Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 9 டிசம்பர், 2012

உலகின் முதல் குடியினம் தமிழ் குடியினம் - கவிக்கோ .அப்துல் ரகுமான்


தமிழினம் ஆதி குடியினம் என்று ஈரோட்டில் நடந்த கருத்தரங்கில் கவிஞர் அப்துல்ரகுமான் கூறினார்.
ஈரோட்டில் சிக்கய்யநாயக்கர் கல்லூரி, சென்னை காவ்யா அறக்கட்டளை சார்பில் திரா விட இயக்க நூற்றாண்டு சிறப்பு கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில் கல்லூரி தமிழ்த் துறை தலைவர் முனைவர் சீனிவாசன் வரவேற்றார்.

 கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சர்வலிங்கம் தலைமை வகித்தார். காவ்யா அறக்கட்டளை சண்முகசுந்தரம் உள்பட பலர் பேசினர். இதில் ‘திராவிட இயக்க கவிஞர்களும், கவிதைகளும்‘ என்ற நூலை கவிஞர் அப்துல்ரகுமான் வெளியிட்டு பேசியபோது,


முதன்முதலாக உருவான நாகரீகம் என சுமேரிய நாகரீகத்தை குறிப்பிடுவர். இந்த சுமேரிய நாகரீகம் மெசபடோமியாவில் தான் உருவானது. தமிழினம் என்பது உலகின் ஆதி குடியினம். இந்த தமிழ் குடியினத்தை சேர்ந்தவர்களால் தான் சுமேரிய நாகரீகம் உருவானது என்றும், சுமேரிய நாகரீகத்தின் தொடர்ச்சியாகவே எகிப்திய, கிரேக்க நாகரீகம் உருவானது என்பதும் இலக்கியங்கள் கூறும் சான்று. தமிழில் இருந்து தான் மலையாளம், கன்னடம், தெலுங்கு என திராவிட மொழிகள் உருவானது. இவ்வளவு எழுச்சி மிக்க திராவிட மொழிகளில் முதன்மையான தமிழின் தொன்மையை நான் கூறி உலகிற்கு தெரிய வேண்டியதில்லை.

திராவிட மொழிகளின் குடும்பத்தில் தமிழ் தான் தலைமையானது என்று எல்லீஸ்துரை என்ற மாவட்ட கலெக்டர் ஒருவர் ஆய்வின் மூலம் கண்டறிந்து உலகிற்கு தெரியப்படுத்தினார். ஆனால் இக்கூற்றை ஏற்று கொள்ள மனமில்லாத சிலர் இதை எதிர்த்தனர். ஆனால் வரலாற்றை யாராலும் மறைக்கவோ, மாற்றவோ முடியாது என்பது தான் உண்மை என்பதை ஏனோ அவர்கள் மறந்து விட்டார்கள்’’என்று தெரிவித்தார்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக