Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 1 ஜனவரி, 2013

பெண்களை போலீஸ் ஸ்டேசனில் விசாரணைக்கு அழைக்க ‌கூடாது: பஞ்சாப் முதல்வர் உத்தரவு


பஞ்சாப்பில், விசாரணை என்ற பெயரில் இனி பெண்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தக்கூடாது என அம்மாநில முதல்வர், காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். கடந்த சிலநாட்களுக்கு முன் பஞ்சாப் மாநிலம் பாடியாலா மாவட்டத்தில் டீன்ஏஜ் பெண் ஒருவர் மர்மகும்பலால் கற்பழிக்கப்பட்டார்.

இது தொடர்பாக அவரை போலீசார் அடிக்கடி போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்.இதனால் அவர் மனவேதனை அடைந்தார்.இதையடுத்து அம்மாநில முதல்வர் பிரகாஷ்சிங் பாதல், மாநில டி.ஜி.பி.க்கு பிறப்பித்த உத்தரவில், பெண்கள் தொடர்பான வழக்கு விசாரணையின் போது சம்பந்தப்பட்ட பெண்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தக்கூடாது.

அப்படி விசாரிக்க நேரிட்டால், புகாரை பெற்று சம்பந்த பெண்ணின் வீட்டிற்கே, பெண் போலீசாரை அனுப்பி வீட்டில் வைத்தே விசாரணை நடத்த வேண்டும். தவிர பெண்கள்,‌ பெண் குழந்தைகள் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க மாவட்டம் தோறும் பிரத்யோக கோர்ட்டுகள் அமைக்கவும் பஞ்சாப் , அரியானா கோர்ட் தலைமை நீதிபதி ஏ.கே.சிக்கிரிக்கு கடிதம் வாயிலாகவும் பாதல் பரிந்துரைத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக