Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 27 ஏப்ரல், 2013

மத்திய அரசின் மானியத்தை மக்கள் நேரடியாக பெற ஜெயலலிதா எதிர்ப்பு


 "மானியத் தொகையை, நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தை கைவிட்டு, மாநில அரசுகள் மூலம், மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்; இல்லையேல், நேரடி மானியம் வழங்கும் திட்டத்தை, தமிழகத்தில் செயல்படுத்த முடியாது' என, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுகுறித்து, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, அவர் நேற்று எழுதிய கடிதம்: பயனாளிகளுக்கு நேரடி மானியம் அளிக்கும் திட்டத்தின், இரண்டாவது கட்டத்தை, 2013 ஜூலை மாதம் முதல், மத்திய அரசு துவங்க உள்ளதாக அறிகிறேன். ஏற்கனவே, தமிழகத்தில், அரியலூர், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களை, இத்திட்டத்தில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின், இத்திட்டத்துக்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறேன். ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசை, தவிர்த்துவிட்டு, மக்களை நேரடியாக அணுகுவது, கூட்டாட்சி தத்துவம் மற்றும் பரவலாக்கப்பட்ட ஜனநாயக முறைக்கு எதிரானது. பணத்தின் மூலம், மாநில மக்கள் மீது, மத்திய அரசு செல்வாக்கு செலுத்துவதாக அமைகிறது. கல்வி உதவித் தொகை, மருத்துவ கால உதவி, பென்ஷன் ஆகியவற்றை, வங்கிக் கணக்குகள் மூலம், பயனாளிகளுக்கு அளித்து வருகிறது. ஆனால், மத்திய அரசு அறிமுகம் செய்யும், நேரடி மானியம் அளிக்கும் திட்டம், மாநில அரசு மீது, மேலாண்மை செலுத்துவதாக அமையும். பொது வினியோகத் திட்டம், உர மானியம், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கு, நேரடி மானியம் அளிக்க முயற்சிப்பதை, துவக்கத்திலிருந்து எதிர்த்து வருகிறோம். பணத்தை அளிப்பதற்காக மட்டுமல்ல, சந்தையில் பொருட்கள் தேவையான நேரத்தில், போதியளவு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், நேரடி மானியத்தை எதிர்க்கிறோம். பயனாளிகளை முழுமையாக அறிந்து, பட்டியல் எடுக்கும் பணியை மாநில அரசு மேற்கொள்கிறது. ஆனால், நேரடி மானியத்தை மத்திய அரசு அளிப்பது, பொறுப்புகளை தட்டிக் கழிப்பதாக உள்ளது.

 மாநில அரசுகளை ஆலோசிக்காமல், நேரடி மானியத் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என, மத்திய திட்ட கமிஷன், கண்டிப்பான அறிவுரைகளையும், வழிகாட்டி நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. ஆனால், மாநில அரசுகளை ஆலோசிக்காமல், மத்திய அரசு, தன்னிச்சையாக முடிவெடுத்து, ஒவ்வொரு திட்டங்களையும் அறிவிக்கிறது. அதன் பின், அம்முடிவை அமல் செய்யும் களமாக மாநில அரசுகளை பயன்படுத்துகிறது. இந்த அணுகுமுறை, முற்றிலும் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. நேரடி மானியத் திட்டத்துக்கு, தயார் செய்யப்பட்டுள்ள, 25 திட்டங்களில், பல திட்டங்களில், மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பு உள்ளது. இதில், தேசிய ஊரக சுகாதார திட்டத்தில், கர்ப்பிணி பெண்களுக்கான பாதுகாப்பு திட்டம் ஒன்று.

தமிழகத்தில் அமல்படுத்தப்படும், முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டம் போலவே, இந்திரா காந்தி கர்ப்பிணி பெண்கள் பாதுகாப்பு திட்டத்தை, மத்திய அரசு அமல் செய்கிறது. இத்திட்டத்துக்கு, நேரடி மானியத்தை பயனாளிகளுக்கு அளிக்க முன்வருகிறது. ஒரு மாநிலத்தில், ஏற்கனவே ஒரு திட்டம் செயல்படும்போது, அதுபோன்ற மற்றொரு திட்டத்தை, மத்திய அரசு அமல் செய்ய வேண்டிய அவசியமில்லை. அதற்கு பதில், மாநிலத் திட்டத்துக்கு ஆதரவு அளிக்கலாம். மேலும், கல்வி உதவித் தொகை போன்ற திட்டங்களை, மாநில அரசு அமல்படுத்திவிட்டு, திட்டத் தொகையில், ஒரு பகுதியை, மத்திய அரசிடம் பெறுகிறது. இந்த நிலையில், மத்திய அரசு, நேரடியாக பணம் அளித்தால், மாநில அரசுகள் பாதிக்கப்படும். எனவே, தற்போது திட்டமிட்டுள்ள முறையில், நேரடி மானியத் திட்டத்தை அமல் செய்தால், பெரும் நிர்வாக பிரச்னைகள் ஏற்படும். எனவே, நேரடி மானியத் திட்டத்தை, மாநில அரசுகள் மூலம், மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். இல்லையேல், தமிழகத்தில் அத்திட்டத்தை செயல்படுத்த முடியாது. இவ்வாறு, ஜெயலலிதா கூறியுள்ளார்.

பாஜக அரசு கர்நாடக மக்களுக்கு துரோகம் இழைக்கிறது : சோனியா


கர்நாடக மக்களுக்கு  பாஜக அரசு துரோகும் இழைத்து வருகிறது. எனவே, மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர் என்று சோனியா கூறினார்.

கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா, இன்று சிக்மக்லூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசினார்.

அப்போது, கர்நாடக மக்களுக்கு  பாஜக அரசு துரோகும் இழைத்து வருகிறது. எனவே, மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். தங்களது இருண்ட நாட்களை மாற்ற விரும்புகின்றனர் மக்கள். இப்போதே அந்த மாற்றத்தை விரும்புகின்றனர் என்றார்.

மேலும், கர்நாடக மக்களின் நலனை பாஜக அரசு முற்றிலும் புறக்கணித்து விட்டது. துரோகம் இழைத்து விட்டது. கர்நாடக சுரங்க முறைகேடு, சுற்றுச் சூழலையே கெடுத்துவிட்டது என்று கூறியுள்ளார்.

புவி அறிவியல்(Earth Science) படிப்பு



பூமி, கடல், வளிமண்டலம் ஆகியவற்றோடு தொடர்புடைய அனைத்து அம்சங்களைப் பற்றிப் படிக்கும் பிரிவு, புவி அறிவியல் அல்லது "எர்த் சயின்ஸ்" என அழைக்கப்படுகிறது.

பூமியிலிருந்தே அனைத்து வளங்களையும் பெறுகிறோம். எர்த் சயின்ஸ் துறை, எண்ணெய், இயற்கை எரிவாயு, எரிபொருள், நீர், மண் போன்ற வளங்களை ஆய்வு செய்வது, இயற்கைச் சூழல், சுற்றுச் சூழலை பாதுகாப்பது, இயற்கை சீற்றங்களான நில நடுக்கம், மண் சரிவு போன்றவற்றிலிருந்து புவியைப் பாதுகாப்பது போன்ற அம்சங்களில் கவனத்தை செலுத்துகிறது.

பணித் தன்மை
எர்த் சயின்டிஸ்டுகளாகப் பணி புரிவோர் மனித இனம், தகவல், புதிய சிந்தனை, தொழில்நுட்பம் போன்றவற்றை இணைத்து பணி புரிகின்றனர். ஆய்வுக் கூடங்கள், அலுவலகங்கள்,மாறுபட்ட பருவநிலைகள், நில நடுக்கம், எரிமலை இருக்கும் பகுதிகளில் பணி புரிவது போன்ற சவால் இவர்களுக்கு காத்திருக்கின்றன.

துறைப் பிரிவுகள்
எர்த் சயின்ஸ் துறையில் பல உட்பிரிவுகள் உள்ளன. புவியின் இயற்கைத் தோற்றங்களைப் படிப்பதற்காக பாறைகள், மண் போன்றவற்றைத் தோண்டி ஆய்வு செய்வது இதில் ஒன்று. வளி மண்டலம், ஹைட்ரோஸ்பியர், பூமி போன்றவற்றின் தன்மையை அறிவதற்காக, எர்த் சயின்டிஸ்டுகள் இயற்பியல், கணிதம், வேதியியல் தத்துவங்களை பயன்படுத்துகின்றனர். நிலத்தடி நீரிலுள்ள வேதிப் பொருட்கள், கனிமங்களின் அளவையும் ஆய்வு செய்கின்றனர்.

ஹைட்ரோ ஜியாலஜிஸ்டுகள் நிலத்தடி நீரையும், ஓசனோகிராபர்கள் கடல் தொடர்புடைய ஆய்வுப் பணிகளையும் மேற்கொள்கின்றனர். பெட்ரோலியம் ஜியாலஜிஸ்டுகள், இயற்கை எண்ணெய், எரிவாயுவின் இருப்பிடம், உற்பத்தி குறித்த ஆய்வுப் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

கூடுதல் தகுதி
கடுமையான தட்பவெப்பத்தில் பணி புரிவது, பூமிக்கு அடியில் பணி புரிவது போன்ற சவாலான பணிகள் நிறைந்த இத்துறையில் பணியாற்ற, நல்ல உடல் தகுதி பெற்றிருப்பது அவசியம். குழு மனப்பான்மை, நிர்வாகத் திறன் மற்றும் தலைமைப் பண்புகளைப் பெற்றிருப்பதும் விரும்பத்தக்கது. பி.எஸ்சி., எம்.எஸ்சி., டிப்ளமோ மற்றும் பி.எச்டி., ஆகிய பிரிவுகளில் இப்படிப்பு உள்ளது.

வேலை வாய்ப்பு
ஜியோ சயின்டிஸ்டுகளுக்கு பிற இடங்களிலும் பணி வாய்ப்புகள் உள்ளன. இந்தியன் பீரோ ஆப் மைன்ஸ், மினரல் எக்ஸ்புளோரேஷன், இந்திய வானிலை மையம், ஓ.என்.ஜி.சி., ஜெம் இண்டஸ்ட்ரி, கட்டுமானத் துறை, கனிம ஆய்வு நிறுவனங்கள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு நிறுவனங்கள் என பல வாய்ப்புகள் உள்ளன.

எங்கு படிக்கலாம்?
* டில்லி பல்கலைக்கழகம்
* ஐ.எஸ்.எம்., பல்கலைக்கழகம், தன்பாத்
* ஐ.ஐ.டி.,  காரக்பூர்
* ஐ.ஐ.டி.,  ரூர்க்கி
* புனே பல்கலைக்கழகம்
* கொச்சின் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்

உலகம் வேடிக்கைபார்த்து சிரிக்கிறது; பாராளுமன்றத்தை நடத்த விடுங்கள்: பிரதமர்

நிலக்கரி ஊழல் தொடர்பாக சட்ட அமைச்சர் பதவி விலக வேண்டும், சீன படைகள் ஊடுருவல், பாகிஸ்தான் சிறையில் சரப்ஜித் மீதான தாக்குதல், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு குரல்கள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது : நிலக்கரி ஊழல் தொடர்பாக சட்ட அமைச்சர் அஸ்வினிகுமார் பதவி விலகும் பேச்சிற்கே இடமில்லை; அது குறித்த வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது; உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்; நான் தவறு ஏதும் செய்யவில்லை; சுப்ரீம் கோர்ட் அளித்த இறுதி நிலை அறிக்கையை அரசியல் நிர்வாகிகள் பார்க்கவில்லை; அதனால் அமைச்சர் பதவி விலக அவசியமில்லை; இந்திய எல்லைக்குள் சீன படைகளின் ஊடுருவலை தடுக்க நாங்கள் முறையாக திட்டமிட்டு வருகிறோம்; எல்லை பிரச்னையை பெரிதாக்க நாங்கள் விரும்பவில்லை; எல்லை பிரச்னை விரைவில் சுமூகமாக தீர்க்கப்படும்; நமது திட்டங்களை நாமே கேலி செய்யாமல் பார்லிமென்ட் கூட்டத்தை நடத்த விடுங்கள்; நமது செயல்களால் உலகம் நம்மை பார்த்து சிரிக்கிறது; பாகிஸ்தான் சிறையில் சரப்ஜித் சிங் தாக்கப்பட்டது மிகவும் வேதனை அளிக்கிறது; இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார். 

ரயில் டிரான்ஸ்போர்ட் பட்டயப்படிப்பு


புதுதில்லியில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் ரீடைல் டிரான்ஸ்போர்ட் நிறுவனம், டிப்ளமோ படிப்பில் சேர தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வழங்கப்படும் படிப்புகள்:

Transport Economics and Management

Multi - Modal Transport (Containerisation) & Logistics Management

கல்வித்தகுதி:
பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

கல்வி கட்டணம்: ஒவ்வொரு படிப்பிற்கும் ரூ.4000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையங்கள்: டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, செகந்தராபாத், லக்னோ, குவகாத்தி மற்றும் புவனேஸ்வர்.

படிப்பு பற்றிய முழுவிவரங்களை குறிப்பேட்டினை வாங்கி தெரிந்து கொள்ளலாம்.

குறிப்பேட்டின் விலை ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.100 இதனை இன்ஸ்டிடியூட் ஆப் ரீடைல் டிரான்ஸ்போர்ட் என்ற பெயரில் புது தில்லியில் மாற்றத்தக்க வகையில் டிடி.,யாக எடுக்க வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஏப்ரல் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விரிவான தகவல்களுக்கு Institute of Rail Transport, 17, Rail Bhavan, New delhi - 110001. New Delhi 110001, Ph: 011-23304147 என்ற முகவரியில் அறியலாம் அல்லது www.irt-india.com என்ற இணையதளத்தை பார்க்கலாம்.