 சதவீதமாகவும் உள்ளது. இதை, 25 சதவீதமாக உயர்த்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அண்டை மாநிலங்களான கேரளாவில், 13.1 சதவீதமாக உயர்கல்வி சேர்க்கை உள்ளது. இதுவே, கர்நாடகாவில், 18.1 சதவீதமாகவும், ஆந்திராவில், 12.3 சதவீதமாகவும் உள்ளது. தென்னிந்திய மாநில அளவில், 19 சதவீதத்துடன், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. வட மாநிலங்களில் கூட, இந்த சதவீதம் குறைவாகவே உள்ளது.

பீகார் மாநிலத்தில், 11 சதவீதம் பேர், குஜராத்தில், 15.9 சதவீதம் பேர், ராஜஸ்தானில், 9.6 சதவீதம் பேர், உ.பி.,யில், 10.9 சதவீதம் பேர், உயர்கல்வி பயில்கின்றனர். மேற்கு வங்கத்தில், 11.9 சதவீதம் பேர், உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், தமிழகத்தின் உயர்கல்வி சேர்க்கை, 18 சதவீதமாக இருந்தது.

கடந்த இரு ஆண்டுகளில், இலவச, "லேப்-டாப்", ஆண்டு வருவாய் மிக குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு, அரசு கல்லூரிகளில், இலவச கல்வி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுத்ததால், உயர்கல்வி சேர்க்கை, ஒரு சதவீதம் அதிகரித்து உள்ளது. இவ்வாறு, அமைச்சர் பழனியப்பன் பேசினார்.