Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

மியான்மார் முஸ்லிம்களின் உரிமைகள் பாதுகாக்கப் பட வேண்டும் :ஆங் சான் சூகி


மியன்மார் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூ கீ "சிறுபான்மையினரின் உரிமைகள் பாதிகாக்கப்பட வேண்டும்" என வலியுறுத்தித் தன்னுடைய கன்னி உரையை நிகழ்த்தினார்.
மியன்மாரின் 'மக்களாட்சிக்கான தேசிய லீக்' கட்சித் தலைவரும், 1991 ஆம் ஆண்டில் சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான சூகீ, இராணுவ அடக்குமுறை ஆட்சியாளர்களால் சுமார் 15 வருடகாலம் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.2010 நவம்பர் 13 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்ட சூ கீ, "மியன்மாரில் வாழும் நிராயுதபாணிகளான சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், நாட்டில் சட்டமும் ஒழுங்கும் பேணப்பட வேண்டும்" என்று தனது முதலாவது நாடாளுமன்ற உரையில் வலியுறுத்திப் பேசியுள்ளார்.

"மியன்மாரில் உண்மையான ஜனநாயகம் கட்டியெழுப்பப்பட வேண்டுமாயின், நாட்டில் வாழும் சகல இன மக்கள் மத்தியிலும் சம உரிமை, பரஸ்பர நன்மதிப்பு என்பன கட்டியெழுப்பப்படவும், பாதுகாக்கப்படவும் வேண்டும். சிறுபான்மையினருக்கு எதிரான பாரபட்சமான அத்துமீறல் நடவடிக்கைகள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அது தொடர்பான சட்டப் பிரேரணைகள் உருவாக்கப்படுவது தொடர்பில் நாடாளுமன்ற அங்கத்தவர்கள் அனைவரும் கலந்துரையாட முன்வர வேண்டும்" என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செயற்திறன் மிக்க வறுமையொழிப்பு நடவடிக்கைகள், இனங்களுக்கிடையிலான பரஸ்பர நல்லுறவு கட்டியெழுப்பப்படல், சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படல் முதலான பல்வேறு விடயங்கள் குறித்து அவர் தனது உரையில் வலியுறுத்திப் பேசியுள்ளார்.
"இரும்புத்திரை நாடு" என்று பெயர்பெற்ற மியன்மாரில் அண்மைக் காலமாக முஸ்லிம் சிறுபான்மையினர் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள காட்டுமிராண்டித்தனமான படுகொலை நடவடிக்கைகள் தொடர்பில் உலகெங்கிலும் பல்வேறு கண்டனக் குரல்கள் எழுந்துள்ள நிலையில், சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படுவது தொடர்பில் தன்னுடைய முதலாவது நாடாளுமன்ற உரையிலேயே எதிர்கட்சித் தலைவி ஆங் சான் சூ கீ குரல் எழுப்பி இருக்கின்றமை ஒரு நல்ல திருப்பம் என அரசியல் அவதானிகள் கருத்துரைத்துள்ளனர்.


கடையநல்லூர் சமூக சேவை அறக்கட்டளையின் வேண்டுகோள்

ஏழை மாணவர்கள் கல்விக்காக செலவிடப்படும் என்று உறுதி கூறி ,உங்கள் ஜகாத்தை அளித்து ஏழை  மாணவர்கள் வாழ்வில் ஒழி ஏற்றிட கடையநல்லூர் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாகத்தினர் வேண்டுகிறார்கள். நாமும் ,நம் ஜகாத்தை அளித்து அல்லாவின் பொருத்தத்தை பெறுவோமாக !

யார் ஈமான் கொண்டு, நற் கருமங்களைச் செய்து, தொழுகையை நியமமாகக் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். - (அல்குர்ஆன் 2:277 )

கடையநல்லூர் சமூக சேவை அறக்கட்டளை


காமடி நடிகரின் கண்ணிய சேவை

காமெடி நடிகர் கஞ்சா கருப்புக்கு விரைவில் வெளிவர இருக்கும் கீரிப்புள்ள 50 வது படம். தற்போதும் பத்து படங்களை கையில் வைத்திருக்கிறார். இவருக்கும் சிவகங்கையைச் சேர்ந்த சங்கீதாவுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது கருப்பு&சங்கீதா தம்பதிகளுக்கு தருண் காந்தி என்ற ஒண்ணரை வயது மகன் இருக்கிறான். பிசியோதெரபி டாக்டரான சங்கீதாவுக்கு மருத்துவ சேவை செய்ய ஆசை. அதனால் மனைவிக்காக கஞ்சா கருப்பு மதுரை அருகே உள்ள மேலூரிலும், மதகுபட்டியிலும் மருத்துவமனை கட்டி வருகிறார். கைதேர்ந்த மருத்துவர்களை பணியில் அமர்த்தி இரண்டு மருத்துவமனைகளையும் சங்கீதா நிர்வகிக்க இருக்கிறார். இதில் ஒன்று ஏழைகளுக்காக குறைந்த கட்டண மருத்துவமனையாகவும், மற்றது உயர் தொழில்நுட்பங்களை கொண்ட சொகுசு மருத்துவமனையாகவும் உருவாக்க இருவரும் திட்டமிட்டிருக்கிறார்கள். இதுதவிர கஞ்சா கருப்புவும் சமூக சேவையில் இறங்கியிருக்கிறார். மணப்பாறையில் உள்ள சாந்தி வனம் என்ற அநாதை இல்லத்தில் வளரும் 13 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அநாதை இல்ல குழந்தைகளின் உணவுச் செலவையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். விரைவில் பள்ளிக்கூடம் கட்டும் திட்டம் ஒன்றையும் வைத்திருக்கிறார்.