Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 18 மார்ச், 2013

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இலங்கை சம்பந்தமான ஐ.நா தீர்மானத்தில் உரிய திருத்தத்தை இந்திய அரசு கொண்டுவரவேண்டும் : பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன்

கரூர் மாவட்டம் பள்ளபட்டி நகரில்  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவரு மான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் செய்தியாளர்க ளுக்கு பேட்டியளித்தார்.


அப்போது அவர் கூறியதா வது-

3 ஆயிரம் இடங்களில் கொடியேற்று விழாக்கள்
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகை அமைப்பு ரீதியாக பலப்படுத்தி வலிமை சேர்க்கும் நடவடிக்கை கள் தேசியத் தலைவரும், மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சருமான இ.அஹமது சாஹிப் தலைமை யில் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மார்ச் 10ம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 66வது நிறுவன தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் கொடியேற்று விழாக் களும், பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நான் கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன்.

தமிழகத்தில் பட்டிதொட்டிக ளெங்கும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் பச்சிளம் பிறைக்கொடிகள் ஏற்றி வைக் கப்பட்டுள்ளன. இது ஒரு புதிய எழுச்சியையும், இயக்கத்திற்கு புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏப்ரல் 2 கோரிக்கை பேரணி
கேரள மாநிலம் கோழிக் கோட்டில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி யும், திண்டுக்கல்லில் நடை பெற்ற தமிழ்நாடு மாநில பொதுக்குழு நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையிலும் முப் பெரும் கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய அளவில் கோரிக்கை பேரணி கள் நடைபெறுகின்றன.

தமிழகத்தைப் பொறுத்த வரை வரும் ஏப்ரல் 2-ம் தேதி செவ்வாய்க்கிழமை அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் இக் கோரிக்கை பேரணிகள் நடை பெறுகின்றன. இப்பேரணி களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னோடிக ளோடு முஸ்லிம் யூத் லீக், முஸ்லிம் மாணவர் பேரவை, சுந்திர தொழிலாளர் யூனியன், மகளிர் அணி ஆகியவற்றின் செயல் வீரர்களும் கலந்து கொள்கின்றனர்.

இந்த முப்பெரும் கோரிக் கைகளில் ஒன்று நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணைய பரிந்துரையை ஏற்று கல்வி - வேலைவாய்ப்புகளில் முஸ்லிம் களுக்கு 10 சதவீத இடஒதுக் கீட்டை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் எனவும்,

தமிழகத்தில் கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு கொண்டு வந்துள்ள 3.5 சதவீத தனி இடஒதுக்கீட்டை 5 சத வீதமாக உயர்த்தித் தர வேண்டும் என தாம்பரத்தில் டைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் கோரிக்கை விடுத்த போது தாங்கள் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்கும் போது இக்கோரிக்கை நிச்சயமாக பரிசீலிக்கப்படும் என அம் மாநாட்டு மேடையிலேயே கலைஞர் உறுதியளித்தார்.

அதேபோன்று அ.இ.அ.தி. மு.க. தேர்தல் பிரசார கூட்டங்க ளில் செல்வி ஜெயலலிதா அம்மையார் உரையாற்றிய போது, `முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீடு’ உயர்த்தித் தரப்படும் என வாக்களித்தி ருந்தார். அந்த வாக்குறுதியை ஏற்று தமிழகத்தில் 3.5 சதவீத இடஒதுக் கீட்டை உயர்த்தித் தர வேண்டும்.

பூரண மதுவிலக்கு
இரண்டாவது கோரிக்கை யாக இந்தியாவில் பூரண மது விலக்கை அமுல்படுத்த வேண் டும். நாட்டில் ஏற்கனவே குடி காரர்கள் பெருகி விட்ட நிலையில் புதிய தலைமுறையி னர் போதைக்கு அடிமையாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பாக இளைஞர்களும், மாணவர்களும் இன்று மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி வருகிற்னர். இதனால், இந்திய கலாச் சாரம் சீரழிந்துவிடும். தமிழ் பண்பாடு நாசமாகி விடும்.

எனவே, இந்தியாவில் பூரண மதுவிலக்கை அமல்படுத் வேண்டும். அதற்கு முன்னோட் டமாக தமிழ்நாட்டில் மது விலக்கை அமுல்படுத்த வேண்டும் என்பது எங்களது இன்னொரு கோரிக்கை யாகும்.

சிறைவாசிகள் விடுதலை 
இந்தியாவின் பல்வேறு மாநி லங்களில் முஸ்லிம் இளைஞர் கள் எண்ணற்றோர் கைது செய்யப்பட்டு விசாரணை முடிக்கப்படாமலேயே பல்லாண் டுகளாக சிறை வைக்கப்பட் டுள்ளனர். மகாராஷ்டிரா உள் ளிட்ட மாநிலங்களில் நடத்தப் பட்ட ஆய்வுகளில் விசாரணை சிறைவாசிகளில் 80சதவீதம் வரை அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது.

தமிழகத்தைப் பொறுத்த வரை123 சிறைகளிலும், 22 ஆயிரம் கைதிகள் மட்டுமே வைக்கப்படும் இடவசதி உள் ளது. இதில் தண்டனை பெற்ற கைதிகள் 6 ஆயிரம் பேர் மட்டுமே. 12 ஆயிரம் கைதிகள் விசாரணை முடிக்கப்படாமல் இருக்கிறார்கள். விசாரணை முடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட கைதி களிலும் 14 ஆண்டுகளை கடந்தவர்கள் பலர் உள்ளனர். இவர்கள் விடுவிக்கப்பட வேண் டும் என்ற கோரிக்கையை நாங்கள் முன்வைத்துள்ளோம்.

இந்த முப்பெரும் கோரிக் கைகளை முன்வைத்து ஏப்ரல் 2 கோரிக்கை பேரணி நடைபெறு கிறது.

இந்த பேரணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மட்டுமின்றி நடுநிலையாளர்க ளான அனைத்து சமுதாயப் பெருமக்களும், முஸ்லிம் லீக் முன்வைத்துள்ள கோரிக்கை களின் நியாயத்தை உணர்ந் துள்ள பெருமக்களும் பெரு மளவில் கலந்து கொள்ள வேண்டும்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை
இலங்கை தமிழர்களுக்கு அந்நாட்டு அரசால் இழைக்கப் பட்டு வரும் அநீதிகளுக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு கட்சிகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள இலங் கைக்கு எதிரான தீர்மானத்தை இந்திய அரசு வலுவாக ஆதரிக்க வேண்டும் என ஒட்டுமொத்த தமிழர்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.

ஐ.நா. தீர்மானத்தில் மத்திய அரசு உரிய திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என தி.மு.க. தலைவர் கலைஞர் தொடர்ந்து வலியுறுத்தி வரு கிறார். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அனைத்து நுணுக்கங்களையும் மிக நன்கு அறிந்த மூத்த தலைவர் கலைஞர். அவர் முன்வைக் கின்ற தீர்வு நிச்சயம் இலங்கை தமிழர்களுக்கு ஒரு விடிவை ஏற்படுத்தும் என நாங்கள் நம்புகிறோம்.

எனவே. தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வுகளுக்கு கலைஞரின் கோரிக்கையை ஏற்று ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் இந்திய அரசு உரிய திருத்தங்கள் கொண்டு வந்து அமெரிக்க தீர்மானத்துக்கு வலு சேர்க்க வேண்டும் என மத்திய அரசை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

நாட்டை ஆள்வது யார்?
இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? என்ற விவாதம் இப்போது நாடு தழுவிய அளவில் நடைபெற்று வருகிறது. நாட்டை ஆள்வது யார் என்பது முக்கியமல்ல? எந்த கொள்கை உடையவர்கள் ஆள வேண்டும் என்பதே முக்கியம்.

இந்தியா சமயசார்பற்ற ஜனநாயக நாடு என்பதில் உறுதி கொண்ட - சமூக நீதியில் அக்கறை கொண்டவர்கள் - வகுப்பு மோதல்களை உருவாக் காமல் சட்டம் - ஒழுங்கை காப்பாற்றக் கூடியவர்கள் - தர்மத்தை நிலைநிறுத்தக்கூடிய வர்கள்தான் இந்த நாட்டை ஆள வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்த கொள்கை உடையவர்களை ஒருங்கி ணைத்து பாசிச சக்திகளை வீழ்த்த வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் கூட்டம் வேண்டு கோள் விடுத்து அதற்கான பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் கலைஞர் தலைமை யிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம் பெற்றிருக்கிறது. தொடர்ந்து அந்த கூட்டணியில் வலிமை சேர்க்க பாடுபடும்.

இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் குறிப்பிட்டார்.

இந்த செய்தியாளர் சந்திப் பில் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ..எம். முஹம்மது அபூக்கர், மாநிலப் பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கி ணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., மாநில துணைத் தலைவர் எம்.பி. காதர் உசேன், கரூர் மாவட்டத் தலைவர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான், செயலாளர் எம்.ஏ. மஹபூப் அலி, முஸ்லிம் யூத் லீக் மாநிலச் செயலாளர் எம்.கே. முஹம்மது யூனுஸ் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக