Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 29 ஜூன், 2012

ரயில்வே தட்கல் முன்பதிவு ரத்து செய்யப்படுமா ? இடைத்தரகர்கள் ஆக்கிரமிப்பு

ரெயிலில் கடைசி நேரத்தில் அவசரமாக செல்ல விரும்புபவர்களுக்கு உதவும் வகையில் தட்கல் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு நாளுக்கு முன்னதாக கூடுதல் கட்டணம் செலுத்தி டிக்கெட் பெறலாம். 
தட்கல் முன்பதிவு திட்டத்தில் இடைத்தரகர்களால் பெரிய அளவில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன. இடைத்தரகர்கள் தட்கல் டிக்கெட்டுக்களை மொத்தமாக வாங்கிக் கொண்டு அதை அதிக விலைக்கு விற்கிறார்கள். 
இடைத்தரகர்கள் மட்டுமின்றி ரெயில்வே ஊழியர்கள் மற்றும் ரெயில்வே போலீசாரும் தட்கல் முன்பதிவில் முறைகேடு செய்வதாக புகார்கள் கூறப்பட்டன.
சமீபத்தில் இந்த முறைகேட்டை ஒரு தொலைக்காட்சி அம்பலப்படுத்தியது. தட்கல் முன்பதிவில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக அடிக்கடி புகார்கள் வருவதால் இந்த திட்டத்தை கைவிட்டு விடலாமா என்று ரெயில்வே அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள். 
இதுதொடர்பாக கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தட்கல் முன்பதிவில் எத்தகைய மாற்றங்கள் செய்யலாம் என்ற பரிந்துரைகளும் பெறப்பட்டு வருகிறது. 

தற்போது தட்கல் திட்டத்தில் முன்பதிவு செய்பவர்கள் ரெயில் பயணத்தின் போது தங்களது அடையாள அட்டை ஆவணங்களை காண்பிக்கிறார்கள். அதற்கு பதில் தட்கல் டிக்கெட்டை முன் பதிவு செய்யும் போதே அடையாள அட்டையை காட்டும் வகையில் மாற்றம் செய்யலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

டிக்கெட் கவுண்டர்களில் தட்கல் டிக்கெட் விற்பனையை நிறுத்தி விட்டு இ-டிக்கெட் முறையை விரிவுபடுத்தலாம் என்றும் ஒரு பரிந்துரை வந்துள்ளது. 

தட்கல் முன்பதிவு நேரத்தில் மாற்றங்கள் செய்யப்படவேண்டும். ஒரு நபருக்கு 2 தட்கல் டிக்கெட்டுக்களே கொடுக்கப்பட வேண்டும். தட்கல் முன்பதிவு செய்த பிறகு எக்காரணம் கொண்டும் பெயர்களை மாற்ற அனுமதிக்கக்கூடாது. தட்கல் டிக்கெட் ரத்து செய்யப்படுவதில் விதிமுறைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.

இப்படி பல்வேறு பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக விரைவில் ரெயில்வே இலாகா முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக