Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 25 பிப்ரவரி, 2013

இதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை!


இதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை!
பண்ணை முதலாளிகளுக்குத்தான் 
பட்டு மெத்தையின் அவசியம்!
பாமரர்களின் ஊழியர் இவர்.
பாயே இவருக்குப் போதுமானது!

இதில் அதிசயம் எதுவுமில்லை!
தலைக்கனம் இருந்தால்தானே 
இறக்கிவைக்க தலையணை தேவை?

நீண்ட துயில் கொள்ள நேரமுமில்லை!
தூங்கும் சமுதாயத்தை 
தட்டியெழுப்பும் கடமை 
இவருக்கு இருப்பதால் !

சட்டை கசங்குமே எனும் சங்கடமில்லை!
சமூகம் கசங்காமல் இருந்தால் சரிதானே!

பாதுகாப்பு குறித்த கவலையில்லை!
படைத்தவன் கிருபையை 
பற்றி நடப்பதால்!

இவரைப்போல் எவருமில்லை!
இதயம் முழுதும் ஈரம் இருப்பதால்!

அன்புடன் 
கவிமகன் காதர் 
காயிதே மில்லத் பேரவை 
கத்தர்.

தலைவிரித்தாடும் தண்ணீர் பற்றாக்குறை மேட்டூர் அணை கரையோர மக்கள் அவதி


சேலம் மாவட்டம், மேட்டூர் அணை அடிவாரத்தில் உள்ள காவிரியாற்றில் இருந்து தான் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு, குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில், சேலம் மாநகராட்சிக்கு தினமும், 15.5 கோடி லிட்டர் குடிநீர் எடுப்பதற்கான தனிகுடிநீர் திட்ட பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது.

தவிர, வேலூர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நாள்தோறும், 21.5 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்வதற்காக, மேட்டூர் தொட்டில்பட்டியில் நீரேற்று நிலையம் அமைக்கும் பணி நடக்கிறது. மேட்டூர் அணை நீர் பல்வேறு மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை போக்கும் நிலையில், அணை கரையோர கிராமங்களில் மட்டும் கடும் தண்ணீர் பற்றாக்குறை காணப்படுகிறது.

மேட்டூர் அணை கரையோரம் உள்ள கொளத்தூர் ஒன்றியத்தில், 14 பஞ்சாயத்து உள்ளது. காவிரி கரையோரம் உள்ள நவப்பட்டி, கோல்நாயக்கன்பட்டி தவிர, 12 பஞ்சாயத்துகளிலும் வறட்சி நீடிக்கிறது. இந்த பஞ்சாயத்து மக்களின் குடிநீர் தேவையை போக்க, குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நாள் ஒன்றுக்கு, 18 லட்சம் முதல், 22 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
மேலும், கொளத்தூர் பேரூராட்சிக்கு, எட்டு லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால், இந்த குடிநீர் கிராம மக்களுக்கு போதுமானதாக இல்லை. சுழற்சி முறையில், பஞ்சாயத்துக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதனால், கிராமங்களில் அதிகபட்சமாக, இரு வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இதனால், கிராமபுற மக்கள் சுகாதாரமான, சுத்திகரித்த குடிநீர் இல்லாமல், உப்பு கலந்த போர்வெல் குடிநீரையே குடிக்கின்றனர். இதனால், கிராமப்புற பொதுமக்கள் ஏராளமானோர் கிட்னி செயல்இழப்பு, எலும்புகள் பலவீனம் உள்பட பல்வேறு பாதிப்புகளால் அவதிப்படுகின்றனர்.

குடிநீர் பற்றாக்குறை குறித்து பண்ணவாடி பஞ்., தலைவர் ராஜ்குமார் கூறியதாவது:
பஞ்சாயத்துக்கு வினியோகம் செய்யும் குடிநீருக்காக குடிநீர் வடிகால் வாரியத்துக்கு முன்பு மாதம், 14 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தினோம். தற்போது, 7,000 ரூபாய் மட்டுமே செலுத்தும் அளவுக்கு குடிநீர் சப்ளை பாதியாக குறைந்து விட்டது.

அரசு, பலகோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, மேட்டூர் அணையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு குடிநீர் எடுத்து செல்கிறது. அணை கரையோர கிராமங்களில் இன்னும் கடுமையான குடிநீர் பற்றாக்குறை நீடிப்பது வேதனையளிக்கிறது. அணை கரையோர கிராமங்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்க, அரசு புதிய குடிநீர் திட்டங்களை உருவாக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

உலகின் இரண்டாவது, நாட்டின் முதல் மோனோ ரயில் மும்பையில் ஆகஸ்டில் செயல்படும்


"நாட்டின், முதல் மோனோ ரயில், மும்பையில் ஆகஸ்ட் மாதத்திலிருந்து இயக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை மோனோ ரயிலின் சிறப்பம்சங்களாவன: உலகின், இரண்டாவது நீண்ட தூர மோனோரயில், இதுவாகும். ஜப்பானின், ஒசாகோவில், 23.8 கி.மீ.,க்கு மோனோ ரயில் இயக்கப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக,19.54 கி.மீ., தூரம், மும்பை மோனோ ரயில் இயக்கப்படும்.

மோனோ ரயிலில், பெட்ரோல், டீசல் பயன்படுத்தப்படாது; மின்சாரத்தில் இயங்கும். எனினும், சாதாரண மின்சார ரயில்களை விட, 25 சதவீத மின்சாரத்தை மிச்சப்படுத்தும் திறன் கொண்டவை. அதிகபட்சமாக, மணிக்கு, 80 கி.மீ., வேகத்தில் செல்லும் இந்த ரயில், ஓடும் போது, தானாக மின்சாரத்தை தயாரிக்கும் திறன் கொண்டது. முழுவதும் குளிர் சாதன வசதி செய்யப்பட்ட, நான்கு பெட்டிகளைக் கொண்டது. ரயில் பெட்டியில்,18 பேர் அமர்ந்து பயணிக்கலாம்; 124 பேர் நின்று கொள்ளலாம்.

அபாய காலங்களில், பயணிகள், ஓட்டுனருடன் தொடர்பு கொள்ள முடியும். பெட்டிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பச்சை, நீலம், வெளிர் சிவப்பு ஆகிய நிறங்களில், ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட் டுள்ளன. அபாயகரமான வளைவுகளில், அசம்பாவிதங்களை தவிர்க்க, வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளது.

சாதாரண ரயில்களைப் போல் இல்லாமல், இதில், இருக்கைகள் பக்கவாட்டில் அமைக்கப்பட்டுள்ளன.மும்பை மோனோ ரயில் குறித்து, மகாராஷ்டிர மாநில தலைமை செயலர், ஜே.கே.பந்தியா கூறியதாவது: மும்பை மோனோ ரயில் திட்டம், 2008ம் ஆண்டு துவங்கப்பட்டு, தற்போது அனைத்து பணிகளும் முடிந்து விட்டன. சோதனை ஓட்டம் நிறைவடைந்த நிலையில், பாதுகாப்பு சான்றிதழுக்காக காத்திருக்கிறோம். கிடைத்ததும், ஆகஸ்ட் முதல் இயக்கப்படும்.3,000 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள மோனோ ரயில் திட்டம், முதற்கட்டமாக, செம்பூர் முதல், வடாலா வரை, 8.8 கி.மீ.,க்கு இயக்கப்படும். இவ்வாறு, பந்தியா தெரிவித்தார்.

நிலவியல் படிப்பு வழங்கும் கல்லூரிகள்


தமிழ்நாட்டில் நிலவியல் படிப்பு வழங்கும் கல்லூரிகள்:

* பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி

இப்பல்கலைக்கழகத்தில் நான்கு வருட படிப்பாக பி.எஸ்., ஜியோ சயின்ஸ், ஜந்து வருட படிப்பாக எம்.எஸ்சி., ஜியோ சயின்ஸ், ஆறு வருட படிப்பாக எம்.டெக்., ஜியோ-டெக்லானஜி அன்ட் ஜியோ-இன்பர்மேடிக்ஸ் ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.

தகுதி: இளநிலை பட்டப் படிப்பில் சேர பிளஸ் 2 படிப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.

இணையதளம்: www.bdu.ac.in

* பெரியார் பல்கலைக்கழகம், சேலம்

இப்பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி.,ஜியாலஜி படிப்பு வழங்கப்படுகின்றன.

தொலைபேசி: 0427-2345766, 2345520, 2346277

இணையதளம்: www.periyaruniversity.ac.in

* பிரசிடென்சி கல்லூரி, சென்னை

தொலைபேசி: 044-28544894

இக்கல்லூரியில் பி.எஸ்சி.,ஜியாலஜி படிப்பு வழங்கப்படுகின்றன.

இணையதளம்: www.presidencychennai.com

* நேஷனல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி

இக்கல்லூரியில் பி.எஸ்சி.,ஜியாலஜி படிப்பு வழங்கப்படுகின்றன.

தொலைபேசி: 0431-3202971

இணையதளம்: www.nct.ac.in

*  வி.ஓ சிதம்பரம் கல்லூரி, தூத்துக்குடி

இக்கல்லூரியில் பி.எஸ்சி.,ஜியாலஜி படிப்பு வழங்கப்படுகின்றன.

தொலைபேசி: 0461-320492

இணையதளம்: www.voccollege.ac.in