Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 9 மே, 2013

பிரதமர் மன்மோகன் சிங்கின் அபார நம்பிக்கை



பாரதிய ஜனதாவின் கொள்கைகளை மக்கள் புறக்கணித்துள்ளனர். இது தான், லோக்சபா தேர்தலிலும் தொடரும்,'' என, பிரதமர், மன்மோகன் சிங் கூறினார்.

கர்நாடக சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது குறித்து, டில்லியில், பார்லிமென்ட் வளாகத்தில், நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த, பிரதமர், மன்மோகன் சிங் கூறியதாவது:பா.ஜ.,வின் கொள்கைக்கு எதிரான தெளிவான தீர்ப்பு இது. நாட்டு மக்களுக்கு அனைத்தும் தெரியும். யார் யார் எப்படி என்பதை மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். இது தான், வரவிருக்கும் லோக்சபா தேர்தலிலும் தொடரும்.கர்நாடக வெற்றிக்காக, கட்சியின் துணைத் தலைவர், ராகுல் முக்கிய பங்காற்றினார். அவருக்கு பாராட்டுகள்.

ஊழல் முக்கியமான விவகாரம் தான். அது குறித்து, முடிவெடுக்க, அனைவரும் அமர்ந்து பேச வேண்டியது அவசியம். நிலக்கரி சுரங்க விவகாரத்தில், சி.பி.ஐ., அறிக்கையை, சட்ட அமைச்சர், அஸ்வனிகுமார் திருத்தியது குறித்து, விரைவில் தீர்வு காணப்படும்.உணவு மசோதாவை நிறைவேற்ற உறுதி கொண்டுள்ளோம். அதில் அனைத்து அம்சங்களும் கருத்தில் கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா கூறும் போது, ""கர்நாடக சட்டசபை தேர்தல் வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. இது, கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி,'' என்றார்.இது போல், நிதியமைச்சர் சிதம்பரமும், கர்நாடக தேர்தல் வெற்றிக்கு மகிழ்ச்சி தெரிவித்து, அந்த மாநிலத்தில் ஸ்திரமான ஆட்சி அமைக்கவும், மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக