Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

அடிப்படை ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்


தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் 8-வது துணை வேந்தராக டி. சாந்தாராம் நியமிக்கப்பட்டுள்ளார். இவருடைய பதிவியேற்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பதவியேற்புக்கு பின் அவர் பேசியது: இந்தப் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறும் மாணவர்கள் அறிவுப்பூர்வமானவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் இருக்கவேண்டும். எனது பணியின்போது பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கும் சமூகத்தின் வளர்ச்சிக்கும் பாடுபடுவேன். அடிப்படை மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.

பல்கலைக்கழக விதிகளில் பாதிப்பு இல்லாதவற்றை பின்பற்றுவோம். பாதிப்பு இருந்தால் ஆலோசனை செய்து விதிகள் மாற்றப்படும் என்றார்.

இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ். விஜய் பேசும்போது, தமிழகத்தில் மருத்துவ சேவையை மேம்படுத்த மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்களுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் தமிழகம் முழுவதும் தரமான மருத்துவக் கல்வியை அளித்து வருகிறது.


பல்கலைக்கழகத்தின் மூலம் கல்லூரிகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை அதிகப்படுத்தவேண்டும்.

மேலும் மற்ற பல்கலைக்கழகங்களுடனும் ஒத்துழைப்பை ஏற்படுத்தவேண்டும். புதிய துணைவேந்தருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக