Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 14 மே, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வு: இடஒதுக்கீட்டை பின்பற்ற ஜெயலலிதா அரசு மறுப்பு


பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் தேமுதிக உறுப்பினர் ஆர்.சுபா (கெங்கவல்லி) பேசியது:-

தேசிய ஆசிரியர் தேர்வு வாரியம் (என்சிடிஇ) வழிகாட்டுதல்படி தகுதித் தேர்வு மூலம் ஆசிரியர்களை நியமிக்கும் முறையை அரசு அறிமுகப்படுத்தியது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தலாம் என தேசிய ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவாகக் கூறியுள்ளது.

அண்மையில் 19 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படாமல் பொதுத் தேர்வாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 60 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்ற அனைவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்குத் தனி கட்- ஆஃப் தரப்படவில்லை. இதனால் அந்தச் சமூகத்தைச் சேர்ந்தோர் பாதிக்கப்படுகின்றனர்.

தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்கான பணியிடங்களில் 40 சதவீதம் காலியாக உள்ளது. இடஒதுக்கீட்டு முறை பின்பற்றாமல் பட்டதாரி ஆசிரியர் நியமித்ததை செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறி, மறு ஆய்வு செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

எனவே, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்துக்கான கட்- ஆஃப் மதிப்பெண்களைக் குறைத்து இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்ற வேண்டும் என்றார்.

அமைச்சர் வைகைச்செல்வன் பேசியது:-

பணித் தேர்வின் போது இடஒதுக்கீட்டு முறையை அரசு சரியாகக் கடைப்பிடித்து வருகிறது. அதே சமயம் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவாகும்.

மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும் என்பதற்காகவும், தரமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த முறையைப் பின்பற்றுகிறோம். எனவே ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கட் - ஆஃப் மதிப்பெண்ணை 60 சதவீதத்தில் இருந்து குறைக்கும் எண்ணம் அரசிடம் இல்லை.

ஆர்.சுபா: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே தற்போது பணி நியமனம் செய்யப்படுகின்றனர். ஆனால், கடந்த காலமுறைப்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரும் ஆசிரியருக்கான அனைத்து தகுதிகளையும் பெற்றவர்கள். அவர்களுக்கும் ஆசிரியர் பணி நியமனம் வழங்க வேண்டும்.

அமைச்சர் வைகைச்செல்வன்: அரசின் கொள்கை முடிவின்படி அவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்குவதற்கான வாய்ப்பு இல்லை.

வாந்தி-பேதிக்கு இந்திய விஞ்ஞானிகள் புதிய மருந்து கண்டுபிடிப்பு


வயிற்றுப் போக்குக்கு எதிராக போராடும் புதிய மருந்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சம் குழந்தைகள் வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் ரோட்டா வைரஸ் தாக்கி உயிரிழக்கின்றனர். இதனை தடுக்கும் வகையில் தற்போது ஹைதராபாத்தில் உள்ள பாரத் பையோடெக் லிமிடட் நிறுவனத்தைச் சேர்ந்த இந்திய விஞ்ஞானிகள், ரோடா வைரஸை எதிர்த்து போராடும் புதிய மருந்தினை கண்டுபிடித்து அதனை வெற்றிகரமாக சோதித்தும் பார்த்துவிட்டனர்.
இந்த மருந்தினை, குழந்தைகளுக்கு மூன்று தவணைகளாக கொடுத்தால், அவர்களுக்கு வாந்தி மற்றும் பேதி ஏற்பட்டு உயிரிழப்பது தவிர்க்கப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வயிற்றுப் போக்குகளைத் தடுக்கும் வெளிநாட்டு மருந்துகளின் விலையை விட மிகக் குறைந்த விலையில் இது விற்பனை செய்யப்பட உள்ளது.
இந்த மருந்தினைக் கண்டுபிடிக்க மத்திய அரசும், பில் அன்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையும் இணைந்து சுமார் 100 மில்லியன் டாலர்களை செலவழித்துள்ளது . இம்மருந்து அமெரிக்கா மற்றும் இந்திய ஆய்வுக் கூடங்களில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்தியா கண்டுபிடித்துள்ள முதல் புதிய மருந்தான இது விரைவில் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது.

நகை வடிவமைப்பு(JEWELERY DESIGN) படிப்புகள்


நகை வடிவமைப்பாளர்கள், தற்போது டிசைனிங் பயிற்சி நிறுவனத்தில் டிப்ளமோ முடித்து, நேரடியாக பெரிய வடிவமைப்பு மற்றும் விற்பனை நிறுவனத்தில் பணியாற்றலாம். இவர்கள் சிறப்பான சம்பளம் பெறும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

வடிவமைப்பு துறையில் ஆர்வம், முயற்சி இருந்தால் போதும். படைப்பாற்றல், கற்பனை திறனுடையவராகவும் நகை வடிவமைப்பின் நுட்பத்தை புரிந்து கொள்பவராகவும் இருத்தல் வேண்டும். கைகளாலோ, கம்ப்யூட்டராலோ வடிவமைத்துக் கொண்டு வாடிக்கையாளரின் தேவைக்கும் ரசனைக்கும் ஏற்ப, நகைகளை வடிவமைப்பதே இத்துறையின் அடிப்படை பணி. சுயமாகவும் பெரிய பன்னாட்டு நிறுவனங்களில் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலையிலும் அமரலாம்.

இந்தியாவில் உள்ள நகை வடிவமைப்பு பயிற்சி நிறுவனங்கள்

* இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஜுவல்லரி, மும்பை

* ஜுவல்லரி டிசைன் அண்டு டெக்னாலஜி இன்ஸ்டிடியூட், நொய்டா

* ஜெம் அண்டு ஜுவல்லரி எக்ஸ்போர்ட் புரமோஷன் கவுன்சில், ஜெய்ப்பூர்

* ஜுவல்லரி எக்ஸ்போர்ட் புரமோஷன் கவுன்சில், மும்பை

வேலைவாய்ப்பை அள்ளித்தரும் "டெலிகம்யூனிகேஷன் இன்ஜினியரிங்" படிப்பு


மொபைல் போன்கள், கேபிள் டிவி, கம்யூட்டர் கட்டமைப்பு, டிவி ரேடார், செயற்கைக்கோள்கள் மற்றும் நேவிகேஷன் உள்பட, பல்வேறு வகை தொலைத்தொடர்பு சாதனங்கள் குறித்து படிப்பதே டெலிகம்யூனிகேஷன்.

கம்ப்யூட்டர் சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் தொழில்நுட்பம் நன்கு தெரிந்து வைத்திருப்பதே இத்துறை வல்லுநர்களின் அடிப்படை தகுதி. மேலும், திட்டமிடல், தொழில்நுட்ப திறமை, பேச்சாற்றல் ஆகியவற்றில் சிறப்பாக இருக்க வேண்டும். இதில் பயிலும் மாணவர்களுக்கு, டிசைன், இன்ஸ்டால், டிரபிள்சூட், வயர்லெஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் நெட்வொர்க் குறித்த பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

படிப்புகள்
பி.டெக்., டெலிகம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படிப்புக்கு பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை தேர்வு செய்திருக்க வேண்டும்.

ஐ.ஐ.டி., போன்று மாநில அளவிலான நுழைவுத் தேர்வு இதற்கு நடத்தப்படுகிறது. முதுநிலை படிப்புக்கு ஏ.ஐ.சி.டி.இ., யால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பயிலும் நிறுவனங்கள்

டாக்டர் அம்பேத்கர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பெங்களூரு. http://www.drait.org/

டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் டெக்னாலஜிக்கல் யுனிவர்சிட்டி,
மகாராஷ்டிரா. http://www.dbatu.ac.in/

ஆர்மி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, புனே. www.aitpune.com

அசாம் இன்ஜினியரிங் காலேஜ், அசாம். http://www.aec.ac.in/

இன்ஸ்டிடியூட் ஆப் ஏரோநாட்டிக்கல் அண்டு மரைன் என்ஜினியரிங், பெங்களூரு. www.iameindia.org/

பெங்கால் இன்ஜினியரிங் காலேஜ், மேற்கு வங்கம். http://www.becs.ac.in/

பாரதி வித்யபீத்ஸ் காலேஜ் ஆப் இன்ஜினியரிங், டில்லி. http://www.bvcoend.ac.in/

பி.எம்.எஸ்., காலேஜ் ஆப் இன்ஜினியரிங், பெங்களூரு.www.bmsce.in/

பி.எம்.எஸ்., இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, அரியானா. http://www.bmsit.org.in/

தயானந்தா சாகர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங், பெங்களூரு. www.dayanandasagar.edu/

காலேஜ் ஆப் இன்ஜினியரிங், கோவா. http://www.gec.ac.in/

வேலைவாய்ப்பு
தொலைத்தொடர்பு துறையை பொறுத்த வரை, இந்தியாவில் ஏராளமான பணிவாய்ப்புகள் உள்ளன. சிப் டிசைன், எம்ப÷டடு சாப்ட்வேர் டெவலப்மென்ட், டெலிகாம் மார்க்கெட்டிங், புரோடோகால் மற்றும் வி.எல்.எஸ்.ஐ., உள்ளிட்ட துறைகளில் ஆய்வு பொறியாளராக பணிபுரியலாம்.