Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 22 ஜூன், 2012

ராமகோபால அய்யரின் கொக்கரிப்பு


ராமகோபாலன் விடுத்துள்ள அறிக்கையில் ( ஆனந்த விகடன் 21 / 06 /2012 ) கூறியிருப்பதாவது ,

                  கிராமங்களிலும் ,நகரங்களிலும் எருமைமாடுகளை பார்ப்பது அரிதாகி வருகிறது .இதே நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் உள்ள மாடுகளும் ,பசுக்களும் ,எருமைகளும் கொல்லப்பட்டு மாமிசங்களாகவும்,தோல்களாகவும்,வெளிநாட்டிற்கு ஏற்றுமதி ஆகிவிடும் .தமிழகம் பாலைவனம் ஆகாமல் தடுக்க பசுக்கள் ,மாடுகள் பாதுகாக்கப்படவேண்டும்,தமிழகத்தில் மாடுகளை அறுக்க தடை செய்யவேண்டும் ,என்று கூறியுள்ளார் .


                எருமை மாடுகளையும் ,மாடுகளையும் பார்ப்பது அரிதாகி விட்டால் ,ராமகோபால அய்யர் தன் சொந்த செலவில் தமிழகம் முழுவதும் ஒரு வீட்டுக்கு ஒரு பசு ,ஒரு மாடு என்று கொடுத்து எண்ணிக்கையை கூட்டலாம் .
தமிழகம் பாலைவனம் ஆகாமல் இருக்க ,மரங்கள் வெட்டுவதை தடுக்க வேண்டும், மரங்களை மாநிலம் முழுவதும் நட வேண்டும் என்று சொல்லுவதற்கு உரிய அறிவு கூட இல்லாத ,சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான  ராமகோபாலன் போன்ற தீவிரவாதிகளை தமிழக அரசு உடனே கைது செய்து ,அவர்கள் பேசுவதற்கு தடை விதிக்கவேண்டும் என்பது தான் அனைத்து சமுதாய மக்களின் எதிர்ப்பார்ப்பாகும் .

அதிசய கண்டு பிடிப்பிலும் தில்லு முல்லா ?


சிங்கப்பூரை சேர்ந்த சீன பெண் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சோதனை குழாய் முறையில் குழந்தை பெற்றார். ஆனால், அந்த குழந்தையின் உடல் அமைப்பு மற்றும் தலைமுடியின் நிறம் மாறுபட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்தான் சோதனை குழாய் குழந்தை பெற்ற ஆஸ்பத்திரியை தொடர்பு கொண்டார்.
 
அப்போது சோதனை குழாய் குழந்தை உருவாக்கும் போது கணவரின் உயிரணுவை இவரது கருமுட்டையுடன் சேர்ப்பதற்கு பதிலாக வேறு ஒரு பெண்ணின் கருமுட்டையுடன் சேர்த்தது தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பெண் அந்த ஆஸ்பத்திரி மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கிடையே நடந்த தவறுக்கு நஷ்டஈடு வழங்க ஆஸ்பத்திரி நிர்வாகம் முன்வந்துள்ளது.

இன்ஜி., 2ம் ஆண்டு நேரடி சேர்க்கை: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்


பொறியியல் கல்லூரிகளில் நேரடி 2ம் ஆண்டு பி.இ., பி.டெக்., சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அழகப்பா பொறியியல் கல்லூரி செயலாளர் மாலா தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: பொறியியல் கல்லூரிகளில் நேரடி 2ம் ஆண்டில் சேர, காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் ஜூலை 2வது வாரத்தில் கவுன்சிலிங் நடக்க உள்ளது. விண்ணப்பங்கள் 33 மையங்களில் வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வழங்க கடைசி நாள் ஜூன் 25.
விண்ணப்பம் பெற குறுகிய நாட்களே உள்ளதால், மாணவர்கள் நலன் கருதி, ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ரூ.300க்கான வங்கி காசோலையை இணைக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு கட்டணமில்லை. ஜாதி சான்றிதழ் இணைக்க வேண்டும்.
பாலிடெக்னிக் மதிப்பெண் சான்று பெற காலதாமதம் ஆவதால், ஆன்லைனில் மதிப்பெண்ணை எடுத்து, கல்லூரி முதல்வர் கையெழுத்தை பெற்று விண்ணப்பிக்கலாம். கவுன்சிலிங் வரும்போது ஒரிஜினல் சான்று அவசியம். 2ம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றார்.

சமுதாய போர்வாளின் தொகுதிப்பணிகளை பாரீர் !


வியாழன், 21 ஜூன், 2012

பள்ளி - கல்லூரிகளில் மாணவ- மாணவிகள் செல்போன் பயன்படுத்த தடை: கல்வித்துறை நடவடிக்கை

கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளி, கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கையும் நடந்து வருகிறது. 

இந்த நிலையில் பள்ளி-கல்லூரிகளில் செல்போன் பயன்படுத்த அனுமதிக்க கூடாது என கல்வி துறை உயர் அதிகாரிகள் முடிவு எடுத்துள்ளனர். இதுகுறித்து கல்வித்துறை உயர் அதிகாரிகள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு செல்போன் பயன்படுத்த தடைசெய்ய வேண்டும் என அறிவுரை கூறி உள்ளனர். 

இதையடுத்து சேலம் மாவட்டத்திலும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி தாளாளர்களுக்கு சேலம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஈஸ்வரன் அறிவுரை வழங்கி உள்ளார். இதில் அவர் கூறிஇருப்பதாவது:- 

பள்ளிகளில் மாணவ-மாணவிகள் செல்போன் பயன்படுத்தகூடாது. இதனால் மாணவ, மாணவிகளின் நேரம் பாதிக்கப்படுகிறது. இதை தடுக்க பள்ளி வளாகத்தில் செல்போன் எடுத்து வரவும், பயன்படுத்தவும் கூடாது என தெரிவித்துள்ளார். 

இந்த அறிவுரையை ஏற்று சேலம் மாவட்டத்தில் அனைத்து பள்ளி , கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு யாரும் இனி பள்ளி , கல்லூரி வளாகத்தினுள் செல்போன் பயன்படுத்தகூடாது என தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

இந்த அறிவுரையை மீறி யாரும் கல்லூரி, பள்ளி வளாகத்தில் செல்போன் பேசினால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் கல்வி துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சொர்க்கம் எங்கே உள்ளது ?

எல்லோரும் மிக அளிதில் சொல்லிவிடுவோம் ,சொர்க்கம் மற்றும் நரகம் ,உலகின் அழிவிற்கு பின் ,மனிதன் மீண்டும் எழுப்பபட்டு ,செயல்கள் பற்றி படைத்த அல்லாவால் விசாரிக்கப்பட்டு   பின்பு அல்லா சொர்க்கம் ,நரகம் என்று தீர்ப்பளிப்பானே அந்த மறுமை நாளில்தான் பார்க்க முடியும் என்று சொல்லிவிடுவோம் .
          ஆனால் ,வல்ல அல்லா இந்த பூலோகத்தில் உள்ள மனிதர்களுக்கு தன்னுடைய பிரதிநிதியை அனுப்பினானே ,அந்த நம் உயிரினும் மேலான பெருமானார் (ஸல் ) கூறினார்கள் ,தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது .

        எந்தத் தாயின் காலடி ? 

 ,ஒருவனின் கருவை பத்துமாதங்கள் பல்வேறு சிரமங்கள் பட்டு ,பெரும் பெரும் வலிகளையெல்லாம் சுகமாக ஏற்றுக்கொண்டு ஆனத்த கண்ணீர் வடித்தாளே அந்த தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது என்றார் எம் பெருமானார் முஹம்மது நபி (ஸல்).

        மரணத்தின் வாயிலுக்கு சென்று தான் சுமந்த குழந்தையை பெற்றெடுத்து உயிர் பெற்று சந்தோசமாக ஈன்றெடுத்த குழந்தையை உச்சி முகந்து ,கொசு ,ஈ கூட அண்டாமல் ,கண்விழித்து ,அமிர்தேன்னும் பாலூட்டி ,தாலாட்டி ,சீராட்டி தன கண் துஞ்சாமல் பாது காத்தாளே அந்த தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது என்றார் இருலோக ரட்ச்சகராம் பெருமானார் (ஸல் ).

          தலை சீவி ,அழகுபடுத்தி கல்விகற்க பள்ளிக்கு அனுப்பி வீடு திரும்பும் வரை காத்திருந்து ,வந்த மகனை உச்சி முகர்ந்து வாரி அனைத்து வரவேற்று முகம் கழுவி உணவு கொடுத்து ,தூங்க வைக்கும் நேரத்தில் சற்று அவன் உடல் சுடுகின்றது என்றுடன் ,பதறி அடித்து மருத்துவரை அணுகி ,சிகச்சை அளித்து ,தூங்காமல் கண்விழித்து தொட்டு தொட்டு பார்த்து தன் மகனை தூங்க வைத்தாளே அந்த தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளதாக கூறினார்கள் கண்மணி நாயகம் (ஸல் ).

          சின்ன சிறு வயதில் நோன்பு நோற்று ,தொழுகையை நிறை வேற பள்ளிக்கு சென்று வரும் தன் அன்பு மகனை பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்து ,யா அல்லா ,என் மகனை நேர் வழியில் வாழச்செய் என்று இருகரம் ஏந்தி துஆ செய்த அந்த தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளதாக கூறினார்கள் இறைத்தூதர் நபி (ஸல்)

          பள்ளிப்படிப்பின் இறுதியாண்டில் அவன் மார்க் குறைந்தாலும் ,அதிகமானாலும் அவனை உற்ச்சாகப்படுத்தி அவனை மேற்படிப்பு படிக்கவைக்க துடியாய் துடிக்கும் மனதை கொண்ட அந்த தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது என்றார்கள் நானிலம் போற்றும் 
நாயகம் (ஸல்).

         கல்லூரியில் தன் மகன் படிக்கின்றான் என்று பெருமையோடு பிறரிடம் சொல்லி மகிழ்ந்து இன்புற்று ,அவன் தவறு செய்கின்றான் என்று கேள்விப்பட்ட மாத்திரத்தில் உள்ளம் பதறி ,தன் கணவனிடம் எங்க அவன் அப்படி பட்டவன் இல்லை ,அவன் அழைத்து வாருங்கள் நாம் சொன்னால் திருத்திக்கொள்வான் அன்று தன் மகன் மீது முழு நம்பிக்கை வைத்து சமாதானம் ஆகின்றாளே அந்த தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளதாக கூறினார்கள் முகம்மது நபி (ஸல்).

          அழகான ,சாலிகான ,நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண்ணாக தேடி தன் மகனுக்கு திருமணம் நடத்தி ,அழகு பார்த்து ; தன் மகனுக்கு பிறக்கும் குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்து ,தன் மகனின் குடும்ப வாழ்க்கை எந்த சிரமுமின்றி ,நேரான பாதையில் அமைய அல்லாவிடம் துஆ செய்து ,தன் மகனையும் ,மருமகளையும் ,பேரக்குழந்தைகளையும் கண்டு உள்ளும் ,புறமும் மகிழ்ந்த அந்த தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளதாக கூறினார்கள்  முகம்மது நபி (ஸல்).

          ஆக ,சொர்க்கம் எங்கே உள்ளது? தாயின் காலடியில் உள்ளது .
 தாயை மதிப்பதன் மூலம் ,தாயிக்கு செய்யும் பணிவிடைகள் மூலம் ,தாயை நாம் நேசிப்பதன் மூலம் ,தாயை நாம் கண்கலங்காமல் பாது காப்பதன் மூலம் ,தாயிக்கு பசி இல்லாமல் உணவளிப்பதன் மூலம் சொர்க்கத்தை அடையலாம்.





                                                           

தென்பொதிகை குற்றால சாரல் துவங்கியது ,அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது

                                                               
                           
  தென்மேற்கு பருவமழை தீரவிமடைந்துவருவதையொட்டி ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் ஆர்ப்பரித்து தண்ணீர் விழுந்தது.கடந்த சிலநாட்களாக தென்மேற்கு பருவமழை கேரள வனப்பகுதிகளில் மட்டுமே பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சாரல் மட்டுமே பெய்துவந்தது. தமிழக பகுதிகளில் கண்ணாமூச்சி காட்டிவந்த பருவமழை தற்போது மேகமூட்டத்துடன் காணப்பட்டு ஐந்தருவி, குற்றாலம் போன்ற பகுதிகளில் பெய்துவருவதால் ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் ஆர்ப்பரித்து தண்ணீர் விழுந்து வருகிறது.குற்றாலம் மெயின்அருவியில் சற்று குறைவாக தண்ணீர் விழுந்த போதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் சுமாராக காணப்பட்டது. ஐந்தருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பழைய குற்றாலம், புலியருவி போன்ற அருவிகளில் தண்ணீரின்றி வெறிச்சோடி காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஐந்தருவியை நோக்கி படையெடுத்தவண்ணம் உள்ளனர். இப்பகுதியில் மழைமேகம் சூழ்ந்து பருவக்காற்று தீவிரமாக வீசிவருவதால் மேலும் மழை தீரவிமடையும் சூழல் நிலவிவருகிறது.