Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 16 ஜூலை, 2012

காயிதே மில்லத் கண்ட கனவு நிகழ்வாகின்றது


 இன்று நாட்டில் பரபரப்பாக   பேசப்படுவது ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் ஆகும் .பல்வேறு பரபரப்பிற்கு மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக பழுத்த அரசியல் வாதியான மேற்குவங்கத்தை சார்ந்த திரு .பிரணாப் முகர்ஜி அறிவிக்கப்பட்டு ,அவரும் நாடெங்கிலும் ஆதரவு திரட்டி வருகிறார் .அடுத்த ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி வருவது உறுதியாகிவிட்டது .

          நேற்று (15/07/2012) பிரதமர் இல்லத்தில் ஆளும் ஐக்கிய முற்ப்போக்கு கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது .அக்கூட்டத்தில் சோனியா காந்தி உள்ளிட்ட கூட்டணி கட்சித்தலைவர்கள் கலந்துகொண்டனர் .அக்கூட்டத்தில் துணை ஜனாதிபதிக்கான வேட்பாளரை தேர்வு செய்ய ஆலோசனை நடந்தது .
          திரிணமுல் காங்கிரஸ் தலைவர் முகுல்ராய், கோபால கிருஷ்ண காந்தி அல்லது கிருஷ்ண போஸை நிறுத்த வேண்டும் என்று கூறினார் .
தொல்.திருமாவளவன் கிருஸ்தவ மதத்தை சார்ந்தவரை தேர்வு செய்யவேண்டும் என்று கூறினார் .மேற்கண்ட கருத்துக்களின் மீது முடிவு ஏற்படாமல் இருந்தது .

         இந்திய திருநாட்டின் மதச்சார்பற்ற தன்மை ,சமூக நல்லிணக்கம் காக்கப்படவேண்டும் என்று தன வாழ் நாள் முழுவதும் பாடுபட்ட ,இந்திய சிறுபான்மை சமுதாய மக்களின் ஊரிமைகளை பெற்றுத்தந்த பெருந்தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் வழிவந்த ,இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய தலைவர் இ.அஹமது சாஹிப் இந்திய பெருநாட்டின் அடுத்த துணை ஜனாதிபதி வேட்பாளாராக ஹமீது அன்சாரியை ,முன்மொழிந்தார் .அவர் முன்மொழிந்த உடன் ,திமுகவின் டி.ஆர்.பாலு ,அஜித் சிங் ,பரூக் அப்துல்லா  உள்ளிட்ட அனைவரும் ஹமீது அன்சாரியின் பெயரை வழிமொழிந்தனர் .

    இறுதியாக பேசிய சோனியா காந்தி ,ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக திரு.ஹமீது அன்சாரி அவர்களை ஒட்டுமொத்த ஆதரவோடு தேர்வு செய்வதாக அறிவித்தார் .அதனை கூட்டம் முடிந்த பின்பு ,ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறினார் .
     
   இந்த நாட்டின் துணை ஜனாதிபதியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின்  அகில இந்தியத் தலைவர் முன்மொழிகின்றார் ,அதனை அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் ஆதரிக்கின்றன .இது ,நம் சமுதாயத் தந்தை கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் கண்ட கணவல்லவோ ? அந்த கண்ணியத்தலைவர் கண்ட கனவை ,வல்ல அல்லா இன்று அத்தலைவரின் தொண்டர் மூலம் நிரூபணம் ஆக்கியுள்ளான் .இன்ஷாஅல்லாஹ் ,நம் சமுதாயம் ஒன்று படுமானால் ,இந்த நாட்டின் ஆட்சி பொறுப்பையும் நாம் பெறலாம் ,இதுதான் நிதர்சனமான உண்மையாகும் .