Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

குறைந்தபட்ச நிலப் பரப்பளவு இல்லாததால் தமிழ்நாட்டில் 1,500 பள்ளிகள் மூடப்படும் அபாயம் !


 குறைந்தபட்ச நில அளவு இல்லாததன் காரணமாக, 1,500 பள்ளிகள், தொடர் அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருகின்றன. இந்த விவகாரத்தில், ஜூன் மாதம் பள்ளிகள் துவங்கும் முன், ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலையில் தமிழக அரசு உள்ளது.

இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின்படி, அனைத்து வகை பள்ளிகளும், அரசின் அங்கீகாரத்துடன் இயங்க வேண்டும். அங்கீகாரம் இல்லாமல், பள்ளிகள் இயங்கக் கூடாது. அப்படி இயங்கினால், அந்தப் பள்ளிகளை மூட வேண்டும் என, சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழக அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச நில அளவு இல்லாததன் காரணமாக, 1,500 பள்ளிகள் வரை, மூடும் அபாயத்தில் உள்ளன. ஊராட்சி பகுதியாக இருந்தால், 3 ஏக்கர்; நகர பஞ்சாயத்து பகுதி எனில், 1 ஏக்கர்; நகராட்சி பகுதியாக இருந்தால், 10 கிரவுண்டு; மாவட்ட தலைநகராக இருந்தால், 8 கிரவுண்டு; மாநகராட்சி பகுதியாக இருந்தால், 6 கிரவுண்டு இடமும், பள்ளிக்கு கண்டிப்பாக இருக்க வேண்டும்.

இந்த நில அளவு, 20, 25 ஆண்டுகளுக்கு முன் துவங்கிய பள்ளிகளில் இல்லை. தற்போது துவங்கப்படும் பள்ளிகள், மேற்கண்ட குறைந்தபட்ச நில பரப்புடன் விண்ணப்பிக்கின்றன. பழைய பள்ளிகளில், குறைந்தபட்ச நில அளவு இல்லாததால், தொடர் அங்கீகாரம் வழங்க, சம்பந்தப்பட்ட துறைகள் மறுத்து விட்டன.

இதன் காரணமாக, மெட்ரிகுலேஷன் இயக்குனரக துறையில், 1,000 பள்ளிகளும், பள்ளிக்கல்வித் துறையின் கீழ், 120 பள்ளிகளும், தொடக்க கல்வித் துறையின் கீழ், 500 நர்சரி, பிரைமரி மற்றும் துவக்க, நடுநிலைப் பள்ளிகளும், அங்கீகாரம் இன்றி செயல்படுவதாக கூறப்படுகிறது.

ஜூன் மாதம் பள்ளி துவங்குவதற்குள், இந்த பிரச்னையில், ஒரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில், தமிழக அரசு உள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பின் செயலர் இளங்கோவன் கூறியதாவது: நில அளவு காரணமாகத் தான், அங்கீகாரம் பெற முடியாத நிலை உள்ளது. இதனால், பள்ளி வாகனங்களுக்கு, பெர்மிட்டும் வாங்க முடியவில்லை. அங்கீகாரம் இல்லாததால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

புதிய விதிமுறைகளை பூர்த்தி செய்ய, 6 ஆண்டுகள், தமிழக அரசு கால அவகாசம் அளித்தது. இருந்த போதும், நில மதிப்பு, 20 மடங்கு அதிகரித்துள்ள நிலையில், பள்ளியை ஒட்டி, நிலம் வாங்க முடியாத நிலை உள்ளது.

பள்ளிக்கு, அருகாமையில், இடம் வாங்கினால், அதை ஏற்பது இல்லை. பள்ளிக்கு பக்கத்திலேயே வாங்க வேண்டும் என, கூறுகின்றனர். நடைமுறையில், இது எந்த அளவிற்கு சாத்தியம் என்பதை, அதிகாரிகளும், அரசும் உணர வேண்டும்.

எனவே, பள்ளி இயங்கும் இடத்திற்கு ஏற்ப, குறிப்பிட்ட மாணவ, மாணவியர் படிக்கும் வகையில், அரசு அனுமதித்து, உத்தரவு வழங்க வேண்டும். ஒரு மாணவருக்கு, 10 சதுர அடி வேண்டும் என, அரசு கூறுகிறது. 6 சதுர அடி போதும் என, நாங்கள் கூறுகிறோம்.

எனவே 20 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட பள்ளிகள், புதிய விதிமுறைகளை நிறைவேற்றுவதில் உள்ள பிரச்னைகளை உணர்ந்து, அரசு சுமூகமான ஒரு முடிவை எடுத்து, வரும் கல்வி ஆண்டு துவங்குவதற்கு முன் அறிவிக்க வேண்டும். இவ்வாறு இளங்கோவன் கூறினார்.

மெட்ரிக் பள்ளி இயக்குனரக வட்டாரம் கூறுகையில், "கட்டாயக் கல்வி சட்டத்தின்படி, அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் இயங்கக் கூடாது. இந்த பிரச்னையை, அரசுக்கு சுட்டிக்காட்டி உள்ளோம். ஜூன் மாதத்திற்குள், தமிழக அரசு, ஒரு முடிவை எடுத்து அறிவிக்கும் என, எதிர்பார்க்கிறோம்," என, தெரிவித்தனர்.

மரணத்திற்கு காரணமான கோக கோலா

நியூசிலாந்து பெண்ணின் கோக கோலா குடிக்கும் பழக்கம், அவரது உயிரை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்தின் தெற்கு பகுதியில் உள்ள இவ்னர்கார்கில் பகுதி‌யை சேர்ந்தவர் நடாஷா ஹாரிஸ் (30). இவர் கடந்த சிலஆண்டுகளாக தினமும் 10 லிட்டர் அளவிற்கு கோக கோலா குடித்து வந்துள்ளார். இருதய நோயால் முதலில் பாதிக்கப்பட்ட நடாஷா, சமீபத்தில் மரணமடைந்தார்.

அவரது மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. உடலில் அளவுக்கதிகமாக கோக கோலா இருந்ததால், அவரது வளர்சிதை மாற்றத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவரது இதயம் பலவீனமாகி இறுதியில் அவரது மரணத்திற்கு காரணமாகி உள்ளது. கோக கோலா உள்ளிட்ட குளிர்பானங்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அதிகம் உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி - திரேஷ்புரத்தில் தொழுகைக்கு பாங்கு சொல்ல விதிக்கப்பட்ட தடை ,இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முயற்சியால் உடனடியாக நீக்கப்பட்டது .


பள்ளிவாசல் ஒலிபெருக் கியில் பாங்குசொல்ல தடை இல்லை என்றும், இதற்கு எழுத்துப்பூர்வமான அனுமதி வழங்கப்படும் என்றும் தூத் துக்குடி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உடனடியாக மேற்கொண்ட முயற்சியின் காரணமாக தூத்துக்குடியில் பதற்றம் தணிந்து, இயல்பு நிலை திரும்பியது.

பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், இந்து கோவில்கள் போன்றவற்றில் ஒலிபெருக்கி கள் பயன்படுத்தப்பட்டு வரு கின்றன. ஆண்டாண்டு கால மாக பள்ளிவாசல்களில் ஐவேளை தொழுகைக்கான பாங்கு என்னும் தொழுகை அழைப்பு ஒலிபெருக்கி மூலம் சொல்லப் பட்டு வருகிறது. இந்த பாங்கு ஓரிரு நிமிடங்கள் மட்டுமே சொல்லப்படும்.

மத வழிபாட்டுத் தலங் களில் ஒலிபெருக்கி பயன்படுத் தப்படுவதால் கல்வி நிலையங் களில் மாணவர்கள் பாதிக்கப் படுவதாகவும், பொது மக்க ளுக்கு இடையூறு ஏற்படுவதா கவும் கூறி, தூத்துக்குடி மாவட்ட காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் மகேஷ் ஏற்பாட்டில் வழிபாட்டுத் தலங் களின் நிர்வாகிகளை அழைத்து நிறுத்துமாறு உத்தர விடப்பட்டது.

நேற்று (11-2-2013) இரவு தூத்துக்குடி வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பீமராஜ் காவல் நிலையத்தில் ஏற்பாடு செய்த கூட்டத்தில் இந்த உத்தரவு சொல்லப்பட்டு ஒலிபெருக்கி பயன்படுத்த மாட்டோம் என நிர்வாகிகளிடம் கையெழுத்தையும் பெற்றார்.

பிப்ரவரி 12-லிருந்து ஒலி பெருக்கிகள் பயன்படுத்தப்பட் டால் வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகிகள் கைது செய்யப் படுவார்கள் என்றும் எச்சரிக்கப் பட்டது.

இதனைத் தொடர்ந்து மீன்பிடி தொழிலாளர்கள் நிறைந்த தூத்துக்குடி திரேஷ் புரத்தில் இன்று காலை பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது. 2000-த்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வாழும் அங்கு ஜமாஅத்தினர் திரண்டனர். உடனடியாக ஜமாஅத் தலைவர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலை மைக்கு தகவல் தெரிவித்தனர்.

எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. எஸ்.பி.யுடன் பேச்சு:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஆலோசனையின் பேரில் காயிதெ மில்லத்பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. பீகார் தலைநகர் பாட்னாவிலி ருந்து தொலைபேசி மூலம் மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர் ராஜேந்திரனிடம் இதுபற்றி பேசினார்.

பள்ளிவாசல் ஒலிபெருக்கி யில் பாங்கு சொல்வது யாருக் கும் இடையூறானது அல்ல. ஓரிரு நிமிடங்கள் மட்டுமே சொல்லப்படும் இந்த பாங்கு ஒலியால் யாரும் பாதிக்கப்படு வதும் இல்லை. இதை தடுப்ப தன் மூலம் தேவையற்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த உரிமையை தடுக்கக் கூடாது என கேட்டுக் கொண் டார்.

தங்களுடைய உணர்வு களை புரிந்து கொள்வதாகவும், உடனடியாக தங்கள் தரப்பில் குழுவினர் தன்னை சந்திக்க லாம் என்றும் காவல் துறை கண்காணிப்பாளர் குறிப்பிட் டார்.

இதுபற்றி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை தூத்துக்குடி திரேஷ்புரத்தில் பள்ளிவாசல் பணிகளை பார்வையிட சென்றிருந்த கத் தார் நாட்டின் காயிதெ மில்லத் பேரவை அமைப்பாளர் கே.வி.ஏ. டி. ஹபீப் முஹம்மதுவை தொடர்பு கொண்டு ஜமாஅத் தலைவர்களை அழைத்துக் கொண்டு காவல் துறை கண்காணிப்பாளரை உடனடி யாக சந்திக்குமாறு அறிவுறுத் தியது.

இதனைத் தொடர்ந்து கே.வி.ஏ.டி. ஹபீப் முஹம்மது திரேஷ்புரம் ஜமாஅத் தலைவர் அப்துல் ஜப்பார், செயலாளர் முஹம்மது தௌஃபீக் மற்றும் ஆஷிக், தாவா சென்டர் பொறுப் பாளர்கள் சுலைமான் முஹம்மது உள்ளிட்டோர் காவல் துறை கண்காணிப்பாளர் ராஜேந்தி ரனை சந்தித்து பேசினார்கள்.

இந்த சந்திப்பின்போது, காவல் துறை கூடுதல் கண் காணிப்பாளர் மகேஷ், ஆய்வா ளர் பீமராஜ், எஸ்.பி.சி.ஐ.டி. ஆய்வாளர் கந்தசாமி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இக்குழுவினரிடம் பேசிய காவல் துறை கண்காணிப்பாளர், `தனிப்பட்ட முறையில் தாம் இந்து மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், மதச்சார்பற்ற கொள்கையை உறுதியாக பின்பற்றக் கூடியவர் என்றும்’ அனைத்து மத உணர்வு களையும் புரிந்து கொண்டவர் என்றும், முஸ்லிம்களின் மத உணர்வுகளை தான் நன்கு உணர்ந்திருப்பதாகவும் எடுத்துக் கூறி, பள்ளிவாசல் ஒலி பெருக்கியில் பாங்கு சொல்வது தடை செய்யப் பட மாட்டாது என்றும், அப்படி பாங்கு சொல்வதற்கு எழுத்துப் பூர்வமான அனுமதி வழங்கப் படும் என்றும் அறிவித்தார்.

இதனை, முஸ்லிம் தூதுக் குழுவின் சார்பில் கே.வி.ஏ.டி. ஹபீப் முஹம்மது ஜமாஅத்தின ரிடம் எடுத்துக் கூறி, எத்தகைய சட்டம் ஒழுங்குபிரச்சினையும் ஏற்படுத்தாமல், எவருக்கும் இடையூறு செய்யாமல் கலைந்து செல்லு மாறு மக்களை கேட்டுக் கொண்டார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அமைதியான அணுகு முறையை பாராட்டிய பொது மக்கள் அமைதியுடன் கலைந்து சென்றனர்.

காவல் துறை கண்காணிப் பாளரை மீண்டும் தொடர்பு கொண்ட எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., முஸ்லிம் சமூகத்தின் சார்பிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பிலும் மனப் பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.

திங்கள், 11 பிப்ரவரி, 2013

சூரிய ஒளி மின்சக்தியில் 1 லட்சம் தெரு விளக்குகள்


 "தமிழகத்தில், சூரிய ஒளி மின்சக்தி மூலம், 1 லட்சம் தெரு விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது,'' என, எரிசக்தித் துறை செயலர் ராஜேஷ் லக்கானி தெரிவித்தார். தூத்துக்குடியில், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் நடந்த, சூரிய மின்சக்தி விழிப்புணர்வு கருத்தரங்கில் அவர் பேசியதாவது: அரசின் பசுமை வீடுகள் திட்டத்தில், 3 லட்சம் வீடுகளில், சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெற, திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும், 60 ஆயிரம் வீடுகள், 1 லட்சம் தெரு விளக்குகளுக்கு, சூரியஒளி மின்சக்தி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

தொழிற்சாலைகள், தங்களது மொத்த மின் தேவையில், 6 சதவீ தத்தை, சூரிய ஒளி மின்சக்தி மூலமே பெற வேண்டும். இதற்கு தேவையான உபகரணங்களை ஒருமுறை அமைத்தால், அது, 25 ஆண்டுகளுக்கு நீடிக்கும். இதனால், தொழிற்சாலைகள், சூரிய ஒளி மின்சக்தி மூலம், கண்டிப்பாக மின் உற்பத்தி செய்ய வேண்டும். இவ்வகையில், மின் உற்பத்தி செய்ய, மானியம் கேட்டு, 2,000 தொழிற்சாலைகளிடமிருந்து அரசிற்கு மனுக்கள் வந்துள்ளன. அவற்றில், 1,000 மனுக்கள் திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களைச் சேர்ந்தவை. பிற மாவட்டங்களில் இருந்து குறைந்த எண்ணிக்கையிலேயே, இதற்கான மனுக்கள் வந்துள்ளன. இவ்வாறு, அவர் பேசினார்.

டாக்டர் மன்மோகன் சிங் ஸ்காலர்ஷிப் விருது


பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் 2008ம் ஆண்டு முதல் டாக்டர் மன்மோகன் சிங் ஸ்காலர்ஷிப் என்ற விருதை வழங்கி வருகிறது. இவ்விருது இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பெயரில் வழங்கப்படுகிறது. இவர், இப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விருது பொருளாதாரத்தில் பின்தங்கிய, அதே நேரத்தில் கல்வியில் சிறந்து விளங்கும் இந்திய மாணவர்கள் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்வதற்காக வழங்கப்படுகிறது. விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்தியாவில் அங்கீகரிக்கபட்ட பல்கலைக்கழகத்தில், முதுகலை பட்டம் பெற்று ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள விரும்புவோர், இந்த ஸ்காலர்ஷிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பொருளாதாரம், சமூக அறிவியல், ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங், மரைன் இன்ஜினியரிங் மற்றும் எனர்ஜி ஸ்டடிஸ் ஆகிய துறைகளில் இவ்விருது வழங்கப்படுகிறது.

தகுதிகள்:
* பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும்.
* விண்ணப்பிக்கும் போது, 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
* இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட எதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
* தலைமைப் பண்புக்கான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
* ஆங்கில அறிவில் எழுதுவதிலும், பேசுவதிலும் புலமை பெற்றிருக்க வேண்டும்.
* கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி., படிப்பதற்கு விருப்பமானவராக இருக்க வேண்டும்.
* மேலும் பல்கலைக்கழகம் எதிர்பார்க்கும் சில தகுதிகளையும் பெற்றிருக்க வேண்டும்.

விருதின் மதிப்பு:
படிப்புக் கட்டணம், சர்வதேச விமானக் கட்டணம், தங்குவதற்கான மாதக் கட்டணம் மற்றும் பிரிட்டன் விசா ஆகியவை இவ்விருதுக்கு தேர்வாகும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு: http://www.cambridge-india.org/studying/scholarships.html

வெளிநாட்டில் படிப்பு - சாதக பாதகங்கள்


வெளிநாட்டிற்கு சென்று உயர்கல்வியை மேற்கொள்வதென்பது ஒரு பெருமைக்குரிய விஷயமாக கருதப்படுகிறது. அதுவும் தான் விரும்பும் ஒரு புகழ்பெற்ற பல்கலையில், விரும்பும் படிப்பில் இடம் கிடைத்துவிட்டால், ஒரு மாணவரின் சந்தோஷத்திற்கு அளவேயில்லை.

ஆனால், அவற்றிலுள்ள சாதக-பாதகங்களையும் பார்க்க வேண்டியுள்ளது. வெளிநாட்டிற்கு உயர்கல்வி மேற்கொள்ள செல்லும் முன்பாக, கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய அம்சங்கள் உள்ளன. இது மாணவர் தொடர்பானது மட்டுமல்ல, பெற்றோர் தொடர்பானதும்தான்.

நிதி தொடர்பானவை
வெளிநாட்டுப் படிப்பில், அதுவும் குறிப்பாக, முன்னேறிய மேற்கத்திய நாடுகளில் கல்வி கற்க செல்கையில், அதிகம் செலவாகும். ஆசைக்காக கால்வைத்து விட்டு, பின்னர் சமாளிக்க முடியாமல் திண்டாடுவது கூடாது. தகுதி அடிப்படையில், வெளிநாட்டு மாணவர்களுக்கான பல உதவித்தொகை திட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும், சிலரால் மட்டுமே அதைப்பெற முடியும்.

மேலும், நாம் தேர்ந்தெடுக்கும் நாட்டிற்கும், நம் நாட்டிற்குமுள்ள பண மதிப்பு வேறுபாடுகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், சில நாடுகளில் வாழ்க்கைச் செலவுகள் கட்டுபடியாகக்கூடிய வகையில் இருக்கும். ஆனால், சில நாடுகளிலோ, மிக அதிகமாக இருக்கும். அனைவருக்குமே, பல்கலை விடுதிகளில் இடம் கிடைத்துவிடாது. அதற்கேற்ப, மாணவர்களும், பெற்றோர்களும் தெளிவாக திட்டமிட வேண்டும்.

நீங்கள் படிக்கச் செல்லும் நாட்டிற்கு சென்று வருவதற்கான விமானப் பயண கட்டணம், பல்கலை அல்லது கல்லூரி கட்டணம், தங்குமிடம் மற்றும் உணவுச் செலவு மற்றும் பராமரிப்பு செலவு ஆகிய அனைத்தைப் பற்றியும் தெளிவான மதிப்பீட்டை மேற்கொள்ள வேண்டும்.

பாதுகாப்பு
கடந்த ஆண்டுகளில், ஆஸ்திரேலியாவில், இந்திய மாணவர்கள் இனவெறி தாக்குதலுக்கு தொடர்ச்சியாக ஆளானது, வெளிநாட்டுக் கல்வியின் பாதுகாப்பு குறித்த பல்வேறான கேள்விகளை இந்தியாவில் எழுப்பியது. மேலும், இங்கிலாந்தில், சில இந்திய மாணவர்களின் மரணச் செய்திகளும் அடிபட்டன. இதனால், வெளிநாட்டிற்கு உயர்கல்வி கற்க, தங்களின் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோரின் பீதி அதிகரிக்கத் தொடங்கியது.

பல பெற்றோர்கள், தங்களின் உறவினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் இருக்கும் நாடுகளுக்கே, தங்களின் பிள்ளைகளை அனுப்ப விரும்புகின்றனர். இதுவும் ஒரு பாதுகாப்புக் காரணமே. பாதுகாப்பு விஷயத்தில், மாணவர்களைவிட, பெற்றோர்களுக்கே அதிக கவலை. குறிப்பிட்ட நாட்டில், தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பு பற்றி தங்களால் இயன்றவு விசாரித்து, அதனடிப்படையில் ஒரு முடிவுக்கு வருகிறார்கள். அதேசமயத்தில், பாதுகாப்பு காரணங்களுக்காக, தங்கள் பிள்ளைகளின் வெளிநாட்டுக் கல்வியை தடைசெய்ய, பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புவதில்லை.

பழகிக் கொள்ளுதல்
ஒரு புதிய நாட்டின், பழக்கமில்லா கலாச்சார சூழலுக்கு, ஒரு மாணவர் பழகிக்கொள்வது இந்த வகையில் சேரும். அந்நாட்டின் காலநிலை, வாழ்க்கைச் சூழல், உணவுப் பழக்கவழக்கம் மற்றும் உடனிருப்பவர்களுடன் சரியான உறவாடலை ஏற்படுத்திக் கொள்ளுதல் போன்றவை முக்கியமானவை.

ஏனெனில், சிலருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகலாம். சிலருக்கு உணவு ஒத்துக்கொள்ளாமல் போகலாம். சிலருக்கு, நீண்டதூரம் பெற்றோரைவிட்டு, உறவினர்களைவிட்டு பிரிந்து வந்தது தாங்க முடியாததாய் இருக்கலாம். குடும்பத்தாரின் அரவணைப்பிலேயே இருந்தவர்கள், தனித்து வாழ கஷ்டப்படலாம்.

வெளிநாட்டிற்கு சென்று படித்தல் என்ற நிலை வரும்போதே, இந்த அம்சங்கள் அனைத்தையும், பெற்றோரும், மாணவர்களும் யோசிக்க வேண்டும். இவற்றையெல்லாம் சமாளித்துவிடலாம் என்ற மனோதைரியத்தை உருவாக்கிய பின்னர், உங்களின் ஏற்பாடுகளை தொடங்கலாம்.

உங்களின் அனுபவம் இனிதாகும்! அறிவு வளமாகும்!

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களை உடனடியாக விடுதலை செய்யகோரி மார்ச் மாதம் நாடுதழுவிய பேரணி - பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன்


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவர் பேரவையின் 2 நாள் பயிலரங்கம் சென்னை கிழக்கு கடற்கரைசாலை முட்டுக்காட்டில் அமைந்துள்ள மசூதி தோட்டத்தில் நடை பெற்றது. அதனில் கலந்துகொண்ட பின் ,இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலா ளரும், மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறிய தாவது,

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் துணை அமைப்புகளாக தேசிய அளவில் முஸ்லிம் யூத் லீக், முஸ்லிம் மாணவர் பேரவை, சுதந்திரத் தொழிலாளர் யூனி யன், மகளிர் அணி ஆகியவை கள் உள்ளன. அதில் ஒன்றான முஸ்லிம் மாணவர் பேரவையை (எம்.எஸ்.எஃப்.) தமிழகத்தில் பலப்படுத்தும் நோக்கத்தோடு 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்
டுள்ளன.

சென்னை மண்டலத்தில் அடங்கிய வட சென்னை, தென் சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம், விழுப்புரம் கிழக்கு, மேற்கு, வேலூர் கிழக்கு, மேற்கு, திருவண்ணாமலை, கடலூர் மற்றும் புதுவை ஆகிய மாவட் டங்கள் அடங்கிய சென்னை மண்டலத்திற் கான 2 நாள் பயிலரங்கம் நடைபெறுகிறது.

இதில் 458 கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர். ஒவ்வொ ருவரும் 50 ரூபாய் நுழைவு கட்டணம் செலுத்தி தங்களது சொந்த செலவில் வந்து பங் கேற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து தஞ்சை மண்டலம் சார்பில் தரங்கம்பாடியிலும், நெல்லை மண்டலம் சார்பில் குற்றாலத்திலும், மதுரை மண்டலம் சார்பில் கொடைக் கானலிலும் பயிலரங்கங்கள் நடைபெற உள்ளன.

அதனைத்தொடர்ந்து மாநில அளவிலான முஸ்லிம் மாணவர் பேரவை மாநாடு டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது.

இந்த பயிலரங்கத்தில் மாணவர்களின் ஒழுக்கம், யோகா பயிற்சி, தீவிரவாத எதிர்ப்பு, மது, பாலியல் வன் கொடுமை, கல்லூரிகளில் ஆயுதம் ஏந்தி வன்முறை உள்ளிட்டவை நுழைய விடக்கூடாது என்பது குறித்து விழிப்புணர்வும், பயிற்சியும் அளிக்கப்பட்டது.

பேருந்துகளில் பயணம் செய்யும்போது படிக்கட்டுப் பயணம் செய்யாத மாணவ சமுதாயத்தை உருவாக்குவது நமது லட்சியமாக இருக்க வேண்டும் என்றும் மாணவர்க ளுக்கு வலியுறுத்தப்பட்டது.. தலைவர்கள், அறிஞர் பெருமக் கள் பங்கேற்று பயிற்சி அளித்த னர்.

மத்திய - மாநில அரசுகள் மாணவர்களுக்கு கல்வி உதவிகளை வழங்கி வருகிறது. அவைகளை முழுமையாக பயன்படுத்தக் கூடிய வழி முறைகள் குறித்தும் மாணவர் களுக்கு அறிவுறுத்தப்பட்டன.

இந்த பயிலரங்கத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. 

அவை, 1. கல்விக் கடன் பெறும் வழிமுறையை இலகு வாக்க வேண்டும்.

 2. கல்விக் கடனுக்கான வட்டியை உடனடி யாக ரத்து செய்ய வேண்டும்

 3. மாவட்ட தலைநகரங்களில் சிறுபான்மையின ருக்கான விடுதிகள் அமைக்கப்பட வேண்டும்.

  4. வன்முறை, மது, ஆபாசம், பாலியல் கொடுமை, திரைப்பட தீவிரவாதம் உள் ளிட்டவைகளிலிருந்து இளைய சமுதா யத்தை காப்பது குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன.

இந்த தீர்மானங்களை வலியுறுத்தி விழிப்புணர்வுப் பிரசாரத்தை முஸ்லிம் மாணவர் பேரவையினர் தமிழகம் முழுவ தும் செய்ய வேண்டும் என இந்த பயிலரங்கத்தில் பயிற்றுவிக் கப்பட்டது.

மாணவர்களுக்கான கல்விக்கடன் பெறுவதில் ஏற்படும் இடையூறு களை யப்பட்டு கடன் பெறும் நடை முறைகள் இலகுவாக்கப்பட வேண்டும் என்றும், கடனுக் கான வட்டியை ரத்து செய்ய வலியுறுத்தியும் முஸ்லிம் மாண வர் பேரவை சென்னையில் பேரணி நடத்த உள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு களின்படி ரங்கநாத் மிஸ்ரா கமிஷனில் இந்தியாவில் சிறு பான்மையினர் 18 சதவீதம் வாழ்கிறார்கள் என்றும், அந்த சிறுபான்மையினரில் பெரும் பான்மையினர் முஸ்லிம்கள் என்று தெரிவித்து, கல்வி வேலைவாய்ப்புகளில் 10 சதவீதம் தனி இடஒதுக்கிடு இஸ்லாமி யர்களுக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந் துரை செய்துள்ளது. அந்த பரிந் துரையை வலியுறுத்தி இந்தியா முழுவதும் உள்ள மாநிலத் தலைநகரங் களில் கவன ஈர்ப்பு பேரணி நடை பெற உள்ளது.

தமிழகத்தில் இப் பேரணி நடைபெறும் இடமும், தேதியும் வரும் 16-ம் தேதியன்று திண்டுக்கல்லில் நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுக்குழு வில் முடிவு செய்து அறிவிக்க உள்ளோம்.

இப்பேரணியில் நாடு முழுவதும் விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக் கையை வலியுறுத்த உள்ளோம்.

இந்தியாவில் 4 மாநிலங்கள் தான் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்படுகி றது. தமிழ்நாட்டில் 3.5 சதவீதம் இடஒதுக்கீடு கலைஞர் முதல்வராக இருந்தபோது சட்ட சிக்கல் இல்லாமல் வழங்கினார்.

கேரளாவில் 12 சதவீதம் வழங்கப்படுகிறது. கர்நாட காவில் 4 சதவீதம் வழங்கப் படுகிறது. ஆந்திராவில் அறி விக்கப்பட்டு நீதிமன்றம் தடை செய்து விட்டது. மணிப் பூரில் 4 சதவீதம் வழங்கப்படுகிறது. அனைத்து மாநிலங்க ளும் இதனை பின்பற்றி முஸ்லிம் களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதிர் மொகிதீன் பேட்டியில் தெரிவித்தார்.