Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 19 ஜூன், 2012

கல்வி விழிப்புணர்வு மாநாடு ஆலோசனை கூட்டம்




இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மாபெரும் கல்வி விழிப்புணர்வு மாநாடு கும்பகோணத்தில் செப்டெம்பர் 8 ம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது.

கும்பகோணம் கிரீன் பார்க் ஹோட்டலில் ஒருங்கிணைத்த தஞ்சை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொது செயலாளர் கே எ எம் அபூபக்கர் தலைமை வகித்தார். மாநில கல்வி பனி செயலாளர் ஆடுதுறை ஏ . எம். ஷாஜஹான் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு அழைப்பாளராக நோபுள் ஹலிமா ஷாகுல் ஹமீது மற்றும் ராஜகிரி தாவூத் பாட்சா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.நிகழ்ச்சியில் மாநில துணை தலைவர் அதிரை நசிருதீன், இளைஞர் அணி அமைப்பாளர் முஹமது யூனுஸ், தஞ்சை மாவட்ட செயலாளர் லயன் பஷீர் அஹமது, பொருளாளர் அப்துல் காதர், நாகை வடக்கு மாவட்ட தலைவர் அபுல் ஹசன், செயலாளர் அமீர் நூருல்லாஹ், துணை தலைவர் சிடிசன் மஜீது, நாகை தெற்கு மாவட்ட இணை செயலாளர் ஜான் செய்யது மீரான், திருவாரூர் மாவட்ட தலைவர் ஜலாலுதீன், செயலாளர் முகைதீன் அடுமை, காரைக்கால் மாவட்ட தலைவர் இஸ்மாயில், மாவட்ட செயலாளர் முஹமது அலி, பொருளாளர் அப்துல் நசீர், அஸ்ஸலாம் பொறியியல் கல்லூரி தலைவர் ஜமால் முஹமது இப்ராகிம், துணை தலைவர் முஹமது ஹுசைன் , அமீரக காயிதே மில்லத் பேரவை மண்டல செயலாளர் ஆவை அன்சாரி, தலைமை நிலைய பேச்சாளர்கள் கொள்ளிடம் ரஷீத் ஜான், தஞ்சை ஜைனுல் ஆபிதீன், அப்துல் கரீம், வலங்கைமான் பி கே இ அப்துல்லாஹ் மற்றும் பல்வேறு மாவட்ட பிரதிநிதிகள், ஒன்றிய, பிரைமரி அமைப்பாளர்கள், நான்கு மாவட்ட இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தின் முடிவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் உயர் நிலை குழு கூட்டத்தில் எடுத்த முடிவின்படி வரும் செப்டம்பர் மாதம் கும்பகோணத்தில் மாபெரும் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடத்துவது என்றும் அம்மாநாட்டில் மாநிலத்தில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசுத்தொகையும், ஏழை மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. மாநாட்டிற்கு மாநில தலைவர்களையும், கல்வியாளர்களையும், மத்திய அமைச்சரும் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவருமான இ அஹமது மற்றும் கேரளா மாநில முஸ்லிம் லீக் அமைச்சர்களையும் அழைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. மாநாட்டிற்கு 500 க்கும் மேற்பட்ட வாகனங்களில் அணைத்து ஜமாஅத்திளிருந்தும் கலந்துகொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. மாநாடு சிறப்பாக நடைபெற பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டது. சுவர் விளம்பரங்களும், தெருமுனை பிரச்சரக்கூட்டங்களும் நடத்த வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக