Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 9 டிசம்பர், 2012

கூட்டுறவு பட்டய பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வினியோகம்


பாளை.,யில் உள்ள கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் அஞ்சல்வழி கூட்டுறவு பட்டய பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படுவதாக பயிற்சி நிலைய முதல்வர்(பொறுப்பு) பரமசிவன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது;பாளை., என்.ஜி.ஓ.,காலனியில் உள்ள மேடைதளவாய் குமாரசாமி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 14வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் இந்த பயிற்சியில் சேரலாம்.பயிற்சியில் சேர விரும்புபவர்கள் 11வது வகுப்பு தேர்ச்சி அல்லது புதிய 10ம் வகுப்பு தேர்ச்சி என விண்ணப்ப படிவத்தில் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.


அஞ்சல்வழி கூட்டுறவு பட்டய பயிற்சி அனைவருக்கும் வழங்குவதில் தடை இல்லை என்பதால், ஓராண்டு தொடர் பணி இருக்க வேண்டும் என நிபந்தனையின்றி கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் இந்த பயிற்சியினை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப படிவத்தில், விண்ணப்பதாரர் பணிநியமனம் செய்யப்பட்ட முறைகள் குறித்து அதாவது வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகவோ அல்லது கருணை அடிப்படையிலோ அல்லது அரசு, பதிவாளர் உத்தரவுப்படியோ அல்லது முறையற்ற நியமனம் என குறிப்பிடுதல் வேண்டும்.இப்பயிற்சி ஞாயிற்றுகிழமைகளில் மட்டுமே நடைபெறும். எனவே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு பண்டகசாலைகள், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள், நெசவாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள், மீனவர் கூட்டுறவு கடன் சங்கங்கள் போன்ற அனைத்து வகையான கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிவோரும் இந்த பயிற்சியில் சேரலாம்.

பயிற்சியில் சேர விரும்புவோர் வரும் 21ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 21ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.மேலும் விவரங்கள் அறிய விரும்புவோர் முதல்வர், மேடை தளவாய் குமாரசாமி கூட்டுறவு மேலாண்மை நிலையம், உதயா நகர், என்.ஜி.ஓ.,நியூ காலனி, பெருமாள்புரம், திருநெல்வேலி-7 என்ற முகவரியிலோ அல்லது 0462-2552695 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு பயிற்சி நிலைய முதல்வர்(பொறுப்பு) பரமசிவன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக