Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

தமிழகத்தில் நான்கு மாதங்களில் 281 இளம் பெண்கள் மாயம்


செல்வி .ஜெயலலிதா  ஆட்சி நடைபெறும் தமிழகத்தில், கடந்த நான்கு மாதங்களில், 281 இளம் பெண்கள் உட்பட மொத்தம் 553 பேர் காணாமல் போய் உள்ளதாக, வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

குடும்பச் சண்டை, வயதானவர்களை ஒரங்கட்டுவது, இளம் வயது காதல், பெற்றோரின் மிரட்டலுக்கு பயந்து வீட்டை விட்டு ஓடுவது, கடத்தல் என, காணாமல் போவோர் குறித்த புகார்கள் தினமும் போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்படுகிறது.

தமிழக போலீஸ் இணையதள தகவல்படி, கடந்த ஜனவரி, 1 முதல் ஏப்., 20 வரை, 553 பேர் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 16 வயது முதல் 30 வயது வரையிலான பெண்கள் மட்டும், 281 பேர். இதில், 160 பேர் பள்ளி, கல்லூரியில் படிப்பை முடித்த மற்றும் படிப்பை தொடரும் மாணவிகள். 30 வயதுக்கு மேல் 75 வயதுக்கு உட்பட்டோர், 27 பேர் காணாமல் போய் உள்ளனர். இவர்கள் கணவர் மற்றும் பிள்ளைகளால் கை விடப்பட்டவர்கள்.காணாமல் போனவர்களில், 198 பேர் ஆண்கள். 16 வயது முதல், 30 வயது உடைய இளைஞர்கள், 85 பேர். காதல் மோகத்தில் பெண்களுடன் தலைமறைவாகி இருப்பது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. காணாமல் போனவர்களில், 29 பேர், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்.

பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் படி, 175 பேரை , போலீசார் கண்டு பிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். மீதமுள்ள, 378 பேரை கண்டு பிடிக்க முக்கிய நகரங்களில் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

அனிமேஷன் (Animation ) பட்டப்படிப்பு


வால்ட் டிஸ்னி எப்போது மிக்கி மவுசை கண்டறிந்தாரோ அப்போதே அனிமேஷன் துறை களைகட்டி விட்டது எனலாம். அதன் பிறகு தொழில் முறையிலான அனிமேஷன் படிப்புகள் அதித முறையில் வளரத் தொடங்கி விட்டது. படங்களை நகரச் செய்வதே அனிமேஷன் என்பதாகும். மிடியாவின் மிக வேகமாக வளரும் துறையாக 2டி அனிமேஷன், 3டி அனிமேஷன், கதைகள் என குழந்தைகளிடம் மட்டுமல்லாது அனைவரிடமும் பிரசித்தி பெற்று வருகின்றது.

தகுதி: இப்படிப்பில் சேருவதற்கு +2ம் வகுப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

இப்படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள்:
1. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன்
2. ஜீ இன்ஸ்டிடியூட் ஆப் கிரேட்டிவ் ஆட்ஸ்
3. இன்டஸ்ட்ரியல் டிசைன் சென்டர்
4. ஐ.ஐ.டி., மும்பை
5. மாயா அகடமி ஆப் அட்வான்ஸ் சினிமேட்க்ஸ்
6. டூன்ஸ் அனிமேஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட்
7. ராய் பல்கலைக்கழகம்

வேலைவாய்ப்புகள்: இத்துறையில் பயிற்சி பெறுபவர் மாடலர். லேஅவுட், ஆர்டிஸ்ட், கிளீன் அப் ஆர்டிஸ்ட், ஸ்கேனர் ஆபரேட்டர், டிஜிடல் இங்க் அண்ட் பெயின்ட் ஆர்டிஸ்ட், கீ பிரேம் அனிமேட்டர், பேக்கிரண்ட் ஆர்டிஸ் மற்றும் அனிமேட்டர் போன்ற பணிகளில் ஈடுபடலாம். அனிமேஷன் படிப்பை பயிலும் மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது என்பது உறுதியாக கூற முடியும்.

சூரிய மின்சக்தி தொழில்நுட்பப் பயிற்சி


சூரிய மின் சக்தி உற்பத்தி தொழில்நுட்பம் குறித்து மாணவர்களுக்கு அறியும் விதத்தில், புதிய பயிற்சித் திட்டங்களை தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி மையம் அறிமுகம் செய்துள்ளது.

இப்படிப்பு ஒரு மாத கால பயிற்சியாக வழங்கப்படுகிறது. சூரிய மின்சக்தி உபகரணங்கள் சார்ந்த Photo Voltaic Electric System மற்றும் Photo Voltaic Solar மென்பொருட்கள் உற்பத்தி ஆகிய இரண்டு பயிற்சித் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும் மின்சாரத்தின் தேவைகள் மற்றும் அவற்றின் பயன்பாடு, சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் முறை ஆகியவற்றை பற்றி மாணவர்களுக்கு விரிவாக விளக்கப்படுகிறது.

ஐஐடி, பாலிடெக்னிக், பொறியியல் ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்த ஒரு மாத  பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சி கட்டணம் ரூ.15,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் விரிவான தகவல்களுக்கு சென்னை கிண்டி ஐடிஐ.,யில் உள்ள தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி மையத்தை தொடர்பு கொள்ளலாம் அல்லது 87545 90964, 044 – 2250 1011 என்ற தொலைபேசி எண்ணில் கேட்டறியலாம்.