Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 17 ஏப்ரல், 2013

இனி புத்தகத்தை பார்த்தே தேர்வு எழுதலாம்


சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திறந்த புத்தக தேர்வு முறையை வரும் கல்வியாண்டு முதல் நடைமுறைபடுத்த உள்ளது.

மனப்பாடம் செய்து பாடம் படிக்கும் நடைமுறைக்கு ஓரளவு தீர்வு காணும் வகையில் சிபிஎஸ்இ இந்த புதிய முறையை திட்டமிட்டுள்ளது. திறந்த புத்தக தேர்வு முறை 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டு முதல் அறிமுகப்படுத்த உள்ளது. அடுத்த ஆண்டு முதல் +2 மாணவர்களுக்கு இந்த முறையை சிபிஎஸ்இ கொண்டு வர உள்ளது.

மாணவர்கள் தேர்வு நேரத்தில் அனைத்து பாடங்களையும் படித்து குழம்புவதை விட, தேர்வுக்கு எந்தெந்த பகுதிகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும் என்று 4 மாதங்களுக்கு முன்பே மாணவ, மாணவியருக்கு தெரிவிக்கப்படும். தேர்வுக்கு அதனை மட்டும் படித்தால் போதும், இதனால் மாணவர்களின் மன அழுத்தம் குறைவதோடு, பயமின்றி தேர்வு எழுதவும் முடியும். இதனால் திறந்த புத்தக தேர்வு முறை மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

வெளிநாடுவாழ் மலையாளிகளை கணக்கெடுக்க கேரள அரசு முடிவு


வெளிநாடு வாழ் மலையாளிகளை கணக்கெடுக்க கேரள அரசு முடிவு எடுத்துள்ளதாக முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்தார்.

சவூதி அரேபியாவில், அந்நாட்டு அரசு கொண்டு வரவுள்ள புதிய சட்டப்படி இந்தியர்கள் பலர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியர்களில், குறிப்பாக கேரளத்தைச் சேர்ந்தோர் நிறைய பேர் அங்கு பணியாற்றி வருகின்றனர். அந்நாட்டின் புதிய சட்டத்தால், கேரளத்தைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்குத் தேவையான உதவிகள் மேற்கொள்ளவே கேரள அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.பொருளாதார மற்றும் புள்ளியியல் அமைப்பு, வெளிநாடுவாழ் கேரள விவாகரத் துறை ஆகிய இரண்டும் இணைந்து, வெளிநாடுவாழ் கேரளத்தைச் சேர்ந்தவர்களை கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ளும் என்று உம்மன் சாண்டி தெரிவித்தா

பெங்களுரூவில் அடுத்தடுத்து 2 இடத்தில் குண்டு வெடிப்பு: பாஜக சதிவேலையா ?

பெங்களூருவில் மல்லேஸ்வரத்தை தொடர்ந்து ஹிப்பல் என்ற இடத்தில் உள்ள மேம்பாலம் அருகிலும் குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. மல்லேஸ்வரத்தில் பா.ஜ. அலுவலகம் அருகே இன்று பைக்கில்
வைக்கப்பட்டிருந்த ‌குண்டு வெடித்தது. மல்லேஸ்வரம் பா.ஜ., அலுவலகம் அருகே நடைபெற்ற தாக்குதலில் 8 போலீசார் உள்பட 16 பேர் காயமடைந்தனர். ஹிப்பல் மேம்பாலத்தில் நடைபெற்ற தாக்குதலில் 15 பேர் காயமடைந்துள்ளனர். கர்நாடகா தேர்தல் நடைபெற உள்ள சமயத்தில் அடுத்தடுத்து நடத்தப்பட்டிருக்கும் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சம்பவ இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சி வெளியிடுள்ள அறிக்கையில் ,குண்டுவெடிப்பிற்கு அரசியல் ஆதாயமே காரணம் , பாஜக வின் சதி வேலையாக இருக்கலாம் என்று கூறியுள்ளது .

ஃபேஷன் மற்றும் மேலாண்மை படிப்புகள்


வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், காலணி வடிவமைப்பு மற்றும் வளர்ச்சி கல்வி நிறுவனம் (FDDI) இளநிலை, முதுநிலை மற்றும் ஒருங்கிணைந்த படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இளநிலை
ஃபேஷன் மெர்ச்சண்டைசிங் & ரீடெயில் மேனேஜ்மென்ட்
ஃபுட்வியர் டிசைன் & ப்ரொடக்ஷன் மேனேஜ்மென்ட்
கிரியேடிவ் டிசைன் அன்ட் கேட் / கேம்

முதுநிலை
ஃபேஷன் டிசைன்
ஃபுட்வியர் டிசைன் & ப்ரொடக்ஷன் மேனேஜ்மென்ட்
லெதர் குட்ஸ் & அக்சசரிஸ் டிசைன்

ஒருங்கிணைந்த படிப்புகள்
வணிக மேலாண்மை
சில்லரை வணிக மேலாண்மை

விண்ணப்பிக்கும் முறை
நாடு முழுவதும் உள்ள காலணி வடிவமைப்பு மற்றும் வளர்ச்சி கல்வி நிறுவனங்களிலோ அல்லது ஏக்சிஸ் வங்கி கிளைகளிலோ ரூபாய் 500 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்ப படிவத்தை கல்வி நிறுவனத்தின் இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம்.

மேலும் தகவல்களுக்கு www.fddiindia.com என்ற இணையதளத்தை காணவும்.