Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 13 ஜூலை, 2012

திருப்பமோ திருப்பம் , அதிரடி திருப்பம்

ஆந்திர அரசியலில் திடீர் திருப்பமாக ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார். இதையடுத்து மாநில முதல்வராக உள்ள கிரண்குமார்ரெட்டி மாற்றப்பட்டு காங்கிரஸ் ஆதரவுடன் ஜெகன் முதல்வராகலாம் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் எதிர்பார்க்கின்றனர். ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும், பா.ஜ., ஆதரவோடு சங்மாவும் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ஜூனில் ஆந்திராவில் 18 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதனால் ஆந்திராவில் அடுத்த ஆட்சி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி தான் என அரசியல் நோக்கர்கள் கணித்தனர்.
இடைத்தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு சிபிஐயால் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெகன் மோகன்ரெட்டி கைது செய்யப்பட்டதால் எழுந்த அனுதாப அலை தான் ஒய்எஸ்ஆர் காங்கிரசின் வெற்றிக்கு காரணம் என்று காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.

இதற்கிடையே ஜெகன்மோகன் ரெட்டியின் தாய் விஜயம்மா பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் மூலம் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் நெருங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக இரு கட்சித் தொண்டர்களும் கூறினர். இந்நிலையில் உ.பி., மாநிலத்தில் அரசியலில் இரு துருவங்களாக இருக்கும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் சிபிஐ வழக்குகளுக்காக காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பது, ஒய்எஸ்ஆர் கட்சி நிர்வாகிகளை யோசிக்க வைத்தது.

வீணாக காங்கிரஸ் கட்சியை பகைத்துக் கொள்வதை விட அனுசரித்து சுமூகமாக போவது நல்லது என்று ஜெகன்மோகன் ரெட்டிக்கு நெருக்கமானவர்கள் அவருக்கு யோசனை கூறியுள்ளனர். மேலும் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டால் காங்கிரசுக்கு ஓரிடம் கூட கிடைக்காது என்பதால் அக் கட்சியினரும் ஜெகன்மோகன்ரெட்டி நெருங்கி வந்தால் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று காங்., மேலிடத்தில் தெரிவித்தாக கூறப்படுகிறது. ஜனாதிபதி தேர்தல் இரு கட்சியினருக்கும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. எனவே பிரணாப்புக்கு ஆதரவாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆதரவளிக்கும் முறையான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜெகன்மோகன்ரெட்டிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்ததாவது: ஜூனில் நடந்த இடைத்தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதற்கு அக் கட்சிக்கு கணிசமாக முஸ்லிம்கள் வாக்களித்ததுதான் காரணம். மதச்சார்பற்ற கொள்கையில்தான் ஜெகனுக்கு பற்றும், நம்பிக்கையும் உண்டு. 2014 நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியையோ அல்லது மூன்றாவது அணியையோ தான் ஆதரிக்க வேண்டும் என்று ஜெகன் ஏற்கனவே முடிவெடுத்திருந்தார். ஜனாதிபதி தேர்தல் ஒரு கட்சி சாரா பதவியாகும். எனவே அப்பதவிக்கு பொருத்தமானவராக திகழும் பிரணாப்பை ஆதரிக்கும் முடிவை எடுத்துள்ளார் என்றனர்.

ஜனாதிபதி தேர்தலில் பிரணாப்பை ஆதரிப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சியிடம் நெருங்கி வர தான் தயார் என்பதை ஜெகன் சூசகமாக உணர்த்துவார் என்று தெரிகிறது. எனவே ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி மாற்றப்பட்டு காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக்கப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொண்டர்களிடையே எழுந்துள்ளது. 

முஸ்லிம் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்படும் கொடுமை, நிரந்தரத் தீர்வு காண பிரச்சினையைக் கையில் எடுக்கிறது முஸ்லிம் லீக்!

பிரியமுள்ள பிறைநெஞ்சுக்கு! எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின்மீதும் என்றென்றும் இலங்கட்டுமாக!

தினந்தோறும் பல்வேறு நிகழ்வுகளையும் சமூகப் பிரச்சினைகளையும் கண்டு வரும் நமக்கு சிலவற்றை மாத்திரம் கசப்பாகவே பார்க்க வேண்டியதாக அமைந்துவிடுகிறது. பிள்ளைகளைப் பெற்றெடுத்த பெற்றோர்கள் காணும் கனவுகளும், கனவுகளை நிஜமாக்கப் படும்பாடுகளும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. தன்னுடைய பிள்ளைகள் அவர்களின் வாழ்க்கையில் எல்லா தளங்களிலும் மிளிர வேண்டும்; தரம் உயர்ந்த நிலையில் ஒளிர வேண்டும் எனும் பிள்ளைகள் மீதுள்ள பாசம்தான் காரணம். இது இயற்கையாகவே உருவாகக்கூடிய மனநிலை. அதிலும் பெண் பிள்ளைகள் என்றாலே கொஞ்சம் செல்லம் அதிகம்தான்.

பெண் பிள்ளைகளை நினைத்து பெற்றோர்களுக்கு அடிக்கடி வந்து மறையும் கனவுக் காட்சிகள் உறங்கும்போது மட்டுமல்ல; பகலில் விழித்திருக்கும்போதும் வருவது இயற்கை. அதுதான் அந்த பிள்ளைகளுக்கு செய்து பார்க்க எண்ணிடும் திருமணம் சம்பந்தமான கற்பனை. பெண் பிள்ளைகளுக்கு நல்ல மாப்பிள்ளையும், ஆண் பிள்ளைகளுக்கு நல்ல பெண்ணும் அமைய வேண்டும் என்கிற ஆர்வமும், துடிதுடிப்பும் சதா எண்ண அலைகளில் ஓடிக்கொண்டே இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதுதான் சரியும்கூட.

இவர்தான் மாப்பிள்ளை; இவர்தான் பெண் என்று நிச்சயித்த பிறகு ஏதோ ஒரு நாளில் திருமணமும் நடைபெறுகிறது. திருமணத்திற்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் இந்தப் பெற்றோர்கள் எடுக்கும் பெருமுயற்சிகள், 

அவர்களின் தனிப்பட்ட எந்த நோக்கத்திற்கும் அப்படி செயல்பட்டிருக்கமாட்டார்கள். அந்த அளவுக்குப் பெரும் எதிர்பார்ப்போடு நடந்திடும் திருமணங்கள் மகிழ்வோடு நிறைவுறுலதைப் பரவலாகக் காண்கிறோம். காண்கிற நமக்கும் மகிழ்ச்சிதான். சில பேர் சில குடும்பங்களுக்கு எதிராக, சில காழ்ப்புணர்ச்சிகளுக்கு பலியாகி, நிகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய திருமண நிகழ்ச்சியையே உருக்குலைக்கும் வகையில் காவல்துறை அதிகாரிகளை வரவழைத்து ��பெண்ணுக்கு 18 வயது இன்னும் ஆகவில்லை�� எனக் காரணம் சொல்லி திருமணத்தையே நிறுத்திவிடுகின்றனர். சில சமயங்களில் மாப்பிள்ளையும், மணப் பெண்ணையும் கைது செய்வதுகூட நடைமுறையாக்கப்பட்ட வழக்கமாகிவிட்டது.

இந்த நாட்டில் ஓரு பெண் 18 வயதையும், ஓர் ஆண் 21 வயதையும் அடைந்திருந்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்ள முடியும் என்று இந்திய சட்ட விதி கூறுகிறது. அப்படியானால் இந்த வயது வருவதற்குள் திருமணம் நடந்தால் அதனை �குழந்தை திருமணம் எனச் சொல்லி சட்டவிரோதம் என்கிறது காவல்துறை.

இஸ்லாமிய மார்க்க நெறிமுறைகளின்படி ஒரு பெண் பூப்பெய்திவிட்டாலே அதாவது பருவம் அடைந்துவிட்டாலே எவ்வளவு விரைவாக அவளுக்குத் திருமணம் செய்து வைக்க முடியுமோ அந்த அளவுக்கு அவளுடைய திருமணத்தில் கால விரைவும் அதிக கவனமும் செலுத்த வேண்டும் என வழிகாட்டுகிறது இஸ்லாம். இங்கே எந்த வயது வரம்பையும் குறித்துக் காட்டவில்லை. ஒரு பெண் பருவமடைவது என்றால் அது அவளின் வயது 12-ல்கூட நடக்கலாம். அப்படியானால், ஷரீஅத் விதிப்படி வயது பன்னிரெண்டிலேயே திருமணம் செய்து கொள்ள இஸ்லாம் அனுமதிக்கிறது. பொதுவான சட்டமாகிய 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும் என்ற விதி, இந்த உரிமையை நம்முடைய ஷரீஅத் நெறிக்கு நேர் எதிரான சவாலாக அமைகிறது . வாழ்க்கைப் பயணத்தின் ஒழுக்க நிலையில் உச்சபட்ச மாண்பினை எல்லா தளங்களிலும் எடுத்தியம்பும் நிலையில்தான் ஒரு பெண் பருவமடைந்துவிட்டாலே திருமணம் செய்து வைப்பதை துரிதப்படுத்தச் சொல்கிறது இஸ்லாம்.

இந்தக் காலத்தில் பெண்பிள்ளைகள் கல்விச் சாலைகளுக்குச் செல்லுகிற நிலையில் அவர்களின் பள்ளிக்கூடப் படிப்பு, கல்லூரிப் படிப்பு என்று பார்க்கிறபோது பெரும்பாலும் 17, 18 வயதைக் கடந்துதான் திருமணங்கள் நடக்கின்றன. சில குடும்பங்களில் உள்ள சூழ்நிலைகளுக்கேற்ப 14, 15 வயதுகளில்கூட திருமணங்களை நடத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டு விடுகிறது. அது தவறல்ல என்பதால்தான் நமது சமுதாயத்தில் ஆங்காங்கே அத்தகைய திருமணங்கள் நடக்கின்றன. சில காழ்ப்புணர்ச்சிகளினால் சிலர் கொடுக்கும் புகார்களின் அடிப்படையில் காவல் துறையினர் இத்தகைய திருமணங்களைத் தடுத்து நிறுத்துகிறபோது ஏற்படும் அசாதாரண சூழ்நிலை உள்ளங்களை மிகவும் காயப்படுத்திவிடுகிறது.

சென்ற 25.06.2012 அன்று பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பெரியம்மாபாளையம் என்ற ஊரில் திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே காவல் துறையினர் உள்ளே புகுந்து பெண்ணுக்கு 17 வயதுதான் பூர்த்தியாகியிருக்கிறது; எனவே சட்டவிரோதமான இந்த திருமணம் நடக்கக்கூடாது எனச் சொல்லி மாப்பிள்ளையையும், மணப்பெண்ணையும் கைது செய்து திருச்சிக்குக் கொண்டு சென்று மணப்பெண்ணை அரசு பெண்கள் காப்பக முகாமிலும், மாப்பிள்ளையை சிறைச்சாலையிலும் வைத்துவிட்ட கொடுமை நிகழ்ந்திருக்கிறது. மணமக்களின் பெற்றோர்கள் எவ்வளவோ முறையிட்டும் பலனில்லை என்பதால் மாவட்ட கலெக்டரிடம் சென்றுள்ளனர். அவர் ஒரு முஸ்லிம் என்பதால் எளிதாக ஷரீஅத் சட்டப்படியான இந்த திருமணத்தைப் புரிந்து கொண்டு ஆவன செய்வார் என்ற எதிர்பார்ப்பும் சுக்கு நூறாக உடைந்து போனதுதான் வேதனையிலும் வேதனை.

உள்ளங்கள் பதறிய நிலையில், குடும்பங்களின் கவுரவமும் பாதிக்கப்பட்டச் சூழலில் பத்திரிகைகளிலும் இது செய்தியாக வெளிவர, சம்பந்தப்பட்டவர்கள் எந்த அளவுக்கு சோதனையின் உச்சகட்டத்திற்குத் தள்ளப்பட்டார்கள் என உணர முடிகிறது. இந்தச் செய்தியறிந்தவுடன் அந்த மணப்பெண்ணின் தந்தையாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் வெளிப்படுத்திய துயரமிக்க அந்த சம்பவம் எத்தகைய கல்நெஞ்சத்தையும் உருக வைக்கும். மாவட்ட கலெக்டர் ஒரு முஸ்லிமாக இருந்தும் ஷரீஅத்தின் உண்மை வெளிச்சத்தால்கூட உருகவில்லையே என்ற கேள்வியும் எழுகிறது. அதே சமயத்தில் ��சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படித்தானே நான் செயலாற்ற முடியும்�� என்று சொல்கிற அவரின் வாதத்தையும் நாம் புரியாமல் இல்லை. இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இதற்கு என்னதான் தீர்வு?

இந்திய சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். முஸ்லிம் தனியார் சட்டம் என்று நமக்கென தனியே ஷரீஅத் சட்டம் வகுக்கப்பட்டு நடைமுறையில் இருக்கிறது. அதன் வரிசையில் ஒரு பெண் பருவமடைந்துவிட்டாலே அவள் திருமணத்திற்குத் தகுதியுடையவள் ஆகிறாள் என்கிற விதியும் சட்டமாக்கப்பட வேண்டும். அதற்கு ஏதுவாக சென்ற 05.06.2012 அன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கின் தீர்ப்பு மிகத் தெளிவாக மறுநாள் செய்தித்தாளில் வெளிவந்திருக்கிறது. அதனைப் பார்க்க �டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கிலப் பத்திரிக்கையை வாங்கிப் படிக்கத் தொடங்கினேன். உயர்நீதிமன்றத் தீர்ப்புச் செய்தியைப் பார்ப்பதற்கு முன்பாக இன்னொரு இதே போன்ற ஒரு திருமணம் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட செய்தி வெளியாகியிருந்தது. அதிர்ந்து போனேன். பிறைநெஞ்சே! இதோ அந்தச் செய்தியை அப்படியே இங்கே தருகிறேன். இப்படித்தான் ஆங்காங்கே திருமணங்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன. பெயர்கள் குறிப்பிடப்படாமல் வந்த செய்தி என்பதால் ஒரு தகவலுக்காகத் தருகிறேன். 

இதற்கு நிரந்தரமான தீர்வுதான் என்ன?

இதுபோன்ற சமூகப் பிரச்சினைகள் சட்டவடிவில் எழுந்து நின்றபோதெல்லாம் தீர்வு தேடித் தந்த வரலாறு தாய்ச்சபை முஸ்லிம் லீகிற்கு உண்டு. இப்போது இந்தப் பிரச்சினையையும் தன் கையில் எடுக்கிறது தாய்ச்சபை முஸ்லிம் லீக். இதன் தொடர்ச்சியாக டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பின் விபரத்தோடு அடுத்த இதழில் சந்திக்கிறேன்.

இன்ஷா அல்லாஹ்.

அன்புடன், எம். அப்துல் ரஹ்மான் ஆசிரியர்.



நன்றி :பிறைமேடை

மகாராஷ்டிர காவல்துறையினரின் முஸ்லிம் விரோத நடவடிக்கைகள் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் இ.அஹமது கோரிக்கை

மகாராஷ்டிர காவல் துறையினரின் முஸ்லிம் விரோத நடவடிக்கைகள் குறித்து ஒரு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் மன் மோகன் சிங்கிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும் மத்திய வெளியுறவு மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சரு மான இ.அஹமது கோரிக்கை விடுத்துள் ளார்.

மும்பையில் உள்ள சிறை களில் காவல் துறையினரின் பாரபட்சமான மனப்பான்மை காரணமாக 339 முஸ்லிம் இளைஞர்கள் எந்த குற்ற வழக் குத் தொடர்பும் இல்லாமல் வாழ்வ தாக மகாராஷ்டிர சிறைகளில் உள்ள முஸ்லிம்கள் குறித்து டாடா நிறுவனம் நடத்திய ஆய் வறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது. 

முஸ்லிம்களின் கல்வி மற் றும் வாழ்க்கைத்தரம் குறித்து ஆய்வு நடத்திய சச்சார் கமிட்டி அறிக்கையில் மகாராஷ்டிர மாநி லத்தில் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 10.6 சதவீதம் என்றும், ஆனால் சிறைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக் கையில் 32.4 பேர் முஸ்லிம்கள் என்றும், ஓர் ஆண் டுக்குள் சிறையில் இருக்கும் முஸ்லிம் கள் எண்ணிக்கை 42 சதவீதம் என்றும் சுட்டிக் காட்டியது. 

மக்கள் தொகையின் விகி தாச்சாரத்தில் பொருந்தும்படி இல்லாமல் இப்படி மகாராஷ்டிர மாநில சிறைச் சாலைகளின் புள்ளி விவரம் காரணமாக அது குறித்து உரிய ஆய்வு நடத்தி உண்மையை வெளிக் கொணர வேண்டும் என மகாராஷ்டிர அரசுக்கு மாநில சிறுபான்மை கமிஷன் வலியு றுத்தியது. 

அதைத் தொடர்ந்து டாடா நிறுவனத்தின் சமூகவியல் ஆய்வு பிரிவு ஒரு ஆய்வுக் குழுவை அமைத்தது. அந்தக் குழுவில் மத்திய அரசு மத்திய குற்றவியல் மற்றும் நீதித்துறை சேர்ந்த டாக்டர் விஜயராகவன் மற்றும் ரோஷினி நாயரும் இடம் பெற்றிருந்தனர். இந்த குழுவி னர் மகாராஷ்டிர சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முஸ் லிம்கள் பற்றி ஆய்வு செய்தது. 

ஆய்வுக்குழு அறிக்கை

அந்த ஆய்வுக்குழு தனது அறிக்கையை மகாராஷ்டிர அரசிடம் தாக்கல் செய்தது. அந்த ஆய்வறிக்கையில் கூறப் பட்டிருப்பதாவது: மகாராஷ்டிர சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம்களின் பெரும் பான்மை யானவர்கள் எந்த குற்ற குழு வினரிடமும் தொடர்பு இல்லாத வர்கள். அவர்கள் முஸ்லிம் சமு தாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காகவே போலீசாரின் பாரபட்சமான கண்ணோட்டம் காரணமாக கைது செய்யப் பட்டு, சில வழக்குகளில் தொடர்பு படுத்தப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிர சிறையில் இருப் பவர்களில் 96 சதவீத முஸ்லிம் கள் தடுப்பு நடவடிக் கையாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள். எனவே அவர்கள், சட்டத்தை குலைக்க கூடியவர்கள் என்ற குற்றச்சாட்டை அவர்கள் மீது சுமத்த முடியாது.

குறிப்பாக 18 வயதிலிருந்து 30 வயதுள்ள 339 முஸ்லிம் இளைஞர்கள் 15 சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் எந்த குற்ற குழு வையும் சேர்ந்தவர்கள் அல்ல. இவர்களுக்கு எதிராக எந்த குற்றப் பின்னணி ஆவணமும் இல்லை. இவர்களில் 25.4 சத வீதத்தினர் தாங்கள் நிரபராதி கள் என்று நிரூபித்து சிறையி லிருந்து வெளிவர வழக்குறை ஞர்களை வைத்து ஏற்பாடு செய்ய வசதியற்றவர்கள். 

இவ்வாறு அந்த ஆய்வறிக் கையில் கூறப்பட்டிருந்தது.

மணிச்சுடர், பிறைமேடை செய்தி

டாடா நிறுவன ஆய்வறிக்கை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த பரபரப்பான அந்த தகவல்கள் குறித்து ஆய் வறிக்கையின் விவரங்களை ``மணிச்சுடர் நாளிதழ்�� 24.6.2012 அன்று முதல் பக்கத் தில் தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தது.

``பிறைமேடை�� ஜூலை 1-15 இதழ் காவல்துறையின் பாரபட்ச மான நடவடிக்கைகள் காரண மாக மகாராஷ்டிரா மாநில சிறை களில் 3ஆயிரம் முஸ்லிம்கள் அடைக்கப்பட்டுள்ளனர் என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டி ருந்தது.

இ.அஹமது கடிதம்

டாடா நிறுவனத்தின் ஆய் வறிக்கை குறித்து 2012 ஜூன் 24ம் தேதி ``தி ஹிந்து�� நாளி தழும் செய்தி வெளியிட்டிருந் தது. இவைகளைத் தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணையமைச்சருமான இ.அஹமது சாஹிப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டிருப் பதாவது:

டாடா நிறுவனத்தின் ஆய் வறிக்கை மஹாராஷ்டிரா மாநி லத்தில் முஸ்லிம்கள் காவல் துறையினரின் பாரபட்சமான நடவடிக்கைகளால் அங்குள்ள முஸ்லிம்கள் எவ்வாறு பாதிக் கப்பட்டுள்ளனர் என்பதை ``தி ஹிந்து�� நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் (முஸ்லிம்கள்) சொல்ல முடியாத துன்பங்களுக்கும், துயரங் களுக்கும் ஆள்படுத்தப்பட்டு அவர்களுக்கு நீதி மறுக்கப் பட்டிருக்கும் அதிர்ச்சி அளிக் கக் கூடிய நிலை மகாராஷ்டிர மாநிலத்தின் காவல்துறையின ரால் ஏற்பட்டுள்ளது.

சட்டத்தை நிலைநிறுத்த வேண்டிய காவல்துறை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கெதி ராக பாரபட்சமாக நடந்து கொள் வதும், அவர்களுக்கு விசார ணைக்கு உட்பட சந்தர்ப்பம் வழங்காமல் நடந்து கொள்வது மிகவும் அவமானகரமானது.

எனவே, பிரதமர் இதில் தலையிட்டு உதவி இழந்து தவிக்கும் மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் ஒரு உயர்மட்ட விசாரணைக்கு உத் தரவிட வேண்டும் என்று கேட் டுக்கொள்கிறேன்.

மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சிறுபான்மை யின மக்களுக்காக ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. காவல்துறையினர் போன்றவர்களால் பாரபட்சமான நடவடிக்கைகள் அப்படிப்பட்ட நலத்திட்ட உதவிகளின் பயன் களை அழித்து விடும். 

முஸ்லிம் சமுதாயத்திற் கெதிராக பாரபட்சமாக நடந்து கொள்ளும் அதிகாரிகளை சட்டத்துக்கு பதில் சொல்ல வைக்க வேண்டும். இவ்வாறு இ.அஹமது சாகிப் தமது கடிதத்தில் குறிப்பிட் டிருந்தார்.

பிரதமர் மன்மோகன்சிங் பதில்

பிரதமர் மன்மோகன் சிங் இ.அஹமது சாஹிபுக்கு எழு தியுள்ள பதில் கடிதத்தில், ``இந்த விஷயம் மஹாராஷ்டிரா முதல் வருக்கும், மத்திய உள்துறை அமைச்சருக்கும் தக்க நட வடிக்கை எடுக்கும்படி கேட் டுக்கொண்டிருப்பதாக கூறப் பட்டுள்ளது