Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 2 ஜூலை, 2013

தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினராக எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. தேர்வு

தமிழ்நாடு வக்ஃபு வாரியத் திற்கு நாடாளுமன்ற மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் களை நியமன அடிப்படையில் தமிழக அரசு அறிவிப்பு செய்து வக்ஃபு வாரிய தலைவர் தேர்தலையும் நடத்தி தமிழ்மகன் உசேன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனை எதிர்த்து எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், வஃக்பு வாரியத்திற்கு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப் பினர் பிரதிநிதிகளை நியமன முறையில் அறிவிப்பு செய்வது செல்லாது என்றும், தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளித் தது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு வக்ஃபு வாரியத்திற்கு எம்.பி., எம்.எல்.ஏ. பிரதி நிதிகளை தேர்வு செய்ய தேர்தல் அறிவிப்பு வெளி யிடப்பட்டது.

எம்.பி. பிரதிநிதிகளாக எம்.அப்துல் ரஹ்மான், ஜே.எம். ஆரூண் ஆகியோரும், எம்.எல். ஏ.க்களில் முஹம்மது ஜான், அஸ்லம் பாஷா ஆகியோரும் மனு தாக்கல் செய்திருந்தனர். இதனால் போட்டியின்றி இவர் கள் நால்வரும் தேர்வு செய்யப் பட்டனர்.

தலைமைச் செயலகத்தில் சான்றிதழ் :
எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை இன்று தலைமைச் செயலகத்தில் பிற்படுத்தப்பட் டோர், மிகவும் பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செய லாளரும், தேர்தல் அதிகாரியு மான முனைவர் அருள்மொழி யிடமிருந்து பெற்றுக் கொண் டார். அப்போது இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், மாநிலச் செயலாளர் திருப்பூர் எம்.ஏ. சத்தார் ஆகியோர் உடன் இருந்தனர்.

தேர்வு செய்யப்பட்ட சான்றி தழுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைமையகமான காயிதெ மில்லத் மன்ஸில் வருகை தந்த எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., தேர்வு சான்றிதழை தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீனிடம் அளித்து வாழ்த்து பெற்றார். அப்போது மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், மாநிலச் செயலாளர்கள் காயல் மகபூப், திருப்பூர் எம்.ஏ. சத்தார், வடசென்னை மாவட்ட இ.யூ. மாவட்ட அமைப்புச்செயலாளர் பிலால் ஹுசைன், கொடிக்கால் ஷேக் அப்துல்லா, சென்னை வாழ் முத்துப்பேட்டை ஜமாஅத் செயலாளர் ஜாபர் அலி, அதிராம்பட்டினம் ஜமாஅத் தலைவர் ஷேக் நஸ்ருதீன், அமைந்தகரை சாதிக், பத்திரிகையாளர்கள் அலி, கண்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தலைவர் தேர்தல்
தமிழ்நாடு வக்ஃபு வாரிய முதல் கூட்டம் வரும் 10-ம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் நடைபெறுகிறது. அப்போது தலைவர் பதவிக் கான தேர்தல் நடைபெறும் என்று வாரிய முதன்மை நிர்வாக அலுவலர் அப்துல் ராஸிக் அறிவித் துள்ளார்.

குஜராத்தில் 6 போலி என்கவுன்டர்கள் நடந்துள்ளது : திக்விஜய்சிங்


குஜராத்தில் 2004-ல் நடந்த இஸ்ரத் ஜஹான் என்ற மாணவி உள்ளிட்ட நான்கு பேர் என்கவுன்டர் செய்யப்பட்ட வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, காங். பொதுச்செயலர் திக்விஜய் சிங் கூறியது, குஜராத் அரசு 6 போலி என்கவுன்டர்களை நடத்தியுள்ளது. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சௌதி அரேபியாவில் வெளிநாட்டவருக்கான சலுகை நான்கு மாதக் காலம் நீட்டிப்பு

சட்டமீறலாகவும், உரிய பணியனுமதியின்றியும் தங்கியுள்ள வெளிநாட்டவர் தாயகம் திரும்பவோ, சட்டத்திற்குட்பட்டு தங்கள் ஆவணங்களைச் சரி
செய்துகொள்ளவோ சவூதி அரேபியா அறிவித்திருந்த சலுகைக் காலம் மேலும் நான்கு மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 4ம் தேதிக்குள் (அரபு
புதுவருடம் முஹர்ரம் 1) எவ்வித அபராதமோ, தண்டனையோ இன்றி அத்தகையோர் தம் நாடு மீளவோ, முறையான பணி தேடி அமரவோ செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறையான கடவுச் சீட்டுகளின்றியும், பணி ஆவணங்கள் இன்றியும் தவித்த பல வெளிநாட்டவருக்கு, குறிப்பாக இந்தியருக்கு இந்தச் சலுகைக் கால நீட்டிப்பு பெரும் ஆறுதலாகவும்,ஆசுவாசமாகவும் அமைந்துள்ளது. முன்னதாக, சட்ட மீறலா, உரிய ஆவண அனுமதியின்றி தங்கிப் பணிபுரிவோர் ஜூலை 3ம் தேதிக்குப் பின்னர் பிடிபட்டால் கடும் சிறைவாசமும், அபராதமும் விதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம்.

இதில் மேலும் குறிப்பிடத்தக்க செய்தியாக, இவ்வாறு தாயகம் மீள்வோர், மீண்டும் பணி வாய்ப்பு பெற்று ஒழுங்கான சட்ட முறைமைகளுக்குட்பட்டு
மீண்டும் சவூதி வரலாம் என்றும் அனுமதிக்கப்பட்டிருப்பதைச் சொல்லலாம்.
முன்னதாக, துயருறும் இந்தியர்கள் தாயகம் மீள்வதற்குரிய அவசரக் கடவுச் சான்று (EC) பெறவும், அல்லது, முறையான பணி வாய்ப்புகளைப் பெறவும் இந்தியத் தூதரகம் விழிப்புணர்வுடன் செயற்பட்டதும், ரியாத் தமிழ்ச் சங்கம்
உள்ளிட்ட இந்தியர் அமைப்புகள் அதில் பெரும்பங்கு ஆற்றியதும் குறிப்பிடத்தக்கது.

சவூதி மன்னரின் இந்த சலுகை அறிவிப்புக்கு ரியாத் தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட தமிழர் அமைப்புகள் நன்றி தெரிவித்துள்ளன.