Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 16 ஜனவரி, 2013

ராஜஸ்தான் சாமியார் அஸ்ராம் பாபு 700 கோடி ரூபாய் நில மோசடி

மத்திய பிரதேசத்தில், 700 கோடி ரூபாய் மதிப்புள்ள நில மோசடி குறித்து,ராஜஸ்தான் சாமியார் அஸ்ராம் பாபுவிடம், விசாரணை நடந்து வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் அஸ்ராம் பாபு. சாமியாரான இவர், சமீபத்தில், டில்லி கற்பழிப்பு சம்பவம் தொடர்பாக தெரிவித்த கருத்து, பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், மத்திய பிரதேசம், ரட்லம் பகுதியில், டில்லி-புனே சாலையில், ஜெயந்த் வைட்டமின்ஸ் என்ற நிறுவனம் உள்ளது.

இது, குளூக்கோஸ் மற்றும் வைட்டமின் மருந்துக்களை தயாரித்து வருகிறது. மத்திய அரசின் நிறுவனங்கள் பட்டியலில் இருந்து, இந்த நிறுவனம், ஏற்கனவே நீக்கப்பட்டு விட்டது. கடந்த, 2000ம் ஆண்டு, இந்த நிறுவனத்தின், 200 ஏக்கர் நிலத்தை, சாமியார் அஸ்ராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயண் சாய் ஆகியோர், மோசடி செய்து அபகரித்ததாக, நிறுவனத்தைச் சேர்ந்த பங்குதாரர் புகார் செய்தார். இரண்டாண்டுகளாக நடந்து வரும் இந்த விசாரணை குறித்து, மத்திய அரசின் நிறுவனங்கள் விவகாரத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "அஸ்ராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயண் சாய் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு குறித்து, விசாரணை நடத்திய அதிகாரிகளின் அறிக்கையும், பரிந்துரையும் எங்களுக்கு கிடைத்துள்ளது' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக