நாள் : இன்ஷால்லாஹ் 08 /07 /2012 ஞாயிறு - இரவு 8 மணி இடம் : பஜார் திடல் ,மேலப்பாளையம்
கோரிக்கை முழக்கம் : சமுதாயப் பெருந்தலைவர் பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன் சமுதாயப் போர்வாள் எம்.அப்துல் ரகுமான் M P ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
விமானத்தில் செல்லும்போதும், "மொபைல் போனில்' பேசுவது, உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கொண்ட புதிய விமானத்தை, பிரிட்டனின் விர்ஜின் நிறுவனம், விரைவில் டில்லியிலிருந்து லண்டனுக்கு இயக்கவுள்ளது.
இதுகுறித்து பிரிட்டனின் விர்ஜின் விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஸ்டீவ் ரிக்வே கூறியதாவது: தற்போது விமானங்களில் பயணிப்போர், "மொபைல் போனில்' பேச முடியாது. ஆனால், நாங்கள் புதிதாக, டில்லியிலிருந்து லண்டனுக்கு, அடுத்த மாதம், 11ம் தேதியில் இருந்து இயக்கவுள்ள, ஏ 330 ரக விமானத்தில், "மொபைல் போனில்' பேசும் வசதியை ஏற்படுத்த உள்ளோம்.
இதற்காக, அந்த விமானத்தில் "ஏரோ மொபைல்' தொழில்நுட்ப வசதியை ஏற்படுத்தவுள்ளோம். இதன் மூலம், அந்த விமானம், தரையிலிருந்து 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தாலும், அதிலிருந்தபடி "மொபைல் போனில்' பேசவும், குறுந்தகவல்களை அனுப்பவும் முடியும். இதுதவிர, தொடு திரை பொழுபோக்கு வசதியையும் அறிமுகப்படுத்த உள்ளோம். அந்த விமானத்தில் மேலும் பல வசதிகளையும் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு ஸ்டீவ் ரிக்வே கூறினார்.
சத்துணவு பணியாளர் நியமனம் தொடர்பாக அரசு அலுவலர்கள் மீது புகார் எழுந்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சத்துணவு பணியாளர் நியமனம் தொடர்பான நேர்முகத் தேர்வு ஜூலை 3-ம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் சத்துணவு திட்டத்தின் கீழ் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 35 சத்துணவு அமைப்பாளர், 28 சமையலர், 153 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு மாவட்ட அளவில் ஜூலை 3-ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
நேர்முகத் தேர்வுக்கு கடிதம் வரப்பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் ஜூலை 3-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும்.
சத்துணவு திட்டத்தின் கீழ் வரப்பெற்ற விண்ணப்பங்களில் விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோருக்கு தகுதி அடிப்படையில் 25 சதவீத பணியிடங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களது தகுதியின் அடிப்படையில் 3 சதவீத ஒதுக்கீடு செய்யப்படும். ஊனத்தின் சதவீதம், பணிபுரிவதற்கான உடல் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் பரிசீலிக்கப்படும்.
சத்துணவு பணியாளர்களுக்கான தேர்வு நேர்மையாகவும், முறையாகவும், நியாயமானதாகவும் மற்றும் அரசு விதிகளில் குறிப்பிட்டுள்ள தகுதியின் அடிப்படையில் நடத்தப்படும்.
சத்துணவு பணியாளர் காலியிடங்களுக்கு வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றும் நபர்களிடம் பொதுமக்கள் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். சத்துணவு பணியாளர் நியமனத்திற்கு இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்.
சத்துணவு பணியாளர் நியமனம் தொடர்பாக அரசு அலுவலர்கள் மீது புகார்கள் ஏதும் வந்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) மற்றும் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி ஆணையர்களை தொடர்பு கொள்ளலாம்.
காஷ்மீரில் 200 ஆண்டுகள் பாரம்பரியமிக்க சூஃபி தர்காவில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
தீவிபத்து குறித்து தகவல் அளித்தும் தீயணைப்பு வாகனங்கள் வர ஒரு மணி நேரத்துக்கும் மேல் தாமதமானதாகக் கூறி பொதுமக்கள் குற்றம்சாட்டினர். எனினும் கூட்டம் அதிகமாக இருந்ததால் சம்பவ இடத்தை அடைவதில் சிரமம் ஏற்பட்டதாகவும் வேறு தாமதம் எதுவும் இல்லை என்று தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
இதனால் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கூட்டத்தைக் கலைக்க கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசினர். மேலும் தடியடியும் நடத்தப்பட்டது. இந்த சம்பவங்களைத் தொடர்ந்து அப்பகுதியில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன.
இந்த மோதல்களில் 10 போலீசார் உள்ளிட்ட 20 பேர் காயமடைந்தனர்.
நேற்று (24 /06 /2012 ) லால்பேட்டை மாநகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது .அந்த கூட்டத்தில் சமுதாயத் தலைவர் பேராசிரியர் .கே.எம்.காதிர் மொஹிதீன் அவர்களும் ,சமுதாய போர்வாள்,வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரகுமான் அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள் .என்றைக்குமே ,முஸ்லிம் லீக் தலைவர்களுக்கு பிறரை சாடி பேசும் பழக்கம் கிடையாது .ஆனால் ,உண்மைக்கு பங்கம் விளைவிக்க யாரும் முயற்சித்தால் ,அதனை தடுத்து உண்மையை சமுதாயம் அறியச்செய்வது அவர்களின் கடமை .எனவே ,பொய்யான பேச்சுக்கள் ,தமிழ்நாடு தௌஹீத் ஜமாத்தினரால் சுனாமி திருடர்கள் என்று அழைக்கப்படும் தமுமுக வினர் ,குறிப்பாக அதன் தலைவர் ஜவாஹிருல்லா பல மேடைகளில் ,முஸ்லிம் தலைவர்களை ,நம் சமுதாயத் தந்தை காயிதே மில்லத் (ரஹ்) அவர்களையும் சேர்த்து விமர்சித்து ,பொய் குற்றச்சாட்டு கூறி வருவதை சமுதாய மக்கள் பார்த்து வருகின்றனர் .
முன்பு ,தமுமுக விலிருந்து TNTJ துவங்கிய கால கட்டத்தில் ,திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் நடந்த தமுமுக கூட்டத்தில் ,அரசியல் நிர்ணய சபையில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை பற்றி ,அன்றிருந்த எந்த முஸ்லிம் தலைவரும் பேசவில்லை என்று நம் சமுதாயத்தந்தை காயிதே மில்லத் (ரஹ் ) அவர்களை குறைசொல்ல எத்தனித்து ஜவாஹிருல்லா பேசிய போது ,அவரின் பேச்சை துணிவுடன் சமுதாய இளைஞர்கள் தடுத்து வெள்ளை காகிதத்தில் அரசியல் நிர்ணய சபையில் நடந்ததை சுட்டி காட்டி எழுதிக்கொடுத்த போது பதில் சொல்லாமல் வேறுபக்கம் பேச்சை திசை திருப்பி பேச்சை முடித்து விட்டு சென்றார். இது அவர்களின் வாடிக்கை ஆகிவிட்டது ,
அதுபோல் நமது சமுதாயத்தின் போர்வாளாக நாடெங்கும் சுற்றி சுழன்று ,சமுதாய மக்களுக்காக பாடுபட்டு வரும் எம்.அப்துல் ரகுமான் எம்.பி அவர்கள் நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை பற்றி வாய்திறக்கவில்லை என்று நாக்கூசாமல் ,தான் பேசும் மேடைகளில் பகிரங்கமாக பொய் பிரச்சாரம் ஜவாஹிருல்லா செய்து வருகின்றார் என்று செய்தி பலதடவை நம் சமுதாய பேரியக்கமாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களிடம் புகார்கள் வந்தன .அவர்கள் அதனை பெரியவிசயமாக எடுக்க வேண்டாம் , நமது பணிகள் நம் சமுத்திற்கு தெரியும் ,அதுவும் நாடாளுமன்ற நடவடிக்கைள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது ,அவருக்கு பதில் சொல்ல வேண்டாம் என்று கூறி ,தமது சமுதாய பணிகளை கவனித்து வந்தனர் .ஆனால் ,ஜவாஹிருல்லாவின் பொய் பிரச்சாரம் நின்றபாடில்லை .எனவே ,லால்பேட்டை பொதுக்கூட்டத்தில் பேசிய எம்.அப்துல் ரகுமான் எம்.பி. அவர்கள் காலத்தின் கட்டாயத்தால் ,சமுதாயத்தில் பொய்ப்பிரச்சாரம் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்! நாடாளுமன்றத்தில் இட ஒதுக்கீடுப்பற்றி நான் பேசவில்லை என்பதை தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ் நிரூபிக்கத் தயாரா? பேசியதை ஆதாரத்துடன் வெளியிட்டால் வருத்தம் தெரிவிக்கத் தயாரா?என்று நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் எம்.பி.பகிரங்க சவால்விட்டு பேசினார் .சவாலை ஏற்றுக் கொள்ள ஜவாஹிருல்லா தயாரா? என்று கூட்டத்திற்கு வந்த சமுதாய இளைஞர்கள் பகிரங்கமாக பேசிக்கொண்டனர் .
ஆதாரத்தை நாமே வெளியிட்டுள்ளோம் ,ஜவாஹிருல்லா என்ன செய்யப்போகிறார் ? அவர்தான் பதிலளிக்க வேண்டும்
எகிப்து அதிபர் தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அரசியல் பிரிவான சுதந்திரம் மற்றும் நீதிக்கட்சியின் வேட்பாளர் முகம்மது முர்ஸி (60) வெற்றிபெற்றார்.
இதற்கான அறிவிப்பை அந்நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையர் பரூக் சுல்தான் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
கடந்த 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்தத் தேர்தலில் முகம்மது முர்ஸிக்கும், முன்னாள் பிரதமர் அகமது சபீக் ஆகியோருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதில், மொத்தம் 51.73 சதீவத வாக்குகளைப் பெற்று முகம்மது முர்ஸி வெற்றி பெற்றார்.முர்ஸிக்கு மொத்தம் 1,32,30,131 வாக்குகளும், அகமது சபீக்கிற்கு 1,23,47,380 வாக்குகளும் கிடைத்தன.
முகம்மது முர்ஸி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டவுடன் கெய்ரோவின் தாஹ்ரீர் சதுக்கத்தில் கூடிய அவரது தொண்டர்கள் முர்ஸிக்கு ஆதரவாகவும், ராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.
முன்னதாக கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். 18 நாள்கள் போராட்டத்துக்குப் பின், ராணுவத்தின் நிர்பந்தம் காரணமாக அவர் பதவி விலகினார். 800 அரசு எதிர்ப்பாளர்கள் உயிரிழப்பதற்கு காரணமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அவர், இப்போது சிறையில் உள்ளார்.
உலகம் முழுவதும் அழியும் நிலையில் இருக்கும் 3 ஆயிரம் மொழிகளை காப்பாற்றும் நோக்கில் பிரத்யேக வெப்சைட்டை கூகுள் உருவாக்கியுள்ளது.
உலகப்புகழ் பெற்ற கூகுள் இணையதளம் அழிந்து வரும் உலக மொழிகளை பாதுகாக்கும் நோக்கில் புதிய இணையதளத்தை உருவாக்கி உள்ளது. அறிஞர்கள் மற்றும் மொழியியல் வல்லுனர்கள் அடங்கிய குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த குழு அழிந்துவரும் மொழிகளை அடையாளம் கண்டு அவற்றை பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். இணையதளத்தில் பொதுமக்கள் பங்கு கொண்டு தங்கள் கருத்துக்கள், தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பொறுப்பு அதிகாரிகளாக க்ளாரா ரிவேரா ரோடரிகஸ் மற்றும் ஜேசன் ரிஸ்மென் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இது குறித்து, ‘’உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கு அதிகமான மொழிகள் உள்ளன. இதில் ஏறக்குறைய 3 ஆயிரம் மொழிகள் வழக்கொழியும் நிலையில் இருக்கின்றன. இவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் 100 ஆண்டுகளில் அழிந்தேபோய்விடும்.
மொழிகள் அழிந்தால் ஒரு சமூகத்தின் வரலாறு, கலாசார பெருமை, பண்பாட்டு சிறப்புகளை எதிர்காலம் அறிய முடியாத சூழல் ஏற்பட்டுவிடும். அதை தடுக்கும் நோக்கில்தான் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
சில மொழிகளை ஒரு சிலர் மட்டுமே பேசிவருகின்றனர். அவர்கள் காலத்தோடு அந்த மொழி அழிந்து விடும் அபாயம் இருப்பதால் அந்த மொழியின் வீடியோ, ஆடியோ பதிவுகள் இந்த இணைய தளத் தில் வெளியிடப்படும். அதை பார்ப்பவர்கள் அந்த மொழி பற்றி தெரிந்துகொண்டால் அந்த மொழி அழியாமல் இருக்கும்’’என்று கூறியுள்ளனர்.