Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 8 நவம்பர், 2012

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக மழை


 தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. கடந்த வாரம் வங்ககடலில் உருவான நீலம் புயல் சின்னம் காரணமாக வடதமிழகத்தில் பலத்த மழை பெய்தது. ஆனால் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பெய்யவில்லை. அணைகள் மற்றும் குளங்கள் நிரம்பாததால் விவசாயிகள் சாகுபடியை செய்ய முடியாமல் கவலையில் உள்ளனர்.

இந்த நிலையில் இலங்கையையொட்டி தென்மேற்கு வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று முதல் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு நெல்லை, ஆலங்குளம், தென்காசி. செங்கோட்டை, சங்கரன்கோவில், தூத்துக்குடி, கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதிகபட்சமாக பாபநாசத்தில் 57 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

மற்ற இடங்களில் பதிவான மழை விவரம் வருமாறு:-

மணிமுத்தாறு-52.8 மி.மீ, ஆய்குடி- 40.2 மி.மீ., அம்பை- 30.5 மி.மீ., சேரன்மகாதேவி- 25.6.மி.மீ., நாங்குநேரி- 27 மி.மீ., பாளை- 37 மி.மீ., நெல்லை- 25 மி.மீ., ராதாபுரம்- 29 மி.மீ., சங்கரன்கோவில்- 12 மி.மீ., செங்கோட்டை- 20 மி.மீ., தென்காசி- 20 மி.மீ., சிவகிரி- 5மி.மீ., ஆலங்குளம்- 35.8மி.மீ. இந்த மழை காரணமாக நெல்லை மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து சற்று அதிகரித்து உள்ளது. இதனால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பாபநாசம் அணை- 75.50 அடியாகவும், மணிமுத்தாறு அணை- 61.70 அடியாகவும் உள்ளன.

மற்ற அணைகளின் நீர்மட்டம் விவரம் வருமாறு:-

சேர்வலாறு- 88.25 அடி, கடனாநதி அணை - 74 அடி,
ராமநதி அணை- 81.50அடி, கருப்பாநதி அணை-63.6அடி, குண்டாறு அணை-36.10அடி, வடக்கு பச்சையாறு அணை- 16 அடி,
நம்பியாறு அணை- 17.26 அடி, அடவிநயினார் அணை- 93.50 அடியாகவும் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக