Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 18 ஆகஸ்ட், 2012

lksmeeran mohideen: அப்படி ஒரு பயணம்.

lksmeeran mohideen: அப்படி ஒரு பயணம்.

இறைவன் ,தலைவரின் நாவின் மூலம் தடுத்திருந்தும் , பின்பு நீங்கள் பயணத்தை தொடர்ந்து உள்ளீர்கள் .அப்பழுக்கற்ற அந்த தலைவரின் தன்மைகள் எப்படி பட்டது ,என்பதை உங்கள் எழுத்துக்களின் மூலம் இந்த உலகத்திற்கு வெளிப்படுத்தி உள்ளீர்கள் .

பெருமானார் காட்டிய வழியில் பெருநாளைக் கொண்டாடுவோம்! ஈத் முபாரக் !


           அல்ஹம்துலில்லாஹ் ! கடந்த ஒரு மாதம் முழுவதும் நோன்பிருந்தோம் . பொய் பேசாமல் ,புறம் பேசாமல் ,கோள் சொல்லாமல் ,பிறரை துன்புறுத்தாமல், பிறரை திட்டாமல் ,பித்தலாடம் செய்யாமல் ,தன்னிடம் பணம் உள்ளது என்று அகந்தையை காட்டாமல் ,சினிமா பார்க்காமல் ,இறைவன் விலக்கியதை விலக்கி அதனோடு பகல் முழுவதும் உண்ணாமல் பருகாமல் இருந்திருந்தால் அது உண்மையான நோன்பாகும் .அவ்வாறு கடந்த ஒரு மாதம் முழுவதும் நோன்பிருந்ததன் காரணத்தினால் ,கொண்டாடப்படுவது   ஈகைத்திருநாள் !
           அவ்வாறு கொண்டாடும்  நாளில் ,அல்லாவை புகழ்ந்த வண்ணம் இருக்க வேண்டும் .அல்லாஹு அக்பர் ! அல்லாஹு அக்பர் ! என்று தக்பீர் முழங்க வேண்டும் .

           காலையில் குளித்து ,புத்தாடை அணிந்து திடல்களை நோக்கி தொழுகைக்கு ஒவ்வொரு முஸ்லிமும் செல்லவேண்டும் .அதற்கு முன்பாக பித்ரா எனும் நோன்பு பெருநாள் தர்மம் கொடுக்கவேண்டும் .பெருநாள் அன்று ,எந்த ஒரு மனிதனும் உண்ண உணவின்றி ,உடுத்த உடை இன்றி இருக்கக் கூடாது ,என்ற நோக்கில் எம்பெருமானார் முஹம்மது நபி (ஸல் ) அவர்கள் செய்யச்சொன்ன கடமை நோன்பு பெருநாள் தர்மம் ஆகும்
.நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கி,"இன்றைய தினம் ஏழைகளைத் தேவையற்றவர்களாக்குங்கள்"என்றும் கூறினார்கள்.
அறிவிப்பாளர்:இப்னு உமர்(ரலி); நூல்கள்:பைஹகீ,தாரகுத்னீ

            பின்பு திடல் சென்று தொழுது விட்டு ,சென்ற வழிக்கு மாறாக ,மாற்று  வழியில் வீடு வந்தடைய வேண்டும் என்று பெருமானார் கூறினார்கள் .

          பெருநாள் அன்று ,குழந்தைகள் கூடி ,பாடுவதையும் ,விளையாடுவதையும் அனுமதிக்க வேண்டும் என்று பெருமானார் கூறி யுள்ளார்கள் .
ஆயிஷா(ரலி) அறிவித்தார், புஆஸ்(எனும் பழமையான போர்) பற்றி அன்ஸார்கள் புனைந்துள்ளவற்றை அன்ஸாரிகளைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் என்முன்னே பாடிக் கொண்டிருந்தபோது அபூ பக்ர்(ரலி) வந்தார்கள். அவ்விரு சிறுமியரும் பாடகிகள் அல்லர். 'அல்லாஹ்வின் தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா?' என்று அபூ பக்ர்(ரலி) கேட்டார்கள். இது நடந்தது ஒரு பெருநாளின் போதாகும். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அபூ பக்ரே! ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள்கள் உள்ளன. இது நம்முடைய பெருநாளாகும்" என்று கூறினார்கள். ஆதாரம் .ஸஹீஹுல் புகாரி

         வயது வந்தவர்களும் பெருநாளை கொண்டாடும் பொருட்டு வீர விளையாட்டுகள் விளையாட அனுமதி உண்டு .

                பெருமானார் காட்டிய வழியில் நாம் ஈகைத்திருநாளை கொண்டாடுவோம்!  ஈத் முபாரக் !

கல்விக் கடனை நிராகரிக்கும் பொறுப்பு வங்கியின் கிளை மேலாளருக்கு இல்லை.: ப.சிதம்பரம்


அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது:-
 
வங்கிகளில் கல்விக் கடன் பெறுவது மாணவர்களின் உரிமை. எனவே கல்விக் கடன் வழங்க மறுக்கும் வங்கி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கல்விக் கடனை நிராகரிக்கும் பொறுப்பு வங்கியின் கிளை மேலாளருக்கு இல்லை.
 
மேலும் விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் சான்று நகல் வழங்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் குறுகிய கால கடன்கள் நீண்ட கால கடன்களாக மாற்றியமைக்கப்படும். விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் வங்கிகள் தங்கள் வட்டி விகிதம் மற்றும் தவணை தொகையை குறைக்க வேண்டும்.
 
பாரத ஸ்டேட் வங்கி, தவணைத் தொகையை குறைத்திருப்பதால் கார் விற்பனை அதிகரிக்கும்.  ஏடிஎம் மையங்களின் எண்ணிக்கையானது இரண்டு மடங்காக, அதாவது அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் 63 ஆயிரம் ஏடிஎம் மையங்கள் என்ற அளவில் அதிகரிக்கப்படும்.வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தும் வகையிலும் ஏடிஎம் இயந்திரங்களை மாற்றியமைக்க வேண்டும் என்று வங்கிகள் கேட்டுள்ளன.
 
இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக பொறியியல் கல்லூரிகளில் 55000 இடங்கள் காலியாக உள்ளது


 சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு) காளிராஜ் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
 
தமிழ்நாட்டில் பல என்ஜினீயரிங் கல்லூரிகள் புதிதாக தொடங்கப்பட்டதால் கடந்த ஆண்டை விட இந்த வருடம் எனஜினீயரி்ங் கல்லூரிகளில் 30 ஆயிரம் இடங்கள் அதிகமாக இருந்தன. தமிழ்நாட்டில் 539 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இதில் உள்ள மொத்த இடங்கள் 1,24,868. இன்று தேர்வு செய்யப்படுவர்கள் தவிர்த்து 55 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளது.
 
இதுவரை சேர்ந்தவர்களில் 60 சதவீதம் பேர் ஆண்கள். 40 சதவீதம் பேர் பெண்கள். 75 ஆயிரம் பேர் முதல் பட்டதாரிகள். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 15 ஆயிரம் மாணவ- மாணவிகள் தற்போது அதிகமாக என்ஜினீயரிங் படிப்பை தேர்வு செய்துள்ளனர்.
 
இந்த ஆண்டு மெக்கானிக்கல் பாடத்தையே அதிக அளவில் மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். இதை தேர்ந்தெடுத்தவர்கள் 25 ஆயிரம் பேர். எலக்ட்ரிக்கல்& எக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் பாடத்தை 24 ஆயிரம் பேரும், கம்யூட்டர் சயின்ஸ் பாடத்தை 14 ஆயிரம் பேரும் தேர்வு செய்திருக்கிறார்கள்.
 
சிவில் பாடத்தில் 13 ஆயிரம் பேரும், 'டிரிபிள் இ' பாடத்தில் 12 ஆயிரம் பேரும் சேர்ந்துள்ளனர். நாளை மற்றும் நளை மறுநாள் தொழில் பிரிவு மாணவர்களுக்கும், 21-ந்தேதி பிளஸ் 2 மறுதேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் கவுன்சிலிங் நடைபெறுகிறது. 25-ந்தேதி முதல் பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடைபெறும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.