Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 2 ஜூலை, 2013

தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினராக எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. தேர்வு

தமிழ்நாடு வக்ஃபு வாரியத் திற்கு நாடாளுமன்ற மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் களை நியமன அடிப்படையில் தமிழக அரசு அறிவிப்பு செய்து வக்ஃபு வாரிய தலைவர் தேர்தலையும் நடத்தி தமிழ்மகன் உசேன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனை எதிர்த்து எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், வஃக்பு வாரியத்திற்கு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப் பினர் பிரதிநிதிகளை நியமன முறையில் அறிவிப்பு செய்வது செல்லாது என்றும், தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளித் தது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு வக்ஃபு வாரியத்திற்கு எம்.பி., எம்.எல்.ஏ. பிரதி நிதிகளை தேர்வு செய்ய தேர்தல் அறிவிப்பு வெளி யிடப்பட்டது.

எம்.பி. பிரதிநிதிகளாக எம்.அப்துல் ரஹ்மான், ஜே.எம். ஆரூண் ஆகியோரும், எம்.எல். ஏ.க்களில் முஹம்மது ஜான், அஸ்லம் பாஷா ஆகியோரும் மனு தாக்கல் செய்திருந்தனர். இதனால் போட்டியின்றி இவர் கள் நால்வரும் தேர்வு செய்யப் பட்டனர்.

தலைமைச் செயலகத்தில் சான்றிதழ் :
எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை இன்று தலைமைச் செயலகத்தில் பிற்படுத்தப்பட் டோர், மிகவும் பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செய லாளரும், தேர்தல் அதிகாரியு மான முனைவர் அருள்மொழி யிடமிருந்து பெற்றுக் கொண் டார். அப்போது இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், மாநிலச் செயலாளர் திருப்பூர் எம்.ஏ. சத்தார் ஆகியோர் உடன் இருந்தனர்.

தேர்வு செய்யப்பட்ட சான்றி தழுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைமையகமான காயிதெ மில்லத் மன்ஸில் வருகை தந்த எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., தேர்வு சான்றிதழை தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீனிடம் அளித்து வாழ்த்து பெற்றார். அப்போது மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், மாநிலச் செயலாளர்கள் காயல் மகபூப், திருப்பூர் எம்.ஏ. சத்தார், வடசென்னை மாவட்ட இ.யூ. மாவட்ட அமைப்புச்செயலாளர் பிலால் ஹுசைன், கொடிக்கால் ஷேக் அப்துல்லா, சென்னை வாழ் முத்துப்பேட்டை ஜமாஅத் செயலாளர் ஜாபர் அலி, அதிராம்பட்டினம் ஜமாஅத் தலைவர் ஷேக் நஸ்ருதீன், அமைந்தகரை சாதிக், பத்திரிகையாளர்கள் அலி, கண்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தலைவர் தேர்தல்
தமிழ்நாடு வக்ஃபு வாரிய முதல் கூட்டம் வரும் 10-ம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் நடைபெறுகிறது. அப்போது தலைவர் பதவிக் கான தேர்தல் நடைபெறும் என்று வாரிய முதன்மை நிர்வாக அலுவலர் அப்துல் ராஸிக் அறிவித் துள்ளார்.

குஜராத்தில் 6 போலி என்கவுன்டர்கள் நடந்துள்ளது : திக்விஜய்சிங்


குஜராத்தில் 2004-ல் நடந்த இஸ்ரத் ஜஹான் என்ற மாணவி உள்ளிட்ட நான்கு பேர் என்கவுன்டர் செய்யப்பட்ட வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, காங். பொதுச்செயலர் திக்விஜய் சிங் கூறியது, குஜராத் அரசு 6 போலி என்கவுன்டர்களை நடத்தியுள்ளது. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சௌதி அரேபியாவில் வெளிநாட்டவருக்கான சலுகை நான்கு மாதக் காலம் நீட்டிப்பு

சட்டமீறலாகவும், உரிய பணியனுமதியின்றியும் தங்கியுள்ள வெளிநாட்டவர் தாயகம் திரும்பவோ, சட்டத்திற்குட்பட்டு தங்கள் ஆவணங்களைச் சரி
செய்துகொள்ளவோ சவூதி அரேபியா அறிவித்திருந்த சலுகைக் காலம் மேலும் நான்கு மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 4ம் தேதிக்குள் (அரபு
புதுவருடம் முஹர்ரம் 1) எவ்வித அபராதமோ, தண்டனையோ இன்றி அத்தகையோர் தம் நாடு மீளவோ, முறையான பணி தேடி அமரவோ செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறையான கடவுச் சீட்டுகளின்றியும், பணி ஆவணங்கள் இன்றியும் தவித்த பல வெளிநாட்டவருக்கு, குறிப்பாக இந்தியருக்கு இந்தச் சலுகைக் கால நீட்டிப்பு பெரும் ஆறுதலாகவும்,ஆசுவாசமாகவும் அமைந்துள்ளது. முன்னதாக, சட்ட மீறலா, உரிய ஆவண அனுமதியின்றி தங்கிப் பணிபுரிவோர் ஜூலை 3ம் தேதிக்குப் பின்னர் பிடிபட்டால் கடும் சிறைவாசமும், அபராதமும் விதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம்.

இதில் மேலும் குறிப்பிடத்தக்க செய்தியாக, இவ்வாறு தாயகம் மீள்வோர், மீண்டும் பணி வாய்ப்பு பெற்று ஒழுங்கான சட்ட முறைமைகளுக்குட்பட்டு
மீண்டும் சவூதி வரலாம் என்றும் அனுமதிக்கப்பட்டிருப்பதைச் சொல்லலாம்.
முன்னதாக, துயருறும் இந்தியர்கள் தாயகம் மீள்வதற்குரிய அவசரக் கடவுச் சான்று (EC) பெறவும், அல்லது, முறையான பணி வாய்ப்புகளைப் பெறவும் இந்தியத் தூதரகம் விழிப்புணர்வுடன் செயற்பட்டதும், ரியாத் தமிழ்ச் சங்கம்
உள்ளிட்ட இந்தியர் அமைப்புகள் அதில் பெரும்பங்கு ஆற்றியதும் குறிப்பிடத்தக்கது.

சவூதி மன்னரின் இந்த சலுகை அறிவிப்புக்கு ரியாத் தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட தமிழர் அமைப்புகள் நன்றி தெரிவித்துள்ளன.

திங்கள், 1 ஜூலை, 2013

கம்பெனி செகரடரிஷிப் படிப்பு

காமர்ஸ் படிப்பவருக்கான தொழிற்படிப்புகளாகக் கருதப்படுவது சி.ஏ., கம்பெனி செகரடரிஷிப், ஐ,சி.டபிள்யூ.ஏ., போன்றவை. இதில் கம்பெனி செகரடரிஷிப் படிப்பும் சிறப்பான வேலை வாய்ப்புகளைத் தரக்கூடியது. ஒரு நிறுவனத்திற்கான சட்ட பூர்வமான ஆலோசனைகளை தருவது கம்பெனி செகரடரி தான்.

50 லட்சத்திற்கு மேல் நிலையான ஷேர் முதலீட்டைக் கொண்டிருக்கும் நிறுவனம் ஒவ்வொன்றும் கம்பெனிஸ் ஆக்ட் எனப்படும் கட்டாய விதிகளின் படி ஒரு கம்பெனி செகரடரியை தனது பணியில் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். பல்வேறு துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு, வணிக விதிகளை நன்றாக அறிந்திருப்பது, திறமையான மேலாண்மை ஆகியவற்றில் கம்பெனி செகரடரி தான் முக்கிய பங்காற்றுகிறார்.

இந்தியாவில் இன்ஸ்டிடியூட் ஆப் கம்பெனி செகரடரிஸ் ஆப் இந்தியா என்னும் அமைப்பு தான் இந்தத் தொழிற்படிப்பை நடத்துகிறது. இதில் 3 நிலைகளில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

* அடிப்படைப் படிப்பு (Foundation Course)
* இடைநிலைப் படிப்பு (Intermediate Course)
* முதன்மைப் படிப்பு (Final Course)
இந்த 3 படிப்புகளையும் வெற்றிகரமாக முடிப்பவர் பின்பு கம்பெனி செகரடரியாகப் பணியாற்றலாம். அடிப்படைப் படிப்புக்கு +2 முடித்திருப்பவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். முன்பு இது பட்டப்படிப்பு தகுதியாக இருந்தது. அடிப்படைப் படிப்புக்கான தேர்வில் வெற்றி பெறுபவர்கள் இடைநிலைத் தேர்வில் கலந்து கொள்ளலாம். பட்டப்படிப்பு முடித்திருப்பவர்கள் அடிப்படைப் படிப்பை விட்டுவிட்டு இதில் நேரடியாகச் சேரலாம்.

முதன்மைப் படிப்பு எனப்படும் பைனல் தேர்வில் இன்டர்மீடியட் தேர்வில் வெற்றி பெறுபவர் கலந்து கொள்ளலாம்.தபால் மூலமாகவோ நேரடியாகவோ 18 மாதங்கள் சிறப்புப் பயிற்சி பெற்ற பின்பு தான் இந்தத் தேர்வை எழுத முடியும். இதற்கு கட்டாயமான நடைமுறைப் பயிற்சியும் தேவை.
கம்பெனி செகரடரி படிப்பை முடிப்பவர்கள் கார்ப்பரேட் நிறுவனங்கள் தவிர அரசுத் துறையிலும், சட்ட நிறுவனங்களிலும் சிறப்பான பணி வாய்ப்பைப் பெற முடிகிறது. எம்.பி.ஏ.,வில் நிதிப் பிரிவை சிறப்பாகப் படித்து திறமைகளின் அடிப்படையில் உயர் பதவியைப் பெறும் ஒருவர் பெறும் சம்பளத்திற்கு ஈடான சிறப்பான சம்பளம் இதற்கும் தரப்படுகிறது.

இந்தியாவில் இந்தப் படிப்பை நடத்துவது ஒரே நிறுவனம் தான். ஐ.சி.எஸ்.ஐ., எனப்படும் இந்த நிறுவனத்தின் தலைமையகம் டில்லியில் உள்ளது. மேலும் கோல்கட்டா, மும்பை, சென்னை மற்றும் டில்லியில் மண்டல அலுவலகங்கள் உள்ளன. மேலும் 36 இடங்களில் கிளைகள் உள்ளன. 10 உட்கிளைகளும் இருக்கின்றன.

சென்னை அலுவலக முகவரி
புது எண் 9 பழைய எண் 4,
வீட்கிராப்ட்ஸ் சாலை, நுங்கம்பாக்கம்,
சென்னை 600 034,

மதுரை அலுவலக முகவரி
சி3, 3வது மாடி, ஏ.ஆர்.பிளாசா,
16/17 வடக்கு வெளி வீதி,
மதுரை 625 001. போன் 2340797

கோவை அலுவலக முகவரி
556 மேட்டுப்பாளையம் ரோடு
கோயம்புத்தூர் 641 043.
போன் 2452006, 4385766

திருச்சி அலுவலக முகவரி
34ஏ புரமனேட் சாலை
கன்டோன்மெண்ட்
திருச்சிராப்பள்ளி 620 001
போன் 2416337.

மெளலானா ஆசாத் கல்வி உதவித் தொகை

மெளலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை சார்பில், 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

குறைந்தது 55 விழுக்காடு மதிப்பெண் எடுத்து 2011ம் ஆண்டு 10ம் வகுப்பு முடித்த மாணவர்கள் இந்த கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

உதவித் தொகை பெறும் மாணவர்களுக்கு 11ம் வகுப்பில் 6 ஆயிரம் ரூபாயும், 12ம் வகுப்பில் 6 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.

விண்ணப்பங்கள் அனைத்தும் 31ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.

விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யவும், மேலும் விவரங்கள் அறியவும் www.maef.nic.in இணையதளத்தைப் பார்க்கவும்.

இஸ்லாமிய மாணவர்களுக்கு உதவித் தொகை

இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன் சார்பில் உயர்கல்வி பயில விரும்பும் இஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

கல்வித் தகுதி
ஏழ்மை நிலையில் உள்ள, கல்வியில் ஆர்வம் கொண்ட மாணவர்களாக இருக்க வேண்டும். பிளஸ் 2 பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும். உயர்நிலைப் பள்ளியில் உருது அல்லது ஆங்கில வழிக் கல்வி பயின்றிருக்க வேண்டும்.

உயர்கல்வி
மருத்துவம், பொறியியல், கற்பித்தல், நிர்வாகம் ஆகிய துறைகளில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் விபரங்களுக்கு www.irf.net என்ற  இணைய தளத்தை காணவும்.

ஞாயிறு, 30 ஜூன், 2013

இஸ்ரத் ஜகான் போலி என்கவுன்டர் வழக்கில் சி.பி.ஐ., விசாரணைக்கு பா.ஜ.க . அலறுவது ஏன்? காங்கிரஸ் கேள்வி

"பா.ஜ., கட்சியினர், எந்த தவறும் செய்யவில்லை என்றால், எதற்காக, சி.பி.ஐ., விசாரணையை பார்த்து, அலற வேண்டும்,'' என, காங்., செய்தி தொடர்பாளர், பக்த சரண் தாஸ், கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்., செய்தி தொடர்பாளர், பக்த சரண் தாஸ் கூறியதாவது: குஜராத்தில் நடந்த, இஸ்ரத் ஜகான் போலி என்கவுன்டர் வழக்கில், குஜராத் முதல்வர், நரேந்திர மோடியை சிக்க வைப்பதற்காக, சி.பி.ஐ.,யை, மத்திய அரசு, தவறாக பயன்படுத்துவதாக, பா.ஜ., மூத்த தலைவர்கள், கவலை தெரிவித்துள்ளனர். 


பா.ஜ., கட்சியினர், எந்த தவறும் செய்யவில்லை என்றால், எதற்காக, சி.பி.ஐ., விசாரணையை பார்த்து, அவர்கள் அலற வேண்டும்? சட்டம், அதன் கடமையைச் செய்யும்போது, அதைப் பார்த்து, ஏன் பயப்பட வேண்டும்? வழக்கு என்று வந்து விட்டால், விசாரணை, கைது என்பது போன்ற நடைமுறைகள், வழக்கமானதே. 

குற்றம் செய்யாதவர்கள், அதைப் பார்த்து, பயப்பட வேண்டிய அவசியமில்லை. குஜராத் மாநில, நீர்வளத் துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, பாபுபாய் பொக்கிரியாவுக்கு, ஊழல் வழக்கில், சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இன்னும், அவர், அமைச்சர் பதவியில் தொடருவது எப்படி என்பது பற்றி, பா.ஜ., தலைவர்கள் தான், விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு, பக்த சரண் தாஸ் கூறினார்.