Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

முஸ்லிம்களுக்கு வாழ்வுரிமையை பெற்றுத்தந்த இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் : மு.க.ஸ்டாலின்

அரசியல் நிர்ணய சபை நாடாளுமன்ற, சட்டமன்றங் களில் இடம்பெற்று முஸ்லிம் களுக்கு இட ஒதுக்கீடு கல்வி, வேலைவாய்ப்பு, கலாச்சார தனித்தன்மை களை பாதுகாத்தல் உள்ளிட்ட வாழ்வுரிமையை பெற்றுத்தந்தது இந்திய யூனியன் முஸ்லிம் லீக். முஸ்லிம் சமுதாயத்தை இன்று கண்ணியத்தோடு வழி நடத்துகிறார் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் என முஸ்லிம் மாணவர் பேரவையின் மாநில மாநாட்டில் தி.மு.க. பொரு ளாளரும் முன்னாள் துணை முதல்வருமான தளபதி மு.க.ஸ்டாலின் மனம் திறந்த பாராட்டு தெரிவித்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாணவர் அமைப்பான முஸ்லிம் மாணவர் பேரவையின் மாநில மாநாடு சென்னை வேப்பேரியிலுள்ள பெரியார் திடலில் அக்டோபர் 5ம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணிவரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில்

முஸ்லிம் மாணவர் பேரவை மாநில செயலாளர் ஏ. செய்யது பட்டாணி வரவேற்று பேசினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜகான், எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி., ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொருளாளரும், கேரள அமைச்சருமான பி.கே. குஞ்ஞாலிகுட்டி, தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

 மு.க.ஸ்டாலின் தளபதி மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

முஸ்லிம் மாணவர் பேரவையின் மாநில மாநாடு இங்கு மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. காலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில பொதுக்குழு கூடி 12 தீர்மானங்களை நிறைவேற்றி மாலையில் நடைபெறுகின்ற மாநில மாநாட்டிலும் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன. இங்கு கருத்தரங்கு நிகழ்ச்சியும் நடைபெற்றிருக் கிறது. பல்வேறு தலைப்புகளில் மாணவச் செல்வங்களாகிய நீங்கள் பங்கேற்று அதிலே மிகச்சிறப்பாக உரையாற்றி இருக்கிறீர்கள்.

பேராசிரியர் உரையாற்றும் போது பல்வேறு தலைப்புகளில் உரையாற்றிய மாணவச் செல்வங்களின் மிகச்சிறப்பான உரையை குறிப்பிட்டு சொன் னார். அதைக் கேட்டவுடன் எனக்கு ஒரு வருத்தம் ஏற்பட்டது. இக்கூட்டத்தை பார்த்து மகிழ்ச்சி ஒரு புறம் என்றாலும் அந்த அற்புதமான உரைகளை கேட்க தவறிவிட் டோமோ என்ற வருத்தம்தான்.

என்னை இந்த மாநாட்டிற்கு அழைத்தபோதும் அழைப் பிதழை தந்த சமயத்திலும் நான் எத்தனை மணிக்கு வர வேண்டும் என்று கேட்டேன். 6.30 மணிக்கு வாருங்கள் 8.00 மணிக்கு அனுப்பி விடுகிறோம் என்றார்கள். அவர்கள் முற் கூட்டியே வரச்சொல்லியிருந் தால் கருத்தரங்கில் எழுச்சி யோடு உரையாற்றிய மாணவச் செல்வங்களின் உரையை கேட்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். அந்த மாணவ நண்பர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள் கிறேன்.



இந்த மேடையில் ஒரு பொருத்தம் ஏற்பட்டிருக்கிறது . அது என்ன பொருத்தம் என்றால் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பொருளாளரான பி.கே. குஞ்ஞாலி குட்டியும், திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொருளாளரான நானும் கலந்து கொண்டிருப்பதுதான். திட்டமிட்டுத்தான் அழைத்திருக் கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

மாநாட்டு தீர்மானங்கள்
இங்கே 10 தீர்மானகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அத்தீர்மானங்கள் இந்த மேடையில் முன் மொழியப் பட்டு உங்களால் ஏற்று கொள்ளப் பட்டிருக்கிறது. தீர்மானங்களை நிறைவேற்றித்தாருங்கள் என்று உணர்வு பூர்வமாக கோரி யிருக்கிறீர்கள்.

அத்தீர்மானங்கள் இங்கே முன்மொழியப்பட்டபோது பேராசிரியர் என்னிடத்திலே சொன்னார்; ஏதோ நீங்கள் ஆட்சியில் இருப்பதை போல இந்த தீர்மானங்களை நாங்கள் எடுத்து சொல்கிறோம் என்று இங்கே பேசுகிறபோது கூட அதை எடுத்து சொன்னார்கள். அதை மாற்றிக் கூட சொன்னார்கள் நீங்கள் ஆட்சியில் இருந்திருந்தால் நிச்சயமாக இந்த மேடையி லேயே அதை நிறைவேற்றித் தருவீர்கள் என்ற உறுதி மொழி தந்திருப்பீர்கள் என்றார்கள்.

எனக்கு என்ன உணர்வு எற்படுகிறது என்று கேட்டால் கலைஞர் முதல்வராக, தி.மு.க. ஆட்சியிலே இருந்திருந்தால் இந்த தீர்மானங்களை முன் மொழிய வேண்டிய அவசியமே இருந்திருக்காது, அந்த வாய்ப்பை தமிழக மக்கள் தவற விட்டு விட்டார்கள். நான் உங்களை குறை சொல்ல வில்லை தயவு செய்து யாரும் தவறராக கருதி விடக்கூடாது. தமிழக மக்கள் தவற விட்டு விட்டார்கள். அதனால் இப்பொழுது வேதனை படு கிறார்கள்- வருத்தப்படு கிறார்கள்- துக்கப்படுகிறார் கள்-வெளியிலே சொல்வதற்கு கூச்சப்படுகிறார்கள். உரிமையோடு வரக்கூடியவர்கள்

முஸ்லிம் மாணவர் பேரவையின் இந்த மாநாடு எழுச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மாநாட்டிற்கு சிறப்பு அழைப் பாளர்களாக கேரள மாநில தொழில் அமைச்சர் வந்திருக் கிறார். நான் வந்திருக்கிறேன். தொடர்ந்து வந்து கொண்டி ருக்க கூடியவன்தான். தலைவர் கலைஞர் அவர்களாக இருந் தாலும் சரி திராவிட முன் னேற்றக்கழகத்தில் எங்களை போன்றவர்களாக இருந்தாலும் சரி நீங்கள் அழைக்கிற போதெல்லாம் வரக்கூடியவர் கள். அதையும் தாண்டி உரிமையோடு சொல்ல வேண்டு மானால் நீங்கள் அழைத்தாலும் அழைக்க வில்லையென்றாலும் உரிமையோடு வரக்கூடியவர் கள் நாங்கள். அந்த வகையிலேதான் இந்த நிகழ்ச் சிக்கு நாங்கள் பெருமையோடு வந்திருக்கிறோம். உங்கள் அனைவரையும் சந்திக்கின்ற நல்வாய்ப்பை பெற்றிருக் கின்றேன். அதற்காக முஸ்லிம் மாணவ பேரவை மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிர்வாகிகளுக்கு, அதையும் தாண்டி பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன் அவர் களுக்கு என்னுடைய நெஞ் சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

உரிமைகளை பெற்றுத்தந்த முஸ்லிம் லீக்
இந்திய திருநாடு ஆங்கி லேய ஏகாதிபத்தியத்திற்கு அடிமைப்பட்டிருந்த காலகட்டத் தில் 1906ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி முஸ்லிம் லீக் ஆரம்பிக்கப் பட்டு முஸ்லிம்களின் கலாச்சார தனித்தன்மைகளை பாதுகாத்து, கல்வி வேலை வாய்ப்புகளை உருவாக்கி விகிதாச்சார பிரதிநி தித்துவத்தை பெற்றுத் தந்தது. 1948ம் ஆண்டு மார்ச் மாதம் 10 தேதி சென்னை அண்ணா சாலையில் அமைந்திருக்கக் கூடிய அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி மண்டபத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற பெயரில் இந்த இயக்கத்தை தலைவரக பொறுப்பேற்று அயராது உழைத்திருக்கக்கூடிய அந்த உழைப்பை பாடுபட்டிருக்கக் கூடிய அந்த பண்பை சமு தாயத்தின் வளர்ச்சிக்காக குரல்கொடுத்திருக்க கொண்டி ருக்க கூடிய அந்த உணர்வு களை எல்லாம் நான் இந்த நேரத்தில் நினைத்து பார்க்கி றேன்.


இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவராக இருந்த கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அரசியல் நிர்ணய சபையில் உறுப்பினராக இடம்பெற்று அன்றைக்கே குரல் கொடுத்திருக்கிறார். முஸ்லிம் களின் வாழ்வாதார உரிமைக் காக, இட ஒதுக்கீட்டிற்காக, தனித் தன்மைகளை பாது காக்க வேண்டும் என்பதற்காக அன்றைக்கே குரல் கொடுத் திருக்கக்கூடிய அந்த வரலாற்றை நாம் இன்றைக்கு எண்ணிப் பார்க்கிறோம். இன்னமும் சிறப்பாக சொல்ல வேண்டும். என்றால் இந்தியா வின் ஆட்சி மொழியாக எந்த மொழி இடம் பெற வேண்டும் என்ற பிரச்சினை வந்த நேரத்தில், இலக்கண வளமும் இலக்கிய நயமும் ஒருங்கே அமைய பெற்றிருக்கக்கூடிய என்னு டைய தாய் மொழி தமிழ்தான் இந்தியாவின் ஆட்சி மொழியாக அமைய வேண்டும் என்று குரல் கொடுத்தவர்.

அப்படிப்பட்ட கண்ணியத் திற்குரிய காயிதே மில்லத் தலைமையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடங்கி அவருடைய மறைவுக்குப் பின்னால் மறைந்த பெருமதிப் பிற்குரிய அப்துஸ் ஸமது அவர்கள் இந்த இயக்கத்தை வழி நடத்தி, அவர் மறைவுக்கு பின்னால் இந்த இயக்கத்தை பெருமதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்கள் சிறப்போடும் கண் ணியத்தோடும் வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் சட்டமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பல்வேறு தலைவர்கள் இடம் பெற்று இந்த சமுதாயத்திற்கு நன்மைகளை பெற்று தந்திருக் கிறார்கள். அறிஞர் அண்ணா காலம் தொட்டு கண்ணியத் திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தோடு கைகோர்த்து தோழமை உணர்வோடு, அண்ணா மறைவிற்கு பிறகு கலைஞர் அவர்கள் அதே நிலையை கடைபிடித்து வருகிறார்கள் என்பதை யாரும் மறைக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது.

அந்த உணர்விலேதான் தலைவர் கலைஞர் அவர்கள் சிறுபான்மை முஸ்லிம் சமுதாய பெருமக்களுக்காக எத்தனை யோ சாதனைகளை திட்டங் களை உருவாக்கி தந்திருக் கிறார்கள். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் கல்வி வேலை வாய்ப்பு பெறுவதற்காக முஸ்லிம் சமுதாயத்தை பிற்படுத்தோர் பட்டியலில் சேர்க்க வேண்டு மென கோரிக்கை வைத்த போது அதை நிறைவேற்றி தந்தார். பிற்படுத்தபட்டோருக் கான இட ஒதுக்கீட்டிலிருந்து 3.5 சதவீத தனி இட ஒதுக்கீட்டை முஸ்லிம் சமு தாயத்திற்காக வழங்கியவர் தலைவர் கலைஞர் அவர்கள்.

இதன் காரணமாகத்தான் பொறியியல் கல்லூரியிலும், மருத்துவ கல்லூரியிலும் முஸ்லிம் மாணவர்கள் ஏராள மானோர் பயிலக்கூடிய வாப்பை பெற்றிருக்கிறார்கள் என்பது வரலாறு. இதனை நான் பெருமை யோடு இங்கே குறிப்பிட முடியும்.

பெண்களுக்கு சொத்திலே பங்களிக்கப்பட வேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகிறது. இதற்காக தந்தை பெரியார் அவர்கள் கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானத்தில் மிக முக்கியமானது எது என்றால் சொத்திலே பெண் களுக்கு சம உரிமை தந்திட வேண்டும் என்பதுதான். 1929லே நிறை வேற்றப்பட்ட அந்த தீர்மானத்தை அறுபது ஆண்டு களுக்குப்பிறகு 1989லே நிறைவேற்றித் தந்தது கலைஞர் தலைமையிலான திராவிடர் முன்னேற்ற கழக ஆட்சி.

1969ல் மீலாது நபிக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியும் தி.மு.க. ஆட்சிதான். உருது பேசும் முஸ்லிம்களை பிற்படுத் தப்பட்டோர் பட்டியலில் சேர்த்த தும் தி.மு.கழக ஆட்சிதான். அண்ணா சாலையிலுள்ள கலைக்கல்லூரிக்கு காயிதே மில்லத் பெயர் சூட்டி மகிழ்ந்ததும் தி.மு.கழக ஆட்சிதான். விண் ணப்பிக்கும் அனைவருக்கும் ஹஜ்ஜுக்கு செல்லும் வாய்ப்பு வழங்கியது தி.மு.கழக ஆட்சி தான். 1999ல் சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டு கழகம், 2001லே காயிதே மில்லத் மணி மண்டபம் அமைத்திட ரூ 58 லட்சரூபாய் ஒதுக்கி அந்த பணியையும் தொடங்கி வைத் தது தலைவர் கலைஞர் அவர்கள் தான். சீறாப்புராணம் பாடிய அமுதகவி உமறுப்புலவருக்கு 2008ல் எட்டயபுரத்தில் மணி மண்டபம் அமைக்கப்பட்டது கலைஞ ருடைய ஆட்சியில்தான் என்பதை நான் இங்கு நினைவு படுத்திட விரும்புகிறேன். இப்படி ஒரு பெரிய பட்டியலை நான் தர முடியும். நேரத்தின் அருமை கருதி நான் சுருக்கமாகவே இவைகளை எடுத்து நான் சொல்லியிருக் கிறேன். முஸ்லிம் மாணவர் பேரவையில் இருந்து உருவான தலைவர்கள்

மாணவச்செல்வங்கள் ஒன்றிணைந்து முஸ்லிம் மாணவர் பேரவை மாநில மாநாட்டை நடத்துகிறீர்கள். இங்கு உரையாற்றியவர்கள் கூட சொன்னார்கள், ‘பெரியவர் களாகிய நாங்கள் இதில் தலையிடவில்லை ஒதுங்கிக் கொண்டோம். முழு பணியையும் மாணவர்கள் இடத்தில் ஒப் படைத்தோம் அவர்கள் சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கிறார்கள்’ என்று.

இங்கே உரையாற்றியவர்கள் குறிப்பிட்டார்கள், முஸ்லிம் மாணவர் பேரவை 1958லே உருவாக்கப்பட்டது என்று. அந்த அமைப்பிலிருந்து உருவானவர் தான் கேரளாவின் முதல்வர் பதவியிலே அமர்ந்த சி.எச். முஹம்மது கோயா அவர்கள். அதைப்போன்று இன்றைக்கு மத்தியிலே அமைச்சர் பொறுப்பிலே உள்ள இ. அஹமது அவர்களும் இந்த அமைப்பி லிருந்து உருவானவர் தான். ஏன், இங்கே அமர்ந்திருக் கக்கூடிய கேரள தொழில்துறை அமைச்சர் பி.கே. குஞ்ஞாலி குட்டியும் இந்த அமைப்பில் இருந்து உருவான வர்தான்.

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் காலத்தில் முஸ்லிம் மாணவர் பேரவையின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டவர்தான் இன்று இயக்கத்தை நடத்தக்கூடிய கண்ணி யத்திற்குரிய அய்யா காதர் மொகிதீன் என்பதையும் நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்பு கிறேன்.

இவைகளை எல்லாம் நான் இங்கு எடுத்துச்சொல்வதற்கு என்ன காரணம் என்றால் வரக்கூடிய தலைமுறையின ரானமாணவ செல்வங்கள் எழுச்சியோடு மாநாட்டை நடத்து வது மட்டும்மல்ல தீர்மானங்களை நிறைவேற்று வது மட்டுமல்ல, இங்கே பேசுகின்ற உரைகளை கண் ணும் கருத்துமாக கேட்பது மட்டுமல்ல நாட்டினுடைய நிலைமைகளை நினைத்து பார்த்து இங்கு சொல்லப் படக்கூடிய கருத்துக்களை ஏற்று செயல்படுத்த வேண்டு மென கேட்டுக் கொள்ள கடமைபட் டிருக்கிறேன்.

மாணவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். அதை மனதிலே பதிய வைத்து கொள்ள வேண்டும். எதையும் என்று சொன்னால் எதை செய்ய வேண்டுமோ அதை. விஞ் ஞானத்தின் வளர்ச்சியில் நாம் கம்ப்யூட்டரின் முன் னேற் றத்தை கண்டு கொண்டு இருக்கிறோம். இன்று மாணவர்களின், இளை ஞர்களின் வாழ்வில் நாட்டுப் பற்று, மொழிப்பற்று என்பது குறைந்து கொண்டே வருகிறது. நாம் அதை மறுத்திட முடியாது.

ஆனால் காலம் மாறிக் கொண்டே இருக்கிறது. விஞ்ஞான வளர்ச்சி என்பது வேண்டும் ஒரு நாடு வளர வேண்டுமானால் விஞ்ஞான வளர்ச்சி தேவை. விஞ்ஞான வளர்ச்சி சில நேரங்களில் ஆபத்தாகவும் முடிந்து விடு கிறது. விஞ்ஞான வளர்ச்சியால் தான் செல்போன் உருவானாது. அந்த செல்போன்கள்தான் கர்நாடக சட்டப்பேரவையில் அமைச்சர் களையே காட்டி கொடுத்தது. அந்த வளர்ச்சி தேவையில்லை. மாணவர் போராட்டம்

1967ல் அண்ணா தலைமை யில் திராவிடர் முன்னேற்றக் கழக ஆட்சி அமைவதற்கு எது காரணம் என்று சொன்னால் மாணவர் அமைப்புதான். 1937-38ம் ஆண்டிலே இந்தி திணிப்பை எதிர்த்து போராடிக்கூடிய மொழிபோர் தொடங்கப்பட்ட போது அதன் உச்சகட்டமாக அது 1962லேதான் வெடித்தது. திணிக்கப்படக்கூடிய இந்தியை எதிர்க்க வேண்டும். நம்முடைய தாய் மொழி அழகு தமிழ் மொழியை காப்பற்றிட வேண்டும் என்ற முழக்கம் ஒலிக்கிறது.

இந்த போராட்டம் உச்ச கட்டத்தை அடைகிறது தலைவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு காரா கிரகத்தில் அடைக்கப்படுகிறார்கள். அண்ணா சிறையில் அடைக் கப்படுகிறார். தலைவர் கலைஞர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்படுகிறார். பல தலைவர்கள் இப்படி சிறையில் அடைக்கப்படு கிறார்கள். அப்போது தமிழகத் தில் இருக்கக்கூடிய இளைஞர் கள் குறிப்பாக மாணவர்கள் இப்போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளக்கூடிய சூழ்நிலைக்கு ஆளாகிறார்கள்.


எங்கு பார்த்தாலும் மாணவர்களின் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் நான் ஒன்றை குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைகழகத்தில் மாணவர் கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அந்த சிதம்பரம் நகர் வீதியிலே ஒன்று சேர்ந்து ஊர்வலத்தை நடத்துகிறார்கள். அவர்களின் வலது கையிலே திராவிட முன்னேற்றக்கழகத்தின் இரு வண்ணக்கொடி. இடது கரத்தில் இந்தி ஒழிக,தமிழ் வாழ்க என எழுதப்பட்ட அட்டை அதைத் தாங்கி முழங்கி வருகிறார்கள்.

அப்போது கோட்டையில் அமைர்ந்திருக்கக்கூடிய ஆட்சியாளர்கள் உத்தரவிடு கிறார்கள். இந்தியை எதிர்த்து யார் குரல் கொடுத்தாலும், தமிழ் வாழ்க என எவனாவது வாய் திறந்து சொன்னாலும் அவனை எல்லாம் காக்கை குருவிகளை சுட்டு தள்ளுவதைப்போல் சுட்டுத்தள்ளுங்கள். என ஆணை பிறப்பிக்கப்படுகிறது. அதற்கு கட்டுப்பட்டு காவல் துறையினர் செயல்படுகிறார் கள். காக்கை குருவிகளை சுட்டு தள்ளுவதை போல் சுட்டு தள்ளுகிறார்கள்.

அப்படி சுடப்பட்ட நேரத்தில் அந்த மாணவர் பட்டாளத்துக்கு தலைமை ஏற்று நடத்திய ஒரு மாணவன் சிதம்பரம் அண்ணா மலை பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கக் கூடிய மாணவன். அவன் யார் என்று கேட்டால் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒரு போலீசார் பெற்றெடுத்த செல்வன் அவன் பெயர் ராஜேந் திரன். நீங்கள் இன்றைக்கு சிதம்பரத்திற்கு சென்றால் அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்குள்ளே ஒரு சிலை இருக்கிறது. அந்த சிலைதான் ராஜேந்திரனுடைய சிலை.

இன்னும் பெருமையுடன் சொல்கிறேன் அவன் படித்த பல்கலைக்கழகத்திலே இருக் கிறது உலகத்திலேயே எந்த பல்கலைகழகத்திலும் படித்த மாணவனுக்குசிலை கிடையாது. ஆனால் சிதம்பரத்தில் இருக்கக் கூடிய அண்ணாமலை பல்கலை கழகத்தில் இருக்கிறது. அவன் ஏன் சிலையாக மாறியிருக் கிறான் என்றால் அந்த ஊர்வலத்திற்கு தலைமை தாங்கி வந்தபோது போலீசாரின் துப்பாக்கி குண்டுக்கு பலியாகி றான். அவன் நெஞ்சிலே குண்டு பாய்கிறது. அவன் கீழே சாய்கிறான் ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தபோது உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிறான். அவனை பெற்றெடுத்த பெற்றோர்கள் ஒரு போலீசார் குடும்பம்.

அவனை தூக்கிகொண்டு மருத்துவமனைக்கு எடுத்து செல்ல மாணவர்கள் முயற்சிக் கிறார்கள். அவன் தடுக்கிறான். நியாயமாக அவன் என்ன சொல் லியிருக்க வேண்டும், என் தாய், தந்தையரை பார்க்க வேண்டும் என் உறவினர்களை பார்க்க வேண்டும் என்று. ஆனால் அவன் கடைசி நேரத்தில் கூட நான் படித்து பட்டதாரி ஆக வேண்டும் என்றுகூட சொல்ல வில்லை. அந்த கடைசி நேரத் தில் கூட அவன் முழங்கிய முழக்கம் எது என்று சொன்னால் இந்தி ஒழிக தமிழ் வாழ்க என்று அந்த முழக்கத்தோடுதான் உயிர் பிரிந்தது. ஆக, அந்த உணர்வு மாணவர், இளைஞர்கள் இடத்தில் இருக்கிறதா என்றால் அது குறைந்து கொண்டிருக் கிறது. நமக்காக இல்லை யென் றாலும் நம்முடைய எதிர்கால சந்ததியினருக்காக உங்களைப் போன்ற மாணவர்கள் இளைஞர் கள் முன் வந்தால்தான் ஒரு புத் துணர்ச்சியை மறுமலர்ச்சியை உருவாக்க முடியும். அதை ஏற்படுத்துவதற்கு உறுதி எடுக்கின்ற முயற்சியிலேதான் இந்த மாநாட்டை நடத்தி கொண்டிருக்கிறீர்கள். அந்த உணர்வோடுதான் நானும் பங்கேற்க வந்திருக்கிறேன். உங்கள் தீர்மானங்கள் வெற்றி பெற தலைவர் கலைஞரோடு சேர்ந்து நானும் ஒத்துழைப்பேன் என உறுதி கூறுகிறேன்.

இவ்வாறி தளபதி மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக