Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 15 நவம்பர், 2012

என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? :விஷூவல் எபெக்ட்ஸ் படிப்பு


இளைஞர்கள் மத்தியில், தொழில்நுட்பம் சார்ந்த படிப்பு களுக்கு என்றுமே ஈர்ப்பு அதிகம். அந்த வகையில், தற்போது திருமண விழா முதல் திரைப்படம் வரை, விஷூவல் எபெக்ட்ஸ் தொழில்நுட்பம் புரட்சி செய்து வருகிறது. இத்துறை சார்ந்த படிப்புகளுக்கு தற்போது மவுசு அதிகம்.

மூன்று ஆண்டு இளநிலை படிப்பு,
1 ஆண்டு டிப்ளமோ படிப்பு மற்றும் முதுநிலை படிப்பு என பல்வேறு பிரிவுகளில் கீழ்க்கண்ட கல்வி நிறுவனங்களில் விஷூவல் எபெக்ட்ஸ் தொடர்பான படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இப்படிப்புக்கு பிளஸ் 2 தகுதி போதுமானது.

* இமேஜ் காலேஜ் ஆப் ஆர்ட்,
அனிமேஷன் மற்றும் டெக்னாலஜி (ஐ.சி.ஏ.டி.,), சென்னை.
(www.icat.ac.in/index.asp)
* சிரிஷ்டி ஸ்கூல் ஆப் ஆர்ட்,
அனிமேஷன் மற்றும் டெக்னாலஜி, பெங்களூரு. (http://srishti.ac.in/)
* பிக்காஸோ அனிமேஷன்காலேஜ், டில்லி மற்றும் நொய்டா, (http://www.picasso.co.in/)

இந்தியாவில் இது வேகமாக வளரும் துறை. வெளிநாட்டில் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன. இப்படிப்பை வெற்றிக்கரமாக முடித்தவர்கள், டிஜிட்டல் ஆர்டிஸ்ட், கம்போசிடர், டிஜிட்டல் எபெக்ட்ஸ் அனிமேட்டர், டிஜிட்டல் எபெக்ட்ஸ் பெயின்டர், மாடலர், ப்ரீவிஷூவலைசேசன்ஸ் ஆர்டிஸ்ட்,
டெக்னிக்கல் டைரக்டர் மற்றும் விஷூவல் எபெக்ட்ஸ் சூப்பர்வைசர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணிபுரியலாம்.

சென்னையில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: 14 பேர் காயம்


சென்னையில் இன்று (15.11.2012) காலை 8.45 மணி அளவில் வண்ணாரப்பேட்டையில் உள்ள பாண்டியன் தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகில் தடம் எண் 44சி (எர்ணாவூர் - கோயம்பேடு) என்ற மாநகர பேருந்தும், தடம் எண் 159இ (பிராட்வே - ஐஓசி) என்ற மாநகர பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஓட்டுநர்கள் உட்பட 14
பேர் காயம் அடைந்தனர்.

எர்ணாவூரைச் சேர்ந்த லாரன்ஸ் (36)இ பழனி ஆகிய இருவருக்கும் கா-ல் பலத்த காயம் ஏற்பட்டது. சாந்தி (36), கருணாகரன் (42) ஆகிய இருவருக்கும் பல் உடைந்தது. மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதால் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார்
விசாரணை நடத்தி வருகின்றனர்.

பசி-வறுமைக்கு எதிராக இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து போராட வேண்டும் - நிதிஷ்குமார்


பீகார் முதல்வர் நிதிஷ்குமார் முதல் முறையாக பாகிஸ்தான் சென்றுள்ளார். அங்கு லாகூர் அரசு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

இங்குள்ள மக்கள் என் மீது வைத்துள்ள அன்பு செயற்கையானதாக இருக்க முடியாது. லாகூரில் இருந்தாலும், அயல்நாட்டில் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

இதற்கு முன்னர் இருநாட்டு பாராளுமன்ற பிரதிநிதிகள் மட்டுமே தேசிய தலைநகரங்களில் வந்து பேசியது நல்ல ஆரம்பம்தான். அதே வரலாற்றை நாமும் முன்னெடுத்துச் செல்வது அவசியம். ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதற்குப் பதிலாக, பசி மற்றும் வறுமைக்கு எதிராக நாம் இணைந்து போராட வேண்டும்.

பீகார் மாநிலத்தில் எனது ஆட்சியில் சட்டம் ஒழுங்கு, கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது மட்டுமே எங்கள் நோக்கம் அல்ல. இலவச சைக்கிள் மற்றும் கல்வி உதவி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை காரணமாக 2005-ம் ஆண்டு 12.5 சதவீதமாக இருந்த கல்வி இடைநிற்றல் விகிதம் 2 சதவீதமாக குறைந்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

டெல்லி குருத்வாராவில் சீக்கியர்கள் இன்று மோதல்


மத்திய டெல்லியில் சீக்கியர்களின் கோவிலான குருத்வாராவில் இன்று சிரோமணி குருத்வாரா பிர்பந்தக் கமிட்டி தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது சிராமணி அகாலி தளம்(டெல்லி), சர்னா குழுவினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது மோதலாக மாறியது.

தங்களிடம் உள்ள கத்தியால் ஒருவரையொருவர் வெட்டினர். இதில் சிரோமணி அகாலி தளம் (டெல்லி) தலைவர் மஞ்சித்சிங் உள்ளிட்ட 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அனைவரும் ராம் மனோகர் லோகியா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த மோதலின்போது துப்பாக்கியை பயன்படுத்தியதாக செய்தி பரவியது. இதனை மறுத்துள்ள போலீசார், கத்தியாலும், கற்களாலும் சீக்கியர்கள் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறுகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் மாணவர்களுக்கான உதவித்தொகையில் மோசடியா ?


மாணவர்களுக்கு வழங்கிய, 81 லட்சம் ரூபாய் கல்வி உதவித் தொகையை மோசடி செய்த, 73 பள்ளித் தலைமையாசிரியர்கள், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்கள் மீது இதுவரை மேல் நடவடிக்கை எடுக்காததால், பெற்றோர் அதிருப்தியில் உள்ளனர்.

அரசு பள்ளிகளில், மேல்நிலை வகுப்பு பயிலும், ஆதிதிராவிடர் இன மாணவ, மாணவியருக்கு, ஆதிதிராவிடர் நலத்துறை மூலம், மத்திய அரசு ஆண்டுதோறும், 1,850 ரூபாய் உதவித் தொகை வழங்குகிறது. ஆதிதிராவிடர் இனத்தில், சுகாதாரமற்ற தொழிலில் ஈடுபடும் பெற்றோரின் குழந்தைகளுக்கு, இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில், 2010-11 மற்றும் 2011-12ம் ஆண்டு, 81 லட்சம் ரூபாய், கல்வி உதவித் தொகை, மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மூலம், அந்த தொகை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களிடம் காசோலையாக வழங்கப்பட்டது.

போலிக் கையெழுத்து போட்டு, 81 லட்சம் ரூபாயை, பள்ளி தலைமையாசிரியர்கள், ஆதிதிராவிடர் நலத்துறையினர், புரோக்கர் மூலம் சுருட்டியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகளில் செய்த தீவிர விசாரணையைத் தொடர்ந்து, கல்வி உதவித் தொகை, 81 லட்சம் ரூபாயை கையாடல் செய்த, பள்ளி தலைமையாசிரியர்கள், 73 பேர், ஆக., 3ம் தேதி, "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ராமச்சந்திரன், உதவியாளர் உமாபதியும் அடுத்தடுத்து, "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். அவர்களிடம் விளக்கம் கேட்டு, சார்ஜ் மெமோ வழங்கப்பட்டது. அதற்கு உரிய விளக்கங்களை, அனைத்து தலைமையாசிரியர்களும் வழங்கி விட்டனர்.ஆனால், அதற்கு மேல் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், கிணற்றில் போடப்பட்ட கல்லாக அந்த விவகாரம் உள்ளது.

"மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காண, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.