Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 8 ஏப்ரல், 2013

கணிதம் படிப்பவர்களுக்கு உதவித்தொகை


சென்னை கணிதவியல் நிறுவனத்தில், கணித துறையில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி பட்டப் படிப்புகள் வழங்கப்படுகிறது.
இந்த நிறுவனத்தில் வழங்கப்படும் படிப்புகள், இந்தியாவில் மட்டுமின்றி வெளி நாடுகளாலும் அங்கீகரிக்கப்படுகிறது. இந்நிறுவனம் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்துள்ளது.

இங்கு வழங்கப்படும் படிப்புகள் அனைத்தும் முழுவதும் கணிதம் தொடர்பான பாடங்களை உள்ளடக்கியதாகும். மற்ற பாடங்கள் எதுவும் இந்த படிப்பில் இடம்பெறுவதில்லை. மேற்படிப்புகளை தொடர்பவர்களுக்கும், முழவதும் கணிதப் படிப்புகளை படிக்க விரும்புபவர்களுக்கும் இப்படிப்பு ஏற்றதாகும்.

இந்தியாவில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் கூட இப்படிப்புகளை முடித்தவர்கள் மேற்படிப்புகளைத் தொடர வாய்ப்பு உள்ளது. பொருளாதாரம், மேலாண்மை, நிதி கணிதவியல், சாப்ட்வேர் போன்ற நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என கணிதவியல் தலைமை நிர்வாக அதிகாரி கூறுகிறார்.

பி.எஸ்சி (ஹானர்ஸ்), கணிதம் மற்றும் கணினி அறிவியல், பி.எஸ்சி (ஹானர்ஸ்) இயற்பியல் ஆகிய இரண்டு இளநிலை படிப்புகள் வழங்கப்படுகின்றது. நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். பிளஸ் 2 வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த நுழைவுத் தேர்வை எழத முடியும். இப்படிப்புக்கான கல்விக் கட்டணம் பருவத்திற்கு ரூ.750 செலுத்த வேண்டும்.

இந்த படிப்பிற்கு உதவித் தொகையாக மாதந்தோரும் ரூ.4000 மும், இதர செலவுகளுக்கு ரூ.1000மும் கூடுதலாக வழங்கப்படுகிறது. மாணவர்கள் தேர்வுகளில் பெற்ற தேர்ச்சி விகிதத்தைப் பொருத்து உதவித்தொகை வழங்கப்படும்.

முதுநிலைப் படிப்பில் எம்.எஸ்சி., கணிதம், கணினி அறிவியல், பயன்பாட்டுக் கணிதம் உள்ளிட்ட மூன்று பட்டப் படிப்புகள் வழங்கப்படுகிறது.

எம்.எஸ்சி., கணிதப் படிப்பில் சேர பி.டெக்., பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைப்பெறும். எம்.எஸ்சி., கணினி அறிவியல் படிப்பில் சேர கணினி துறையில் பி.இ., பி.டெக்., முடித்திருப்பது அவசியமாகும். எம்.எஸ்சி., பயன்பாட்டுக் கணிதப் படிப்பில் சேர பி.எஸ்சி.,யில் கணிதம், இயற்பியல், புள்ளியியல் மற்றும் பி.இ, பி.டெக்., முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.

இந்த படிப்பிற்கு கல்வி உதவித் தொகையாக ரூ.4,800 வழங்கப்படுகிறது. கல்வி உதவித் தொகையுடன் விடுதிக் கட்டணம், உணவுக் கட்டணம் மற்றும் இதர செலவுகளுக்கு மாதந்தோறும் ரூ.5000 கூடுதலாக வழங்கப்படுகிறது.

பிஎச்.டி., படிப்பில் கணிதம், கணினி அறிவியல், இயற்பியல் ஆகிய படிப்புகள் வழங்கப்படுகிறது. கணிதப் படிப்பில் சேர எம்.எஸ்சி., கணிதம், பி.இ பட்ட படிப்பு முடித்திருக்க வேண்டும். இயற்பியல் ஆராய்ச்சி படிப்பில் சேர பி.இ, பி.டெக்., எம்.சி.ஏ., எம்.எஸ்சி கணினி அறிவியல் போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

இந்த ஆராய்ச்சிப் படிப்புகளை தொடர்பவர்களுக்கு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஆராய்ச்சி உதவித் தொகையாக மாதத்திற்கு ரூ.16,000மும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ.18,000மும் வழங்கப்படுகிறது. இதை தவிர புத்தகத்திற்கு என தனியாக ஆண்டுக்கு ரூ.10,000 மற்றும் தங்கும் விடுதி செலவுக்கு கல்வித் தொகையில் 30 சதவீதம் கூடுதலாகவும் வழங்கப்படுகிறது.

இந்த கல்வி நிறுவனத்தில் முழநேர படிப்பு மட்டுமல்லாமல் பகுதி நேர ஆராய்ச்சி படிப்புகளும் வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்கள் அறிய: www.cmi.ac.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக