Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

காமடி நடிகரின் கண்ணிய சேவை

காமெடி நடிகர் கஞ்சா கருப்புக்கு விரைவில் வெளிவர இருக்கும் கீரிப்புள்ள 50 வது படம். தற்போதும் பத்து படங்களை கையில் வைத்திருக்கிறார். இவருக்கும் சிவகங்கையைச் சேர்ந்த சங்கீதாவுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது கருப்பு&சங்கீதா தம்பதிகளுக்கு தருண் காந்தி என்ற ஒண்ணரை வயது மகன் இருக்கிறான். பிசியோதெரபி டாக்டரான சங்கீதாவுக்கு மருத்துவ சேவை செய்ய ஆசை. அதனால் மனைவிக்காக கஞ்சா கருப்பு மதுரை அருகே உள்ள மேலூரிலும், மதகுபட்டியிலும் மருத்துவமனை கட்டி வருகிறார். கைதேர்ந்த மருத்துவர்களை பணியில் அமர்த்தி இரண்டு மருத்துவமனைகளையும் சங்கீதா நிர்வகிக்க இருக்கிறார். இதில் ஒன்று ஏழைகளுக்காக குறைந்த கட்டண மருத்துவமனையாகவும், மற்றது உயர் தொழில்நுட்பங்களை கொண்ட சொகுசு மருத்துவமனையாகவும் உருவாக்க இருவரும் திட்டமிட்டிருக்கிறார்கள். இதுதவிர கஞ்சா கருப்புவும் சமூக சேவையில் இறங்கியிருக்கிறார். மணப்பாறையில் உள்ள சாந்தி வனம் என்ற அநாதை இல்லத்தில் வளரும் 13 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அநாதை இல்ல குழந்தைகளின் உணவுச் செலவையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். விரைவில் பள்ளிக்கூடம் கட்டும் திட்டம் ஒன்றையும் வைத்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக