Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

பாராளுமன்றத்திற்கு முன்னதாகவே தேர்தல் நடக்காது: மத்திய அமைச்சர் சிதம்பரம் உறுதி


"மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை எல்லாம், நிறைவேற்ற வேண்டும் என்பதில், மத்திய அரசு தீவிரமாக உள்ளது. எனவே, லோக்சபாவுக்கு முன்னதாகவே தேர்தல் நடக்காது. அடுத்த ஆண்டு மே மாதம்தான், பொதுத் தேர்தல் நடக்கும்,'' என, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கூறினார்.

இந்நிலையில், டில்லியில் நேற்று, நிருபர்களைச் சந்தித்த மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், அரசின் பல திட்டங்கள் குறித்து, விவரித்துக் கொண்டிருந்தார். அப்போது, ""லோக்சபாவுக்கு முன்னதாகவே, தேர்தல் நடத்தும் திட்டம் ஏதும் அரசிடம் உள்ளதா?'' என, நிருபர் ஒருவர் கேட்டார். இதற்கு பதில் அளித்த, சிதம்பரம் கூறியதாவது: அரசு ஏன் தேர்தலைப் பற்றி சிந்திக்க வேண்டும். மக்களுக்கு இதுவரை அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, ஏற்கனவே அமலில் உள்ள திட்டங்களை விரைவுபடுத்தி, அவற்றை வெற்றிகரமாக முடிப்பது போன்றவற்றில் தான் அரசு தீவிரமாக உள்ளது. அரசின் தற்போதைய சிந்தனை எல்லாம் இதுவே. லோக்சபா தேர்தலுக்கு, இன்னும் ஓராண்டு உள்ளது. எனவே, லோக்சபாவுக்கு முன்னதாகவே தேர்தல் வருமா என்ற கேள்வியே, அவசியம் இல்லாதது. ஏற்கனவே திட்டமிட்டபடி, உரிய கால அட்டவணைப்படி, 2014 மே மாதமே, லோக்சபா தேர்தல் நடைபெறும். அதில், யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை. இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக