Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 23 செப்டம்பர், 2013

நரேந்திர மோடி திருச்சி வருகையையொட்டி முஸ்லிம்களை கொடுமை படுத்தப்படுவதை வேடிக்கை பார்க்க மாட்டோம் : தமிழக காவல்துறைக்கு பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன் எச்சரிக்கை

சேலத்தில் செப்டம்பர் 22 மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்  பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன் கூறியதாவது ,

இலங்கை வடக்கு மாகாண முதல்வருக்கு வாழ்த்து
இலங்கையில் தேர்தல் நடைபெற்று வடக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்று சி.வி. விக்னேஸ்வரன் வடக்கு மாகாண முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.

அவருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

காஷ்மீரில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடை பெற்று அங்கு ஒரு மக்களாட்சி அமைக்கப் பட்டுள்ளதை போல் இலங்கையின் வடக்கு மாகாணத்திலும் ஜனநாயக ஆட்சி அமைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது ஒரு நல்ல அறிகுறி.

ராஜீவ்காந்தி-ஜெயவர்த் தனா ஒப்பந்தத்தின் அடிப்படை யில் உறுதியாக இருந்து இத்தேர்தல் நடத்தப்பட்டுள் ளது. ஒன்று மட்டும் நிச்சயம் இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடப்பதுதான் இலங்கைக்கு நல்லது. 13ஏ திருத்த சட்டத்தின்படி நடந்தால்தான் இலங்கைக்கு விடிவு காலம் இதை அதிபர் ராஜபக்சே உணர வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்.

மோடி வருகை: முஸ்லிம்கள் மீது அடக்குமுறை
நரேந்திர மோடி வரும் 26ம் தேதி திருச்சி வருகிறார். அவரது வருகையையொட்டி பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்தைச்சுற்றியுள்ள வட்டாரங்களிலுள்ள முஸ்லிம் களை போலீசார் அச்சுறுத்தி கொடுமைப்படுத்தி வருகிறார் கள்.

தமிழ்நாட்டில் காவல் துறையினரின் இந்த நடவடிக்கை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம் களை தனிமைப்படுத்தி அச் சுறுத்துவது என்பது ஜனநாயக நாட்டில் ஏற்றுக் கொள்ள முடியாது. இதை தமிழக முதல்வரின் கவனத் திற்கு கொண்டு வருகிறோம்.

திருச்சியில் முஸ்லிம் வீடுகளில் சோதனை யிடுவதும், விவரங்களை சேகரிப்பதும் ஜனநாயக நாட்டில் கேள்வி படாத விஷயங்கள்.

ஏழைகளாகவும், கூலித்தொழிலாளர்களாகவும் உள்ள முஸ்லிம்களை ஒரு பொது கூட்டத்தின் பெயரால் வரம்பு மீறி காவல்துறை நசுக்குகிறது என்றால் அதை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இதை நாட்டு மக்களுக்கு கொண்டு செல்வோம்.

ஐதராபாத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் கூட நிரபராதிகளான முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு 7,8 ஆண்டுகள் சிறையில் அடைக் கப்பட்டு உண்மை யான குற்றவாளிகள் கைது செய்யப் பட்டதற்குப்பின் முஸ்லிம் இளைஞர்கள் அப்பாவிகள் என விடுவிக்கப்பட்டனர். அவர் களுக்கு ஆந்திர அரசு நஷ்ட ஈடு அறிவித்தது.

இதை எதிர்த்து சிலர் நீதிமன்றம் சென்றார்கள். இப்படி நஷ்ட ஈடு வழங்கியது செல்லாது என அறிவித்த நீதிமன்றம் அந்த தீர்ப்பை திரும்பப் பெற்றுக் கொண்டது. இது எந்த தமிழ் பத்திரிகை யிலும் வரவில்லை. தி ஹிந்து ஆங்கில நாளேடு மட்டுமே இது பற்றி தலையங்கம் எழுதியது. அதை மணிச் சுடரில் நாங்கள் வெளியிட்டி ருந்தோம்.

தமிழ்நாட்டில் இப்படி நிரபராதிகளாக விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டதில்லை. அது வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

முஸ்லிம்களின் தியாகம்
இந்த நாட்டிற்காக முஸ்லிம் கள் எவ்வளவோ தியாகங்கள் செய்திருக்கிறார்கள். தேச எல்லையை காப்பாற்ற லட்சக் கணக்கானவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளார் கள். சுதந்திரத்திற்காக உடல், பொருள் தியாகம் செய்த முஸ்லிம்கள் கணக்கில் அடங்காது.

ஆனாலும் எங்களை ஏன் பகைமை உணர்வோடு பார்க்கிறார்கள். குஜராத்தில் கலவரம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் உயிரிழந்தார்கள். ஆனால் இறந்த முஸ்லிம் களை காரில் அடிப்பட்ட நாய் குட்டியோடுதான் ஒப்பிட்டார் நரேந்திர மோடி.

அப்படிப்பட்ட ஒருவர் நாட்டில் பிரதரானால் நாடு என்ன ஆவது. ஒரு கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பொது கூட்டம் ஒன்றில் பேச வரும்போதே முஸ்லிம்களுக்கு இவ்வளவு பெரிய சோதனை கள் என்றால் தப்பித் தவறி இவர் பிரதமராகி விட்டால் எவ்வளவு பெரிய கொடுமை கள் நடக்கும் என்பதை நாட்டு மக்கள் எண்ணி பார்க்க வேண்டும்.

65 ஆண்டுகளில் 13 ஆயிரம் வகுப்பு கலவரங்கள்
நாடு விடுதலையடைந்த இந்த 65 ஆண்டு காலத்தில் 13 ஆயிரத்திற்கு மேற்பட்ட வகுப்பு கலவரங்கள் நடை பெற்றுள்ளன. பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்கள் பலியாகியுள்ளனர். அவர் களின் பலநூறு கோடி ரூபாய் சொத்துக்கள் சூரையாடப் பட்டுள்ளன.

இதை எந்த ஒரு முஸ்லிமும் ஐ.நா. சபைக்கு எடுத்து செல்லவில்லை. உலகில் 57 முஸ்லிம் நாடுகள் இருக்கின்றன. கலவரத்தால் பாதிக்கப்பட்ட இந்திய முஸ்லிம்களுக்கு உதவுங்கள் என்று நாங்கள் கோரிக்கை மனு தூக்கி அலையவில்லை.

இந்தியாவில் சீக்கியர் களுக்கு எதிராக இந்திரா காந்தி கொல்லப்பட்ட சமயத் தில் ஒரே ஒரு கலவரம்தான் நடந்தது. அதை சர்வதேச நீதிமன்றத்திற்கு சீக்கியர்கள் எடுத்து சென்றுள்ளனர்.

திருமதி சோனியா காந்தி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற போது அவரிடத்தில் இதற்கான சம்மனை கொடுப் பதற்கு முயற்சித்திருக் கிறார்கள்.

சீக்கிய சமூகத்தை சேர்ந்த மன்மோகன்சிங் 2 முறை பிரதமராக்கப்பட்டு சீக்கியர் களுக்கு எதிரான கலவரத் திற்கு மன்னிப்பு கேட்டதற்கு பின்பும் சீக்கியர்கள் விடுவ தாக இல்லை.

ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து ஐ.நா. சபைக்கு எடுத்து சென்றார்கள். இந்திய முஸ்லிம்கள் இப்படியெல்லாம் எதாவது செய்தார்களா? அப்படி இருந்தும் ஏன் முஸ்லிம்கள் மீது மட்டும் துவேஷம் கொள்கிறார்கள்.

வேற்றுமையில் ஒற்றுமை என்பதை தானே நாங்கள் வலியுறுத்துகிறோம். இதைத் தவிர இந்திய முஸ்லிம்கள் என்ன பாவத்தை செய்து விட்டார்கள்?

இவ்வாறு தலைவர் பேராசிரியர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

தமிழக அரசின் அரசாணைப்படி 1அ படிவம் அடிப்படையில் இஸ்லாமிய திருமணங்களை பதிய மறுக்கும் சார்பதிவாளர்கள் மீது சட்ட நடவடிக்கை : பேராசிரியர் கே.எம்.கே. எச்சரிக்கை

தமிழக அரசின் அர சாணைப்படி 1A படிவம் அடிப்படையில் இஸ்லாமிய திருமணங்களை பதிய மறுக்கும் சார்பதிவாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி அக்டோபர் 5ம் தேதி நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு கூட்டத்தில் முடிவு அறிவிக்கப்படும் என பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர் களிடம் அவர் தெரிவித்ததாவது:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் இஸ்லாமிய திருமண சட்ட விளக்க நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறோம். இதன் நோக்கம் ஷரீஅத் சட்டத்தை முஸ்லிம்களும் விளங்கி மற்றவர்களுக்கும் விளக்க வேண்டும் என்பதுதான். அஇஅதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. திருமதி பதர் சயீத் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்துள்ள பொது நல வழக்கால் எங்களுக்கு இந்த நிகழ்ச்சிகளை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

திருமணங்கள் செய்து வைப்பதற்கும், குடும்ப விவ காரங்களை பேசி தீர்ப்பதற் கும், மணமுறிவு சான்றிதழை வழங்குவதற்கும், காஜி களுக்கு உரிமை இல்லை என்று பதர் சயீத் தமது வழக்கில் குறிப்பிட்டுள் ளார்.

பள்ளிவாசலை மையமாக கொண்டு மஹல்லா ஜமாஅத் இயங்குகிறது. அந்த பகுதியில் வாழக்கூடிய முஸ்லிம்கள் அனைவரும் இந்த மஹல்லா ஜமாஅத்திற்கு கட்டுப்பட்ட வர்கள்.

இந்த ஜமாஅத்துக்குட்பட்ட பள்ளிவாசலின் இமாம் அந்த மஹல்லாவின் காஜி ஆவார். 1880ம் ஆண்டு காஜி சட்டப்படி இவரது பதவி நாயிப் காஜி என்று அழைக்கப்படும்.

இஸ்லாமிய திருமணங்கள் பரம்பரை பரம்பரையாக பள்ளி வாசல் இமாம்களை கொண்டு நடத்தப்பட்டு பள்ளிவாசல் திருமண பதிவேட்டில் பதிவு செய்யப்படுகின்றன.

இஸ்லாமிய திருமண சட்டம் என்பது உலகம் முழுவதும் ஒரே சட்டம்தான். இந்தத் திருமண சட்டம் செல்லாது என்று சொல்லு வதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது.

கஸ்டமரிலா என்று சொல்லக்கூடிய வழக்கப்படி யான நடைமுறை சட்டங்களை நீதிமன்றங்களை தவறு என்று சொல்லுவதில்லை. குடும்ப விவகாரங்களை நீதிமன்றத்தில்தான் தீர்க்க முடியும் என்றால் அது இந்த ஜென்மத்தில் முடியாது. உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரே இன்றுள்ள வழக்குகளை தீர்ப்பதற்கு 400 வருடங்கள் ஆகும் என்று சொல்லியுள் ளார்.

காஜிகள் அவசரப்பட்டோ, ஒரு தலை பட்சமாகவோ குடும்ப விவகாரங்களில் ஒரு போதும் தீர்ப்பு அளிக்க மாட்டார்கள்.

சில முஸ்லிம் ஆண்கள் தவறு செய்கிறார்கள் என்பதற் காக இஸ்லாமிய சட்டத்தையே குறை சொல்ல முடியாது.

அது 1500 ஆண்டு கால மாக நடைமுறையில் உள்ள சட்டம் இறைவன் புறத்திலி ருந்து வந்த அந்த சட்டத்தை மனிதர்களால் மாற்ற முடியாது. இதுதான் முஸ்லிம்களின் நிலைபாடு.

திருமண கட்டாய பதிவு சட்டம்
உச்சநீதிமன்ற வழி காட்டுதலின் அடிப்படையில் திருமண கட்டாய பதிவு சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது.

நாங்கள் அன்றுள்ள திமுக அரசோடு நேரில் தொடர்பு கொண்டு உரிய விளக்கங் களை அளித்ததன் பலனாக முஸ்லிம் திருமணங்களை பதிவு செய்வதற்கு 1-ஏ என்ற தனிப் படிவம் உருவாக்கப் பட்டது.

இந்த 1-ஏ படிவத்தின் அடிப் படையில் அமைந்துள்ள பள்ளிவாசல் திருமண பதி வேட்டின் நகலை அப்படியே ஏற்றுக்கொண்டு சார்பதி வாளர்கள் முஸ்லிம் திரு மணங்களை பதிவு செய்ய வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் இன்றைய ஆட்சியில் பல சார்பதி வாளர்கள் இப்படி திருமணங் களை பதிவு செய்யமால் மணமக்கள், சாட்சிகள், திருமணம் நடத்தி வைத்தவர் வரவேண்டும் என்று நிர்பந் திருப்பது அரசு ஆணைக்கு விரோதமானது.

இன்னும் பல இடங்களில் முஸ்லிம் திருமணங்களை சிறப்பு விவாக சட்டப்படி (ஸ்பெஷல் மேரேஜ் ஆக்ட்)த் தான் பதிவு செய்ய முடியும் என்று சொல்கிறார்களாம்.

இந்த சட்டப்படி திருமணம் செய்வதற்கு கணவன் மனைவி இருவருக்கும் 21 வயது நிரம்பி இருக்க வேண்டும்.

முஸ்லிம்களை பொருத்த வரையில் தந்தை, தாயுடன் உடன் பிறந்தவர்களின் மக்களை திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் விஷேச விவாக சட்டத்தில் அப்படி செய்ய இயலாது.

திருமணங்களை சார்பதி வாளர் அலுவங்களில்தான் நடத்த வேண்டும் என்பது இஸ்லாத்திற்கு உடன்பாடாக இருக்காது ஏனெனில் எங்களை பொருத்தவரை அக்கா மகளை திருமணம் செய்ய முடியாது.

சார்பதிவாளர் அலுவலங் களில் அப்படி திருமணம் நடந்தால் அதை எப்படி கண்டுபிடிப்பது.

எனவேதான் இஸ்லாமிய திருமண விவகாரங்களில் நாங்கள் இவ்வளவு கண்ணும் கருத்துமாக இருக்கிறோம்.

அக். 5 பொதுக்குழுவில் நடவடிக்கை
வரும் அக்டோபர் 05ம் தேதி காலை சென்னை பெரியார் திடலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இப்பொதுக்குழுவில் நாங்கள் கலந்து பேசி 1-ஏ படிவத்தின் அடிப்படையில் திருமணங்களை பதிவு செய்ய மறுக்கின்ற சார்பதிவாளர்கள் யார்? யார்? அவர்கள் மீது சட்டப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதை அறிவிக்க உள் ளோம்.

இவ்வாறு தலைவர் பேராசிரியர் குறிப்பிட்டார்.