Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

கிளிக்கு சிகிச்சையளிப்பது எப்படி? மருத்துவர்களுக்கு பயிற்சி


வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில், காயமடைந்த கிளிக்கு சிகிச்சையளிப்பது குறித்து, மருத்துவர்களுக்கு,வகுப்புகள் எடுக்கப்பட்டன.வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லூரியில், வன மற்றும் செல்ல பறவைகளுக்கு ஏற்படும் நோய்கள், சிகிச்சை முறைகள் குறித்து, உயிரியல் பூங்கா மருத்துவர்கள், கால்நடை மருத்துவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.

நேற்று நடந்த ஆலோசனை முகாமில், காயமடைந்த கிளிக்கு சிகிச்சையளிப்பது குறித்து, மருத்துவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டன.
காயம் அடைந்த கிளியின் காலில், "எக்ஸ் - ரே' எடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட கால் பகுதிக்கு, தகுந்த சிகிச்சைஅளிக்கப்பட்டது.

தொற்று நோய்களால், பறவைகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதை கண்டறிய, ரத்தம், எச்சம் மூலம், பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லூரி, நோய் குறியியல் துறை தலைவர் ஸ்ரீதர் கூறுகையில், ""வீட்டில் வளர்க்கப்படும் பறவைகளின் காலில் அடிபட்டால், அவற்றை நடக்க விடக்கூடாது. மருத்துவரிடம் காண்பித்து
சிகிச்சையளிக்க வேண்டும்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக