Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 8 ஜூலை, 2012

பெருமைக்கு படிப்பது அதிகரிப்பு :பொறியியல் பட்டதாரிகளில் 8 % பேர் மட்டுமே வேலைக்கு தகுதியானவர்கள்


கடந்த 2011ம் ஆண்டிற்கான பொறியியல் பட்டதாரிகளுக்கான, தேசிய வேலைவாய்ப்பு அறிக்கை, மத்திய தொலைத் தொடர்பு துறையால் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், பி.டெக்., படிப்போரில், 8 சதவீதம் மாணவர்கள் மட்டுமே வேலை பெறத் தகுதியானவர்கள் என, அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐ.டி., நிறுவனங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் தனியார் மென்பொருள் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று, நாடு முழுவதும் உள்ள, 250 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில், 2011 ஆம் ஆண்டு தொழில்நுட்ப பட்டம் பெற்ற, 55 ஆயிரம் மாணவர்களிடம் ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வில், மாணவர்களின் தொழில்சார்ந்த தொழில்நுட்ப அறிவு மற்றும் மென்திறன் ஆகியவை சோதிக்கப்பட்டன.இவற்றை கண்டறிய, மாணவர்களின் ஆங்கில மொழிப் புலமை, கணக்கிடும் திறமை, தர்க்கம் சார்ந்த சிந்தனை மற்றும் கணிப்பொறி புரோகிராம் எழுதும் திறமை ஆகியவை அளவுகோலாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
பெரிய மற்றும் நடுத்தர ஐ.டி., நிறுவனங்கள் வளாக நேர்காணலில், மென்திறன் மற்றும் தொழில்நுட்ப திறன்களில், பயிற்சி அளிக்க தகுதியான மாணவர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். இந்த பயிற்சி குறைந்தது, 3 முதல் 6 மாதங்கள் வரை நடக்கும். அதன் பின்னர், தான் அவர்கள் பணியில் அமர்த்தப்படுகின்றனர்.
இந்த ஆய்வில், ஐ.டி., முடித்து திரும்பும் மாணவர்களில், 17.5 சதவீத மாணவர்கள் மட்டுமே பயிற்சி அளிக்கும் அளவிற்கு தொழில்நுட்பத் திறன் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 46 சதவீத மாணவர்கள் தொழில்நுட்ப அறிவு குறைவு காரணமாகவும், 54 சதவீத மாணவர்கள் மென்திறன் குறைவு காரணமாகவும் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.
டில்லியில் படித்த மாணவர்களில், 40 சதவீதம் பேருக்கும் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் படித்தவர்களில், 35 சதவீதம் பேருக்கு இரண்டாவது மூன்றாவது இடங்களிலும் உள்ளனர்.
தமிழ்நாட்டில், 525 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில், 1.50 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் ஆண்டுதோறும் படிப்பை முடித்து வெளியே வருகின்றனர்.
தமிழ்நாட்டில் படித்தவர்களில், 10 சதவீத மாணவர்கள் மட்டுமே, ஐடி நிறுவனங்களில் பணி பெறக்கூடிய திறமை உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதித் திறனில் தமிழகம், 16வது இடத்தில் அதாவது கடைசியில் உள்ளது.ஆறு முக்கிய மெட்ரோ நகரங்களில், சென்னை மற்றும் புறநகரில் உள்ள மாணவர்கள் தான் கடைசி இடத்தில் உள்ளனர்.
மெட்ரோ நகரங்களில் டில்லியில் இருந்து ஐ.டி., படித்து வரும், 39.78 சதவீத மாணவர்களிடம் ஐ.டி., கம்பெனிகளில் பணி பெறுவதற்கான திறமை உள்ளது. கோல்கட்டா இரண்டாம் இடத்திலும், பெங்களூரு மூன்றாவது இடத்திலும் உள்ளது. சென்னை, 8.35 சதவீத திறனுடன் கடைசி இடத்தில் உள்ளது.
இதுகுறித்து, பிரபல மனிதவள நிறுவனம் மா பா கன்சல்டன்சி நிறுவன நிர்வாக இயக்குனர் லதா கூறியதாவது: கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் தரம் குறைந்தது இதற்கு முக்கிய காரணம். கல்லூரி முடித்த மாணவர்கள் பல தனியார் கல்லூரிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை உயர்ந்து அளவிற்கு, கல்வியின் தரம் உயர்த்தப்படவில்லை. மாணவர்களிடம் ஐ.டி., துறை குறித்து விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. எனினும், தென்னிந்தியாவில் ஓரளவு நல்ல நிலையில் தான் ஐ.டி., துறையினர் உள்ளனர். சேவைப்பணிகளான பி.பி.ஓ., பணிகளில் தான் நாம் பின்தங்கி உள்ளனர் என்ரு லதா கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக