Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 7 ஜனவரி, 2013

காங்கிரசின் வேடிக்கை : கட்சியைவிட்டு வெளியேறிவருக்கு காங்கிரஸ் கட்சியின் கமிட்டி கூட்ட அழைப்பு


 அகில இந்திய காங்., கூட்டத்தில் பங்கேற்க, முதல்வர் ரங்கசாமிக்கு காங்., மேலிடம் அனுப்பியுள்ள கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அகில இந்திய காங்., கமிட்டி கூட்டம், ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மாநிலத்தில் நடத்தப்படுவது வழக்கம். இதில் பங்கேற்க, நாடு முழுவதும் உள்ள அகில இந்திய காங்., கமிட்டி உறுப்பினர்களுக்கு - ஏ.ஐ.சி.சி., மேலிடம் கடிதம் அனுப்பும்.

இந்த ஆண்டு, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில், 20ம் தேதி அகில இந்திய காங்., கமிட்டி கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்க, அனைத்து மாநிலங்களிலும் உள்ள உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதுபோல, புதுச்சேரியில் உள்ள அகில இந்திய காங்., உறுப்பினர்கள், 11 பேருக்கு காங்., மேலிடம் கடிதம் அனுப்பியுள்ளது.

கடிதங்கள், மாநில காங்., அலுவலகத்திற்கு வந்துள்ளது. இந்த, 11 பேரில், தற்போதைய முதல்வர் ரங்கசாமியின் பெயரை குறிப்பிட்டு வந்துள்ள கடிதமும் அடக்கம். இந்த கடிதத்தால், புதுச்சேரி காங்கிரசார் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த, 2010ல், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த ரங்கசாமி, காங்., கட்சியில் இருந்து வெளியேறி, என்.ஆர்., காங்., என்ற புதிய கட்சியை ஆரம்பித்து ஆட்சியை கைப்பற்றியுள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு குட்பை சொல்லி, ஓராண்டுக்கு மேலாகியும் அகில இந்திய காங்., உறுப்பினர் பட்டியலில் இருந்து, ரங்கசாமியின் பெயரை நீக்காததால் இந்த கூத்து அரங்கேறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக