Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 7 மே, 2013

கப்பல் படை அளிக்கும் பி.டெக்., கல்வி வாய்ப்பு


இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கியமான பாதுகாப்புப் படைகளில் இந்தியக் கப்பல் படையும் ஒன்று. அதி நவீன வசதிகளுடனும் தொழில் நுட்ப ரீதியிலான அம்சங்களுடனும், அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட வீரர்களுடனும் இயங்கி வரும் இந்தியக் கப்பல் படை சர்வதேச புகழ் பெற்றது.

இந்தப் படையில் திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து 10+2 கேடட் (பி.டெக்.,) என்ட்ரி ஸ்கீம் மூலமாக கேரளாவின் எழிமலாவில் உள்ள இந்தியன் நேவல் அகாடமியின் மூலமாக பி.டெக்., படிப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்திய கப்பல் படையின் பி.டெக்., படிப்புக்கு சேர விரும்புபவர்கள் 17 வயது முதல் 19 1/2 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 02.07.1994 முதல் 01.01.1997க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.

பிளஸ் டூ அளவிலான படிப்பை இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பாடங்களுடன் படித்து இந்த 3 பாடங்களின் தோராய மதிப்பெண்கள் குறைந்த பட்சம் 70 சதவிகிதத்துடனும், ஆங்கிலப் பாடத்தில் குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த கல்வித் தகுதிகளுடன் சில குறைந்த பட்ச உடல் தகுதிகளையும் பெற்றிருக்க வேண்டும். உயரம் குறைந்த பட்சம் 157 செ.மி.,யும் இதற்கு நிகரான எடையும் இருக்க வேண்டும். மாலைக் கண் நோய், வண்ணக் குறைபாடு உடையவர்கள் விண்ணப்பிக்க முடியாது.

மேற்கண்ட தகுதி உடையவர்கள் உரிய படிவ மாதிரியில் தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். ஆன்லைனில் பதிவு செய்த பின்னர் கிடைக்கும் பிரிண்ட் அவுட்டைப் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ப்ளஸ்டூ மதிப்பெண் அடிப்படையில் எஸ்.எஸ்.பி.,க்கான அழைப்பு அனுப்பப்பட்டு இறுதித் தேர்ச்சி இருக்கும். முழுமையான தகவல்களைப் பின்வரும் இணையதளத்திலிருந்து அறியவும்.

முகவரி:
Post Box No. 04,
RK Puram (Main) P.O,
New Delhi - 66.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 20.06.2013
இணையதள முகவரி : www.nausena-bharti.nic.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக