Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 20 செப்டம்பர், 2012

என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? - இன்டீரியர் டிசைனிங்


உட்புற அலங்காரம் என்பது வெறும் அலங்காரம் மட்டுமல்ல. கட்டிடக்கலையின் அம்சங்கள், பொருளின் வடிவமைப்பு மற்றும் சுற்றுசூழல் உளவியல் போன்ற பல அம்சங்கள், உட்புற பரப்பை, நேர்த்தியாகவும், படைப்புத்திறன் மிக்கதாகவும் மாற்றும் பணியில் கலந்திருக்கின்றன. ஒரு உட்புற அலங்கரிப்பாளர் என்பவர், தனது திறமையை வெளிப்படுத்தும்போது, வாடிக்கையாளரின் தேவையையும் மனதில் கொண்டு, அவரை திருப்திப்படுத்த வேண்டும். தான் ஏற்கனவே திட்டமிட்ட வடிவமைப்பு முறையை மாற்றம் செய்யவேண்டிய நிலை வந்தால், வாடிக்கையாளரின் தேவை மற்றும் விருப்பத்தைப் பொறுத்து, அதை மாற்றிக்கொள்ள அலங்கரிப்பாளர் தயங்கக்கூடாது.
உள்கட்டமைப்பின் பிரம்மாண்ட வளர்ச்சியால், கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் என பல்வேறு தரப்பிலும் இன்டீரியர் டிசைன் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


இத்துறைக்கு தேவைப்படும் பண்புகள்: நல்ல படைப்புத் திறன்தான் இத்துறைக்கு அடிப்படையான மூலதனம். இத்தொழில் மீது மிகுந்த ஆர்வம் இருக்க வேண்டும். அலங்காரம் தொடர்புடைய பலவித பொருட்களைப் பற்றிய விரிவான அறிவும், அறிமுகமும் இருக்க வேண்டும். மேலும், எந்தெந்த வகை அலங்காரங்களுக்கு, எவ்வளவு பணம் செலவாகும் என்பதைப் பற்றியும் தெளிவான அறிவை பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான், வாடிக்கையாளர்களின் நிதிநிலைக்கேற்ப, ஒரு தெளிவான திட்டத்தை உடனடியாக தயாரித்து வழங்க முடியும்.

படிப்புகள்: ஜெய்ப்பூரில் உள்ள அயோஜன் ஸ்கூல் ஆப் ஆர்க், இன்டீரியர் டிசைன் பிரிவில் 5 ஆண்டு படிப்பாக வழங்குகிறது. சென்னை பல்கலை கல்லூரிகளில் பி.எஸ்சி., மற்றும் பி.எப்.ஏ., படிப்பாக வழங்கப்படுகிறது. பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மூன்று ஆண்டு பி.எஸ்சி., ஓர் ஆண்டு மற்றும் இரண்டு ஆண்டு டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ படிப்புகளாக வழங்குகின்றன. கோவை அவினாசிலிங்கம் பல்கலை பி.எஸ்சி., ஹோம் சயின்ஸ் உடன் இன்டீரியர் டிசைன் பாடப்பிரிவை வழங்குகிறது.


கல்வி தகுதி: மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்திருப்பதே, உட்புற அலங்கார படிப்பில் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதி. பலவித கல்வி நிறுவனங்களில், உங்களின் வரைதல் மற்றும் வடிவமைப்பு திறனை சோதிக்கும் வகையில், நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. எனவே, இத்தேர்வுகளில் உங்களின் திறமைகளை நிரூபிக்க வேண்டும்.

இப்படிப்பை மேற்கொள்வதற்கான சில முக்கிய கல்வி நிறுவனங்கள்:

Madras University
AvinashilingamUniversity, Coimbatore
Mangalore University
University of Mumbai
Arch Academy of Design, Jaipur
Amity School of Design, Delhi
Guru Nanak Dev University, Amristar


கடையநல்லூரில் தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்னை :தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா ?


தாண்டவமாடும் தண்ணீர் பிரச்னையால் கடையநல்லூர் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடையநல்லூர் நகராட்சி பகுதியில் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பெரியாற்று படுகையில் முற்றிலுமாக நீர்பிடிப்பு குறைந்துவிட்டது. இப்பகுதியில் குடிநீருக்காக அமைக்கப்பட்ட கிணறுகளிலும் நீர்மட்டம் முழுவதும் குறைந்துவிட்ட நிலையில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலமாக வரக்கூடிய தண்ணீர் வினியோகம் தான் தற்போது பரவலாக மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
கடுமையான குடிநீர் பற்றாக்குறையை அடுத்து கடையநல்லூர் நகராட்சியில் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்வதற்கான ஏற்பாடு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நாளொன்றிற்கு நான்கு லாரிகள் மூலமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் நகராட்சி மூலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த குடிநீர் வினியோகம் 10 நாட்களுக்கு ஒருமுறை தான் என்ற நிலையும் இருந்து வருகிறது. லாரி மூலம் வினியோகம் செய்யப்படுகின்ற தண்ணீரும் பொதுமக்களுக்கு தட்டுப்பாடான நிலையிலேயே கிடைத்து வருகிறது.
இதனிடையில் குடிநீர் முறையாக வழங்கிட கோரி நகராட்சி நிர்வாகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு வலியுறுத்தி வரும் போராட்டங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வறட்சி நிவாரணத்தின் சிறப்பு நிதி மூலம் கடையநல்லூர் நகராட்சியில் பொதுமக்களின் குடிநீர் தேவையை கருத்திற் கொண்டு போர்க்கால அடிப்படையில் முறையான ஏற்பாடு செய்ய வேண்டுமென்ற கோரிக்கை மக்கள் மத்தியில் ஒட்டுமொத்தமாக எழுந்துள்ளது.
இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ""கடையநல்லூர் நகராட்சியில் குடிநீர் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வெயிலின் தாக்கம் இதேநிலையில் தொடர்ந்தால் அடுத்த வாரம் தற்போது வழங்கப்பட்டு வரும் தண்ணீரை கூட பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய முடியாத நிலைதான் இருக்கக்கூடும். இருப்பினும் குடிநீர் வினியோகம் பற்றாக்குறையை தவிர்த்திட லாரிகள் மூலம் வழங்க எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது'' என்றார்.
குடிநீர் பற்றாக்குறை கடையநல்லூரில் தாண்டவமாடும் நிலையில் மாவட்ட நிர்வாகம் வறட்சி நிவாரண சிறப்பு நிதியினை ஒதுக்கீடு செய்து லாரிகள் மூலம் கூடுதலான வகையில் அனைத்து வார்டு மக்களுக்கும் குடிநீர் கிடைத்திட ஏற்பாடு செய்திட வேண்டும் என்பதே நகராட்சி மக்களின் உடனடி எதிர்பார்ப்பாகும்.

புதன், 19 செப்டம்பர், 2012

முஸ்லிம்களின் போராட்டங்கள் தொடரும் - பேராசிரியர் .கே.எம்.காதிர் மொஹிதீன்

முஸ்லிம்களின் உயிரினும் மேலான முஹம்மது நபி (ஸல் ) அவர்களின் வாழ்க்கையை கொச்சை படுத்தி எடுக்கப்பட்ட படத்திற்கு தடை வித்தித்து ,அதனை எடுத்தவர்களின் மீது நடவடிக்கைகள் எடுக்கும் வரை முஸ்லிம்களின் போராட்டங்கள் தொடரும் - பேராசிரியர் .கே.எம்.காதிர் மொஹிதீன் 


இஸ்லாத்தை இழிவுப்படுத்தி அமெரிக்க யூதரால் தயாரிக்கப்பட்டு கிறிஸ்துவ பாதிரியாரால் விளம்பரப் படுத்தப்பட்டுள்ள ‘இன்னசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்’ திரைப்படத்தை அதன் விளம்பர காட்சிகளை தடை செய்து அதற்கு காரணமானவர்கள் மீது அமெரிக்க அரசு நடவடிக்கை எடுக்காத வரை உலக முஸ்லிம்களின் கொந்தளிப்பு அடங்காது. யாராலும் அடக்கவும் முடியாது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு விளம்பரப் படுத்தப்பட்டுள்ள ‘இன்னோசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்"என்ற திரைப்பட முன்னோட்ட காட்சிகள் உலக முஸ்லிம்களை கொந்தளிக்க செய்து அமெரிக்க துhதரகங்களுக்குமுன்னால் ஆர்ப்பாட்டம் போராட்டம் என வீரியமடைந்து வருகிறது. சென்னையில் அமெரிக்க துணைத்துhதரகத்துக்கு முன்னால் கடந்த 5 நாட்களாக நடைபெறும் முற்றுகை போராட்டங்கள் துhதரக செயல்பாடுகளையே முடக்கிப் போட்டுவிட்டன.

இன்று (18-09-2012) மாலை நான்கு மணிக்கு நடைபெற்ற போராட்டம் சென்னையின் பிரதான பகுதிகளை செயலிழக்கச் செய்து விட்டது. பிற்பகல் 3 மணி முதல் மாலை 7 மணிவரை அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் போக்குவரத்து நெரிசலால் திக்கு முக்காடிப் போயின போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் களைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இந்த போராட்டம் முடிந்ததற்கு பிறகு ஒளிபரப்பு செய்யப்பட்ட கலைஞர் செய்திகள் இரவுப் பதிப்பு செய்தி அறிக்கையில் நேர்க்கானலுக்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அழைக்கப்பட்டிருந்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அளித்த பதில்களும்:-

கேள்வி:- சென்னையின் பிரதான சாலையான அண்ணாசாலையில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பிக்கும் வகையில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. வாகனங்களில் வருவோருக்கு ஏன் எதற்கு இந்த போராட்டம் என்றே தெரியவில்லை இந்த போராட்டம் தேவைதானா? என்பதே முதல் கேள்வி எதற்காக இந்த போராட்டம்?

பேராசிரியர் பதில்:- போராட்டம் தேவை தானா என்ற கேள்வியே இப்போது இல்லை. போராட்டம் தேவை என்ற உணர்வே முஸ்லிம்கள் மனதில் உள்ளது. மற்ற விஷயங்களாக இருந்தால் தேவையா? தேவையில்லையா என்ற கேள்வி எழும். இப்பொழுது நடைபெறுவதில் அந்த பிரச்சனையே இல்லை.

இது தேவைதான் என்ற அளவுக்கு முஸ்லிம்களின் உணர்வு உள்ளது. அதற்கு என்ன காரணம் என்றால் நபிகள் நாயகத்தை பற்றி அவதூறான  செய்தி அருவருக்கத்தக்க படங்கள் வெளியிடப்பட்டுள்ளன!

என்னை பொருத்தவரை மிதவாதி, இதவாதி என்று சொல்வார்கள். நான் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னால் அந்த காட்சிகளை என்னிடத்தில் சொல்லிக் காட்டினார்கள். என்னாலேயே தாங்க முடியவில்லை. ஆனால் அதைப்பார்க்கின்ற இளைஞர்கள், வாலிப பிள்ளைகள் நிச்சயமாக கொந்தளிப்பார்கள்.

அதனுடைய வெளிப்பாடுதான் இப்பொழுது நடந்துக்கொண்டு இருக்கிறது. இது உலகம் முழுவதும் நடக்கும்.

தமிழ்நாட்டில் கடந்த 5 நாட்களாக நடக்கின்ற கொந்தழிப்புகளை நாம் செய்தியாக பார்க்கிறோம். ஆனால் வெளிநாடுகளில் என்ன நடக்கிறது என்று முழுமையாக நமக்கு தெரிவதில்லை. இதை விட பன்மடங்கு கொந்தளிப்பு வெளிநாடுகளில் நடந்து கொண்டு இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்றால் இஸ்லாமிய மார்க்கத்தைப்பற்றி குற்றம் குறை சொல்வது என்பது- முஸ்லிம்களைப் பற்றி விமர்சனம் செய்வது என்பது வேறு. ஆனால் நபிகள் நாயகத்தைப் பற்றி அவதூறு பரப்புவது என்பதை எந்த ஒரு முஸ்லிம்களும் தாங்கிக்கொள்ள மாட்டான். அதற்கு காரணம் என்னவென்றால், யாரை விடவும், தன்னை விடவும், தன்னுடைய தாய்,தந்தயரை விடவும் எதை விடவும் மிக உயர்வாக முஸ்லிம்கள் மதிப்பது நபிகள் நாயகத்தை தான்.

இஸ்லாத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு தான் அந்த உணர்வுகளின் ஆழம் தெரியும். இதை நான் சொல்லும் போது இவருக்கு என்ன இவ்வளவு வெறியா? என்று எண்ணத் தோன்றும் இது இதயத்தில் ஏற்றுக்கொண்டு இருக்கக்கூடிய ஒரு கொள்கை.

அப்படிப்பட்ட நபிகள் நாயகத்தைப் பற்றி ‘ இன்னசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்’ என்ற பெயரில் அமெரிக்காவில் உள்ளகலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாம் பேசில் என்ற யூதர் இந்த படத்தை தயாரித்துள்ளார். இவர் சர்ச்சைக்குரிய ஆபாச படங்களை நிறைய தயாரித்துள்ளார். இதற்காக இவர் மீது பல கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இப்படிபட்டவர் சமீபத்தில் ‘டெசட் வாரியர்’ பாலைவன வீரர் என்ற பெயரில் ஒரு படம் தயாரித்து 60 நடிகர் நடிகைகளை நடிக்க செய்து அந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

இந்த படத்திற்கு 50 லட்சம் டாலர்களை 100 யூதர் செல்வந்தர்களிடம் இருந்து வசூலித்துள்ளார் 35 பேருடைய ஒத்துழைப்போடு 3 மாதங்களில் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஜார்ஜ் என்று ஹீரோவிற்கு பெயர் வைத்தார். இந்த படத்தை எடுத்து முடித்ததும் ஹீரோவின் பெயரை முஹம்மது என்றும், படத்தின் பெயரை ‘இன்னசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்’ என்றும் மாற்றியுள்ளார்.

இப்படி மாற்றியதோடு மட்டுமில்லாமல் இந்த வசனங்களையும் தன் இஷ்டத்துக்கு மாற்றியுள்ளார் இதற்காக அந்த நடிகர், நடிகைகள் இவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆக ஒரு மிகப்பெரும் மோசடி செய்து இந்தப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் முஸ்லிம்களை மோசடிகாரர்கள், கள்ளக்கடத்தல்காரர்கள், இஸ்லாம் மார்க்கம் புற்று நோய் என்று சித்தரிக்கப்பட்டுள்ளன.

இவைகளைக் கூட ஒரு முஸ்லிம் பொறுத்துக்கொள்வான். நபிகள் நாயகத்துக்கு உருவமில்லை. நபி உருவப்படத்தை வெளியிடுவதுமில்லை. ஆனால் நபிகள் என்று ஒரு உருவத்தை அமைத்து முஹம்மது என்று பெயர் சூட்டி, தாடி வைத்து ஒருவிளைமாதுடன் உறவு கொள்வதாக காட்சி அமைத்து, இன்றைக்கு வரையில் காட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்றால் அதை யார் பொருத்த கொள்ள முடியும்? இந்தியாவில் இதை தடை செய்திருக்கிறார்கள். ஆனால் அமெரிக்காவில் ஏன் தடை செய்யவில்லை என்பதுதான் கேள்வி.

கேள்வி:- உங்களுடைய தெளிவான விளக்கத்தில் இருந்து இந்தத் திரைப்படம் முஸ்லிம்களின் உள்ளங்களை காயப்படுத்துவதற்காக வேண்டும் என்றே எடுக்கப்பட்டுள்ளது என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உங்களுடைய உலக முஸ்லிம்களுடைய கோரிக்கை இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்பது தானே?

பேராசிரியர் பதில்:- உலக இஸ்லாமியர்களின் கோரிக்கை என்பதை நான் தெளிவுப்படுத்துகிறேன் அமெரிக்காவின் கொள்கை என்பது, இஸ்லாத்தை முஸ்லிம்களை எதிர்க்கும் கொள்கை என்ற பொதுவான நம்பிக்கையே உலக முஸ்லிம்களிடம் உள்ளது. அது இல்லை என்று நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அமெரிக்காவையே சார்ந்தது.

அடுத்து புனித திருக்குர்ஆனை எரிக்கக்கூடிய நிகழ்ச்சிகள் அங்கு தொடர்ந்து நடந்து வருகின்றன. முதலில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா ராணுவ வீரர்கள் அதைச் செய்தார்கள். அதற்கு மறுப்பு, மன்னிப்பும் அமெரிக்கா தெரிவித்தது. அதே போன்று அமெரிக்க ராணுவ வீரர்கள் ஈராக்கில் அவமரியாதை செய்தனர். அதற்கு பிறகு அமெரிக்காவில் ஒரு பாதிரியார் அவர் பெயர் டெர்ரி ஜோன்ஸ் திருக்குரானை எரிக்கும் போராட்டத்தை முன் கூட்டியே அறிவித்து, அவர் எரித்ததை அமெரிக்க தொலைக்காட்சிகள் உலகம் முழுவதும் ஒளிபரப்பு செய்தன.

அமெரிக்க அரசு அதை தடுக்கவும் இல்லை அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் இல்லை. அதைத்தொடர்ந்து இப்பொழுது நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தும் திரைப்படத்தை எடுத்து இப்பொழுது ஒளிபரப்பு செய்கின்றார்கள். அதை இன்று வரை தடை செய்ய வில்லை.

இது உலகலாவிய முஸ்லிம்கள் உணர்வை புண்படுத்துகிறது. உள்ளங்களை காயப்படுத்துகிறது என்று கருதி அமெரிக்க அரசு இதை தடை செய்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை செய்யவில்லை. அப்படியானால் குர் ஆனை எரிப்பதற்கு அவர்கள் உடன்படுகிறார்களா? அதனுடைய தொடர்ச்சிதான் இது. எனவே முஸ்லிம்களின் உணர்வுகளை காயப்படுத்துவதுதான் அமெரிக்காவின் நோக்கமா? என்பதே முஸ்லிம்களின் கேள்வி.

எனவே தான் இந்த போராட்டங்கள் தொடர்கின்றன. என்னை இந்த போராட்டத்திற்கு அழைத்தார்கள். நான் செல்ல வில்லை என்னை போன்று வயதானவர்கள் நடுநிலையாக சிந்திக்க கூடியவர்கள் பொறுமையாக இருக்கலாம் ஆனால் வாலிபனாக உள்ளவன் இந்த காட்சிகளைப் பார்க்கிறான் கொந்தளிக்கிறான் உணர்வுகளை வெளிப்படுத்த என்ன செய்வதென்று தெரியாமல்தான் இப்படிப்பட்ட செயல்களை செய்கிறான்.

கேள்வி:- உலகம் முழுவதும் இது போன்ற போராட்டங்கள் நடைபெறுகின்றன அமெரிக்காவிலும் நடைபெறுகின்றன. அமெரிக்காவில் இந்த அளவிற்கு இல்லை. சென்னையில் அதிகம் நடைபெறுகின்றன. சென்னையில் நடைபெறும் போராட்டம் அமெரிக்காவில் எட்டுமா?

பேராசிரியர் பதில்:- நிச்சயம் எட்டும் அமெரிக்காவில் முஸ்லிம்கள் அதிகம் இல்லை. முஸ்லிம்கள் அதிகம் உள்ள நாடுகளில் போராட்டம் தீவிரமாக நடைபெறுகிறது. குறைந்த பட்சம் அமெரிக்கா இணைய தளத்தில் உள்ள படங்களை தடைசெய்து இருக்கலாமே! அதை ஏன் நிறுத்தவில்லை? முதலில் இணையதளங்களில் உள்ள படங்களை நிறுத்தட்டும் அதற்கு பிறகு படம் எடுத்தவன், வெளியிட்டவன் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படும்

அமெரிக்கா இதை செய்யும் வரை இந்த போராட்டங்கள் ஓயாது. இதை  நிறுத்தவும் யாராலும் முடியாது, மிதவாதிகள் வயதானவர்கள் அதை எரிக்க வேண்டாம், இதை செய்ய வேண்டாம் என சொல்லலாம் ஆனால் உணர்வு என்பது மிக ஆழமானது அந்த உணர்வை நாம் நிறுத்த முடியாது அது வெளிப்பட்டே தீரும். இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட்டார்

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் இல்லை: குடியரசுத் தலைவர்


உலகத்தரம் கொண்ட கல்வி நிறுவனங்களாக மலர்வதற்கு இந்தியாவின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்கள் கூட்டாக சேர்ந்து முயற்சிகள் எடுக்க வேண்டும் என இந்திய தொழில்நுட்ப மையங்களில் ஒன்றான கரக்பூர் ஐஐடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார்.
கரக்பூர் ஐஐடி தொடங்கப்பட்டு அறுபது ஆண்டுகள் பூர்த்தியாவதைக் கொண்டாடும் நோக்கில் நடந்த வைரவிழா நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பங்கேற்றபோது இதனைத் தெரிவித்துள்ளார்.
மாணவர்களிடையே அறிவியல் தேடலையும், ஆராய்ச்சி மனோநிலையையையும் ஊக்குவித்து வளர்க்க வேண்டிய உடனடித் தேவை இந்தியாவுக்கு உள்ளது என்று பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்கள் உலகத்தரம் வாய்ந்தவையாக இல்லாதிருப்பதன் காரணங்கள் பற்றி இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வி.சி.குழந்தைசாமி தமிழோசையிடம் கருத்து வெளியிட்டார்.
"கல்வி புகட்டும் அதேநேரத்தில் ஆராய்ச்சிகள் செய்து அறிவுப் பெருக்கத்துக்கு பங்காற்ற வேண்டிய இடங்களாக உயர்கல்வி நிறுவனங்கள் இருக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் அந்த நிலை இல்லை" என்று குழந்தைசாமி கூறினார்.
"இந்தியாவில் பெரும்பான்மையான உயர்கல்வி நிறுவனங்களில் பாடம் புகட்ட வேண்டியது மட்டுமே ஆசிரியர்களுக்கு கடமையாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்கள் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதை அனுமதிப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் கல்விக் கட்டமைப்பில் இடமில்லை" என்று அவர் நொந்துகொண்டார்.
இந்த நிலை மாறினால்தான், உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை இந்தியாவால் உருவாக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்

திங்கள், 17 செப்டம்பர், 2012

விரைவில் 3,000 முதுகலை ஆசிரியர் நியமனம் : அமைச்சர் சிவபதி

"தமிழகத்தில் விரைவில், 3,000 முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர்,'' என, தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பேசினார்.
தமிழக மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், முதல் கட்டமாக, 1,080 பணியிடங்களுக்கு மாவட்ட அளவிலான கவுன்சிலிங், ஆன்-லைன் மூலம் நேற்று முன்தினம் நடந்தது. அதில், 397 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மீதமுள்ள, 683 காலிப் பணியிடங்களுக்கு, மாநில அளவிலான கவுன்சிலிங், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.இந்தியாவிலேயே முதல் முறையாக, ஆன்-லைன் மூலம், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதிவு மூப்பு அடிப்படையிலான பணி நியமன கவுன்சிலிங் நிகழ்ச்சிக்கு, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் தேவராஜன் முன்னிலை வகித்தார்.

தமிழ், ஆங்கிலம், தெலுங்கு உட்பட, 13 பாடங்களுக்கு கவுன்சிலிங் நடந்தது. இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் சிவபதி பேசியதாவது:தமிழக அரசு இதுவரை, ஒளிவு, மறைவில்லாமல் கவுன்சிலிங் மூலம் பணி மாறுதல், பணி நியமன ஆணைகளை வழங்குகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில், முதல் முறையாக இணையதளம் (ஆன்-லைன்) மூலம் கவுன்சிலிங் நடக்கிறது. மாவட்ட அளவிலான கவுன்சிலிங் நேற்று நடந்தது. சொந்த மாவட்டங்களில் பணியிடம் இல்லாதவர்களுக்கு, இன்று (நேற்று) விரும்பும் மாவட்டத்தை தேர்வு செய்யும் கவுன்சிலிங் நடக்கிறது. பணி ஆணை பெறும் ஆசிரியர்கள், அர்ப்பணிப்போடு பணியாற்ற வேண்டும். பெற்றோர் போல மாணவர்களிடம் நடக்க வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியம் துவங்கி, 25 ஆண்டு கால வரலாற்றில், ஆசிரியர், ஆசிரியர் அல்லாதோர் என மொத்தம், ஒரு லட்சத்து, 3,000 பேர் நியமிக்கப் பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத, 59 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. சொந்த மாவட்டங்களில் வேலை கிடைக்காதோர் கவலைப்பட வேண்டாம். விரைவில், 3,000 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. அப்போது, "சீனியாரிட்டி' அடிப்படையில் உங்களுக்கு முன்னுரிமை கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார். 

புதன், 12 செப்டம்பர், 2012

"காயிதேமில்லத் பல்கலைக் கழகம்" காலத்தின் கட்டாயம் !


இந்திய நாட்டின் அரசியல் சாசனத்தை உருவாக்கித் தந்த அரசியல் நிர்ணய சபையில் எத்தனையோ தமிழ்நாட்டுத் தலைவர்கள் இருந்தும் ,தனியொருவராக நின்று இந்தியாவின் ஆட்சிமொழியாகும் தகுதி தொன்மையான , நான் பேசும் தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு ,அந்த தமிழ்மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று குரல் எழுப்பிய பெருந்தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (ரஹ்) ஆவார்கள் .

காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தவுடன் ,தன கல்லூரி படிப்பை தூக்கி எறிந்துவிட்டு ,ஒத்துழையாமை இயக்க மாநாட்டை தான் பிறந்த நெல்லை சீமையில் வெற்றிகரமாக நடத்திக்காட்டிய தலைவர் காயிதே மில்லத் (ரஹ் )

பெரியார் ,அண்ணா ,காமராஜர் ,போன்ற தலைவர்களை எல்லா தலைமுறையினரும் அறியும் பொருட்டு அவர்கள் பெயரில் பல்கலைக்கழகங்கள் உள்ளன .அதுபோல் ,நாட்டுப்பற்றாலும் ,மொழிப்பற்றாலும் உயர்ந்து நிற்கும் அந்த பெருமகனார் யார் என்று வாழும் தலைமுறையும் , எதிர்வரும்  தலைமுறையும் அறியும் பொருட்டு ,தமிழகத்தில் காயிதே மில்லத் பல்கலைக் கழகம் தமிழக அரசு உருவாக்க வேண்டும் .இந்தக் கோரிக்கையை வென்றெடுப்பது தமிழக மக்களின் அனைவரின் கடமை .

டிப்ளமோ படித்தவர்களுக்கு டைடல் பார்க்கில் வேலை : 20 ஆயிரம் சம்பளம்


சென்னையில் இயங்கி வரும் TIDEL PARKல் காலியாக உள்ள Technical Assistant, Store Keeper பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1.பணி: Technical Assistant
கல்வித்தகுதி: மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன்ஸ் போன்ற ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ முடித்து 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2.பணி: Store Keeper
கல்வித்தகுதி: ஏதாவதொரு இன்ஜினியரிங் பிரிவில் டிகிரி அல்லது டிப்பளமோ அல்லது மெட்ரீயல் மேனேஜ்மென்டில் டிப்ளமோ முடித்து 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மேற்கண்ட இரு பணிகளுக்கும் மாதம் ரூ. 20.000

வயதுவரம்பு: 01.09.2012 தேதிப்படி 40-க்குள் இருக்க வேண்டும்.

தகுதியானவர்கள் தங்களைப் பற்றிய முழு விவரங்களை 20.09.2012-க்குள் அனுப்ப வேண்டும்.

தங்களைப்பற்றிய பயோ-டேட்டாவை அனுப்ப வேண்டிய முகவரி
The Managing Director, TIDEL Park Limited, 1st Floor, ''A'' Block, No: 4, Rajiv Gandhi salai, Taramani, Chennai - 600113

மேலும் முழுமையான தகவல்களை அறிய www.tidelpark.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
இ-மெயில் முகவரி: tidel@vsnl.com