Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 9 ஜூன், 2013

குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீர்

கொட்டி தீர்த்த தென்மேற்கு பருவ மழையால் குற்றாலம் சீசன் களைகட்ட துவங்கியுள்ளது. அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் நேற்று மெயின் அருவில் 3 மணி நேரம் தடை விதிக்கப்பட்டது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் குற்றாலத்தில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்துவங்கியுள்ளது. கடந்த 3 தினங்களாக அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்து காணப்பட்டது. விடுமுறை காரணமாக அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து பெய்த மழை காரணமாக நேற்று அதிகாலை முதல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்தது. ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் ஆக்ரோஷமாக தண்ணீர் கொட்டியது.

மெயினருவியில் நேற்று அதிகாலை முதல் தண்ணீர் அதிகமாக வரத்துவங்கிய நிலையில், காலை 7 மணிக்கு தண்ணீர் ஆர்ச்சை தொட்டு விழுந்தது. மழையின் காரணமாக அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததை அடுத்து காலை 8 மணி முதல் 11 மணிவரை மெயினருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு மெயினருவியில் ஆர்ச்சை தொட்டு ஆர்ப்பரித்து தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்த வண்ணம் இருந்தனர்.

மெயினருவி, ஐந்தருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் புலியருவியை நோக்கி படையெடுக்க துவங்கினர். 3 மணி நேரத்திற்கு பின் தடை விலக்கி கொள்ளப்பட்ட நிலையில் சாரலும் சற்று குறைவாக காணப்பட்டது. இருந்தபோதிலும் குளுமையான ‹ழ்நிலையும், மெல்லிய சாரலும், இதமான காற்றும் வீசியது. குற்றால சீசன் தற்போது களைகட்ட துவங்கியுள்ள நிலையில் தொடர்ந்து அருவிகளுக்கு தண்ணீர் அதிகமாக வந்து கொண்டிருப்பதாலும், இன்று (9ம்தேதி) விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சனி, 8 ஜூன், 2013

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் திடீர் நில அதிர்வு

திருநெல்வேலி கடையநல்லூர் அருகே உள்ள வடகரை, அச்சன்புதூர் டவுன் பஞ்., பகுதியில் உள்ள தெருக்களில் கடந்த சில மாதங்களுக்கு முன் நில அதிர்வு ஏற்பட்டது. இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த சில வீடுகள் மற்றும் தரைப்பகுதிகளில் விரிசல் காணப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் நேற்று இரவு சுமார் 7.20 மணிக்கு திடீரென நிலஅதிர்வு ஏற்பட்டது.

வடகரை ஜாகீர் உசேன் நகர் 1வது மற்றும் 2வது தெருக்களில் உள்ள வீடுகளில் பொருட்கள் தரையில் விழுந்து விழுந்ததாகவும், கட்டில், டி.வி. போன்றவை அதிர்ந்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். வாவாநகரம் பகுதியிலும் இதே போன்ற அதிர்வு உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர். பெண்கள் தங்களின் குழந்தைகளை அழைத்துக் கொண்டு ரோட்டில் அதிர்ச்சியுடன் நின்றனர்.

அச்சன்புதூர் போலீஸ் ஸ்டேஷன் பகுதியிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதனிடையில் நில அதிர்வு பகுதியினை வடகரை டவுன் பஞ்.,தலைவர் முகம்து ஷெரீப், அச்சன்புதூர் டவுன் பஞ்.,தலைவர் சுசீகரன் மற்றும் வருவாய்த்துறையினர் பார்வையிட்டனர். ரகுமானியாபுரத்தை சேர்ந்த அப்துல்ரசீப் மற்றும் மணிகண்டன் வீடுகளில் நில அதிர்வினால் விரிசல் ஏற்பட்டது.

கடந்த சுமார் 5 மாதங்களுக்கு முன் கடையநல்லூர் பகுதியில் இதுபோன்ற நில அதிர்வு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். வடகரையை ஒட்டியுள்ள அடவிநயினார் அணைக்கட்டு 132 அடி கொள்ளளவு கொண்ட அணைக்கட்டு பகுதியில் நில அதிர்வினால் பாதிப்பு ஏற்படாத வகையில் உடனடியாக அணை பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்யவேண்டுமென்ற கோரிக்கை விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து இப்பகுதியில் நில அதிர்வு உணரப்படுவதால் புவியியல் ஆராய்ச்சியாளர் மூலமாக இதற்கான ஆய்வினை காலதாமதமின்றி நடத்தவேண்டுமென வடகரை, வாவாநகரம், அச்சன்புதூர் பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வீட்டிலிருந்து சம்பாதிப்பதற்கான சிறந்த பணிகள்

பொருளாதார சூழலில் பட்டம் முடித்தவர்களுக்கு பொருத்தமான வேலை கிடைப்பது என்பது பல்வேறு சிரமங்களை உள்ளடக்கியுள்ளது. ஒரு புறம் புதிய வேலைகள் உருவாகி வந்தாலும், படித்து முடிப்பவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற விகிதத்தில் இந்த எண்ணிக்கை இல்லை.

மறுபுறம், ஒரு தனி நபர் தனக்கு தகுந்த வேலையைப் பெறும் வரை அவரது தேவைகளை நிறைவேற்றுவதிலும் சிரமங்கள் உள்ளது. அதே போல் ஒரு வேலை கிடைக்கும் பட்சத்திலும், பெருகி வரும் போக்குவரத்து நெரிசல், இட மாற்றம், போதிய ஊதியம் பெறுவதில் சிக்கல் போன்றவற்றால் வீட்டிலிருந்தே வேலை பார்ப்பது என்பது இந்தியாவில் மெதுவாக புகழ் பெறத் துவங்கியுள்ளது.

அப்படி வீட்டிலிருந்தபடியே சம்பாதிப்பதற்கான வழிகள் நிறைய இருந்த போதும் இவற்றுள் முதன்மையான ஐந்து பிரிவுகள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷனிஸ்ட்
இந்தியாவில் ஆங்கில மொழி தெரிந்தவர்கள் அதிகம் இருக்கிறார்கள். இவர்களின் திறமையை உபயோகித்து அமரிக்கா உள்ளிட்ட நாடுகளின் மருத்துவமனைகளுக்கான ரிபோர்ட்களை ஒலிவடிவத்திலிருந்து எழுத்துவடிவமாக மாற்றுவதுதான் இந்த பணியின் முக்கிய வேலையாகும்.
இந்தப் பணியை செய்வதற்கு மருத்துவத் துறை சார்ந்த பரிச்சயம் கட்டாயத் தேவையாக உள்ளது. இண்டர் நெட் வாயிலாக பெறப்பட்ட வாய்ஸ் பைலை கேட்டுக் கொண்டே அதனை எம்.எஸ்., வேர்டு பைலாக டைப் செய்து அனுப்ப வேண்டும்.

இவற்றுக்கு பக்கங்கள் அடிப்படையில் ஊதியம் பெற முடியும். இந்தப் பணியை நேரடியாகவும், இதற்காக உள்ள ஏஜென்சிகளின் வாயிலாகவும் செய்ய முடியும். இந்தப் பணியை இதற்கென்று பிரத்யேகமாக உள்ள ஒரு வருட சான்றிதழ் படிப்பை உரிய கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்துவிட்டு செய்ய வேண்டும். இந்தப் பதவியின் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் முதல் நான்கு லட்சம் வரை ஊதியம் ஈட்ட முடியும்.

புரூப் ரீடர்
நன்றாக எழுதுவது மற்றும் எழுத்து வடிவத்தை எடிட்டிங் செய்யும் திறமை பெற்றவர்களுக்கான பணியாகும் இது. எழுத்து வடிவத்தை விரிவாகப் படிக்கும் திறமை, நல்ல ஆங்கில மொழியறிவு, வெகு நேரத்திற்கு ஊன்றி கவனிக்கும் திறமை, நல்ல தகவல் பரிமாற்றத் திறன் போன்றவை இந்தப் பணியில் ஈடுபடத் தேவைப்படும் காரணிகள் ஆகும்.

வெளியிடத் தகுந்த படைப்புகளை இலக்கணப் பிழை இன்றி, டைப்பிங் பிழைகள் இன்றி இருப்பதோடு படிப்பதற்கு ஏதுவான மொழியில் இருப்பதையும் இந்தப் பணியில் உறுதி செய்ய வேண்டியிருக்கும். இந்தப் பணியை பொதுவாக செய்தித் தாள், புத்தகங்கள், இதழ்கள், ஐ.டி., சார்ந்த பணிகள், குறிப்பிட்ட பிரிவினருக்கான பிஸினஸ் ரிபோர்ட் மற்றும் அகடமிக் ரிபோர்ட் போன்றவற்றிற்காக செய்ய வேண்டியிருக்கும். இந்த வேலையை செய்வதற்கு பட்டப் படிப்பு தேவைப்படுவதுடன் மேலே குறிப்பிடப்பட்ட பிரத்யேக திறமைகளும் தேவைப்படும். இந்தப் பணியின் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் முதல் 4.5 லட்சம் வரை ஊதியம் ஈட்ட முடியும்.

டிரான்ஸ்லேட்டர்
ஒன்றுக்கு மேற்பட்ட மொழியறிவு பெற்றவர்களுக்கான வேலையாகும் இது. எழுத்து அல்லது ஒலி வடிவ பைல்களை எந்த மொழிக்கு மாற்ற வேண்டுமோ அதற்கு மாற்றித் தருவது இந்தப் பணியின் அடிப்படை அம்சமாகும்.

அப்படி மொழி மாற்றம் செய்யும் போது, அர்த்தங்கள் ஒத்திருப்பதுடன் பிழைகள் இன்றியும், படிப்பதற்கு தகுந்த முறையிலும் அவை மாற்றப்பட வேண்டும். பொருளாதார நெருக்கடிகள் வந்த போது கூட இந்தப் பதவியை செய்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதும், அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்ப மாற்றங்களினால் கூட எந்தவிதத்திலும் தனது மதிப்பை இழக்காததுமான வேலையாகும் இது.

அது மட்டுமன்றி டிரான்ஸ்லேட்டர்களுக்கு மிக நல்ல ஊதியங்கள் வழங்கப்படுவதுடன், எப்போதும் வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் இருக்கின்றன என்பது மற்றொரு சிறப்பாகும். இந்த வேலையை செய்வதற்கு எந்த பிரத்யேக படிப்பும் தேவையில்லை. இந்த வேலையின் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் முதல் 15 லட்சம் வரை கூட சம்பாதிக்க முடியும்.

டியூட்டர்
தொலை நிலைக் கல்வி மற்றும் இலேர்னிங் என்ற துறைகளின் வளர்ச்சியின் காரணமாக டியூட்டர் எனப்படும் பதவி பிரசித்தி பெறத் துவங்கிவிட்டது. குறிப்பிட்ட பிரிவில் பட்டப் படிப்பு முடித்திருப்பதுடன் ஆழ்ந்த அறிவு, மாணவர்களை ஊக்குவிக்கும் திறமை, பொறுமை உடையவர்கள் இந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கலாம்.

மாணவர்கள் மனதில் நம்பிக்கையை வளர்த்தல், பாடத்தை உரிய விதத்தில் புரிய வைத்தல், இன்று புகழ் பெற்றுவரும் ஆடியோ மற்றும் வீடியோ கான்பரன்சிங்களில் பங்கெடுத்தல், மாணவர்களின் கேள்விகளுக்கு விடைதருதல், டிஸ்கஷன் பாரம்களையும், சாட் ரூம்களையும் நிறுவி நடத்துதல் போன்றவற்றை இந்தப் பிரிவில் செய்ய வேண்டியிருக்கும்.

தனிமனித அடிப்படையிலும், ஊதிய அடிப்படையிலும் திருப்தி தரக்கூடிய வேலையாக இது இருக்கும். இந்த வேலையில் ஈடுபடுபவர்கள் திறமையைப் பொறுத்து ஆண்டுக்கு ஒரு லட்சம் முதல் 21 லட்சம் வரை ஊதியம் பெறும் வாய்ப்புகள் உள்ளன.

வெப் டெவலப்பர்/டிசைனர்

இந்த வேலையில் தொழில் நுட்பத் திறமையும், கிரியேடிவிடியும் சரிபாதி கலந்திருக்கின்றன. கலை, விளம்பரம், இன்டஸ்ட்ரியல் ஆர்ட்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்கள் இந்த வேலையில் ஈடுபடுவது பொருத்தமாக இருக்கும்.

கிராபிக்ஸ் மற்றும் எச்.டி.எம்.எல்., டூல்களைப் பற்றிய திறமை, கிரியேடிவிடி, டிசைன் மற்றும் லேஅவுட்டுகளை உருவாக்குவதில் திறமை போன்றவை இந்தப் பணியில் தேவைப்படும்.

ஒரு இணையதளத்தை உருவாக்குவதில் உள்ள தொழில் நுட்ப மற்றும் கிராபிக்ஸ் தொடர்பான கோடுகளை உருவாக்குதல் இந்த வேலையின் முக்கிய பகுதியாகும். இவர்களே ஒரு இணையதளத்தின் டிசைன், லேஅவுட் மற்றும் கோடிங் தொடர்புடைய அனைத்து வேலைகளையும் செய்கிறார்கள்.

கேட்பதற்கு மிக எளியதாகத் தோன்றினாலும், நமது வாடிக்கையாளர்கள் விரும்பும் விதத்தில் வடிவமைத்துக் கொடுப்பது சவால்கள் நிறைந்த ஆனால் திறமையை வெளிக்காட்டுவதற்கேற்ற வேலையாக இருக்கும். இந்தப் பணியின் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் முதல் 6 லட்சம் வரை சம்பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

வியாழன், 6 ஜூன், 2013

போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் கம்ப்யூட்டரில் பதியும் முறை அமலுக்கு வந்தது

விழுப்புரம் மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகளை, கம்ப்யூட்டரில் பதியும் முறையை எஸ்.பி., மனோகரன் நேற்று துவக்கி வைத்தார்.குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்க எளிதாக, வலை பின்னல் முறை திட்டத்தின் கீழ் வழக்குகளை கம்ப்யூட்டரில் பதியும் நடைமுறை நேற்று முதல் மாவட்டத்தில் துவங்கியது. இதற்கான நிகழ்ச்சி , நேற்று காலை விழுப்புரம் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது.

எஸ்.பி., மனோகரன் ரிப்பன் வெட்டி, கம்ப்யூட்டர்கள் மூலம் வழக்குப் பதியும் பணியை துவக்கி வைத்து கூறியதாவது:இந்தியா முழுவதும் பதியப்படும் வழக்குகளை உடனுக்குடன், நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் கண்காணிக்க உதவிடும் வகையில், இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் 13ம் தேதி முதல்வர் ஜெ., துவக்கி வைத்தார்.

தொடர்ச்சியாக இன்று காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் துவங்கப்பட்டுள்ளது. ஒரு பகுதியில் நடக்கும் சம்பவங்கள், அதன் தொடர்புடைய குற்றவாளிகள் நாட்டின் எந்த பகுதியிலிருந்தும் எளிதில் அடையாளம் காணப்படுவர் இதனால் குற்றவாளிகள் எளிதில் பிடிபடுவார்கள். வழக்கு பதிவுகள் ஒளிவு, மறைவு இல்லாமல் நடப்பது பொது மக்களுக்கு பயனுள்ளதாக அமையும்.இத்திட்டம் முன்னோடி நிலை மற்றும் முதல்நிலை என்ற இரு கட்டங்களாக பிரித்து செயல்படுத்தப் படுகின்றன. முன்னோடி நிலை செயல்பாட்டில் திருவள்ளூர், அரியலூர், சிவகங்கை மற்றும் கோவை மாவட்டங்களும், மற்ற 35 போலீஸ் மாவட்டங்கள் முதல்நிலை செயல் பாட்டிலும் உள்ளன. இத்திட்டத்தின் மூலம் முதல் தகவலறிக்கை மற்றும் வழக்கு விவரங்கள் கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்யப்பட்டு, மாநில தகவல் சேகரிப்பு மையத்தில் சேமித்து வைக்கப்படுகின்றன.56 ஸ்டேஷன்கள்விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 56 போலீஸ் ஸ்டேஷன்களிலும் இச்சேவை நேற்று முதல் இணைய தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக பதிந்துள்ள வழக்குகள் அனைத்தும் கம்ப்யூட்டர்களில் மீண்டும் பதிந்து, பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதற்காக ஒரு போலீஸ் ஸ்டேஷனில், 3 போலீசார் இந்த பணியில் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் பொது மக்கள் கொடுக்கும் புகார் மனுக்களுக்கு உடனுக்குடன், கம்ப்யூட்டர் மூலமே, வழக்குப் பதிவிற்கான ஒப்புதல் நகல் வழங்கப்படும். இத்திட்டம் வரும் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் மாநிலம் முழுவதும் அமல்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள் ளது. இவ்வாறு எஸ்.பி., மனோகரன் கூறினார்.டி.எஸ்.பி., சங்கர், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரன், ஜோதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

என்னென்றும் மதிப்பு குறையா மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பு

 டூல்கள், மெஷின்கள், பிற மெக்கானிக்கல் உபகரணங்களோடு தொடர் புடைய இன்ஜினியரிங் பிரிவு தான் மெக்கானிக்கல் இன்ஜினியரிங். தொழிற்துறையில் எண்ணற்ற வேலை வாய்ப்புகளைக் கொண்டிருப்பதும் இது தான். இந்த இன்ஜினியரிங் பிரிவைச் சார்ந்தே பல இன்ஜினியரிங் பிரிவுகளும் இயங்குகின்றன.

இத்துறையினர் புதிதாக உபகரணங்களை வடிவமைப்பது மட்டுமின்றி அவற்றுக்கான பொருட்களையும் தயாரிக்கிறார்கள். மொபைல் போன்கள், கம்ப்யூட்டர்கள், டிவிடிக்கள் என அனைத்துப் பொருட்களின் தயாரிப்பிலும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவினருக்கு முக்கியமான பங்கு இருக்கிறது.

பொதுவாக மெக்கானிக்கல் இன்ஜினியர் ஒருவரின் பணி என்பது சவால்கள் மிகுந்ததாகவும் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் இருப்பதைக் காணலாம். ஐ.டி திறன், டிசைனிங் மற்றும் பகுத்தாராயும் திறன்களையும் அவர்கள் பெற்றிருக்க வேண்டியுள்ளது. தாங்கள் தயாரிக்கும் பொருட்கள் வணிக ரீதியாக சாத்தியமானவைகளாக இருப்பதையும் அவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டியுள்ளது.

ஆட்டோமொபைல், கெமிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஸ்டீல் ஆலைகள், எண்ணெய் சுரங்கங்கள், சுத்திகரிப்பு, ராணுவத்தின் டெக்னிக்கல் பிரிவுகள், விண்வெளி ஆய்வு என எதில் தான் இவர்களுக்கான தேவை இல்லை? அரசுத் துறை நிறுவனங்களிலும் இவர்கள் பெரிதும் தேவைப்படுகிறார்கள்.

ரயில்வே, தபால் துறை, பாதுகாப்பு, பொதுப் பணித் துறை, ஏரோநாடிகல், விவசாயம், கெமிக்கல் என பல துறைகளிலும் இவர்களுக்கான தேவை எப்போதும் காணப்படுகிறது. ரொபோடிக்ஸ்,சி.ஏ.டி., பயோமெக்கானிக்ஸ், ஆட்டோமேஷன், தெர்மல் இன்ஜினியரிங், சிஸ்டம்ஸ் அண்ட் டிசைன் இன்ஜினியரிங்,மெட்டீரியல்ஸ் சயின்ஸ் இன்ஜினியரிங் போன்றவற்றிலும் இவர்கள் பணி புரிகிறார்கள்.

புதன், 5 ஜூன், 2013

அரசு கலை கல்லூரிகளில் 398 புதிய பாடப்பிரிவுகள் துவக்கம்

தமிழகத்தில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், புதிதாக, 398 பாடப் பிரிவுகள், நடப்பு கல்வியாண்டில் துவங்கப்படுகின்றன. புதிதாக துவங்கப்பட்டுள்ள பாடப் பிரிவுகளில், வேலைவாய்ப்பு சந்தையில், தற்போது நிலவும் தேவையை கருத்தில் கொண்டு, முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மேற்படிப்பில் சேரும் போது, வேலைவாய்ப்பு தரும் படிப்புகளுக்கே, அதிக முக்கியத்துவம் தருகின்றனர். அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகள் வேலை வாய்ப்பு தரும் கல்வி படிப்புகள் மட்டுமே உள்ளன. இதனால், தனியார் கல்லூரிகளை நாடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

வேலைவாய்ப்பு சந்தையில் நிலவும் தேவையை கருத்தில் கொண்டு, அரசு கல்லூரிகளில், பி.ஏ., - இதழியல் மற்றும் தொடர்பியல், பாதுகாப்பு துறை படிப்பு, பி.எஸ்சி., - எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன்ஸ், நுண்ணுயிரியல், விசுவல் கம்யூனிகேஷன்ஸ், பி.எஸ். டபிள்யூ., - சமூக சேவை உள்ளிட்ட, 398 புதிய பாடப்பிரிவுகளை, தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இப்புதிய பாடப்பிரிவுகளுக்கு அரசாணை, இன்னும் இரு வாரங்களில் வெளியாகும் என, எதிர்ப்பார்க்கப்படுகிறது. கல்லூரிகள், பல்கலைக்கழக அங்கீகாரத்தை பெற்ற பின், ஜூன் இறுதி வாரம் முதல் மாணவர் சேர்க்கை துவங்கும்.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகப் பொதுச் செயலர், பிரதாபன் கூறியதாவது: வேலைவாய்ப்புகளை வழங்க கூடிய பல அரிய படிப்புகள், அரசு உதவி பெறும் கல்லூரி, சுயநிதி கல்லூரிகளிலேயே வழங்கப்படுகின்றன. வசதி படைத்த மாணவர்கள், இக்கல்லூரிகளில் எளிதில் சேர்ந்து விடுகின்றனர்.

ஏழை மாணவர்களுக்கு, இப்படிப்புகள் எட்டாக்கனியாகி விடுகிறது. அரசு கல்லூரிகளில், இப்படிப்புகளை துவங்குவதன் மூலம், ஏழை மாணவர்கள் பயன் பெற முடியும். இவ்வாறு, பிரதாபன் கூறினார்.

ஆர்கிடெக்சர் துறை படிப்புகள்

நோக்கம் மற்றும் ஒரு இடத்தின் சுற்றுச்சூழல் ஆகியவற்றைப் பொறுத்து, முறையான உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, திட்டமிடல், வடிவமைத்தல் மற்றும் கட்டடம் கட்டுதல் ஆகிய செயல்களை மேற்கொள்ளல் ஆர்கிடெக்சர் எனப்படும்.

சிறப்பான வீடு மற்றும் பணியாற்றும் இடம் ஆகியவற்றை மக்கள் அதிகளவில் விரும்புவதால், இந்தத் துறையானது பெரியளவில் வளர்ந்து வருகிறது.

ஆர்கிடெக்சர் என்பது இன்றைய நிலையில் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக இருக்கிறது. இப்படிப்பில் சேரும் பல மாணவர்கள், இரண்டாம் செமஸ்டர் காலத்திற்குள்ளேயே, அப்படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு வெளியேறி விடுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் ஆர்கிடெக்சர் என்பதை வெறும் கட்டடத்தை வடிவமைக்கும் பணி என்று நினைத்து விடுகிறார்கள். மேலும், பல மாணவர்கள் நினைப்பது என்னவெனில், ஆர்கிடெக்சர் என்பது அதிகம் அறிவியல் சம்பந்தப்பட்டதல்ல என்றும் அது பெருமளவில் கலைத்திறன் தொடர்பானது என்றும் நினைக்கின்றனர்.

மாணவர்கள், இப்படிப்பில் சேர்ந்தவுடன், ஒவ்வொன்றையும் வடிவமைப்பு மற்றும் கருத்துடன் இணைக்கும்போது, தாங்கள் எதிர்பார்த்ததைவிட, வித்தியாசமாக உணர்கிறார்கள். கணிதத்திறன் உள்ள ஒவ்வொருவரும் இப்படிப்பை தேர்ந்தெடுக்க தகுதி வாய்ந்தவர்களே. முதல் சில வருடங்கள், புத்தாக்க முயற்சிக்கென்று அதிக நேரம் செலவழிக்க வேண்டாம். பொறியியல் படிப்புடன் ஒப்பிடுகையில், இப்படிப்பின் தேர்வு நேரமானது அந்தளவு நெருக்கடியானதல்ல. ஆனால், அதேநேரத்தில், இப்படிப்பில் பலவிதமான பணிகள் நிறைந்திருக்கும்.

இப்படிப்பின் நான்காம் ஆண்டில், ஒரு மாணவர் ஸ்பெஷலைசேஷனை தேர்ந்தெடுக்கிறார். ஆர்கிடெக்சர் துறையைப் பொறுத்தவரை, ஸ்பெஷலைசேஷன் என்பது பரவலானது.

Sustainable development, Contemporary, Interior designing, Architectural photography உள்ளிட்ட பலவிதமான பிரிவுகளிலிருந்து ஒருவர் தனது ஸ்பெஷலைசேஷனை தேர்ந்தெடுக்கலாம். அதேசமயம், தவறான ஸ்பெஷலைசேஷனை தேர்ந்தெடுத்தால், பெரிய சிக்கலில் மாட்ட நேரிடும். தற்போதைய நிலையில், Sustainable architecture எனப்படும் பசுமை கட்டடக்கலை பிரபலமாகி வருகிறது. இப்படிப்பில், 5ம் ஆண்டான இறுதியாண்டில், ஆய்வறிக்கையின் வாயிலாக, வடிவமைப்பு தொடர்பான முழு சுதந்திரம் மாணவர்களுக்கு கிடைக்கிறது. இந்த நிலையில், ஒரு மாணவர், நிபுணத்துவம் பெற்ற ஆர்கிடெக்ட் என்ற நிலையை அடைகிறார்.

பி.ஆர்க் முடித்தவுடன் என்ன செய்வது என்ற கேள்வி இருக்கும். இந்தப் படிப்பானது, எம்.பி.பி.எஸ்., படிப்பை ஒத்ததாகும். ஏனெனில், பி.ஆர்க்., நிறைவுசெய்த பிறகு, ஒருவர் ஏதேனும் ஒரு ஸ்பெஷலைசேஷனில் முதுநிலை படிப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும். முதுநிலைப் படிப்பென்பது மிகவும் தனித்த அம்சம் கொண்டது. பிரிட்டன் போன்ற வெளிநாடுகளில் முதுநிலைப் படிப்பை மேற்கொள்வதைவிட, இந்தியாவில் மேற்கொள்வது எளிது என்று சம்பந்தப்பட்டவர்கள் கூறுகிறார்கள்.

பி.ஆர்க்., இளநிலைப் படிப்பை முடித்துவிட்டு பணிவாய்ப்பை தேடுவதைவிட, முதுநிலைப் படிப்பிற்கு பிறகான பணிவாய்ப்புகளைப் பெறுவது எளிது. அதேசமயம், இந்தியாவிற்கு திரும்பிவர விரும்பினால், பி.ஆர்க்., மற்றும் எம்.ஆர்க்., படிப்புகளுக்கு இடையிலான சம்பளம் விகிதம் மிகவும் குறைவாகவே இருக்கும். சென்னையை எடுத்துக்கொண்டால், இங்கே கிடைக்கும் ஊதியம், பெங்களூர், அகமதாபாத் உள்ளிட்ட பிற நகரங்களைவிட நன்றாக இருக்கிறது என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒருவர் ஆர்கிடெக்சர் முடித்து, பணியில் சேர்ந்ததுமே, நல்ல ஊதியம் பெறலாம் என்ற தவறான கருத்து ஒன்று உள்ளது. ஆனால், குறைந்தது 10 முதல் 15 வருடங்கள் அனுபவம் பெற்று, ஒரு நல்ல ஆர்கிடெக்டாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் ஒருவரே, சிறப்பான ஊதியம் பெறுகிறார். ஒரு சொந்தமாக தொழில் தொடங்க நினைப்பது நல்லதே. அதேசமயம், சிறிதுகாலம் பிற இடங்களில் பணியாற்றிவிட்டு, ஓரளவு அனுபவம் பெற்று, அதன்பிறகு சொந்த தொழிலில் இறங்குவதே புத்திசாலித்தனம்.

ஆர்கிடெக்சர் துறையில் பயிற்சி செய்வதென்பது, மருத்துவ துறையில் பயிற்சி செய்வதைப் போன்றதாகும். துறையில், நாள்தோறும் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதேசமயம், அது வாழ்க்கை முழுவதற்குமான கற்றல் செயல்பாடாகும். ஆர்கிடெக்ட் பணி என்பது, வெறுமனே கட்டட வரைபட திட்டங்களை வரைவது மட்டுமேயல்ல, மாறாக, உங்களின் படைப்புத்திறனையும், ஆர்வத்தையும் வெளிப்படுத்துவதாகும். அப்போதுதான், இத்துறையில் நீடிக்க முடியும்.

இத்துறையானது, அறிவியலும், வடிவமைப்பும் சேர்ந்த ஒன்றாகும். நீங்கள் உருவாக்கும் வடிவமைப்பின் மூலமாக, உங்களது வாடிக்கையாளரை திருப்திபடுத்துவது மிகவும் முக்கியம் மற்றும் நீங்கள் பல டிசைன்களை உருவாக்க வேண்டியிருக்கும். மேலும், உங்களின் வடிவமைப்பு(design) முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை, சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று மேற்பார்வையிடுவதும் முக்கியம்.

எனவே, ஆர்கிடெக்ட் பணி என்பது, சாதாரணமாக, காலையில் சென்று மாலையில் வீடு திரும்பும் அலுவலக பணி போன்றதோ அல்லது பணம் சம்பாதிப்பதற்கான ஒரு எளிய தொழிலோ அல்ல. இது ஒரு சந்தோஷமான, புத்தாக்கமான, படைப்புத்திறனுள்ள மற்றும் உயர் பணிபொறுப்புள்ள பணியாகும்.

இத்துறையில் வெற்றியடைய வேண்டுமெனில், தீவிர அர்ப்பண உணர்வுடனும், போட்டிகளை ஜெயிக்கும் வகையிலான திறன்களை வளர்த்துக்கொள்ளும் மனப்பாங்குடனும் விளங்க வேண்டும். அப்போதுதான், ஒரு வெற்றிகரமான ஆர்கிடெக்டாக நீங்கள் பரிணமித்து, உங்களின் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.நோக்கம் மற்றும் ஒரு இடத்தின் சுற்றுச்சூழல் ஆகியவற்றைப் பொறுத்து, முறையான உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, திட்டமிடல், வடிவமைத்தல் மற்றும் கட்டடம் கட்டுதல் ஆகிய செயல்களை மேற்கொள்ளல் ஆர்கிடெக்சர் எனப்படும்.

சிறப்பான வீடு மற்றும் பணியாற்றும் இடம் ஆகியவற்றை மக்கள் அதிகளவில் விரும்புவதால், இந்தத் துறையானது பெரியளவில் வளர்ந்து வருகிறது.

ஆர்கிடெக்சர் என்பது இன்றைய நிலையில் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக இருக்கிறது. இப்படிப்பில் சேரும் பல மாணவர்கள், இரண்டாம் செமஸ்டர் காலத்திற்குள்ளேயே, அப்படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு வெளியேறி விடுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் ஆர்கிடெக்சர் என்பதை வெறும் கட்டடத்தை வடிவமைக்கும் பணி என்று நினைத்து விடுகிறார்கள். மேலும், பல மாணவர்கள் நினைப்பது என்னவெனில், ஆர்கிடெக்சர் என்பது அதிகம் அறிவியல் சம்பந்தப்பட்டதல்ல என்றும் அது பெருமளவில் கலைத்திறன் தொடர்பானது என்றும் நினைக்கின்றனர்.

மாணவர்கள், இப்படிப்பில் சேர்ந்தவுடன், ஒவ்வொன்றையும் வடிவமைப்பு மற்றும் கருத்துடன் இணைக்கும்போது, தாங்கள் எதிர்பார்த்ததைவிட, வித்தியாசமாக உணர்கிறார்கள். கணிதத்திறன் உள்ள ஒவ்வொருவரும் இப்படிப்பை தேர்ந்தெடுக்க தகுதி வாய்ந்தவர்களே. முதல் சில வருடங்கள், புத்தாக்க முயற்சிக்கென்று அதிக நேரம் செலவழிக்க வேண்டாம். பொறியியல் படிப்புடன் ஒப்பிடுகையில், இப்படிப்பின் தேர்வு நேரமானது அந்தளவு நெருக்கடியானதல்ல. ஆனால், அதேநேரத்தில், இப்படிப்பில் பலவிதமான பணிகள் நிறைந்திருக்கும்.

இப்படிப்பின் நான்காம் ஆண்டில், ஒரு மாணவர் ஸ்பெஷலைசேஷனை தேர்ந்தெடுக்கிறார். ஆர்கிடெக்சர் துறையைப் பொறுத்தவரை, ஸ்பெஷலைசேஷன் என்பது பரவலானது.

Sustainable development, Contemporary, Interior designing, Architectural photography உள்ளிட்ட பலவிதமான பிரிவுகளிலிருந்து ஒருவர் தனது ஸ்பெஷலைசேஷனை தேர்ந்தெடுக்கலாம். அதேசமயம், தவறான ஸ்பெஷலைசேஷனை தேர்ந்தெடுத்தால், பெரிய சிக்கலில் மாட்ட நேரிடும். தற்போதைய நிலையில், Sustainable architecture எனப்படும் பசுமை கட்டடக்கலை பிரபலமாகி வருகிறது. இப்படிப்பில், 5ம் ஆண்டான இறுதியாண்டில், ஆய்வறிக்கையின் வாயிலாக, வடிவமைப்பு தொடர்பான முழு சுதந்திரம் மாணவர்களுக்கு கிடைக்கிறது. இந்த நிலையில், ஒரு மாணவர், நிபுணத்துவம் பெற்ற ஆர்கிடெக்ட் என்ற நிலையை அடைகிறார்.

பி.ஆர்க் முடித்தவுடன் என்ன செய்வது என்ற கேள்வி இருக்கும். இந்தப் படிப்பானது, எம்.பி.பி.எஸ்., படிப்பை ஒத்ததாகும். ஏனெனில், பி.ஆர்க்., நிறைவுசெய்த பிறகு, ஒருவர் ஏதேனும் ஒரு ஸ்பெஷலைசேஷனில் முதுநிலை படிப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும். முதுநிலைப் படிப்பென்பது மிகவும் தனித்த அம்சம் கொண்டது. பிரிட்டன் போன்ற வெளிநாடுகளில் முதுநிலைப் படிப்பை மேற்கொள்வதைவிட, இந்தியாவில் மேற்கொள்வது எளிது என்று சம்பந்தப்பட்டவர்கள் கூறுகிறார்கள்.

பி.ஆர்க்., இளநிலைப் படிப்பை முடித்துவிட்டு பணிவாய்ப்பை தேடுவதைவிட, முதுநிலைப் படிப்பிற்கு பிறகான பணிவாய்ப்புகளைப் பெறுவது எளிது. அதேசமயம், இந்தியாவிற்கு திரும்பிவர விரும்பினால், பி.ஆர்க்., மற்றும் எம்.ஆர்க்., படிப்புகளுக்கு இடையிலான சம்பளம் விகிதம் மிகவும் குறைவாகவே இருக்கும். சென்னையை எடுத்துக்கொண்டால், இங்கே கிடைக்கும் ஊதியம், பெங்களூர், அகமதாபாத் உள்ளிட்ட பிற நகரங்களைவிட நன்றாக இருக்கிறது என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒருவர் ஆர்கிடெக்சர் முடித்து, பணியில் சேர்ந்ததுமே, நல்ல ஊதியம் பெறலாம் என்ற தவறான கருத்து ஒன்று உள்ளது. ஆனால், குறைந்தது 10 முதல் 15 வருடங்கள் அனுபவம் பெற்று, ஒரு நல்ல ஆர்கிடெக்டாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் ஒருவரே, சிறப்பான ஊதியம் பெறுகிறார். ஒரு சொந்தமாக தொழில் தொடங்க நினைப்பது நல்லதே. அதேசமயம், சிறிதுகாலம் பிற இடங்களில் பணியாற்றிவிட்டு, ஓரளவு அனுபவம் பெற்று, அதன்பிறகு சொந்த தொழிலில் இறங்குவதே புத்திசாலித்தனம்.

ஆர்கிடெக்சர் துறையில் பயிற்சி செய்வதென்பது, மருத்துவ துறையில் பயிற்சி செய்வதைப் போன்றதாகும். துறையில், நாள்தோறும் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதேசமயம், அது வாழ்க்கை முழுவதற்குமான கற்றல் செயல்பாடாகும். ஆர்கிடெக்ட் பணி என்பது, வெறுமனே கட்டட வரைபட திட்டங்களை வரைவது மட்டுமேயல்ல, மாறாக, உங்களின் படைப்புத்திறனையும், ஆர்வத்தையும் வெளிப்படுத்துவதாகும். அப்போதுதான், இத்துறையில் நீடிக்க முடியும்.

இத்துறையானது, அறிவியலும், வடிவமைப்பும் சேர்ந்த ஒன்றாகும். நீங்கள் உருவாக்கும் வடிவமைப்பின் மூலமாக, உங்களது வாடிக்கையாளரை திருப்திபடுத்துவது மிகவும் முக்கியம் மற்றும் நீங்கள் பல டிசைன்களை உருவாக்க வேண்டியிருக்கும். மேலும், உங்களின் வடிவமைப்பு(design) முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை, சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று மேற்பார்வையிடுவதும் முக்கியம்.

எனவே, ஆர்கிடெக்ட் பணி என்பது, சாதாரணமாக, காலையில் சென்று மாலையில் வீடு திரும்பும் அலுவலக பணி போன்றதோ அல்லது பணம் சம்பாதிப்பதற்கான ஒரு எளிய தொழிலோ அல்ல. இது ஒரு சந்தோஷமான, புத்தாக்கமான, படைப்புத்திறனுள்ள மற்றும் உயர் பணிபொறுப்புள்ள பணியாகும்.

இத்துறையில் வெற்றியடைய வேண்டுமெனில், தீவிர அர்ப்பண உணர்வுடனும், போட்டிகளை ஜெயிக்கும் வகையிலான திறன்களை வளர்த்துக்கொள்ளும் மனப்பாங்குடனும் விளங்க வேண்டும். அப்போதுதான், ஒரு வெற்றிகரமான ஆர்கிடெக்டாக நீங்கள் பரிணமித்து, உங்களின் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.