Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 6 நவம்பர், 2012

பராக் ஒபாமா மீண்டும் அமெரிக்க அதிபராக தேர்வு

அமெரிக்க அதிபர் பதவிக்கான இறுதிகட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. பல கட்டங்களாக நடந்த இந்த தேர்தலில் சுமார் 120 மில்லியன் மக்கள் வாக்களித்தனர். 

அமெரிக்க அதிபரை அந்நாட்டின் 538 தேர்வு குழுவினர் (எலக்டோரல் காலேஜ்) தங்கள் ஓட்டுகளின் மூலம் தேர்வு செய்கின்றனர். இதில் 270 ஓட்டுகளை பெறும் வேட்பாளரே அதிபராக முடியும். 

இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் பராக் ஒபாமாவும், குடியரசு கட்சி வேட்பாளராக மாசாசூசெட்ஸ் மாகாணத்தின் முன்னாள் முதல்வர் மிட் ரோம்னியும் போட்டியிட்டனர். 

அமெரிக்காவில் மொத்தம் உள்ள 84 மாகாணங்களில் இரண்டு கட்சிகளுமே சரி சமமான செல்வாக்குடன் இருப்பதாக முந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. இந்த தேர்தலில் 6 இந்தியர்களும் போட்டியிட்டனர். 

நேற்றைய தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒபாமாவை ஆதரித்து அமெரிக்காவில் வாழும் 75 சதவீத இந்தியர்கள் வாக்களித்தாக வாக்குப்பதிவுக்கு பின்னர் நடந்த கருத்துக்கணிப்பு உறுதிபடுத்தியது. 

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. பென்சில்வேனியா, மாசாசூசெட்ஸ், நியூயார்க், கனெக்ட்கட், மெய்னே, மேரிலேண்ட், இல்லினாய்ஸ், மிச்சிகன், வாஷிங்டன் உள்ளிட்ட பல மாகாணங்களில் ஒபாமா அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார். 

இந்திய நேரப்படி, இன்று காலை 9 மணி நிலவரப்படி ஒபாமா 274 வாக்குகளை பெற்றார். இதன் மூலம் ஒபாமாவின் வெற்றி உறுதியானது.  அவரை எதிர்த்து போட்டியிட்ட மிட் ரோம்னி 203 வாக்குகள் பெற்று பின்தங்கி இருந்தார். 10.30 மணியளவில் ஒபாமா 290 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.    

இதையடுத்து அவர் நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்து சிகாகோ நகரில் உரையாற்றினார். அவர் கூறியதாவது: 

எனக்கு வாக்களித்த அமெரிக்க மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை போட்டி கடுமையாக இருந்தது. ரோம்னி கடும் சவாலாக இருந்தார். இந்த வெற்றி அமெரிக்க மக்களுக்கு கிடைத்த வெற்றி. 

அமெரிக்க குடும்பமான நாம் நாட்டின் வளர்ச்சிக்கு ஒன்றாக பாடுபடுவோம். வேலைக்காக போராடும் சூழல் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு பிறகு பொருளாதாரம் மேம்பட்டு வருகிறது. அமெரிக்காவுக்கு சிறப்பான மாற்றம் காத்திருக்கிறது. 

சாதாரண மக்களும் உயர் பதவிக்கு வரலாம். முன்னேற்றப் பாதையை நோக்கி ஒற்றுமையாக செல்வோம். நாட்டின் வளர்ச்சிக்காக  ரோம்னியுடன் இணைந்து செயல்பட விரும்புகிறேன். சிரமங்களுக்குப் பிறகே முன்னேற்றம் கிடைக்கும். 

அமெரிக்க மக்கள் கடன் சுமை இல்லாத நிலையை உருவாக்க பாடுபடுவேன். எனது வெற்றிக்காக வலிமையான ஒரு குழு பாடுபட்டது. எனது வெற்றி அமெரிக்க மக்களின் வெற்றி. என்றும் மக்களுக்கு நன்றி உள்ளவனாக இருப்பேன்.

புதிய மாருதி கார் விலை ரூ.2 லட்சம்


மாருதி நிறுவனம் புதிய ஆல்ட்டோ 800 காரை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மானேசர் ஆலை பிரச்னையால் புதிய ஆல்ட்டோ 800 காரின் அறிமுகத்தை ஒத்திப்போடுவதாக மாருதி ஏற்கனவே தெரிவித்திருந்தது.

 ஆனால், ஸ்விப்ட், டிசையர் உற்பத்தி தடைபட்டுள்ளதால் அந்த நிறுவனத்துக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த இரு கார்களும் அந்த நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 40 சதவீத பங்களிப்பை அளித்து வருகிறது.புதிய ஆல்ட்டோ 800 காரை ரூ.2 லட்சம் விலையில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதால், டாடா நானோ, ஹூண்டாய் இயான் விற்பனையில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆட்டோமொபைல் துறையினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்தியாவின் தேசிய அடையாள அட்டைப்பணி மார்ச்சில் நிறைவு செய்ய உத்தரவு


ரேஷன் கார்டு வழங்கும் திட்டத்தை, "ஸ்மார்ட் கார்டு' மூலம் கொண்டு வருவதற்கான முன்னேற்பாடுகள், மாவட்டம் வாரியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மார்ச் மாதத்துக்குள் பணியை நிறைவு செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள, 32 மாவட்டங்களில், எட்டு கோடி மக்கள் தொகை உள்ளது. 10 ஆண்டுக்கு, ஒருமுறை எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011ம் ஆண்டு நடத்தப்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவங்கள் அனைத்தும், மத்திய அரசின் உள்துறை அமைச்சக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அவை, மாநில வாரியாக, பொதுமக்களின் விவரங்கள், கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழக அரசு, ரேஷன் கார்டு முறையை மாற்றியமைக்க, இரண்டு ஆண்டுகளாக ஆலோசித்து வருகிறது.

தேசிய மக்கள் தொகை பதிவேடு முறையை அடிப்படையாகக் கொண்டு, "ஸ்மார்ட் கார்டு' மூலம் ரேஷன் பொருள் வினியோகத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. தற்போது, தேசிய அடையாள அட்டைக்கான பணி நடந்து வருகிறது. இந்த பணி முடிவடைந்தவுடன், அதைக் கொண்டு, "ஸ்மார்ட் கார்டு' தயாரிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒரு தனியார் நிறுவனம், இந்த பணியை செய்து வருகிறது. ஒவ்வொரு தாலுகாவிலும், போட்டோ, கைரேகை, கருவிழி பதிவு செய்வதற்கான முகாம், வருவாய்த் துறையால் அறிவிக்கப்படும். அந்த நாளில், மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, கணக்கெடுப்பாளர்கள் வழங்கிய ரசீதை எடுத்துச் செல்ல வேண்டும். அந்த ரசீதுடன் சேர்த்து, தேசிய அடையாள அட்டைக்கான படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். ஐந்து வயதுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் செல்ல வேண்டும். பதிவு முடிந்தவுடன், சம்மந்தப்பட்ட படிவம் முத்திரையிடப்பட்டு, தாசில்தார் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படும். மார்ச் மாதத்துக்குள், அடையாள அட்டை பதிவு பணியை முடித்து, அரசிடம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சீத்தாப்பழம் மருத்துவ பயன்கள்


1. சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும்.

2. சீத்தாப்பழச்சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும்.

3. இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவரை புண்கள் ஆறும்.

4. விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்து விடும்.

5. சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.

6. சீத்தாப் பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.

7. சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது.

8.சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்துவர எலும்பு உறுதியாகும். பல்லும் உறுதியாகும்.

9.சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்துவர தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது. பொடுகு காணாமல் போகும்.

10 சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் கட்டுப்படும் .

சிறுபான்மை பள்ளிகளில் அடிப்படை வசதிக்கு ரூ.50 லட்சம் : மத்திய அரசு


சிறுபான்மை பள்ளிகளில் கழிப்பறை, குடிநீர் வசதிகளை ஏற்படுத்த, அடிப்படை கட்டடமைப்பு வளர்ச்சி திட்டத்தில் (ஐ.டி.எம்.ஐ.,), மத்திய அரசு, 50 லட்சம் நிதி வழங்குகிறது. இப்பள்ளிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த, புதிய திட்டத்தை, அரசு கொண்டு வந்துள்ளது.
தற்காக, முதன்மைக் கல்வி அலுவலர், பிற்பட்ட, சிறுபான்மை நல அலுவலர், சிறுபான்மை உறுப்பினர்கள் இருவர், தொடக்கக்கல்வி அலுவலர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, பள்ளிகளில் கழிப்பறை, குடிநீர் வசதி குறித்து ஆய்வு செய்து, நிதி வழங்க பரிந்துரைக்கும்.
அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்நிதியை பெற, பள்ளிகள் விண்ணப்பிக்கலாம். மானியக்குழுவின் பரிந்துரைகள், தொடக்கல்வித்துறை இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்படும். பின், நிதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தமிழக அரசு 12 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்: லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு ?


தமிழக தொழில்துறை வரலாற்றில், முதல் முறையாக, 12 நிறுவனங்கள், 20 ஆயிரத்து 928 கோடி ரூபாய் முதலீடு செய்யும் ஒப்பந்தங்கள் ஒரே நாளில் கையெழுத்தாகி உள்ளன. இதன் மூலம், நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த, 12 நிறுவனங்கள் புதிதாக தொழில் துவங்கவும், ஏற்கனவே உள்ள தொழில்களை விரிவுபடுத்தவும் தமிழக அரசுடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. இதற்கான விழா, சென்னையில் நேற்று நடந்தது.

விழாவில், முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: நாட்டில் பொருளாதார தாராளமய கொள்கையை, அமல் செய்த பின், தமிழகம் தான், முதன் முதலில், 1992ல் பொருளாதார கொள்கையை அறிவித்தது. இதன் மூலம், தமிழகத்தின் பொருளாதார மேம்பாட்டுக்கு, வலுவான அடித்தளம் போடப்பட்டது.  இன்று, ஆட்டோமொபைல் தொழிலில், உலகின் முக்கிய கேந்திரமாக, தமிழகம் விளங்க இதுவே காரணம்.

துரதிஷ்டவசமாக, 1996ம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இல்லாமல் போய்விட்டது. 2001ம் ஆண்டு, மீண்டும் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த போது, தொழில் வளர்ச்சிக்கு உகந்த சூழலை ஏற்படுத்தினோம். 2003ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட தொழில் கொள்கை மூலம், தமிழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் துறையில், பெரும் புரட்சியே ஏற்பட்டது.

நோக்கியா, பாக்ஸ்கான், பிளக்ஸ்ட்ரானிக்ஸ் போன்ற நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்கின. இன்று, உலகின் மொபைல் போன் உற்பத்தியில், சென்னை முன்னணியில் உள்ளது. இதற்கு, 1992 மற்றும் 2003ல் அறிவிக்கப்பட்ட தொழில் கொள்கைகளே காரணம். தொழில் கொள்கை 2012 விரைவில் வெளியிடப்பட உள்ளது.

கடந்த, 18 மாதங்களில் மட்டும், ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 706 கோடி ரூபாய் அன்னிய முதலீடு வந்துள்ளது. அன்னிய முதலீடு என்பது, இருபுறமும் கூர்மையுள்ள கத்தி போன்றது. அதை கவனமாக கையாள வேண்டும். ஆனால், சிறு வணிகத்தில் அன்னிய முதலீட்டை மத்திய அரசு அனுமதித்துள்ளதை தமிழக அரசு ஏற்கவில்லை.

சூரிய சக்தி உற்பத்தி குறித்த கொள்கையை ஏற்கனவே வெளியிட்டுள்ளோம். இவையெல்லாம் தமிழகத்தின் பொருளாதாரத்தை முதல் இடத்துக்கு கொண்டு செல்லும். இவ்வாறு, ஜெயலலிதா பேசினார்.