Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 16 மார்ச், 2013

அமீர காயிதே மில்லத் பேரவை முஸ்லிம் லீக் நிறுவன நாள் மற்றும் ஏப்ரல் - 2 பேரணி விளக்கம் கருத்தரங்கம்


அமீரக காயிதே மில்லத் பேரவை ,துபாய் - சோனாபூர் கிளை சார்பில் முஸ்லிம் லீக் நிறுவன நாள் மற்றும் ஏப்ரல் - 2 பேரணி விளக்கம் கருத்தரங்கம் சோனாபூர் கிளை தலைவர் ராமநாதபுரம் ரஹ்மதுல்லா தலைமையில்
பவர் குரூப் கம்பனி கேம்ப் மஸ்ஜிதில் நடைபெற்றது .துணைத் தலைவர் காயல் நூஹு சாஹிப்,அபுதாபி மண்டலம் செயலாளர் அதிரை ஷாஹுல் ஹமீது,ஷார்ஜா மண்டலம் செயலாளர் தஞ்சை பாட்சா கனி,ஜமாஅத் ஒருங்கிணைப்புச் செயலாளர் கீழை ஏ.ஹமீது யாஸின் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

மஸ்ஜித் இமாம் இம்ரான் கான் கிராத் ஓதினார் , கூட்டத்தின் நோக்கம் குறித்தும் ,இடஒதுக்கீடு மற்றும் சிறைவாசிகள் விடுதலை விசயத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்ட சட்டரீதியிலான போராட்டக் களங்கள்  குறித்தும் கொள்கை பரப்பு செயலாளர் எஸ்.கே.எம்.ஹபிபுல்லா தனது அறிமுக உரையில் மிக தெளிவாக விவரித்தார் .

துபாய் மண்டல செயலாளர் முதுவை ஹிதாயத் அமீரகத்தில் இயக்க பணிகள் குறித்தும்  , பேரவையின் அலுவலக மேலாளர் திண்டுக்கல் ஜமால்  வளர்கின்ற தலைமுறையினருக்கு முஸ்லிம் லீக்கினை எடுத்துச் செல்லும்  பணியின் அவசியம் குறித்து விவரித்தார் . அமைப்புச்செயலாளர் லால்பேட்டை அப்துல் ரகுமான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1948 - மார்ச் 10 ஆம்நாள் தொடரப்பட்ட வரலாற்றினையும் ,இயக்க தலைவர்களின் சீரிய சேவைகள் பற்றியும் தனது உரையில் எடுத்துக்கூறினார் .

பேரவையின் பொருளாளர் கீழக்கரை எஸ்.கே.எஸ்.ஹமீது ரகுமான் முஸ்லிம் சமுதாயம் இன்றைய கால கட்டத்தில் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்தும் ,அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்தும் விலாவாரியாக பட்டியலிட்டு தனதுரையில் விளக்கினார் .பேரவையின் பொதுச்செயலாளர் திருப்பனந்தாள் ஏ.முஹம்மது தாஹா அவர்கள் அமீரகத்தில் வேலைசெய்துவரும்  இந்திய மக்களுக்காக ,குறிப்பாக தமிழக மக்களுக்காக அமீரக அரசு மற்றும் இந்திய அரசு ஆகியவற்றின் மூலமாக  காயிதே மில்லத் பேரவை செய்துவரும் பணிகள் குறித்து மிக அற்புதமாக விளக்கினார் . இறுதியாக உரையாற்றிய பேரவையின் அமீரகத் தலைவர் "சேவை செம்மல் " குத்தாலம் A .லியாகத் அலி அவர்கள் அகில இந்திய அளவில் மற்றும் தமிழகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவரித்ததொடு , ஏப்ரல் - 2 பேரணிக்கு அமீரகத்தில் உள்ளவர்களின் பங்கு பற்றியும் எடுத்துக் கூறினார் .

இந்த நிகழ்வில் திருநெல்வேலி டவுன் M ,சிந்தா தன்னை காயிதே மில்லத் பேரவையில் இணைத்துக் கொண்டதோடு ,காயிதே மில்லத் பேரவையின் வளர்ச்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வேன் என்று உறுதியளித்தார் .

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன ,

1. ஏப்ரல் - 2 ,2013 அன்று தமிழக முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடக்க இருக்கும் கோரிக்கை பேரணியில் சமுதாய மக்களை கலந்து கொள்ளச் செய்யும் வகையில் , தொலைபேசி , அலைபேசி ,மெயில் , முகநூல் , ட்விட்டர் ஆகியவற்றின் மூலம் பிரச்சார பணிகளை காயிதே மில்லத் பேரவை அங்கத்தினர்கள் தீவிரமாக மேற்கொள்ளவேண்டும் .

2.தமிழக அரசு 10- ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் ,வரலாற்றுப் பகுதியில் இந்தியாவில் "முஸ்லிம் லீக் ஆங்கிலேயர்களுக்கு சாதகமாக செயல்பட துவக்கப்பட்டது" என்று குறிப்பட்டுள்ள வாசகத்தை ,உடனடியாக நீக்குமாறு தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறோம் .

நிகழ்ச்சிகளை பேரவை விழாக்குழு செயலாளர் ராமநாதபுரம் எம்.எஸ்.ஏ.பரகத் அலி தொகுத்து வழங்கினார் .ராமநாதபுரம் ஜவ்வாது  நன்றி கூற துஆ உடன் கூட்டம் நிறைவுற்றது .நிகழ்ச்சியில் அமீரக காயிதெமில்லத் பேரவையின் ஊடகத் துறைச் செயலாளர் கும்பகோணம் சாதிக்,தேரா பகுதி செயலாளர் வி.களத்தூர் ஷாஹுல் ஹமீத்,சஹாபுத்தீன் உள்ளிட்ட பேரவை நிர்வாகிகள் மற்றும் சோனாப்பூர் பகுதி சமுதாய இளைஞர்கள்  உள்ளிட்ட ஏராளமானோர்  கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக