Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

அப்பாவிகளின் நிலையிலிருந்து நீதிபதிகள் பார்க்க வேண்டும்: தலைமை நீதிபதி அகர்வால்


"ஒரு அப்பாவி, நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், கோர்ட்டை நாடுகிறான். நீதிபதிகள், சட்டத்தின் கோணத்தில் மட்டும் பார்க்காமல், அப்பாவிகளின் நிலையிலிருந்து அணுக வேண்டும்,'' என, சென்னை ஐகோர்ட், தற்காலிக தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால் பேசினார்.

மதுரை ஐகோர்ட் கிளையில் அளிக்கப்பட்ட, வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: தன் கணவருக்கு அநீதி இழைக்கப்பட்டது குறித்து, மதுரையில், பாண்டிய மன்னனிடம், கண்ணகி நீதி கேட்டதை, "சிலப்பதிகாரம்' கூறுகிறது. இது, தற்போதுள்ள நீதிபரிபாலன முறைக்கு, முன் மாதிரியாக திகழ்கிறது.

மதுரை, "பாரில்' திறமையான வக்கீல்கள் உள்ளனர். மற்ற கோர்ட்டுகளுக்கு முன்னுதாரணமாக திகழ முயற்சிக்கின்றனர். நீதிபதி எம்.சி.சாக்லா, "ஒரு நீதிபதி, வழக்கை கையாளும்போது, சட்டத்தை மட்டும் மனதில் கொள்ளாமல், அது சமூக மேம்பாட்டிற்கும், ஏழைகளை பாதுகாக்கும் வகையிலும் இருக்க வேண்டும். கர்வமின்றி நடந்து கொள்ள வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.

ஒரு அப்பாவி, நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், கோர்ட்டை நாடுகிறான். நீதிபதிகள், சட்டத்தின் கோணத்தில் மட்டும் பார்க்காமல், அப்பாவிகளின் நிலையிலிருந்து, அணுக வேண்டும். பொது மனிதன் நீதி, நியாயம் பற்றி என்ன நினைக்கிறான் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு, தற்காலிக தலைமை நீதிபதி பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக