Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 14 ஜூலை, 2012

மரியாதையுடனும் ,அடக்கத்துடனும் ஏற்றுக்கொள்கிறேன்........


ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில்  துணை ஜனாதிபதி வேட்பாளராக நான் அறிவிக்கப்பட்டுள்ளதை மிகுந்த மரியாதையுடனும் அடக்கத்துடனும் ஏற்றுக்கொள்கிறேன் என்று ஹமீது அன்சாரி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
 
நாட்டின் உயரிய பதவிகளில்  ஒன்றான துணை ஜனாதிபதி பதவிக்காக என் மீது நம்பிக்கை வைத்து என்னை வேட்பாளராக அறிவித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரான சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் எனக்கு அதரவளித்துள்ள கூட்டணி  கட்சியினருக்கும் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அறிவிப்பை அடக்கத்துடன் ஏற்கிறேன்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
இவரது அறிக்கை வெளியிடுவதற்கு முன்பே, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் அறிவிப்பு குறித்த செய்தியை பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பவன் குமார் பன்சால் துணை ஜனாதிபதி அலுவலகத்தில் முதலில் கொண்டுபோய் சேர்த்தார்.
 
இதற்கு முன்பு துணை ஜனாதிபதியாக இருந்த ஹமீது அன்சாரி சிறந்த முறையில் பண்பாளராகவும் மேன்மைக்குரியவராகவும் ராஜ்யசபாவை நடத்தினார். இதனால் அவரையே இரண்டாவது முறையாகவும் தேர்வு செய்தோம் என்று பன்சால் தெரிவித்தார்.

கண்ணியத்தலைவரும் கர்மவீரரும்


காமராஜர் முதல் அமைச்சராக பதவி ஏற்றபோது, அவர் சட்டமன்ற உறுப்பினராக இல்லை. ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். அவர் விரும்பி இருந்தால், மேல் சபை உறுப்பினராக ஆகி இருக்கலாம். அல்லது காங்கிரஸ் கோட்டையாக விளங்கிய ஒரு தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.யை ராஜினாமா செய்யச் சொல்லிவிட்டு, அங்கு இடைத்தேர்தலில் போட்டியிட்டு சுலபமாக வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினராக ஆகி இருக்கலாம்.

இதையெல்லாம் காமராஜர் விரும்பவில்லை. ஏற்கனவே காலியாக இருந்த குடியாத்தம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்தார். குடியாத்தம் தொகுதி, "கம்யூனிஸ்டு கட்சியின் கோட்டை" என்று கருதப்பட்ட தொகுதியாகும். அங்கு காமராஜர் போட்டியிட்டது, அனைவருக்கும் வியப்பளித்தது. காமராஜரை எதிர்த்து கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கே.கோதண்டராமன் போட்டியிட்டார்.

(அப்போது கம்யூனிஸ்டு கட்சி பிளவு படாமல் ஒரே கட்சியாக இருந்தது.)   தேர்தலில் காமராஜரை ஆதரித்து ஈ.வெ.ரா.பெரியார் பிரசாரம் செய்தார். "காமராஜர் பச்சைத் தமிழர். அவர் முதல் அமைச்சராக இருந்தால்தான் தமிழ்நாடு முன்னேறும்" என்று பெரியார் கூறினார். ராஜாஜியின் கல்வித் திட்டத்தை ரத்து செய்ததற்காக காமராஜருக்கு ஆதரவு தெரிவித்த பேரறிஞர் அண்ணா, "குலக்கொழுந்தே! குணாளா!" என்று பாராட்டி எழுதினார்.

       ஆனால் ,காமராஜர் ஒரு முக்கியத்தலைவரின் ஆதரவு கிடைத்தாலே நாம் வெற்றி பெற்றுவிடலாம் என்று நம்பிக்கை வைத்துக்கொண்டு ,அந்த முக்கியத்தலைவரை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டார் .அந்தத் தலைவர் கூறினார் ,நானும் என் சமுதாயமும் குடியாத்தம் இடைத்தேர்தலில் உங்களை ஆதரிக்கிறோம் .அந்த தலைவரின் வார்த்தைகளை கேட்டவுடன் ,வெற்றி பெற்ற சந்தோசத்தை காமராஜர் அடைந்தார் ,வெற்றியும் பெற்றார்.அந்த முக்கியத்தலைவர் ,யார் தெரியுமா ? இந்திய சிறுபான்மை சமுதாய மக்களின் உண்மைக் குரலாக ,உரிமைக் குரலாக ஓங்கி ஒலித்த குரலுக்கு சொந்தக்காரர் ,முஸ்லிம்களின் சமுதாயத் தந்தை கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் ஆவார்கள் . ஆனால் இந்த வரலாற்று நிகழ்வை இன்றைய காங்கிரஸ் காரர்கள் மட்டுமல்ல எல்லா ஊடகங்களும் மறைத்து விடுகின்றன .

கம்யூனிஸ்டு கட்சி நீங்கலாக, எல்லா கட்சிகளும் காமராஜரை ஆதரித்தன.   1954 ஆகஸ்டு மாதத்தில் (முதல் அமைச்சராக பதவி ஏற்ற 4 மாத காலத்தில்) நடைபெற்ற குடியாத்தம் இடைத் தேர்தலில் காமராஜர் வெற்றி பெற்றார். அவருக்கு 64,344 ஓட்டுகளும், கம்யூனிஸ்டு வேட்பாளர் கோதண்டராமனுக்கு 26,132 ஓட்டுகளும் கிடைத்தன. அதாவது 38,212 ஓட்டு வித்தியாசத்தில் காமராஜர் வென்றார்.



முஸ்லிம் கல்விக்கூடங்களில் அரபி பாடம், உர்தூ மொழிகளில் தனி வகுப்புகள் நடத்தவேண்டும் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கோரிக்கை

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கோவையில் நிருபர்களுக்குப் பேட்டி அளித் தார். 

அப்போது அவர் கூறிய தாவது- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கம் 100 ஆண்டை கடந்து இந்திய அரசியலில் தொடா;ந்து நீடித்து கொண்டு இருக்கும் இயக்கமாகும் சுதந்திரத்திற்கு முன்பு அகில இந்திய முஸ்லிம்லீக் என்று இருந்தது. சுதந்திரத்திற்கு பிறகு இந்திய யூனியன் முஸ்லிம்லீக் என்ற பெயர் பெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம்லீக் 14 மாநிலங்களில் உள்ளது. கேரளாவில் வலிமை வாய்ந்த அரசியல் கட்சியாக விளங்கு கிறது. அடுத்து தமிழகத்திலும் உள்ளோம். கடந்த காலங்களில் ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனியாக விளங்கி வந்ததை மாற்றி ஒரே அமைப் பாக செயல்படுவது என்ற முடிவெடுத்து இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்று செயல்படுவதுடன் அனைத் திலும் அங்கீகாரம் பெற்று உள்ளோம். 

எங்களுக்கு கேரளாவில் ஒதுக்கப்பட்டுள்ள சின்னம் ஏணி ஆகும். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஏணி சின்னத் தில் போட்டியிடலாம் என்று அங்கீhரம் வழங்கப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் இந்தியா முழுவதும் உள்ள எல்லா மாநிலங்களிலும் இயக்கத்தை வலுப்படுத்த திட்டமிட்டு உள்ளோம். இப்போது கேரளா மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக உள்ளதை மேலும் மூன்று மாநிலத்தில் வரும் காலங்களில் போட்டி யிட்டு அதன் அடிப்படையில் தேசிய அரசியல் கட்சியாக அங்கீகரிப்பதற்குரிய பணி களை செய்து வருவதுடன் வரும் டிசம்பர் மாதத்திற்குள் எல்லா மாநிலங்களிலும் உள்ள முஸ்லிம் லீக் கட்சி தேர்தல் நடத்தி முடிக்க திட்டமிட்டுள் ளோம். 

ஆக இந்திய அரசியலில் எங்களது செயல்பாடு வளர்ந் திருக்கிறது. தமிழகத்தில் எங்களை பொருத்தவரை வளர்ந்து வருவதோடு மேலும் வலுப்படுத்துவதற்காக வரும் செப்டம்பர் மாதம் கல்வி விழிப் புணர்வு மாநாடு கும்பகோணத் தில் நடக்க உள்ளது. அந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் இ. அகம்மது சஹிப் மற்றும் சச்சார் கமினனராக விளங்கிய ராஜேந்திர சச்சார் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் சிறுபான்மை கல்வி சம்பந்தப்பட்ட பிரச் சனைகள் முக்கியமென கருதி அதன் தீர்வு தொடர்பாக மாநாட்டில் தெளிவுபடுத்த உள்ளோம். 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தி வருவது தேசிய ஒறுமைபாட்டை வளர்த்துவது எல்லா மக்களுடன் சமயநல் லிணக்கத்தை வலுப்படுத் துவது, சிறுபான்மையினராக முஸ்லிம்களின் தனித்தன் மையை பாதுகாப்பது என்ற அடிப்படை கொள்கையை வைத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயல்பட்டு வருகிறது. 

இப்போது ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஐ.மு. கூட்டணி அரசுக்கு ஆதரவாகவும், அக்கூட்டணி யில் தொடர்ந்து நீடித்து வருவதாலும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரணாப் முகா;ஜியை இந்திய யூனியன் முஸ்லிம்லீக் ஆதரிப் பது என முடிவு செய்து அதற்கான ஆதரவை அளித்து வருகிறோம். அவரை எதிர்த்து போட்டியிடக்கூடிய சங்மா அவருடைய பேச்சு அவருடைய செயல்பாடு ஒரு சாதாரண முனிசிபாலிட்டி தேர்தலில் போட்டியிடுவது போலவும், மற்றவர்களை கொச்சைப் படுத்தும் நிலையிலும் உள்ளது. இது ஒரு கண்ணியமான ஜனாதிபதி தேர்தலில் போட்டி யிடக்கூடிய வேட்பாளராக கருத முடியவில்லை. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு அளித் துள்ள பிரணாப்முகர்ஜி வெற்றி பெறுவது உறுதி என அறி கிறோம். 

தமிழ்நாட்டில் சட்டமன்றத் திலும், பாராளுமன்றத்திலும் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டுள் ளோம். 

தி.மு.க.வுடன் தொடர்ந்து கூட்டணியில் நீடித்து வருகின்றோம். தி.மு.க. தலைவர் சிறை நிரப்பும் போராட்டம் அறிவிக்கப்பட்டதில் 50-ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் சிறைக்கு செல்வார்கள் என தெரிவித்திருந்தார். ஆனால் கிடைத்த தகவல் இரண்டரை இலட்சம் பேர் சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள தகவல்கள் வெளியானதை வைத்து பார்க் கின்ற போது இன்று அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும் சட்டமன்றத்தில் தே.மு.தி.க. எதிர்கட்சியாக இருந்தாலும் மக்கள் மன்றத்தில் தி.மு.க. தனிப்பெரும் எதிர்கட்சியாக திகழ்கிறது என்பது இதுவே சான்றாகும். 

தமிழகத்தில் இன்று ஆட்சி நடத்தி வரும் ஜெயலலிதா சில துணிச்சலான காரியங்களை செய்து வருவதாக இருந்தாலும், அதற்கு ஒரு உதாரணம் அவரது ஆட்சியில் சென்னையில் உள்ள மாநகராட்சி கவுன்சிலர்களை அழைத்து அவர்களை கடுமை யாக எச்சரிக்கப்பட்ட செய்திகள் செய்தித் தாள்களில் வந்ததை நாம் அறிந்ததே. மேலும் பள்ளிக்கூடங்களில் சாதிச் சான்றிதழ்கள் வாங்குவதற்கும், 11,12-ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் வேலை வாய்ப்பு அலுவலகத் திற்கு சென்று பதிவு செய்வதை அந்தந்த பள்ளி களில் பதிவு செய்ய வேண்டும் என்கின்ற கோரிக்கையினை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து வலியுறுத்தி வந் துள்ளது. அரசாங்கம் உத்திர விடப்பட்டு உள்ளதை வர வேற்கிறோம். 

மேலும் தமிழக முதல்வரால் தினமும் ஒவ்வொரு திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் வெளி யிடப்பட்டு வருகிறது. ஆனால் இத்திட்டங்கள் வெறும் அறி விப்பு மட்டுமின்றி அதை நடைமுறைப்படுத்தப்பட்டு மக்களுக்கு சென்றடைந்தால் வரவேற்கத்தக்கதாகும். 

நாங்கள் எப்போதும் ஆட்சியா ளர்கள் நல்லதை செய்யும் போது பாராட்டு வதும் உண்டு. அல்லா ததை செய்யும் பொது அதன் குற்றங்குறைகளை சுட்டிக் காட்டுவதும் உண்டு. நல்ல திட்டங்களின் மூலம் வாரத் தில் இருநாள் நீதி போதனை கள் நடத்துவதற்கு அறி விப்பு செய் யப்பட்டுள்ளது. இதில் முஸ்லிம் சிறுபான்மை கல்விக்கூடங் களிலும் அரபி பாடம் உருது மொழி ஆகியவற்றில் போதனை செய்வதற்கு தனிவகுப்பு களை ஏற்படுத்த வேண்டு மென அரசுக்கு தெரிவித் துக் கொள்கிறேன். 

கோவை-மேட்டுப்பாளையம் இடையிலான பேசன்ஜர் ரயில் வாரத்தில் சனி மற்றும் ஞாயிற் றுக்கிழமைகளில் இயக்கப் படுவதில்லை. இதனால் நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மக்கள் பாதிப்பிற்குள்ளாவதுடன் அன்று தான் மக்கள் அதிகமாக இந்த ரயிலை பயன்படுத்தும் பயனாளி களாக உள்ளனர். இதை மத்திய அரசு கவனத்தில் கொண்டு எல்லா நாட்களிலும் இந்த ரயிலை இயக்;குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் தொடர்பாக எங்களது அகில இந்திய தலைவரும் மத்திய இணை அமைச்சருமான இ.அஹமது சாகிப் அவர்களு டன் பேசி ரயில்வே துறை அமைச்சரிடம் தெரிவிக்கவும் எண்ணியுள்ளோம். 

மேட்டுப்பாளையத்தில் அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளி மற்றும் வெளி நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கக்க அதிநவீன வசதிகள் ஏதும் செய்யப்படாமல் உள்ளது. இந்த மருத்துவமனை 130 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வாறு இருந்ததோ அவ்வாறே தற்போது வரை உள்ளது மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டப் பகுதியிலிருந்து வரக்கூடிய அவசர சிகிச்சைக் கான வசதிகள் மிகவும் குறைவாகவும் உள்ளது. மற்ற அடிப்படையான அனைத்து வசதிகளும் இந்த மருத்துவ மனையில் மேம்படுத்துவதுடன் அனைத்து நவீன கருவிகளை இம்மருத்துவமனையில் அமைத்து இயக்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மேடுப்பாளையம் நகரத்தில் அதிகமாக சிறு வியாபாரம் செய்து வரக்கூடிய வியாபாரி களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்துவதற் கும் மற்றும் காய்கறி பொருட்கள் அதிகமாக மேட்டுப்பாளை யத்தில் இறக்குமதியாவதால் அதை பதப்படுத்துவதற்கான வசதிகள் உள்ளாட்சி அமைப்பு கள் செய்து கொடுக்க வேண் டும் என்றும் பேட்டியின் போது பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பத்திரிக்கையாளர் களிடம் தெரிவித்தார்.