Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 24 ஏப்ரல், 2013

பயிற்சி பெற்று கால்நடை வளர்ப்பு தொழில் துவங்கினால் வெற்றி பெறலாம்


கால்நடை பராமரிப்பு துறையில் பயிற்சி பெற்று, கால்நடை வளர்ப்பு தொழில் துவங்குமாறு பல்கலைக்கழக துணை வேந்தர் பிரபாகரன் கூறினார்.

விழுப்புரத்தில் நடந்த கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழகத்தின் சார்பில் நடந்த தொழில்நுட்ப கண்காட்சி நிறைவு விழாவில் அவர் பேசியதாவது:

தமிழகத்தில் கால்நடை பராமரிப்பு மூலம் விவசாயிகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது, விவசாயத் தொழில் 50 சதவீதம் மக்களுக்கு வாழ்வாதாரமாக திகழ்ந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்துவிட்டதாலும், விவசாய பொருட்களுக்கு சரியான விலை கிடைக்காததாலும் விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

கால்நடை பராமரிப்பு மூலம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆண்டு முழுவதும் வருமானத்தை ஈட்ட முடியும். மேற்கு மாவட்டங்களான திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 1500 அடி ஆழத்திற்கு போர் போட்டு, விவசாயத்திற்கு தண்ணீர் எடுக்கும் நிலை உருவாகியுள்ளது.

இதனால், அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு ஒப்பந்த கோழி வளர்ப்பிற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கறவை மாடுகள் வளர்ப்பதன் மூலம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படுகிறது.

தற்போது, பொதுமக்கள் சிறந்த உணவு, உடை அணிந்து நாகரிகமாக வாழ்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில், சத்தான உணவு சாப்பிடுவதற்காக, கால்நடை துறை சார்பில் இறைச்சி, முட்டை, பால் உள்ளிட்ட ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் தயாரித்து வழங்கப்படுகிறது.

கால்நடைகளை வளர்க்க விரும்புவோர், அருகில் உள்ள கால்நடை பராமரிப்பு துறையில் சென்று பயிற்சி பெற்று, தொழில் துவங்க வேண்டும். இதன் மூலம் தொழிலை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும். இவ்வாறு துணை வேந்தர் பிரபாகரன் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக