Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 26 ஜூன், 2012

காராக்கிரக கதவுகள் திறக்கட்டும் ! அப்பாவிகள் வாழ்வு மலரட்டும் !


    பத்தாண்டுகளுக்கு மேலான சிறைவாசிகள் விடுதலைகோரி 

            இந்திய யூனியன் முஸ்லிம் லீக்                                                

                               மாபெரும் பொதுக்கூட்டம் 
      
                                              நாள் :
 இன்ஷால்லாஹ் 08 /07 /2012  ஞாயிறு -  இரவு 8  மணி 
                                                           இடம் : 
        பஜார் திடல் ,மேலப்பாளையம் 

                                     கோரிக்கை முழக்கம் :  
                சமுதாயப் பெருந்தலைவர் 
    பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன் 
                   சமுதாயப் போர்வாள்             
              எம்.அப்துல் ரகுமான் M P 
             
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
                                              இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

                                                            மேலப்பாளையம்

பறக்கும் போதே மொபைல் மூலம் பேசலாம் : புதிய விமான சேவை

விமானத்தில் செல்லும்போதும், "மொபைல் போனில்' பேசுவது, உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கொண்ட புதிய விமானத்தை, பிரிட்டனின் விர்ஜின் நிறுவனம், விரைவில் டில்லியிலிருந்து லண்டனுக்கு இயக்கவுள்ளது.

இதுகுறித்து பிரிட்டனின் விர்ஜின் விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஸ்டீவ் ரிக்வே கூறியதாவது: தற்போது விமானங்களில் பயணிப்போர், "மொபைல் போனில்' பேச முடியாது. ஆனால், நாங்கள் புதிதாக, டில்லியிலிருந்து லண்டனுக்கு, அடுத்த மாதம், 11ம் தேதியில் இருந்து இயக்கவுள்ள, ஏ 330 ரக விமானத்தில், "மொபைல் போனில்' பேசும் வசதியை ஏற்படுத்த உள்ளோம்.

இதற்காக, அந்த விமானத்தில் "ஏரோ மொபைல்' தொழில்நுட்ப வசதியை ஏற்படுத்தவுள்ளோம். இதன் மூலம், அந்த விமானம், தரையிலிருந்து 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தாலும், அதிலிருந்தபடி "மொபைல் போனில்' பேசவும், குறுந்தகவல்களை அனுப்பவும் முடியும். இதுதவிர, தொடு திரை பொழுபோக்கு வசதியையும் அறிமுகப்படுத்த உள்ளோம். அந்த விமானத்தில் மேலும் பல வசதிகளையும் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு ஸ்டீவ் ரிக்வே கூறினார். 

நேர்மையின் அடையாளமோ ?

 சத்துணவு பணியாளர் நியமனம் தொடர்பாக அரசு அலுவலர்கள் மீது புகார் எழுந்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
 தூத்துக்குடி மாவட்டத்தில் சத்துணவு பணியாளர் நியமனம் தொடர்பான நேர்முகத் தேர்வு ஜூலை 3-ம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

 தூத்துக்குடி மாவட்டத்தில் சத்துணவு திட்டத்தின் கீழ் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 35 சத்துணவு அமைப்பாளர், 28 சமையலர், 153 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு மாவட்ட அளவில் ஜூலை 3-ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
 நேர்முகத் தேர்வுக்கு கடிதம் வரப்பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் ஜூலை 3-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும்.
 சத்துணவு திட்டத்தின் கீழ் வரப்பெற்ற விண்ணப்பங்களில் விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோருக்கு தகுதி அடிப்படையில் 25 சதவீத பணியிடங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
 மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களது தகுதியின் அடிப்படையில் 3 சதவீத ஒதுக்கீடு செய்யப்படும். ஊனத்தின் சதவீதம், பணிபுரிவதற்கான உடல் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் பரிசீலிக்கப்படும்.
 சத்துணவு பணியாளர்களுக்கான தேர்வு நேர்மையாகவும், முறையாகவும், நியாயமானதாகவும் மற்றும் அரசு விதிகளில் குறிப்பிட்டுள்ள தகுதியின் அடிப்படையில் நடத்தப்படும்.
 சத்துணவு பணியாளர் காலியிடங்களுக்கு வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றும் நபர்களிடம் பொதுமக்கள் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். சத்துணவு பணியாளர் நியமனத்திற்கு இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்.
 சத்துணவு பணியாளர் நியமனம் தொடர்பாக அரசு அலுவலர்கள் மீது புகார்கள் ஏதும் வந்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
 மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) மற்றும் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி ஆணையர்களை தொடர்பு கொள்ளலாம். 

காஷ்மீர் சூஃபி தர்காவில் தீவிபத்து: போலீசார் பொதுமக்கள் மோதல்

காஷ்மீரில் 200 ஆண்டுகள் பாரம்பரியமிக்க சூஃபி தர்காவில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
தீவிபத்து குறித்து தகவல் அளித்தும் தீயணைப்பு வாகனங்கள் வர ஒரு மணி நேரத்துக்கும் மேல் தாமதமானதாகக் கூறி  பொதுமக்கள் குற்றம்சாட்டினர். எனினும் கூட்டம் அதிகமாக இருந்ததால் சம்பவ இடத்தை அடைவதில் சிரமம் ஏற்பட்டதாகவும் வேறு தாமதம் எதுவும் இல்லை என்று தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.




இதனால் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கூட்டத்தைக் கலைக்க கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசினர். மேலும் தடியடியும் நடத்தப்பட்டது. இந்த சம்பவங்களைத் தொடர்ந்து அப்பகுதியில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன.
இந்த மோதல்களில் 10 போலீசார் உள்ளிட்ட 20 பேர் காயமடைந்தனர்.