Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 29 ஏப்ரல், 2013

கூடங்குளம் மின்சாரத்தில் தமிழகத்திற்கு 925 மெகாவாட்: அணுசக்தி துறை அறிவிப்பு



நெல்லை, கூடங்குளம் அணுமின் நிலையத்தில், முதலாவது யூனிட் அமைக்கப்பட்டு, 1000 மெகாவாட் மின்சார உற்பத்தி துவங்க, தயாராக உள்ளது. இரண்டாவது யூனிட்டிலும், 1000 மெகாவாட் உற்பத்தி செய்வதற்கான, கட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

"இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும், தமிழகத்திற்கே வழங்க வேண்டும்' என, தமிழக அரசு முதல் தொழில், வர்த்தக அமைப்புகள் வரை, குரல் கொடுத்து வருகின்றன. இதற்காக, மதுரை சிறுகுறுந்தொழில் அதிபர்கள் சங்கம் (மடீட்சியா) என்ற அமைப்பும், டில்லி பார்லிமென்ட் முன், போராட்டம் நடத்தியது. "தமிழக மின்தேவைக்கு, மின்பாதை அமைக்க வேண்டும்.
கூடங்குளம் மின்சாரத்தை, முழுமையாக தமிழகத்திற்கு வழங்க வேண்டும்' என, வலியுறுத்தி, பிரதமர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து, அணுசக்தி துறையின் சார்பு செயலாளர் சி.டி.சாக்கோ, "மடீட்சியா' நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், "கூடங்குளத்தில் உற்பத்தியாகும், 2000 மெகாவாட் மின்சாரத்தில், தமிழகத்திற்கு 925 மெகாவாட், கர்நாடகத்திற்கு 442 மெகாவாட், கேரளத்திற்கு 266 மெகாவாட், புதுச் சேரிக்கு 67 மெகாவாட், ஒதுக்கீடு செய்யப்படாதவை 300 மெகாவாட்' என, குறிப்பிடப்பட்டுள்ளார். அணுசக்தித் துறையின் அறிவிப்புக்கு, "மடீட்சியா' தலைவர் மணிமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக