Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 27 பிப்ரவரி, 2013

உத்தர பிரதேசத்தில் இறைச்சி ஏற்றுமதி ஆலையில் தீ விபத்து:ரூ.100 கோடி மதிப்புள்ள பொருட்கள் நாசம்

உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் இறைச்சியை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அலானா குரூப் ஆலையில் நேற்று இரவு மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ, இறைச்சி பதனிடும் அறைகள் மற்றும் குளிர்சாதன அறைகள் என முக்கியமான பகுதிகளுக்குப் பரவியது. பின்னர் பதப்படுத்துவதற்கான ரசாயனப் பொருட்கள் மற்றும் எரிபொருள் வைக்கப்பட்டிருந்த அறைகளுக்கும் பரவியது. இதனால் யாரும் நெருங்க முடியாத படி தீ கொளுந்துவிட்டு எரிந்தது.இதுபற்றி தகவல் அறிந்ததும் மாவட்டம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கும் அதிகமாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர்.

பேரழிவை ஏற்படுத்திய இந்த தீ விபத்தில் சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமான பொருட்கள் நாசமாகியிருக்கலாம் என தெரிகிறது.

டிரான்ஸ்போர்ட் எக்னாமிக்ஸ் & மேனேஜ்மென்ட் படிப்பு


ரயில்வே அமைச்சகம் மற்றும் தொலைதூரக் கல்விக் கழகத்தின் கீழ் அங்கீகாரம் பெற்ற புதுதில்லியில் உள்ள Institute of Rail Transport-ல் நடைபெறும் 1 வருட டிப்ளமோ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வழங்கப்படும் படிப்பு: Diploma (Transport Economics and Management)

தகுதி: Transport. Transport Research and Logitics Management பிரிவுகளில் பணிபுரிய, சம்பந்தப்பட்ட பிரிவில் ஏதாவதொரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

மத்திய/மாநில அரசு ஊழியர்கள், தற்போது பணி புரியும்/ஓய்வு பெற்ற ராணுவத்தினர் போன்றோர் +2 தேர்ச்சியுடன், மூன்று வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை அறிய இணையதளத்தை அணுகலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் பிப்ரவரி 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழு விவரங்களுக்கு www.irt-india.com என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

பிரதமர் மன்மோகன் சிங் ஐக்கிய அரபு அமீரகம் பயணம்

பிரதமர் மன்மோன் சிங், அடுத்த மாதம்(மார்ச் ), ஐக்கிய அரபு எமிரேடிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.

 30 ஆண்டுகளுக்குப் பின், இந்தியப் பிரதமர்களில் ஒருவர், அந்த நாட்டிற்கு செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்க நாடுகள் பங்கேற்கும், "பிரிக்ஸ்' மாநாடு, அடுத்த மாதம், 26 மற்றும் 27ம் தேதிகளில், தென் ஆப்ரிக்காவில் உள்ள டர்பன் நகரில் நடக்கிறது. இம்மாநாட்டில் பங்கேற்க, டர்பன் செல்லும் வழியில், ஐக்கிய அரபு எமிரேடிற்கு செல்ல, பிரதமர் மன்மோகன் சிங் திட்டமிட்டு உள்ளார்.

இருப்பினும், இது குறித்து, இறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இந்திரா பிரதமராக இருந்தபோது, 1981ல் ஐக்கிய அரபு  எமிரேடு சென்றார். அதன்பின், இந்திய பிரதமர்கள் யாரும் அங்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.