Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

வேலை கிடைத்தும் இடம் கிடைக்கவில்லை: தவிப்பில் 150 இளநிலை ஆய்வாளர்கள்

கூட்டுறவு துறையில், இளநிலை ஆய்வாளர் பணிக்கு, நியமன ஆணை பெற்றும், ஆறு மாதமாக பணியில் சேர முடியாமல், 150 பேர், அவதிப்பட்டு வருகின்றனர்.

தமிழகக் கூட்டுறவுத் துறையில், இளநிலை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப, 2012 ஆக., 4ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., மூலம், போட்டித் தேர்வு நடந்தது. மாநிலம் முழுவதும் உள்ள, 150 பணியிடங்களை நிரப்ப நடந்த தேர்வில், 6 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, மார்ச் மாதம், 11ம் தேதி, சென்னையில் கலந்தாய்வு நடந்தது. இதில் பங்கேற்றவர்களில், தேர்ச்சி பெற்ற, 150 பேருக்கு, அப்போதே பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.

அப்போது, பணியிடம் குறித்த தகவல், கூட்டுறவுத் துறை மூலம் தெரிவிக்கப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் கூறியுள்ளனர். இதை நம்பி, அப்பாயின்ட்மென்ட் ஆர்டருடன், 150 பேரும், ஊருக்கு திரும்பினர். சில மாதங்கள் கடந்தும், அவர்கள், எந்த இடத்தில் பணியில் சேருவது என்பதற்கான உத்தரவு வரவில்லை என்பதால், அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள், டி.என்.பி.எஸ்.சி., மற்றும் சென்னையில் உள்ள கூட்டுறவுத் துறை செயலர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்ட போது, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகளோ, "தேர்வு நடத்தி, தகுதி உள்ளவர்களுக்குப் பணி நியமன உத்தரவு வழங்குவது மட்டுமே, எங்கள் பணி; அதை நாங்கள் செய்து விட்டோம்; உங்களுக்கு எந்த பணியிடம் ஒதுக்கப்பட்டு உள்ளது என்பதை, கூட்டுறவுத் துறை தான் தெரிவிக்க வேண்டும்" என தெரிவித்தனர்.

காத்திருங்கள்: கூட்டுறவுத் துறை அதிகாரிகளோ, "விரைவில் பணியிடம் ஒதுக்கப்படும். அதுவரை, காத்திருங்கள்" என கூறி வருகின்றனர். கூட்டுறவுத் துறையில், இளநிலை ஆய்வாளர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டும், ஆறு மாதமாக, பணியில் சேர முடியாமல், 150 பேர் தவித்து வருகின்றனர்.

போதை ஆசா­மி­களால் பெண்கள் அவதி

சென்னை மயி­லாப்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள பகு­திகள் தற்­போது
பார்­க­ளாக மாறி வரு­கின்­றன.சென்னை மயி­லாப்பூர் ரயில் நிலையம் அருகே, ‘டாஸ்மாக்’ கடைகள் உள்­ளன. அவற்றில், ‘பார்’ வச­திகள் இருந்­தாலும், பெரும்­பா­லான ‘குடி­ம­கன்’கள், சாலை­யோ­ரத்­தையே ‘பார்’­க­ளாக மாற்றி விடுகின்­றனர்.


மது­பாட்­டில்­களை வாங்கி வந்து,சாலை­யி­லேயே நின்று, ‘கட்டிங்’
பிரிப்­பதும், அங்­கேயே வைத்து குடிக்கும் செயல்­களும் அன்­றாட நிகழ்­வு­க­ளா­கி­விட்டன. ரயில் நிலையம் செல்வோர்,குறிப்­பாக பெண்கள், இதனால்
பாதிக்­கப்­படும் சூழல் ஏற்­பட்­டுள்­ளது.


இது­த­விர, காலி­யான மது பாட்­டில்­களை போதையில் கண்­ட­படி வீசி உடைப்­பதாலும், சாலை­யோரம் செல்வோர் பாதிக்­கப்­பட்டு வரு­கின்­றனர். போதை­யே­றிய சில ‘குடி­ம­கன்’கள், பெண்­களை கேலி, கிண்டல் செய்யும் செயல்­களும் நடக்­கின்­றன. போலீ­சாரும் இதை கண்டும், காணாமல் இருந்து வரு­கின்­றனர்.


பொது­மக்­க­ளுக்கு தொல்லை தரும் வகையில், தொடரும் அவர்கள்
அட்­ட­கா­சத்தை போலீசார் வேடிக்கை பார்க்­காமல், கடும் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என, பகு­தி­வா­சிகள்
வேண்­டுகோள் விடுத்­துள்­ளனர்.

சமுதாயத்திற்கு இடர்ப்பாடு ஏற்பட்டபோதெல்லாம் அரும் பாடுபட்ட இ. யூ. முஸ்லிம் லீகிற்கு உலமாக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் :ஜமாத்துல் உலமா சபை கௌரவத்தலைவர் மௌலவி ஏ. முஹம்மது இஸ்மாயில் பாஜீல் பாகவி வேண்டுகோள்

திருமணம் , குடும்பப் பிரச்சினைகள், மணவிலக்கு விவகாரங்களில் தலையிடவோ, சான்று வழங்கவோ காஜிகள் ஙாயிப் காஜிகள் என்ற பள்ளிவாசல் இமாம்கள் கத்தீப்களுக்கு அதிகாரமில்லை என்று அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. திருமதி பதர் சயீத் வழக்கு தொடர்ந்ததை எதிர்த்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சென்னை உயர் நீதிமன்றத்தில் எதிர் மனு தாரராக மனு தாக்கல் செய்து வழக்காடி வருகிறது. 

ஷரீஅத் சட்டத்திற்கு விரோதமாகவும், பொது சிவில் சட்டத்தை கொண்டு வரும் நோக்கிலும் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கின் விபரீதத்தை சமுதாயத்திற்கு உணர்த்தும் வகையிலும், இஸ்லாமிய திருமண, விவாகரத்து சட்டங் களை முஸ்லிம் அல்லாதவர் களும் புரிந்துகொள்ளச்செய்யும் நோக்கோடு மாநிலம் தழுவிய அளவில் இஸ்லாமிய சட்ட விளக்க கருத்தரங்குகளை ஊர்கள் தோறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்தி வருகிறது.

நாகை வடக்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக நீடூரில் இஸ்லாமிய திருமண சட்ட விளக்க கருத் தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு நாகை தெற்கு மாவட்ட தலைவர் டாக்டர் எம்.எம்.சம்சுத்தீன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் அமீர் என்.ஏ.எம்.நூருல்லாஹ் வரவேற்று பேசினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்நாடு மாநில தலைவரு மான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் சாஹிப்,சர்வதேச காயிதே மில்லத் பேரவை ஒருங் கிணைப்பாளர் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி., மாநில செயலாளர் ஆடுதுறை ஏ.எம்.ஷாஜஹான், சுதந்திர தொழிலாளர் யூனியன் மாநில பொதுச்செயலாளர் கே.எம். நிஜாமுதீன், மாநில துணை செயலாளர் மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இக்கருத்தரங்கில் நீடூர் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரி முதல் வரும்,மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை கௌரவத் தலைவருமான மார்க்க மாமேதை மௌலானா முப்தி எ .முஹம்மது இஸ்மாயில் பாஜில் பாக்கவி ஹஜரத் கலந்து கொண்டு பேசியதாவது: ஷரியத் என்பது ஒரு பெரிய கடல். குர்ஆன், ஹதீஸ், அடிப்படையில் அமைந்த அதனை சங்கைக்குரிய இமாம்கள் ஆய்வு செய்து தெளிவான சட்டத்தை நமக்கு தொகுத்து அளித்துள்ளார் கள். அதனை யுக முடிவு காலம் வரை யாரும் அசைக்க முடியாது. இந்த சட்டங்களை சரியாக புரிந்து கொள்ளாதவர்கள் தான் ஷரீஅத் விஷயத்தில் இன்று வரை பல குழப்பங்களை செய்து வருகிறார்கள்.

ஆனால் முஸ்லிம் லீக் பேரியக்கம் நாட்டின் விடுதலைக்கு முன்பும் சரி விடு தலைக்கு பின்பும் சரி இந்த சமுதாயத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்து வருகிறது.

இந்த நாட்டில் ஷரியத் திற்கும்,முஸ்லிம்களின் வாழ்வாதார விஷயங்களுக்கும் எப்பொழுதெல்லாம் இடர்பாடு வந்ததோ அப்பொழுதெல்லாம் முஸ்லிம் லீக் பெரும்பாடுபட்டு ஷரியத்தையும், சமுகத்தையும் காப்பாற்றி வந்துள்ளது. வரலாறு இதுவாக இருந்தாலும் இன்றும் கூட சில விஷமிகள் சமுதாயத்திற்கு எதிராக செய்து வரும் சூழ்ச்சி களை முறியடிக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் களம் கண்டு வருகிறார்கள். இந்த உலகிற்காக மட்டு மில்லாமல் மறுமை நன்மையை கருத்தில் கொண்டு உளத்தூய்மையோடு பணியாற்றி வரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு சங்கைக்குரிய உலமா பெருமக்கள் உறுதுணை யாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மௌலானா முப்தி ஏ. முஹம்மது இஸ்மாயில் பாஜீல் பாகவி ஹஜரத் குறிப்பிட்டார்.

உலமாபெருமக்கள், முஸ்லிம் லீக் மறு முகங்கள்
நீடூர் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபி கல்லூரி துணை முதல்வர் மௌலானா அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் உரையாற்றும் போது மஹல்லா ஜமாஅத் கட்டுப்பாட்டை காப்பாற்ற வேண்டும் என்பதையும் மார்க்க விஷயங்களில் உலமாக்களின் வழிகாட்டுதலையே ஏற் வேண்டும் என்பதையும் மிகத் தெளிவாக சொல்லுகின்ற ஒரே சமுதாய இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மட்டுமே. இந்த இயக்கத்தை ஆதரிக்க வேண்டியது உலமாக் களின் கடமை எனக்குறிப் பிட்டார்.